PDA

View Full Version : கிரிக்கெட்தோல்வி - த்ரிஷா, சினேகா விளாசல்!ஜெயாஸ்தா
28-03-2007, 01:45 PM
நூற்றுபத்து கோடி வாய்களுக்கும் இந்திய கிரிக்கெட் டீம்தான் இப்போதைக்கு அவல். ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், அரசியல்வாதிகள் என ஆளாளுக்கு அடித்துத் துவைத்து பிழிந்து காயப்போட்டாயிற்று. நமது நட்சத்திரங்கள் மட்டும் விதிவிலக்கா? அவர்களும் நார் நாராக கிழிக்கிறார்கள்.

தமிழ் நடிகைகளில் அதிகம் கிரிக்கெட் பார்ப்பவர்கள் த்ரிஷாவும், சினேகாவும். த்ரிஷாவின் பேவரிட் சச்சினும் டிராவிட்டும் சொதப்பியதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை அவரால். "நம்மகிட்ட டீம் ஸ்பிரிட் இல்லை. வீரர்கள்கிட்ட ஒற்றுமை கிடையாது. நாம தோத்ததுக்கு இதுதான் காரணம்" என ஒட்டுமொத்த டீமையும் சாடினார் த்ரிஷா.

சினேகாவுக்கு கோபத்தை விட ஏமாற்றம்தான் அதிகமாக இருக்கிறது. "இப்படி ஏமாத்துவாங்கனு நினைச்சுக் கூட பார்க்கலை" என்றவர் தனக்கேயுரிய தன்னம்பிக்கையுடன், "தோல்விதான் வெற்றிக்கு முதல்படி. அதை மனசுல வச்சு இனி நல்லா ஆடணும்" என அட்வைஸ் செய்தார்.

கிரிக்கெட் வீரர்களை கருணையுடன் அணுகிய ஒரே இந்தியர் பிரபுவாகத்தான் இருக்க வேண்டும். "விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். இலங்கை நல்லா விளையாடுனாங்க. இந்தியா இதற்கு
முன்னால ஜெயிச்ச மேட்ச்களையும் நாம நினைச்சுப் பார்க்கணும்" என பெருந்தன்மையாக பேசியிருக்கிறார். இதனாலெல்லாம் அடங்கி விடுமா ரசிகர்களின் கோபம்?

மன்மதன்
28-03-2007, 02:08 PM
அடுத்த தடவை சச்சின் ஆடும் போது திரிஷாவை மனதில் வைத்து ஆடினா இந்தியா ஜெயிக்கும்..:icon_wink1: :icon_wink1:

அமரன்
28-03-2007, 02:39 PM
இதே மாதிரி இவங்க நடிச்சபடம் தோல்வியடையும்போது வீரர்களைக்கேட்டால்............

பேசாமல் நடிகைகளை அட்டத்தில் இணைத்து விடலாமே.

அறிஞர்
28-03-2007, 02:52 PM
யார் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்... நரன் சொல்வது.. படம் தோல்வியடையும் போது வீரர்களை பேட்டி காணலாம்.

ஆனால் திரிசா, சினேகாவை நம் கிரிக்கெட்டர்களுக்கு தெரியுமா...

ஜெயாஸ்தா
28-03-2007, 03:33 PM
யார் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்... நரன் சொல்வது.. படம் தோல்வியடையும் போது வீரர்களை பேட்டி காணலாம்.

ஆனால் திரிசா, சினேகாவை நம் கிரிக்கெட்டர்களுக்கு தெரியுமா...

பல கிரிக்கெட் வீரர்கள் தங்கள் திறமையை இது போன்ற நடிகைகளிடத்தில்தானே தொலைத்துள்ளனர். அசாருதீன்-சங்கீதாபிஜ்லானி, கங்குலி-நக்மா, தற்போதைய டோனியும் கூட இதில் அடக்கம்.

pradeepkt
10-04-2007, 11:17 AM
ஏற்கனவே இப்படி நினைச்சு நினைச்சு ஆடினவங்க நிலையே பரிதாபமா இருக்கு. ஏம்ப்பா நீங்க வேற...
என்னமோ இனிமேலாச்சும் நடிகைகளை மட்டுமில்லை... நடிக்கிறதையும் ஓரமா வச்சிட்டு வெளையாண்டாச் சரி...

mas
10-04-2007, 11:34 AM
ஏற்கனவே இப்படி நினைச்சு நினைச்சு ஆடினவங்க நிலையே பரிதாபமா இருக்கு. ஏம்ப்பா நீங்க வேற...
என்னமோ இனிமேலாச்சும் நடிகைகளை மட்டுமில்லை... நடிக்கிறதையும் ஓரமா வச்சிட்டு வெளையாண்டாச் சரி...

நண்றாக சொன்னீர் நண்பரே....... விளம்பர படங்களில் அதிக கவனம் செலுத்தாது... இனிமேலாவது விளையாட்டில் கவனம் அதிகம் இருந்தால் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க முடியும்.........

pradeepkt
10-04-2007, 12:55 PM
வாங்க மாஸூ...
அப்படியே உங்களைப் பத்தி ஒரு அறிமுகம் தாங்க பாஸூ...

aren
10-04-2007, 03:44 PM
நண்றாக சொன்னீர் நண்பரே....... விளம்பர படங்களில் அதிக கவனம் செலுத்தாது... இனிமேலாவது விளையாட்டில் கவனம் அதிகம் இருந்தால் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க முடியும்.........

விளம்பரத்துக்கு இனிமே ஆப்பு என்றே நினைக்கிறேன். எல்லா கிரிக்கெட் வீரர்களுக்கும் வயிற்றில் புளி கரைக்கிறது இப்பொழுது. வருமானம் போய்விட்டால் என்ன செய்வது என்பதே இப்பொழுது இவர்களுடைய கவலை. நன்றாக விளையாட வேண்டும் என்பதில்லை. இதற்காக சில ஏஜண்டுகள் வேறு இவர்களுக்கு உண்டு. அவர்கள் கிரிக்கெட் வாரியத்தை கோர்ட்டிற்கு கொண்டு போகப்போவதாக வேறு மிரட்டல் விடுகிறார்கள். இது எங்கே போய் முடியப்போகிறதோ தெரியவில்லை.

நன்றி வணக்கம்
ஆரென்

பென்ஸ்
10-04-2007, 03:51 PM
அடுத்த தடவை சச்சின் ஆடும் போது திரிஷாவை மனதில் வைத்து ஆடினா இந்தியா ஜெயிக்கும்..:icon_wink1: :icon_wink1:
அதுக்கு இது கில்லி இல்லைபா.. கிரிக்கெட்..:sport-smiley-013: :sport-smiley-013:

aren
10-04-2007, 03:53 PM
அதுக்கு இது கில்லி இல்லைபா.. கிரிக்கெட்..:sport-smiley-013: :sport-smiley-013:

சச்சின் பேசாமல் கிரிக்கெட்டிலிருந்து தாமாகவே விலகிக்கொள்ளலாம். அதுதான் அவருக்கு இனிமேல் நல்லது.