PDA

View Full Version : இத்தனைக்கும் 26 வயது தான் எனக்கு!



lenram80
28-03-2007, 01:15 AM
கண் சரியாக தெரியவில்லை!
காது கூட கொஞ்சம் மந்தமாகத் தான் கேட்கிறது!
முடி நரைத்து விட்டது!
பாதி கொட்டியும் விட்டது!
முட்டியும் வலிக்கிறது!

இத்தனைக்கும் இளமை பொங்கும் 26 வயது தான் எனக்கு!

வெளியே தெரியும் உறுப்புக்களுக்கே
இத்தனை சேதாரம் என்றால்
கல்லீரல், கணையம், நுரையீரல்,சிறுநீரகம்
இதெல்லாம் எந்த லட்சணத்தில் இருக்கிறதோ?

கண்டிப்பாய் கன்னாபின்னாவென்று கெட்டு
கலங்கிப் போயிருக்கும் ஒன்று!

பிறகென்ன சும்மாவா?

ஐந்தாவதில் சரோஜா!
ஒன்பதாவதில் விஜயலெக்ஷுமி!
கல்லூரியில் வினிதா!
அலுவலகத்தில்
முதல் வருடம் மோகனா!
சற்று வருடம் கழித்து சங்கீதா!

இப்போது கூட உயிர் வாங்க ஒருத்தி!
ஆம்! உண்மையிலேயே ஒரு தீ!

அப்பறம் வெந்து போகாமால்
சும்மாவா இருக்கும் இதயம்?

டாக்டர் அண்ணாதுரை
28-03-2007, 02:43 AM
எய்ட்ஸ்?...பிறகென்ன சும்மாவா......இடுப்பை சுற்றி இத்தனை இருந்தா....பிறகு என்ன வரும்? கடைசி வரிகள்....வேறு எதையோ குறி வைப்பதாக தெரிகிறது.

அறிஞர்
28-03-2007, 03:40 AM
இளமையின் ஆட்டம்
இளமையிலே ஆட்டம் காண வைத்துவிட்டதோ...

பலரின் நிலை இப்படி பரிதாபம் தான்...

வாழ்த்துக்கள் லெனின்.

poo
28-03-2007, 05:11 AM
தன் வாழ்வை பாதியாக்கி, சுற்றத்தின் வாழ்வை முழுமையாய் அழிக்கும் கொடூரத் தீ அவன்!

நிறைய எழுதுங்கள் லெனின்.

க.கமலக்கண்ணன்
28-03-2007, 01:49 PM
நெஞ்சம் மட்டும் அல்ல மஞ்சம் கூட கசக்குமே அந்த கொடியவன் வந்துவிட்டால்...

நேர்வழியில் செல்லுங்கள்
மனைவியை மட்டும் நேசியுங்கள்
எய்ட்ஸ் மட்டும் கொன்றிடுங்கள்.

இளசு
29-03-2007, 09:33 PM
புள்ளிராஜா வந்தும் புள்ளிவிவரத்தில் மேலே இருக்கும்
இந்தியாவுக்கு, தமிழகத்துக்குத் தேவையான கவிதை!

நன்றி லெனின்..

ஓவியா
29-03-2007, 09:35 PM
அன்பு இளசு அவர்களே,

புள்ளிராஜா!!!!!

இது என்ன, யார் அல்லது ஏதேனும் பொருள் பெயரா??

இளசு
29-03-2007, 09:40 PM
,

புள்ளிராஜா!!!!!

இது என்ன, யார் அல்லது ஏதேனும் பொருள் பெயரா??

ஓவியா அவர்களே,

தமிழக எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையம் பாதுகாப்புக்காக மிகப் பிரபலப்படுத்திய ஆணுறை அது..

விளம்பரங்களில் மிக அதிகமாய் புழங்கிய பெயர் அது..

ஆனாலும் Epidemic எனப்படும் அளவுக்கு இந்தியாவில் இந்நோய்..
மருத்துவ உலகின் உச்ச ஏடான New England Journal of Medicine-ல்
சென்ற வாரத் தலையங்கமே இந்திய எயிட்ஸின் அசுர பரிமாணம் பற்றித்தான்..

எயிட்ஸ் வந்தால்
இலவச இணைப்பாய்
காசமும் வரும்!

ஓவியா
29-03-2007, 09:45 PM
அப்படியா விசயம்.

விளக்கம் அறிந்தேன்.

உடனுக்குடன் பதில் பதிவு இட்டமைக்கு தலைவணங்குகிறேன்.

மிக்க நன்றி சார்.

அன்புரசிகன்
29-03-2007, 09:46 PM
இப்போது கூட உயிர் வாங்க ஒருத்தி!
ஆம்! உண்மையிலேயே ஒரு தீ!



அது மனைவிதானே:209: ? (உங்களுடைய:sport-smiley-018: )