PDA

View Full Version : உயிர்ப்பிச்சையொன்று...poo
28-03-2007, 10:44 AM
கண்ணுக்குள்
வைத்துக்கொள்வதற்கு
வருடாந்திர வாடகை..

நானில்லாமல்
காட்சிகளில்லை..
கோமாளி
வேடமொன்றுதான்
எனக்குப் பொருத்தமாம்..

வரவேற்பறையில்
சிலநேரம் நிற்பேன்
திரைச்சீலை நிழலாக ..

நாள் தவறாமல்
அசைவ விருந்துதான்
மேசைகளில் ருசிக்கப்படும்
என் பரம்பரை உறவுகள்..

எனக்குள்
அழுகிக்கொண்டிருக்கும்
உணர்வுகளின் வாசம்
வாசல் தாண்டிவிடுமோவென
மூடிவைக்கிறேன்.

சாயங்கால வேளைகளில்
அமைதியிழந்து அழும்
மொட்டைமாடித் தனிமை.

சொகுசுக் காருக்கு
ஒருமுறை..
அடுக்குமாடி வீட்டுக்கு
ஒருமுறை....
பெரிய திரைப்பெட்டிக்கு
ஒருமுறை..
ஒவ்வொரு கருவும்
உருமாறிக் கிடக்கிறது...

வாய்க்கரிசிகளில்
வாழ்க்கையோட்டும்
கணவனே...
இன்றென்னை
கட்டியணைக்கும்முன்
சொல்லிவிடு
இதற்கென்ன
கூலிக் கேட்கப் போகிறாய்?!..

இளசு
29-03-2007, 08:42 PM
இங்கு இருந்த தேவையற்ற,
விமர்சனம் என்ற வரம்புக்குள் வராத
பதிவுகள் அகற்றப்பட்டன..

இடம்,பொருள், ஏவல் அறியாமல் இப்படி
இறைந்துகிடக்கும் குப்பைகள் யாவும் களையப்படும்....


உறுப்பினர்கள், குறிப்பாய் புதியவர்கள் கொஞ்சம் நிதானத்துடன்
எங்கும் உலவி பின் பொருத்தமான இடங்களில் தக்க பாணியில் பதிப்பார்கள் என நம்புகிறேன்..

நன்றி...
------------------------------------------------------------

ஒரு நல்ல கவிதையை வாசித்து
பின்னூட்டம் இடவந்தால்,
மனம் சலித்துப்போய்விட்டது இங்கே இருந்த
பொருத்தமற்ற பதிவுகளைக்கண்டு...

பதிவுகளை அதன் போக்கில் வாசிக்கவிடாமல்
திசை திருப்பும் எவருக்கும் என் கண்டனங்கள் உரித்தாகும்...

இளசு
29-03-2007, 09:09 PM
அன்புள்ள பூவுக்கு

உன் படைப்பின் தடம் புரட்டும் பதிவுகள் இங்கே இரண்டுநாள்
இருந்தமைக்கு முதலில் நிர்வாகம் சார்பில் மன்னிப்பு கோருகிறேன்.

இன்றுதான் என் பார்வையில் பட்டது.

இதுவரை இங்கே அவை இருந்ததே இமாலயத்தவறுதான்..

(நீயும் இதை ஏன் தனிமடலிலாவது எனக்குச் சொல்லவில்லை
என கொஞ்சம் வருத்தம்..)

இனி இவ்வாறு நிகழாதவாறு பார்த்துக்கொள்கிறோம்.

---------------------------------------------------

இளசு
29-03-2007, 09:15 PM
சில தேவைகளுக்காய் மட்டும் உறிஞ்சும் அட்டைப்பூச்சிக்கணவன்கள்..

தன் வீட்டு, தொழில் செலவுக்கு மனைவியை அவள் பெற்றவரிடம்
வாங்கிவரக்கேட்டால் அது வரதட்சணைக் கொடுமை ஆகாது என
உச்சநீதிமன்றமே கொடுத்த தீர்ப்பு நிழலில் இன்னும் குளிர்ந்துவிட்ட
அட்டைகள்...

திரைச்சீலையாய், உண்ணப்படும் மாமிசமாய்
உணர்வற்றவளாய் அவளை நடத்திவரும் .நயமற்றவன்..

காலமெல்லாம் கண்ணுக்குள் வைத்துக் காக்க
வருடாவருடம் கூலி வாங்கும் விநோத காவல்காரன்..

இவளுக்கு இல்லமே அசோகவனம்..
இவள் இராமனே இராவணனும்..

சீதைகள் நெருப்பில் வாட அல்ல..
வாட்டத் தொடங்கினால் மட்டுமே
மாற்றம் வரும் -இந்நிலையில் இருந்து...

poo
30-03-2007, 05:15 AM
அன்புள்ள பூவுக்கு

உன் படைப்பின் தடம் புரட்டும் பதிவுகள் இங்கே இரண்டுநாள்
இருந்தமைக்கு முதலில் நிர்வாகம் சார்பில் மன்னிப்பு கோருகிறேன்.

இன்றுதான் என் பார்வையில் பட்டது.

இதுவரை இங்கே அவை இருந்ததே இமாலயத்தவறுதான்..

(நீயும் இதை ஏன் தனிமடலிலாவது எனக்குச் சொல்லவில்லை
என கொஞ்சம் வருத்தம்..)

இனி இவ்வாறு நிகழாதவாறு பார்த்துக்கொள்கிறோம்.

---------------------------------------------------

அண்ணா...


நான் இக்கவிதையை பதித்தது அலுவலகம் முடியும் நேரம். வீட்டில் கணனி இல்லை. நேற்று நான் விடுப்பில் சென்றுவிட்டேன்.. இப்போதுதான் மன்றம் வருகிறேன். உங்கள் பதிவைப் பார்த்து என்ன நடந்ததென மனம் குழம்புகிறேன்.. தயவுசெய்து அந்த விமர்சனங்களை எனக்கு காட்டுங்களேன்.. பார்க்காமல் தவிப்பதைக் காட்டிலும், அது அவ்வளவு வருத்தமளிக்குமா என்ன?!!


அண்ணா மன்னிப்பு கேட்குமளவு போக வேண்டாமே... நான் எந்தளவு நிர்வாகம்மேல் மதிப்பு வைத்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.. என்னதான் பெரிய தவறு அரங்கேறினாலும் அதுபற்றி நிர்வாகம் என்னை நினைத்து கவலைப்பட வேண்டாம். நம்ம வீட்டுக்குள்ள என்ன மன்னிப்பு, தனி மரியாதை எல்லாம்?!

பரஞ்சோதி
30-03-2007, 05:30 AM
நண்பர் பூவில் கவிதையும் இளசு அண்ணாவின் விமர்சனமும் மிக அருமை.

திரியை திசை திருப்புவர்களையும், தேவையற்ற விமர்சனம் கொடுப்பவர்களையும் வழிநடத்துநர்கள் கண்டிக்க வேண்டும். இப்போ பாருங்க கவிதை படைத்தவரையும், படிக்க வருபவர்களையும் இங்கே என்ன நடந்தது என்று பதைக்க வைத்து விட்டார்கள். இனிமேல் அதை மன்ற நண்பர்களே தவிர்க்க வேண்டும். நட்பு பாராட்டுவோம், நல்லதை பாராட்டுவோம், நல்லது செய்ய நினைப்போம்.

poo
30-03-2007, 05:33 AM
சில தேவைகளுக்காய் மட்டும் உறிஞ்சும் அட்டைப்பூச்சிக்கணவன்கள்..


சீதைகள் நெருப்பில் வாட அல்ல..
வாட்டத் தொடங்கினால் மட்டுமே
மாற்றம் வரும் -இந்நிலையில் இருந்து...


கருத்துக்கு நன்றி அண்ணா...

சமுதாயத்தில் மரியாதை கிடைக்க வேண்டுமென தன் சுய மரியாதைகளை இழந்து கொண்டிருக்கும் தந்தைகள் மாற வேண்டும்.

ஒரேடியாக செத்துவிடுவாரே தந்தை என கொஞ்சம் கொஞ்சமாக தானும் செத்து தகப்பனையும் சாகடிக்கும் மகள்கள் மாற வேண்டும்.

poo
30-03-2007, 05:36 AM
நன்றி பரம்ஸ்...

நீண்ட நாட்களுக்குப்பிறகு என் கவிதை வாசித்துள்ளீர்கள்...

சக்திக்குட்டி நலம் கேட்டதாக சொல்லுங்கள்.

மனோஜ்
01-04-2007, 08:24 PM
பூ கவிதை அழகாய் அரங்கேற்றியதற்கு பாராட்டுக்கள்

ஷீ-நிசி
02-04-2007, 03:42 AM
இங்கே ஒரு தேவையற்ற பதிவு இருந்தது.. கவிதையின் தன்மையையே திசை திருப்புவதாய் இருந்தது.. தக்க நேரத்தில் அதை நீக்கியமைக்கு நன்றி இளசு அவர்களே!