PDA

View Full Version : நட்பு



க.கமலக்கண்ணன்
28-03-2007, 02:36 PM
http://www.geocities.com/kamal_kkk/Friendship.gif

நட்பு

தண்ணீரும் நட்பும்

ஒன்று

தண்ணீருக்கு...

நிறமும் கிடையாது

வடிவமும் கிடையாது

சுவையும் கிடையாது

ஆனால் வாழ்க்கைக்கு மிகவும்

இன்றியமையாதது.

நட்பை உணர

மட்டுமே முடியும்...

நட்பு இல்லை என்றால்

வாழ்வே இல்லை...

அமரன்
28-03-2007, 02:37 PM
கமலக்கண்ணன் நட்பின் பெருமையை சொல்லியுள்ளீர்கள். அனைத்தும் மறுக்கமுடியாத நிஜங்கள்.

march
28-03-2007, 02:40 PM
தண்ணீருக்கு நிறமும் வடிவமும் சுவையும் உண்டு

மார்ஷ்

அமரன்
28-03-2007, 02:44 PM
தண்ணீருக்கு நிறமும் வடிவமும் சுவையும் உண்டு


அப்படியா? தண்ணீரின் சுவை, வடிவம்,நிறம் என்பனவற்றை அறியத் தந்தீர்களாயின் பயனாக இருக்கும்.

march
28-03-2007, 02:54 PM
தண்ணீருக்கு நிறமும் வடிவமும் சுவையும் உண்டு

அப்படியா? தண்ணீரின் சுவை, வடிவம்,நிறம் என்பனவற்றை அறியத் தந்தீர்களாயின் பயனாக இருக்கும்.

சென்னை தண்ணீரின் சுவை, கோவை தண்ணீரின் சுவை,மதுரை தண்ணீரின் சுவை, கடல் தண்ணீரின் சுவை, குளம் தண்ணீரின் சுவை,
சூடு தண்ணீரின் சுவை,

வடிவம் - திரவம்,

கடின நீர், மென்மையான நீர்,

நிறம் ரெப்ளெக்ஷன்

மார்ஷ்

க.கமலக்கண்ணன்
28-03-2007, 02:54 PM
தண்ணீருக்கு நிறமும் வடிவமும் சுவையும் உண்டு

மார்ஷ்

எனக்கும் சொல்லுங்கள்...

march
28-03-2007, 02:56 PM
பதில் தந்துள்ளேன்

மார்ஷ்

அமரன்
28-03-2007, 02:58 PM
சென்னை தண்ணீரின் சுவை, கோவை தண்ணீரின் சுவை,மதுரை தண்ணீரின் சுவை, கடல் தண்ணீரின் சுவை, குளம் தண்ணீரின் சுவை,
சூடு தண்ணீரின் சுவை,

வடிவம் - திரவம்,

கடின நீர், மென்மையான நீர்,

நிறம் ரெப்ளெக்ஷன்



என்ன இது.
சென்னை தண்ணீரின் சுவையா
மதுரை தண்ணீரின் சுவையா.
குளம் தண்ணீரின் சுவையா.
வடிவம் திரவமாம்.
பதிவுகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவும் உங்களை எல்லோரும் கவனிக்கவேண்டும் என்பதுக்காவும் பதியாதீர்கள்.

அறிஞர்
28-03-2007, 02:59 PM
நட்பு மற்றொரு பார்வையில்
அருமையாக உள்ளது கமலக்கண்ணா.

சிலநேரம் கவிதைகளை மேலோட்டமாக பார்க்கவேண்டும்.
தேவையற்ற விவாதங்களை தவிருங்கள்..

அமரன்
28-03-2007, 03:03 PM
சிலநேரம் கவிதைகளை மேலோட்டமாக பார்க்கவேண்டும்.
தேவையற்ற விவாதங்களை தவிருங்கள்..


மன்னித்துக்கொள்ளுங்கள். விவாதம் சம்பந்தமாக எனது பதிப்பு வராது.

க.கமலக்கண்ணன்
28-03-2007, 03:09 PM
நன்றி அறிஞர் அவர்களே...

march
28-03-2007, 03:32 PM
என்ன இது.
சென்னை தண்ணீரின் சுவையா
மதுரை தண்ணீரின் சுவையா.
குளம் தண்ணீரின் சுவையா.
வடிவம் திரவமாம்.
பதிவுகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவும் உங்களை எல்லோரும் கவனிக்கவேண்டும் என்பதுக்காவும் பதியாதீர்கள்.

கடல் நீரின் சுவை உப்பு
கோவை நீரின் சுவை குடிநீர் சுவை நார்மல்
மார்ஷ்

paarthiban
28-03-2007, 04:32 PM
அருமையான கவிதை சார். நட்பு ஒரு உயிர் வாழ முக்கியம். தண்ணீரும்தான்.
கமலக்கண்ணன் சார் அருமையா சொன்ன கவிதைக்கு பாராட்டுக்கள்.

ஓவியா
28-03-2007, 04:40 PM
கமல்,
கவிதை மிகவும் அருமை,

நட்பன்று இவ்வுலகில் வாழ்வது மிகவும் கடினமே!!!

விரோதத்தை அள்ளி முடிக்க (வளர்க்க) ஒரு நோடி போதும்,
அன்பினை அள்ளிக் கொள்ள ஆயுசும் பாடு பட வேண்டும்.

நட்பு பெருக பெருக அன்பும் பிந்தொடர்ந்து நிழல் போல் வளரும். :liebe028:

அன்பை வளர்ப்பதே சிறந்தது.

அன்புரசிகன்
28-03-2007, 04:46 PM
இன்றியமையாதது.

நட்பை உணர

மட்டுமே முடியும்...


உண்மைதான். நல்லவற்றைப்பெறுவதற்கு நிறைந்த போராட்டம் தேவை. தண்ணீரின் தண்மை தாகத்தை நீக்கும். நட்பின் தண்மை எம்மை கோபுரத்திற்கே எடுத்துச்செல்லும்.

விகடன்
28-03-2007, 04:53 PM
தண்ணீருக்கு நிறமும் வடிவமும் சுவையும் உண்டு

மார்ஷ்

என்ன மார்ஷ்?
கவிதை என்றால் ஆயிரம் பொய் இருக்கத்தானே வேண்டும்.
இந்த ஒருபொய்யேனும் ஏற்கத்தவறினால் கவிதை இரசிக்கத்தெரியாதவன் என்றல்லவா எண்ணிவிடப்போகிறார்கள்..

விகடன்
28-03-2007, 04:54 PM
தண்ணீரை விட பிராணவாயுடன் ஒப்பிடிருக்கலாமோ?

கவிதை அருமை. வாழ்த்துக்கள் கமலக்கண்ணன்

இளசு
28-03-2007, 08:15 PM
இன்றியமையாது உலகு என நீருக்கு வள்ளுவன் சொன்னது
இங்கே நட்புக்கும் என்ன பொருத்தம்!

வாழ்த்துகள் கமலக்கண்ணன்!!

leomohan
28-03-2007, 08:24 PM
அருமையான கவிதை கமல். தொடருங்கள்.

ஆதவா
28-03-2007, 08:34 PM
புலிகேசி அண்ணா! (சும்மா லுலுவாயி..) நீருக்கு நட்பு ஒப்பு... பலே.
நட்பு என்ற ஒரு நீர் கட்டுக்கடங்காமல் போகவல்லது. நீங்கள் சொன்னதுமாதிரி உணரத்தான் முடியும்..

படங்கள் அருமை அண்ணா! தமிழ் எழுத்துருக்களும் மிக அருமை...

அறிவியல் விஷயங்களை அறிவியலாக பார்க்கலாம்; அறி வியலாமல் பார்த்தால் அறிவி யாமலா போவார்கள்???

இனியவள்
08-06-2007, 01:17 PM
http://www.geocities.com/kamalk023/Friendship.gif

நட்பு

தண்ணீரும் நட்பும்

ஒன்று

தண்ணீருக்கு...

நிறமும் கிடையாது

வடிவமும் கிடையாது

சுவையும் கிடையாது

ஆனால் வாழ்க்கைக்கு மிகவும்

இன்றியமையாதது.

நட்பை உணர

மட்டுமே முடியும்...

நட்பு இல்லை என்றால்

வாழ்வே இல்லை...

அருமையான கவிதை கமல்க்.... உற்ற நண்பன் ஒருவன் கிடைத்தால் உலகை கூட ஜெயித்து விடலாம்

ஓவியா
08-06-2007, 03:35 PM
அருமையான கவிதை கமல்க்.... உற்ற நண்பன் ஒருவன் கிடைத்தால் உலகை கூட ஜெயித்து விடலாம்



தோழி,

சில நட்பில் அதே உற்ற நண்பன்/நண்பிதான் நம் அழகிய உலகத்தையும் கவுத்துவிடுவார்கள். எல்லாம் அன்மைய அனுபவம்தான்.

உங்கள் விமர்சனம் அருமை.

aromabest
08-06-2007, 03:43 PM
தண்ணீருக்கு கனவளவும் உண்டு