PDA

View Full Version : இழந்து போன இடத்தால்.....



ஆதவா
28-03-2007, 04:18 PM
எண்ணிலடங்கா
எண்ணிக்கையில்
உன் மீதொரு நம்பிக்கை

எப்படிப்பட்ட சவாலையும்
எதிர்க்கும் திறனாக
உன்னிரு கைகளின்
எண்ணிக்கையில்
திறமை வைத்திருக்கிறாய்
ஆனால்
எதிர்த்தாடும் சவாலை
எதிர்கொள்ள இயலாமல்
நீ இழந்த இடத்தினால்
ஊடகங்களின் ஒரு மூலையில்
மரணம் ஏற்பட்டிருக்கும்

ஒருவகையில் நீ கொலையாளிதான்

உன் சோகம் சில வினாடிகள்
என் சோகம் உனது
அடுத்த எழுச்சி வரை!
பதறிய மனங்களுக்காக
பேட்டிகள் கொடுக்கத் தெரிகிறது
உனது களத்தில் நின்றாவது
ஒரு போட்டி கொடுக்கத் தெரிகிறதா?

வெறும் கைதட்டலோடு
இருந்திருந்தால்
'போய்த் தொலைது' என்று
விட்டிருப்பேன்.
எனக்குள் மீறி
இதயத்தில் அமர்ந்த பின்
உன்னைத் தூற்றுவது தவறா?

உன் எழுச்சிக்கு மீண்டும்
வேண்டுகிறேன்
உன் வளர்ச்சிக்கும்
என்னை அறியாமலேதான்...........

ஷீ-நிசி
28-03-2007, 04:22 PM
தோல்வியில் இருக்கும் இந்திய அணிக்கு சிறப்பான ஒரு கவிதை ஆதவாவிடமிருந்து... நன்றாக உள்ளது நண்பரே!

ஆதவா
28-03-2007, 04:25 PM
நன்றி ஷி!! என் நண்பரின் சவால் இது.... கவிதையில் கிரிக்கெட் வாசனை இருக்கவே கூடாது என்றாலும் கிரிக்கெட்டை மையமாக வைத்து கவிதை எழுதச் சொன்னார்..... நன்றாக இருக்கிறதா?

ஷீ-நிசி
28-03-2007, 04:37 PM
டிராவிடுக்கு தமிழ் தெரிஞ்சா, இந்தக் கவிதையைப் படித்தால் ஆறுதல் அடைவார்.. நன்றாக உள்ளது ஆதவா... கவிதைக்கு இன்னும் மெனக்கெட்டிருந்தால் இன்னும் சிறப்பாய் அமைந்திருக்கும்... ஆனால் சவாலுக்கென்று எழுதும்போது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்..

ஆதவா
28-03-2007, 04:40 PM
ஆமாமாம்.... எதோ சவாலுக்கு பணம் பெட் கட்டினார்னா கூட பரவாயில்லை..... அப்பவும் மனம் திருப்தியில்லாமத்தான் அந்த நண்பர் போனார்... அடச்சே வீணா எழுதிட்டோமேன்னு நினைச்சேன்... சரி சரி.. மன்றம் இருக்கே!! நாம அங்கயாவது போட்டு கைதட்டல் வாங்குவமேன்னு போட்டுட்டேன்...

paarthiban
28-03-2007, 04:40 PM
கிரிக்கெட்டுக்கு நச் கவிதை ஆதவா சார். விளக்கம் சொன்ன ஷிநிசி சாரும் பெரிய கில்லாடி. அருமை.

ஷீ-நிசி
28-03-2007, 04:42 PM
சார் எல்லாம் வேண்டாம் பார்த்திபன்

ஆதவா
28-03-2007, 04:46 PM
ஆமாங்க பார்த்தி.... சார் அளவுக்கு நானுமில்லை.... ஆதவா ன்னே கூப்பிடலாம்..

ஓவியா
28-03-2007, 04:46 PM
1. ஆதவா+ஷி-நிஷி = சூப்பர் மல்லி மன்றம்

ஆதவாவின் கவிதை அருமை, கவிஞர்னா இதான்யா, இப்படிதான் அருமையா எழுதனும். பாராடுகிறேன்.

ஷி-நிஷியின் குட்டி விமர்சனம் அருமை.

ஆதவா
28-03-2007, 04:49 PM
கா.கவிஞரிடமிருந்து பாராட்டுக்களா?

நன்றிங்க ஓவியா./ படிப்பெல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு?

அன்புரசிகன்
28-03-2007, 04:50 PM
வெறும் கைதட்டலோடு
இருந்திருந்தால்
'போய்த் தொலைது' என்று
விட்டிருப்பேன்.
எனக்குள் மீறி
இதயத்தில் அமர்ந்த பின்
உன்னைத் தூற்றுவது தவறா?



அதிதீவிர உரிமையின் வெளிப்பாடு. உள்ளக்குமுறலின் உச்சக்கட்டம். நன்றி ஆதவா.

ஆதவா
28-03-2007, 04:56 PM
ஆம் நண்பா!!! இந்திய அணி உ.கோ வில் இழந்த இடம் எனக்கு அவ்வளவாக பாதிக்கவில்லை...
காரணம்: இரவுநேர ஆட்டங்கள்.. மன்றம்...... வேலைப்பளு...

பகல் பொழுதென்றால் நிச்சயம் மனதில் நடுக்கம் இருந்திருக்கும்.....

மற்றவர்களின் மனதை சற்று அறிந்துவைத்திருக்கிறேன்..

விகடன்
28-03-2007, 05:00 PM
ஆதவா, உஅம்து கவிதை அருமை.
இதில் ஒரு சிறப்பை நான் கண்டேன்.

பலர் கிரிக்கட்டின் பாதிப்பில் இருப்பதால் அனைவரது சிந்தனையும் அதன் பக்கமே வாடுகிறது. ஆனால் இது கிரிக்கட் தவிர தோழ்விகண்ட பல துறைகளுக்கும் பொருந்தும்.

பி.கு:- நான் நினைத்திருப்பது அரசியல் துறையை.

ஆதவா
28-03-2007, 05:02 PM
ஆமாம் ஆமாம்.... ஜாவா அவர்களே!!! எந்த வகையிலும் பொருத்திக்கொள்ளலாம்... உங்கள் சிந்தனை அருமை.... நீங்கள் கவிஞனாக மாறிவிட்ட தடங்கள்தான் இந்த சிந்தனை....