PDA

View Full Version : பிப்ரவரி-14



செல்விபிரகாஷ்
28-03-2007, 07:10 AM
http://bp1.blogger.com/_e_laRiU0vmM/RffaNMGU41I/AAAAAAAAACc/mSoNjoRVhDs/s400/Feb14.jpg

உன் மூச்சுக்காற்று தொடும்
தூரத்தில்
நானிருக்கையில் என்னைக்
காட்டிலும்
அதிகம் பாதிக்கப்ப்டுவது
யார் தெரியுமா?
உன் மூச்சுக்காற்றின் வெப்பத்தில்
மெழுகாய் உருகிக் கொண்டிருக்கும்
என் காதல் தான்...

என்றும் அன்புடன்
செல்விபிரகாஷ்

ஓவியன்
28-03-2007, 07:17 AM
கவி வரிகள் அருமை செல்வி!

உங்கள் பிறந்த நாளில் இந்த கவிதையை பதித்தமைக்கு ஏதேனும் காரணம் உண்டா?

அறிஞர்
29-03-2007, 01:47 PM
மூச்சு காற்றினால்...
காதலுக்கு பாதிப்பா...

இந்த பாதிப்பு...
ஒரு ஏக்கத்தை தானே உருவாக்கும்...

தொடருங்கள் செல்வி...

அமரன்
29-03-2007, 02:07 PM
எளிமையான சொற்கள். அனைவரும் புரிந்துகொள்ளகூடிய கவிதை. உங்களிடமிருந்து இன்னும் பலவற்றை எதிர்பார்க்கின்றேன்.

ஓவியா
29-03-2007, 02:43 PM
அதிகம் பாதிக்கப்படுவது
யார் தெரியுமா?

காதல் :sport-smiley-019:


அருமையாக காதல் கவிதை எழுதறீர்கள் தோழி. பாராட்டுக்கள்.

விகடன்
29-03-2007, 04:52 PM
உன் மூச்சுக்காற்று தொடும்
தூரத்தில்
நானிருக்கையில் என்னைக்
காட்டிலும்
அதிகம் பாதிக்கப்ப்டுவது
யார் தெரியுமா?
உன் மூச்சுக்காற்றின் வெப்பத்தில்
மெழுகாய் உருகிக் கொண்டிருக்கும்
என் காதல் தான்...

என்றும் அன்புடன்
செல்விபிரகாஷ்
சரியான ஒரு பதத்தினை இட்டிருக்கிறீர்கள்.
உருகி ஓடும் மெழுகு எந்த வடிவத்தினை எடுப்பது என்பது குழப்பமே.
எடுத்த வடிவமும் எப்போது கலையுமே என்பது அடுத்த கேள்வியே.

படும் மூச்சுக்காற்றால் பல மனங்கள் கலைக்கப்படுவதை உணர்த்தி நிற்கிறது.

அருமை... அருமை..

இளசு
29-03-2007, 10:40 PM
சரியான ஒரு பதத்தினை இட்டிருக்கிறீர்கள்.
..

கூடவே சரியான படத்தினையும்.. இல்லையா ஜாவா?

------------------------------------------------------


செல்வியின் கவிதையும் அழகு
ஜாவாவின் விமர்சனமும் அழகு..

பாராட்டுகள் இருவருக்கும்!

ஆதவனுக்கு ஒரு துணையாய் ஜாவா வந்துகொண்டிருக்கிறார்..
மகிழ்கிறேன்..