PDA

View Full Version : செடிpaarthiban
28-03-2007, 05:38 PM
செடி


சாக்கடை பாய்ந்தாலும்
செடி வளந்தால் சரியா?
பாயும் நல்ல தண்ணீரை கெடுப்பதை
தடுப்பது முறையா?

கனி முக்கியம்
வளர்ந்த வழி
அதை விட முக்கியம்

leomohan
28-03-2007, 08:30 PM
அற்புதமான கவிதை. சற்று முரணாக இருந்தாலும் கூட.

என்ன தண்ணீர் எடுத்தாலும் இளநீர் இனிக்கத்தானே செய்கிறது. சேற்றிலும் தாமரை என்பார்களே.

இளசு
28-03-2007, 09:08 PM
பார்த்தியின் பார்வையும்
மோகனின் மேல்பார்வையும்

இரண்டுமே அருமை..

பாராட்டுகள் இருவருக்கும்!

ஆதவா
28-03-2007, 09:16 PM
பார்த்திபன்.... உங்கள் வரிகளில் ஒளிந்திருக்கும் கருத்தைக் கண்டேன்... அருமை... சில நிமிடங்களில் தோன்றிய கவிதை........ உங்கள் ஆதங்கத்தில் விளைந்த கவிதை.
இதை எங்கே வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளலாம்.
அரசியல், விளையாட்டு, போன்ற பல உதாரணங்கள்....

பொதுவாக, தன் கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளியிட்டதில் வெற்றிகண்ட ஒரே மனிதர் பாரதி மட்டுமே..... ஒரு மரம் இழைக்க இழைக்க வயனமாவது கண்களுக்குத் தெரியலாம்.... எங்காவது சில்லுகள் சிதறி அழகைக் கெடுத்துவிட்டால் நாம் மீண்டும் இழைக்கத்தான் வேண்டும்........... அதையே நாம் நோண்டுவதால் மேன்மேலும் அழகு கெட்டுவிடும்....

உங்கள் கவிதைக்கு ஒருவகையில் நான் நன்றியும் சொல்லவேண்டும்......

வாழ்த்துக்கள்.

ஆதவன் :)

இளசு
28-03-2007, 09:18 PM
..... ஒரு மரம் இழைக்க இழைக்க வயனமாவது கண்களுக்குத் தெரியலாம்.... எங்காவது சில்லுகள் சிதறி அழகைக் கெடுத்துவிட்டால் நாம் மீண்டும் இழைக்கத்தான் வேண்டும்........... அதையே நாம் நோண்டுவதால் மேன்மேலும் அழகு கெட்டுவிடும்....

.

ஆதவன் :)

இந்த வரிகளில் பொலியும் அழகை
எங்கனம் நான் சிலாகிக்க ?

ஆதவனை ஆரத்தழுவினால் மட்டுமே ஆறும்!

leomohan
28-03-2007, 09:19 PM
இந்த வரிகளில் பொலியும் அழகை
எங்கனம் நான் சிலாகிக்க ?

ஆதவனை ஆரத்தழுவினால் மட்டுமே ஆறும்!

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி. பலே ஆதவா.

ஓவியா
28-03-2007, 09:24 PM
அருமை நண்பர் பார்த்திபன் அவர்களே

தங்களின் கவிதையை நானும் வாசித்தவுடன், ஒரு வி(ச)டயம் புரிந்துகொண்டேன். நீங்கள் சிறந்த கவிஞர்.

சொல்லவந்ததை கனகச்சிதமாக சொல்லிவிட்டீர்கள். பாராட்டுகிறேன்.


வடக்கில் இருந்து பார்த்த விசயத்தை தெற்கிலிருந்து நோக்கி பதிவு தந்த மோகனுக்கும் சபாஷ்.

ஆதவா பலே.

ஆதவா
28-03-2007, 09:26 PM
ஆஹா!!! இளசு அண்ணா!! உங்கள் பதிலைப் பார்த்தவுடனே கையும் ஓடலை காலும் ஓடலை.... அடடா ஆதவா!! சும்மாதாண்டா எழுதின... அதுலயும் அர்த்தமிருக்குடா என்று செல்லமாக.............
இதுக்குமேல எனக்கு வார்த்தையே தோணல...................

மோகன் அவர்கள் சொன்னதுபோல/// பிரம்ம ரிஷி மட்டுந்தான் இடிக்குது... ஹி ஹி// நன்றி மோகன் அவர்களே

அறிஞர்
29-03-2007, 02:49 PM
பார்த்திபன் எழுதிய வரிகளுக்கு.. மூவரின் விளக்கங்கள்..... அருமை.

தொடருங்கள் பார்த்திபன்...
இன்னும் தங்கள் கவிதைகள் வளமை பெறட்டும்.

அமரன்
29-03-2007, 03:00 PM
பார்தீபன் தனது உள்ளக்குமுறலை கவிதையாக எழுதியிருகின்றார். மேலோட்டமாப் பார்த்தால் சாதாரணமாக்த் தெரிகின்றது. ஆழ்ந்து பார்த்தால் அர்த்தம் பல பொதிந்துள்ளது. அதுக்கு முத்தாய்ப்பாக அமைவது உறவுகளின் பின்னூட்டம். அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஷீ-நிசி
29-03-2007, 04:37 PM
கவிதையை விமர்சனங்கள் தூக்கி சாப்பிடுகிறது... வாழ்த்துக்கள் பார்த்திபன்...

paarthiban
29-03-2007, 05:06 PM
அன்பு தமிழ்மன்ற அருமை நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள்.
சிறுமை கண்டு அழும் சீத்தலை சாத்தனாரின் வலியை புரிந்தவர்களுக்கு வணக்கம் அய்யா வணக்கம்.

விகடன்
29-03-2007, 05:19 PM
மனதில் எழும் குமுறல்களை கவிதை என்ற வடிவில் பண்பாக உணர்த்துவதென்பது சிலரிற்குத்தான் கிடைக்கப்பெற்றிருக்கும் வரப்பிரசாதம்.

அந்தவகையில் பிரதீபனின் கவிதை அமைந்திருப்பது அவரின் புலமையை வெளிக்காட்டுகிறது.

ஆதவா
29-03-2007, 05:33 PM
காணவேண்டிய கீறல் காணவில்லை
கண்டால் தீருமோ ஏகதொல்லை?

pradeepkt
29-03-2007, 07:24 PM
மனதில் எழும் குமுறல்களை கவிதை என்ற வடிவில் பண்பாக உணர்த்துவதென்பது சிலரிற்குத்தான் கிடைக்கப்பெற்றிருக்கும் வரப்பிரசாதம்.

அந்தவகையில் பிரதீபனின் கவிதை அமைந்திருப்பது அவரின் புலமையை வெளிக்காட்டுகிறது.

களைகள் குறைவு - களைவோம்
நாற்றுகள் நிறைவு - நலமே!
மன்ற வயல்!

ஜாவா, பார்த்திபனையும் பிரதீப்பையும் குழைத்துப் புதுசா நீங்க ஒருவரை உருவாக்கி விட்ட ஒரே காரணத்தினால் நானும் பார்த்திபன் கேள்விக்குக் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன்... :sport-smiley-018:

அது கவிதை போல்... அமைந்தது உங்கள் அனைவரின் தலையெழுத்து :music-smiley-012:

இளசு
29-03-2007, 10:19 PM
களைகள் குறைவு - களைவோம்
நாற்றுகள் நிறைவு - நலமே!
மன்ற வயல்!மன்றகீதமாக்க வேண்டிய
பொன்னான வரிகள்..

மனதுக்கு மருந்தான கவிதை தந்த
அன்புத் தம்பிக்குப் பாராட்டு!

(இனி கொஞ்சநாளைக்கு இதுவே என் கையெழுத்து..)

pradeepkt
30-03-2007, 06:27 AM
மன்றகீதமாக்க வேண்டிய
பொன்னான வரிகள்..

மனதுக்கு மருந்தான கவிதை தந்த
அன்புத் தம்பிக்குப் பாராட்டு!

(இனி கொஞ்சநாளைக்கு இதுவே என் கையெழுத்து..)
அண்ணா, இதுவே இம்மன்றத்தில் இன்று வரை எனக்குக் கிடைத்த உச்சபட்சப் பாராட்டு...
நன்றி சொல்ல வார்த்தையில்லை!

இளசு
31-03-2007, 06:25 PM
களைகள் குறைவு - களைவோம்
நாற்றுகள் நிறைவு - நலமே!
மன்ற வயல்!களைப்படையும் வரை
முளைப்போம் என
களை கட்டும் களைகள்!

கடைசியில் களைப்பது யாரென
காட்டும் நம் கைகள்!

poo
02-04-2007, 10:36 AM
பார்த்திபன்... உங்களுக்குள் இருக்கும் ஆதங்கத்தை வெளிக்கொணர்ந்த நிகழ்வை விதையாக்கி...செடியாக்கியிருக்கிறீர்கள்...

இனி..
நம் வழி செல்வோம்... நல்ல பல விருட்சங்களுக்கு வித்திடுங்கள்..

ஓவியன்
02-04-2007, 11:09 AM
பார்த்தீபன் அடி எடுத்துக் கொடுக்க மற்றவர்களும் சேர்ந்து பின்னியெடுக்கிறீர்களே!

வாழ்த்துக்கள்