PDA

View Full Version : 2007 - குவைத் கிரிக்கெட் போட்டிபரஞ்சோதி
27-03-2007, 10:01 AM
கிரிக்கெட் என்று பேச்சு எடுத்தாலே மக்கள் எல்லோரும் கையில் கிடைப்பதை தூக்கி வீசி தாக்குறாங்கன்னு தெரிஞ்சும் நான் விளையாடிய கிரிக்கெட் பற்றி சொல்கிறேன். யாரும் பின்னோட்டத்தில் தாக்கிடாதீங்கப்பூ.

பல ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வருகிறேன், சென்ற ஆண்டு தான் எங்க கம்பெனி முதன் முறையாக கிரிக்கெட் போட்டிகள் நடத்த சம்மதம் தெரிவித்தது, குவைத்தில் புகழ் பெற்ற (தினேஷ் கார்த்திக் பயிற்சி பெற்ற) அஹமதி கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடந்தன, மொத்தம் 32 அணிகள் மோதிய ஆட்டத்தில் நாங்க இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றோம், முதல் ஒரு போட்டியில் மட்டும் விளையாடி விட்டு கேப்டனாக இருந்த டிக்சன், மட்டையாளர்கள் பாரதி, லாட் போன்றோர் ஊருக்கு சென்று விட்டதால், நான் தலைமை ஏற்று, தொடர் வெற்றிகள் கண்டு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றோம், முக்கிய வீரர்கள் நன்றாக ஆடாத நிலை, தொடர் கிரிக்கெட் காரணமாக காயங்கள், பதட்டம் என்ற நிலையில் குறைவான ரன்கள் பெற்றோம், எல்லோரும் பாதி ஓவர்களிலேயே ஆட்டம் முடியும் என்று எல்லோரும் சொல்ல, பலமான எதிரணியை கடைசி ஓவர், கடைசி பந்து வரை போராட வைத்தோம், கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் எதிரணி வெற்றி, விக்கெட் விழுந்தால் நாங்க வெற்றி என்ற நிலையில் மிகச் சிறந்த தடுப்பாளரின் கையில் பிடிபடாமல் பந்து போக, நாங்க தோல்வி கண்டு, இரண்டாவது இடத்தைப் பெற்றோம். வென்ற அணியை விட எங்களுக்கு அதிக பாராட்டு கிடைத்தது சிறப்பான ஒன்று.

இந்த ஆண்டு, இரண்டாவது முறையாக போட்டிகள் நடத்த கம்பெனி அறிவிப்பு கொடுக்க, ஒரே பரபரப்பு, கிரிக்கெட் மட்டையை தொடாதவர்கள் கூட தினமும் ஆட்டங்களில் கலந்து கொண்டு விளையாடத் தொடங்கி விட்டார்கள். இந்த ஆண்டு 60க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்து கொள்ள விண்ணப்பங்களை அனுப்பினார்கள். இறுதியாக பல அணிகளை இணைத்து 32 அணிகள் தயார் செய்தார்கள்.

எங்க அணி 90% சென்ற ஆண்டு விளையாட வீரர்கள் தான். இம்முறையும் கேட்பனாக டிக்சனும், துணை கேப்டனாக நானும், மேனேஜராக காஷ்மீரை சேர்ந்த அப்துல் ஹமீத் மிர் என்பவரும் இருக்கிறோம்.

நாக் அவுட் என்ற முறையில் தொடங்கும் போட்டிகளில் முதல் போட்டியிலேயே சென்ற ஆண்டு சாம்பியன் அணி 12 ஓவரில் 206 ரன்கள் அடித்தார்கள். மற்ற அணிகளும் 170, 160 ரன்கள் என்று குவித்தார்கள். மொத்தம் 15 போட்டிகள் முடிந்த நிலையில் சென்ற ஞாயிற்றுகிழமை கடைசி போட்டியாக எங்க போட்டி நடந்தது. எல்லோருக்கும் நாங்க என்ன செய்யப் போகிறோம் என்ற ஆர்வம்.

எங்களுடன் மோதிய அணி சுபையா பவர் ஸ்டேஷன் அணி, சென்ற ஆண்டு அதே அணி எங்களுடன் காலிறுதிப் போட்டியில் தோற்றுப் போனார்கள், ஆகையில் இம்முறை சிறப்பான அணியை தேர்வு செய்திருந்தார்கள்.

எங்க அணியில் டிக்சன், நான், அஸ்லாம், அருண், ரவி, மாலிக், ஸ்ரீஜித், பிரதீப், சாவூத், சாவுல், வெங்கட், ஜமீல், பிரசாத், பாரதி இடம் பெற்றிருந்தோம், போட்டிக்கு முன்பு பயிற்சிப்போட்டியில் ரஸ்தூம் என்பவர் காயம் காரணமாக வெளியேறி விட்டார்.

எங்க கம்பெனி, இம்முறை சொந்த மைதானம் தயார் செய்து, மிகச் சிறப்பாக மின்னொளியுடன் ஏற்பாடு செய்திருந்தாங்க. மைதானத்திற்கு செல்ல குறைந்தது 1 மணி நேரம் ஆகும், அவ்வளவு தூரம்.

வண்டியில் பயணிக்கும் போதே டிக்சன் சொன்னார் இது நாம் அனைவரும் ஒன்றாக விளையாடும் கடைசி கோப்பை, அடுத்த ஆண்டு, நான் இன்னும் பலர் குவைத்தில் இருக்க மாட்டோம், எங்க காண்ட்ராக்ட் முடிந்து விட்டது, ஆகையால் மிகச்சிறப்பாக, நம்முடைய முழுத்திறனும் காட்டி விளையாட வேண்டும், மேலும் நம்முடைய அணி சிறப்பான அமைப்பாக இருக்க வேண்டும், மைதானத்தில் நானும், சுரேஷ் மட்டுமே பேசுவோம், முடிவு எடுப்போம், வேறு யாரும் விவாதத்தில் ஈடுபடக்கூடாது, ஒவ்வொரு பந்து வீசும் முன்பு உற்சாகப்படுத்த வேண்டும் என்று எல்லாம் பேசி விட்டோம்.

போட்டிகளில் மொத்தம் 12 ஓவர்கள், ஒரு பந்து வீச்சாளருக்கு அதிகபட்சமாக 3 ஓவர்கள். வைட், நோ பால் போட்டால் 2 ரன்கள் மற்றும் ஒரு பந்து வீச வேண்டும், LBW கிடையாது, காலில் பட்டு போனால் ரன் இல்லை என்பது விதிமுறைகள். மொத்தம் 4 குருப், ஒவ்வொன்றிலும் 8 அணிகள். வென்ற 4 அணிகளை ரன் ரேட் விகிதத்தில் வரிசைப்படுத்தி, அடுத்த குருப்பில் இருக்கும் அணிகளுடன் மோத வேண்டும். ரன் ரேட்டில் அதிகம் பெற்றால் அடுத்த அணியில் இருக்கும் குறைந்த ரன் ரேட் அணியுடன் மோதலாம். ஆக நாங்க அதிக ரன்ரேட்டில் வெல்ல வேண்டும், அதுக்கு பேட்டிங்க் செய்தால் நல்லது என்று நினைத்தோம்.

போட்டியில் எங்க தலை டிக்சன் தலை கேட்டு, வென்று, நாங்க முதலில் மட்டையடிக்க போனோம். அதிரடி ரவியும், டிக்சனும் இறங்கினார்கள். முதல் 2 ஓவரில் 31 ரன்கள், 6 ஓவரில் 71 ரன்கள், 10 ஓவரில் 141 ரன்கள், கடைசி இரண்டு ஓவரில் நானும் பிரதீப் சேர்ந்து 49 ரன்கள் குவித்தோம், 12 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள். அதில் 13 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள்.

மட்டையாளர் -சந்தித்த பந்து -எடுத்த ரன் - சிக்ஸர் - பவுண்டரி
ரவி --- 9 --- 21 --- 2 --- 2
டிக்சன் --- 14 --- 12 --- 0 --- 2
அருண் --- 15 --- 35 --- 2 --- 4
ஜமில் --- 10 --- 16 --- 1 --- 1
மாலிக் --- 5 --- 18 --- 3 --- 0
சுரேஷ் --- 11 --- 31 --- 3 --- 2
பிரதீப் --- 8 --- 27 --- 2 --- 3


நாங்க மட்டையடிக்கும் போது எதிரணி கேப்டன் நாகரீகம் இல்லாமல் கத்திக் கொண்டிருந்தார், லேலோ, லேலோ (தூக்கு, அவுட் ஆக்கு) என்று இந்தியில் கத்த, எங்களுக்கு மட்டுமல்லாது எல்லோருக்கும் சரியான எரிச்சல், நடுவரிடம் முறையிட்டும் பந்தை சந்திக்கும் போது கத்துவார், கடைசியில் எங்க ஆளுங்க சிக்ஸரும் பவுண்டரியுமாக அடிக்க, கூட்டத்தினரும், எங்க நண்பர்களும் மாரோ, மாரோ (அடி, அடித்து நொறுக்கு) என்று திருப்பி கத்த, ஒரே ஜாலி. அதே ஆள் மட்டையடிக்க வந்த போது மொத்த கூட்டமும் அவரை லேலோ லேலோ என்று சொல்ல பாவம் அவர், ஒருவழியாகி விட்டார்.

நாங்க அதிரடியாக எடுத்த ரன்களை கண்டு எதிரணி மட்டுமல்லாது பார்வையாளர்களும் மிரண்டு போயிருந்தார்கள். இப்போ எதிரணி மட்டையை பிடிக்க வந்தார்கள், நான் ஓடி ஓடி ரன் எடுத்து, விளையாடிய களைப்பினால் வெளியே இருக்க, எனக்கு பதிலாக பிரசாத் பீல்டிங் செய்ய சென்றார். முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அஸ்லாம் வீச, தொடக்க வீரரை அதை கணிக்கவே முடியவில்லை, மட்டையில் பந்து படவே இல்லை, இறுதியில் ஒரு ரன் + ஒரு நோ பால் (2 ரன்) மட்டுமே எடுக்க முடிந்தது, வழக்கமாக நான் வீசும் பகுதியில் டிக்சன் வீச வந்தார்.

முதல் 4 ஓவர்களில் அவர்கள் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்கள். அடுத்து உள்ளே நான் வந்து 5வது ஓவர் வீச வந்தேன், இதுவரை ரன்கள் இல்லை, இனிமேலும் அடிக்கலைன்னா, வெளியே இருக்கிறவங்க கல்லால் அடிப்பாங்கன்னு நினைச்சு, மட்டையாளர் என் பந்தை அடிக்க நினைக்க, அது அவரது கெட்ட நேரம் போல் மட்டையில் படவே இல்லை, 5வது பந்தில் அவர் விக்கெட் காலி என்று நினைத்தேன், சரியான யார்க்கர், ஆனால் ஸ்டெம்ப் உள்ளே வேகமாக போன பந்தால் பெயில்ஸ் கீழே விழவில்லை, எனக்கு படு ஆச்சரியம், நடுவரே சிரித்து விட்டார். விடுவேனா நான், அடுத்த பந்தை அதே போல் வீச இம்முறை பெயில்ஸ் பறந்தது. மைதானத்தில் ஒரே ஆட்டம், கொண்டாட்டம்.

அடுத்த முனையில் அருண் பந்து வீச வந்தார், பதட்டத்தில் 3 வைட் (3 x 2 = 6) ரன்கள் இலவசமாக போய் விட்டது, அத்துடன் ஆட்டத்திலேயே அடிக்கப்பட்ட ஒரே ஒரு பவுண்டரியும் வந்தது, பொறுத்தது போதும் என்ற நிலையில் அடுத்த ஒவர் முதல் பந்தில் மேலும் ஒருவரை போல்ட் செய்தேன், மறு முனையில் ஜமில் அட்டகாசமாக வீசி 3 விக்கெட்களை கழட்டினார்.

பந்து வீச்சாளர் - ஓவர் - மெய்டன் - கொடுத்த ரன் - விக்கெட்
அஸ்லாம் --- 2.5 --- 1 --- 7 --- 2
டிக்சன் --- 2 --- 0 --- 10 --- 0
சுரேஷ் --- 3 --- 2 --- 3 --- 2
அருண் --- 2 --- 0 --- 17 --- 1
ஜமில் --- 2 --- 0 --- 5 --- 3


இறுதியில் எதிரணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 42 ரன்கள் மட்டுமே எடுத்தது, மட்டையில் பட்டு வந்த ரன்கள் 24 மட்டுமே, மீதி 18 ரன்கள் உதிரிகள். நாங்க 148 ரன்கள் வித்தியாசத்தில் வென்றோம், மொத்த ஆட்டங்களிலேயே நாங்க தான் அதிக வித்தியாசம், அதிக ரன் ரேட் என்ற சாதனையில் வென்றோம். எல்லோருக்கும் மகிழ்ச்சி, ஆட்டத்தில் நாங்க மிகச்சிறப்பாக நடந்து கொண்டோம், ஒரு பிரச்சனையும் இல்லை, ரொம்பவும் கட்டுக்கோப்பான அணி என்ற பெயரும் கிடைத்தது.

தோற்ற அணியினரை தேற்றினேன், அவர்களில் ஒரு சிலர் என் நண்பர்கள், இனிவரும் போட்டிகளில் எங்களை ஆதரிக்க கேட்டுக் கொண்டேன்.

ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன், சென்னையிலிருந்து வாங்கி வந்த மட்டையில் சக்தியின் பெயரை எழுதி வைத்திருந்தேன், போட்டிக்கு முன்னராக சக்தியிடம் பேசினேன். டிக்சன் அடிக்கடி கிண்டல் செய்வார், சுரேஷ், சக்தி வந்த பின்னர் உங்க ஆட்டத்தில் ரொம்ப மாற்றம் தெரியுது, வயசு குறைவது போல் தோனுது என்பார், இன்று போட்டிக்கு முன்னர் சக்தியிடம் பேசியாச்சா என்று கேட்டார். போட்டிக்கு பின்னர் இனிமேல் எல்லா போட்டிக்கு முன்னரும் சக்தியிடம் பேசி விடுங்க என்று கேட்டுக் கொண்டார்.

32 அணிகளில் 16 அணிகள் வென்றிருக்கின்றன. அதில் முக்கிய அணிகள் இருக்கின்றன, இன்று முதல் இரண்டாம் சுற்று போட்டிகள் நடக்குது, இதில் 8 அணிகள் வென்று காலிறுதிக்கு தகுதிப் பெறும். இனி வரும் ஆட்டங்கள் இன்னும் சூடு பிடிக்கும். சென்ற ஆண்டு வென்ற அணியும், மூன்றாம் இடம் பிடித்த அணியும் மோதுகிறது, மற்ற போட்டியில் சிறந்த அணியுடன் நான்காம் இடம் பிடித்த அணி மோதுகிறது. இப்படியாக சுவாரஸ்யமான போட்டிகள் பல நடக்க இருக்கின்றன.

நேற்று சரியான மழை, கிரிக்கெட்டுக்கும் மழைக்கும் அப்படி என்ன சம்பந்தமோன்னு புரியலை. இன்று போட்டிகள் நடக்குமான்னு மாலையில் தான் தெரியும், மேலும் நான் நடுவராகவும் பங்கேற்க இருக்கேன், அது ஒரு வகையில் எதிரணிகளைப் பற்றி கணிக்க உதவும்.

இந்த ஆண்டும் வெற்றி பெற்று கோப்பையுடன் உங்களுக்கு காட்சி அளிக்க ஆசைப்படுகிறேன். எங்க அணியின் புகைப்படம் மாலையில் வெளியிடுகிறேன்.

rajasi13
27-03-2007, 10:16 AM
வாழ்த்துக்கள் சுரேஷ். வென்று வருக. சக்தியிடமும் தெரிவியுங்கள் வாழ்த்துக்களை.

பரஞ்சோதி
27-03-2007, 10:34 AM
வாங்க ராஜா,

பார்த்து, பேசி, பல காலம் ஆகுது? நலம் அறிய ஆவல்.

ராகுல் மானத்தை வாங்கிட்டாரே? நம்ம ராகுலை சொல்லலை?

மதி
27-03-2007, 10:52 AM
கலக்குங்க பரம்ஸ்..
முதல் சுற்று ஆட்டத்தில் வென்றமைக்கு வாழ்த்துக்கள்...
இறுதி போட்டியிலும் வெல்ல வாழ்த்துக்கள்...

சரி..இவ்வளவு சொன்னதுக்கப்புறமும் ஆட்டநாயகன் யார் என்பதை நீங்க சொல்லல...ஆனாலும் கண்டுபுடிச்சிட்டோம்ல..!

ஷீ-நிசி
27-03-2007, 11:46 AM
ஆஹா! நீங்க இந்திய அணியில சேர்ந்திருக்கலாம் போல... வாழ்த்துக்கள் பரம்ஸ்...

அறிஞர்
27-03-2007, 12:16 PM
அழகான கிரிக்கெட் விமர்சனம்...

போட்டோவை காண ஆவலுடன் இருக்கிறோம்.

mukilan
27-03-2007, 03:14 PM
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தோற்றாலும் குவைத் கோப்பை கிரிக்கெட்டிலாவது கோப்பை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. விளாசுங்கள் அண்ணா! மாரோ! மாரோ!!

பென்ஸ்
27-03-2007, 03:27 PM
பரம்ஸ்...
நீங்க பெங்களூர் வந்த போது கிரிக்கெட் ஆடனும்முன்னு நான் நினைத்திருந்தேன்.... அப்புறம் சில காரணக்களால் அது நடக்காமல் ஆனது.
எப்படியோ கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் கலக்கிட்டிங்க...
அடுத்த முறை பெங்களுர் வரும்போது நமக்கு கண்டிப்பா கிரிகெட் ஆடனும், நான் உங்க பந்தை "லேக் பை" சிக்ஸ் அடிக்கனும்னு இருக்கேன்.. :-)
மதி சொன்னது போல் ஆட்ட நாயகன் யாருன்னு எனக்கு தெரியுமில்லையா...

சக்தி குட்டிக்கு என் அன்பை சொல்லவும்...

அமரன்
27-03-2007, 03:40 PM
அடுத்த நட்சத்திர ஆட்டக்காரர்கள் உங்களில் ஒருவராக இருக்கலாம். வாழ்த்துகள்

பாரதி
27-03-2007, 06:19 PM
வழக்கம் போலவே படிக்க மிகவும் விறுவிறுப்பாக இருந்தது பரஞ்சோதி. எல்லாப்போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இராசகுமாரன்
28-03-2007, 05:25 AM
மைதானத்தில் நாங்களே இருந்தது போல் அமைந்தது நீங்கள் விவரித்த விதம்.

உலகக் கோப்பை கொடுத்த ஏமாற்றத்தை உங்கள் கோப்பை மாற்றட்டும்.

poo
28-03-2007, 05:39 AM
என்னங்க அவ்ளோ அடியா அடிப்பாங்க.... ஆஸிக்காரன் ஆட்டத்தத ஓசியில காட்றீங்கபோல...

வாழ்த்துக்கள் பரம்ஸ்... வெற்றி நமதே!! (ஹிஹி.. நாம என்னைக்கும் ஜெயிக்கிற கட்சி!)

ஓவியன்
28-03-2007, 05:46 AM
வெற்றி பெற்ற உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

பரஞ்சோதி
28-03-2007, 08:41 AM
http://img.photobucket.com/albums/v452/paransothi/kncricket.jpg

இது தான் எங்க அணி. இதில் நான் எங்கே இருக்கேன் என்று கண்டுபிடியுங்களேன் பார்ப்போம்.

பென்ஸ்
28-03-2007, 08:45 AM
என்ன பரம்ஸ்...
ஊரில் சின்ன துன்டை (குற்றால டவ்வல் என்று சொல்லுவாங்களே) தலையில் கட்டி கொண்டு கிரிகெட் அடுவது மாதிரி தலையில் எதோ இருக்குதோ, அது என்ன ???
உங்க ஊரு டவ்வலா???

pradeepkt
28-03-2007, 08:56 AM
அண்ணா,
சும்மா கலக்கிப் போட்டீர்கள் போல... கிரிக்கெட்டு ஜூரம் எங்களுக்கு விட்டாலும் உங்களுக்கு விடலை இல்லையா??? ஹி ஹி

ஆமா கட்டுரை முழுவதும் அங்கங்கு "என்னை"ப் புகழ்ந்தது ஏனோ? எனக்குக் கொஞ்சம் கூச்ச சுபாவம்னு உங்களுக்குத் தெரியும்தானே???

சக்தி பெயரைச் சொன்னால் சக்தி வருவதில் என்ன பெரிய ஆச்சரியம்??? சீக்கிரம் கோப்பையோடு எங்களுக்கு ஒரு "கோப்பை" விருந்தையும் கொடுக்கும் வழியைப் பாருங்கள்.

மனமார்ந்த வாழ்த்துகள்

பரஞ்சோதி
28-03-2007, 08:57 AM
கலக்குங்க பரம்ஸ்..
முதல் சுற்று ஆட்டத்தில் வென்றமைக்கு வாழ்த்துக்கள்...
இறுதி போட்டியிலும் வெல்ல வாழ்த்துக்கள்...

சரி..இவ்வளவு சொன்னதுக்கப்புறமும் ஆட்டநாயகன் யார் என்பதை நீங்க சொல்லல...ஆனாலும் கண்டுபுடிச்சிட்டோம்ல..!

நன்றி தம்பி.

இன்று காலிறுதிக்கு முந்தைய போட்டி நடக்குது, இதில் வென்றிடுவோம். அடுத்து வரும் போட்டிகள் கடுமையான போட்டிகள்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுவது போல் இருக்கும், ஏதாவது ஒரு அணி வெளியேற வேண்டும். நாங்களும் கடும் போட்டியிட காத்திருக்கிறோம்.

பரஞ்சோதி
28-03-2007, 09:00 AM
ஆஹா! நீங்க இந்திய அணியில சேர்ந்திருக்கலாம் போல... வாழ்த்துக்கள் பரம்ஸ்...

நன்றி நண்பரே!

இந்திய அணி, அது பள்ளிப்பருவத்தில் கனவாக இருந்தது, கனவில் பல போட்டிகளில் இந்தியாவை வெல்ல வைத்திருக்கிறேன்.:music-smiley-010:

பரஞ்சோதி
28-03-2007, 09:01 AM
அழகான கிரிக்கெட் விமர்சனம்...

போட்டோவை காண ஆவலுடன் இருக்கிறோம்.

நன்றி நண்பரே!

புகைப்படம் கொடுத்தாச்சு.

பரஞ்சோதி
28-03-2007, 09:02 AM
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தோற்றாலும் குவைத் கோப்பை கிரிக்கெட்டிலாவது கோப்பை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. விளாசுங்கள் அண்ணா! மாரோ! மாரோ!!


சுக்ரியா தம்பி,

இன்றும் அடிக்க வாய்ப்பு கொடுக்கிறாங்களான்னு பார்ப்போம். :)

பரஞ்சோதி
28-03-2007, 09:04 AM
பரம்ஸ்...
நீங்க பெங்களூர் வந்த போது கிரிக்கெட் ஆடனும்முன்னு நான் நினைத்திருந்தேன்.... அப்புறம் சில காரணக்களால் அது நடக்காமல் ஆனது.
எப்படியோ கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் கலக்கிட்டிங்க...
அடுத்த முறை பெங்களுர் வரும்போது நமக்கு கண்டிப்பா கிரிகெட் ஆடனும், நான் உங்க பந்தை "லேக் பை" சிக்ஸ் அடிக்கனும்னு இருக்கேன்.. :-)
மதி சொன்னது போல் ஆட்ட நாயகன் யாருன்னு எனக்கு தெரியுமில்லையா...

சக்தி குட்டிக்கு என் அன்பை சொல்லவும்...

பென்ஸ், மிக்க நன்றி.

உங்களுக்கு முன்னாடி, உங்க மருமகள் சக்தி என் பந்தை அடித்து நொறுக்கிடுகிறார்.

நானும் பெங்களூரில் ஒரு ஆட்டம் போடலாமுன்னு நினைச்சேன், அடுத்த முறை போட்டிடலாம். :food-smiley-008:

பரஞ்சோதி
28-03-2007, 09:05 AM
அடுத்த நட்சத்திர ஆட்டக்காரர்கள் உங்களில் ஒருவராக இருக்கலாம். வாழ்த்துகள்

நன்றி நண்பரே!

பரஞ்சோதி
28-03-2007, 09:06 AM
வழக்கம் போலவே படிக்க மிகவும் விறுவிறுப்பாக இருந்தது பரஞ்சோதி. எல்லாப்போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி அண்ணா.

உங்க அன்பும் ஆதரவும் எங்களை வெல்ல வைக்கும்.

பரஞ்சோதி
28-03-2007, 09:07 AM
மைதானத்தில் நாங்களே இருந்தது போல் அமைந்தது நீங்கள் விவரித்த விதம்.

உலகக் கோப்பை கொடுத்த ஏமாற்றத்தை உங்கள் கோப்பை மாற்றட்டும்.

நன்றி நண்பரே!

உலக கோப்பையில் இந்தியா வெளியேறியதால் எங்க போட்டிகள் காண கூட்டம் குவியுது.

நேற்றைய போட்டிகளில் நிறைய பிரச்சனைகள், அடிதடி வராத குறை.

பரஞ்சோதி
28-03-2007, 09:10 AM
என்னங்க அவ்ளோ அடியா அடிப்பாங்க.... ஆஸிக்காரன் ஆட்டத்தத ஓசியில காட்றீங்கபோல...

வாழ்த்துக்கள் பரம்ஸ்... வெற்றி நமதே!! (ஹிஹி.. நாம என்னைக்கும் ஜெயிக்கிற கட்சி!)

நன்றி பூ.

கிரிக்கெட் என்றாலே எனக்கு பூ தான் நினைவுக்கு வருவார், அத்தனை ஆர்வம் கொண்டவர். நம்ம மம்ஸ் நிறைய சொல்லியிருக்கிறார்.

பரஞ்சோதி
28-03-2007, 09:19 AM
வெற்றி பெற்ற உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

நன்றி ஓவியன்.

பரஞ்சோதி
28-03-2007, 09:22 AM
அண்ணா,
சும்மா கலக்கிப் போட்டீர்கள் போல... கிரிக்கெட்டு ஜூரம் எங்களுக்கு விட்டாலும் உங்களுக்கு விடலை இல்லையா??? ஹி ஹி

ஆமா கட்டுரை முழுவதும் அங்கங்கு "என்னை"ப் புகழ்ந்தது ஏனோ? எனக்குக் கொஞ்சம் கூச்ச சுபாவம்னு உங்களுக்குத் தெரியும்தானே???

சக்தி பெயரைச் சொன்னால் சக்தி வருவதில் என்ன பெரிய ஆச்சரியம்??? சீக்கிரம் கோப்பையோடு எங்களுக்கு ஒரு "கோப்பை" விருந்தையும் கொடுக்கும் வழியைப் பாருங்கள்.

மனமார்ந்த வாழ்த்துகள்

பிரதீப்பும் நானும் களத்தில் இருந்தா ஒரு ரன் எல்லாம் இரண்டு ரன்களாக மாறும், அப்படி கல்லடிப்பட்ட நாய் மாதிரி ஓடுவோம். அன்றைக்கு ஒரு ரன்னுக்கு ஓடி 4 ரன்கள் ஓடியது சரியான சிரிப்பு. எதிரணி, இங்கே, அங்கே என்று தூக்கி வீச, ஸ்டெம்பில் படாமல் ஓட, மீண்டும் ஓட்டம் என்று 4 ரன் வந்தது. அதுக்கு மேலே ஓட ஆட்டத்தில் இடம் இல்லை :)

பரஞ்சோதி
30-03-2007, 03:47 AM
நண்பர்களே!

இரண்டாம் சுற்று போட்டியினை மிக எளிதாக வென்று, காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றாகிவிட்டது.

இன்று காலிறுதிப் போட்டியில் எங்களுக்கு சம அளவில் இருக்கும் அணியுடனான போட்டி நடக்க இருக்கிறது, நாங்க வெல்ல எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள்.

pradeepkt
30-03-2007, 05:53 AM
நண்பர்களே!

இரண்டாம் சுற்று போட்டியினை மிக எளிதாக வென்று, காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றாகிவிட்டது.

இன்று காலிறுதிப் போட்டியில் எங்களுக்கு சம அளவில் இருக்கும் அணியுடனான போட்டி நடக்க இருக்கிறது, நாங்க வெல்ல எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள்.
சூப்பர்....:aktion033:
சீக்கிரம் அரையிறுதிக்கு முன்னேறுங்கள்.. :080402gudl_prv:
நான் கத்துற கத்து அங்க கேட்டிருக்கணுமே... :icon_shout:

poo
30-03-2007, 09:29 AM
பதட்டமில்லாமல் ஆடுங்கள் பரம்ஸ்..... இன்னைக்கு ஒருநாள் நல்லா ஆடினாப் போதும்... என்னை நம்பிதான் டீம் இருக்கு./. இப்படி நினைச்சுக்கோங்க... அடுத்து அரையிறுதிக்கு வாழ்த்துச் சொல்ல வர்றேன்!

பரஞ்சோதி
30-03-2007, 09:23 PM
அன்பு நண்பர்களே!

உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்தாலும், இறைவனின் அருளாலும், அணியினரின் ஒட்டு மொத்த உழைப்பாலும் இன்று கோப்பையை வெல்ல தகுதியான அணியை வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றோம்.

போட்டியின் விபரம் நாளை சுவாரஸ்யமாக கொடுக்கிறேன். ஆட்டத்தை கண்டவர்கள் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மோதிய 1999 உலக கோப்பை போட்டி போல் இருந்ததாக சொன்னார்கள்.

இனிவரும் 2 போட்டிகளிலும் வென்று கோப்பையை வெல்ல ஆசிர்வாதம் செய்யுங்கள். உங்கள் அன்பு எங்களை வெல்ல வைக்கும்.

பரஞ்சோதி
30-03-2007, 09:31 PM
http://img.photobucket.com/albums/v452/paransothi/kncricket.jpg

நின்று கொண்டிருப்பவார்கள்: இடமிருந்து வலம்.

கை கட்டிய அருண், எங்க சூப்பர் பவுலர் அஸ்லாம், எங்க அதிரடி வீரர் மாலிக், புராஜெக்ட் மேனேஜர் கலில் இப்ராஹிம், அதிரடு துவக்க வீரர் ரவி, எங்க கில்கிறிஸ்ட் ஜமில், எங்க அணியின் துடிப்பு மிக்க வெங்கட், எங்க புத்திசாலி கேப்டன் டிக்சன்.

உட்கார்ந்து இருப்பவர்கள்: இடமிருந்து வலம்.

அதிரடி ஸ்ரீஜித், செல்லப்பிள்ளை பாரதி, எங்க டிராவிட் சாவுல், உங்க பரஞ்சோதி, எங்க அதிஷ்ட வீரர் பிரசாத், அதிரடி சூப்பர் பீல்டர் பிரதீப், துடிப்பு மிக்க சாவூத்.

இப்போ நான் எங்கே இருக்கேன்னு தெரியுதா?

ஓவியா
30-03-2007, 10:48 PM
அண்ணா,
அருமையான அனுபவ கட்டுரை. நன்றி.

போட்டியில் வெற்றி பெற்று வீரத்திருமகனாக வர வாழ்த்துக்கள். :sport-smiley-003:எந்த ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண்னுண்டு என்று
சூசகமாக உரைத்த சக்தி குட்டிக்கு :medium-smiley-075: ....ஹி ஹி ஹி ஹி அத்தையின் அன்பு முத்தங்கள்.

ஆதவா
31-03-2007, 03:14 AM
ஆஹா!! பரம்ஸ்..... அண்ணா!

இந்திய அணிக்கு பதில் நீங்கள் சென்றிருந்தால் ஒருவேளை கோப்பை வென்றிருக்கலாம்....

அருமையான பதிவு.... புகைப்படங்கள் அருமை...

மனோஜ்
31-03-2007, 08:02 AM
ஆகா கா அருமை பரம்ஸ்
உங்களை வீரனாக கன்டதில் மகிழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

பரஞ்சோதி
01-04-2007, 06:02 AM
வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

அரையிறுதிப் போட்டியில் வெல்ல வாழ்த்துகள்.

பரஞ்சோதி
01-04-2007, 06:04 AM
அண்ணா,
அருமையான அனுபவ கட்டுரை. நன்றி.

போட்டியில் வெற்றி பெற்று வீரத்திருமகனாக வர வாழ்த்துக்கள். :sport-smiley-003:எந்த ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண்னுண்டு என்று
சூசகமாக உரைத்த சக்தி குட்டிக்கு :medium-smiley-075: ....ஹி ஹி ஹி ஹி அத்தையின் அன்பு முத்தங்கள்.

நன்றி தங்கச்சி.

சக்தி தினமும் என்னிடம் பேசுவதால் தெம்பு கிடைக்கிறது.

பரஞ்சோதி
01-04-2007, 06:05 AM
ஆஹா!! பரம்ஸ்..... அண்ணா!

இந்திய அணிக்கு பதில் நீங்கள் சென்றிருந்தால் ஒருவேளை கோப்பை வென்றிருக்கலாம்....

அருமையான பதிவு.... புகைப்படங்கள் அருமை...

நன்றி ஆதவா.

சென்ற ஆண்டை போல் இந்த ஆண்டும் வெல்ல வாழ்த்துகள் கூறுங்கள். :082502hi_prv:

பரஞ்சோதி
01-04-2007, 06:27 AM
ஆகா கா அருமை பரம்ஸ்
உங்களை வீரனாக கன்டதில் மகிழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்


நன்றி தம்பி. இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

பரஞ்சோதி
03-04-2007, 10:59 AM
நண்பர்களே!

நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றாச்சு. வியாழக்கிழமை இரவில் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. அனைவரும் நாங்க வெல்ல வாழ்த்துங்கள்.

rajasi13
03-04-2007, 11:31 AM
ஆகா நம்ம ஊர் காரரு வெற்றி வாகை சூடுவதை பார்க்க முடியலையேன்னு வருத்தமா இருக்கு. வியாழன் வரை பிரார்த்தித்துக்கொண்டே காத்திருக்கிறோம். மருமகள பள்ளியில் சேர்த்தாச்சா. ராகுலை இங்கே பள்ளியில் சேர்த்தாச்சு.

பரஞ்சோதி
04-04-2007, 11:02 AM
அரையிறுதியில் வென்றதை கொண்டாடும் எங்கள் அணியினர்.

http://img.photobucket.com/albums/v452/paransothi/kncricket1.jpg

பரஞ்சோதி
04-04-2007, 11:02 AM
http://img.photobucket.com/albums/v452/paransothi/kncricket2.jpg

பரஞ்சோதி
04-04-2007, 11:03 AM
http://img.photobucket.com/albums/v452/paransothi/kncricket3.jpg

பரஞ்சோதி
04-04-2007, 11:03 AM
http://img.photobucket.com/albums/v452/paransothi/kncricket4.jpg

ஓவியா
04-04-2007, 02:34 PM
மாவீரர்களுக்கு வாழ்த்துக்கள்

poo
05-04-2007, 08:12 AM
வெற்றி நமதே பரம்ஸ்... மீண்டும் சொல்கிறேன். வாழ்த்துக்களையும்!!

மதி
05-04-2007, 08:17 AM
இறுதிப்போட்டியிலும் வெல்ல வாழ்த்துக்கள் பரம்ஸ்.!

பரஞ்சோதி
05-04-2007, 08:22 AM
நன்றி தங்கை ஓவியா, நண்பர் பூ, தம்பி மதி.

இறுதிப் போட்டியானது 12ந்தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இம்முறை கட்டாயம் வெற்றிக்கோப்பையை வெல்ல வாழ்த்துங்கள்.

பரஞ்சோதி
05-04-2007, 08:23 AM
ஆகா நம்ம ஊர் காரரு வெற்றி வாகை சூடுவதை பார்க்க முடியலையேன்னு வருத்தமா இருக்கு. வியாழன் வரை பிரார்த்தித்துக்கொண்டே காத்திருக்கிறோம். மருமகள பள்ளியில் சேர்த்தாச்சா. ராகுலை இங்கே பள்ளியில் சேர்த்தாச்சு.

ராஜேஷ்,

வருத்தமே வேண்டாம், படம் பிடித்தும், வீடியோ எடுத்தும் வருகிறோம், சிடி அனுப்பி வைக்கிறேன். மருமகன் பள்ளிக்கு போவது மகிழ்ச்சியாக இருக்குது.

சக்தி, அடுத்த ஆண்டு தான் பள்ளிக்கு செல்வார். கொஞ்ச நாள் சுதந்திரமாக இருக்கட்டுமே.

மனோஜ்
05-04-2007, 08:31 AM
பாரமஸ் அண்ணா கலக்கிபுட்டிங்க போங்க
வெற்றிபெற்று வெற்றி கேப்பையை கண்ணில் காட்ட வாழ்த்துக்கள்

பரஞ்சோதி
08-04-2007, 07:09 AM
நன்றி மனோஜ்,

வரும் வியாழன் இரவே படம் பிடித்து காட்டுகிறேன்.

ஓவியா
08-04-2007, 01:58 PM
வியாழன் வென்று வர வாழ்த்துக்கள்.

வ வா வி வி வெ வே :icon_dance: :icon_dance:

பரஞ்சோதி
08-04-2007, 04:35 PM
ந ந ந

poo
18-04-2007, 09:04 AM
இறுதிப்போட்டி என்னாச்சு நண்பா?!

பரஞ்சோதி
18-04-2007, 09:09 AM
எல்லோரும் மன்னிக்க வேண்டும்.

சென்ற வாரம் மழையின் காரணமாக போட்டி ரத்தாகிவிட்டது.

பாலைவனத்திலும்
கடும் மழை
நன்றி
கிரிக்கெட்

ஆஹா! ஹைக்கூவே எழுத வைச்சிட்டது.

இனிமேல் கிராமத்தில் கழுதை கல்யாணம் நடக்காது. தறுதலை என்று அழைப்பவர்களை எல்லாம் வைத்து கிரிக்கெட் போட்டி நடத்துவாங்க, எதுக்கு மழைக்கு தான்.

நாளை இரவு இறுதிப் போட்டி, இதுவரை வானம் கருக்கலை.

pradeepkt
18-04-2007, 10:09 AM
அண்ணா,
மீண்டும் எங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் வாங்கி கொள்ளுங்கள்...
வந்த மழை எங்க வாழ்த்து மழையைக் கண்டு ஓடி விடும்... :D

பரஞ்சோதி
18-04-2007, 10:22 AM
தம்பி!

போட்டி மீண்டும் தடை படும் போலிருக்குதே.

நடத்த விடமாட்டாங்க போலிருக்குது.

ஓவியா
18-04-2007, 11:09 AM
எல்லோரும் மன்னிக்க வேண்டும்.

சென்ற வாரம் மழையின் காரணமாக போட்டி ரத்தாகிவிட்டது.

பாலைவனத்திலும்
கடும் மழை
நன்றி
கிரிக்கெட்

ஆஹா! ஹைக்கூவே எழுத வைச்சிட்டது.

நாளை இரவு இறுதிப் போட்டி, இதுவரை வானம் கருக்கலை.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=869309-04-2007, 12:05 PM

என்னை விட்டுட்டு விளையாட்ட தொடங்கினால் வரும் விழாக்கிழமை குவைத்தில் மழை கொட்டும்.. ஹி ஹி ஹி

ஓவியின் அதிரடி வருகையால் தலையில் முக்கடுடன் அம்மரும் மக்களுக்கு ஓரு :medium-smiley-080:


அண்ணா, ஒரு அதிசயம்

நான் சாபம் விடவேயில்லையே, ஏன் மழை வந்தது???????????

அடடே, சும்மா மனதால் நினைத்ததர்க்கா!!!!!!!!!!!!!

அச்சோ.....:sport-smiley-002: :medium-smiley-088: :medium-smiley-080:

ஓவியா
18-04-2007, 11:11 AM
தம்பி!

போட்டி மீண்டும் தடை படும் போலிருக்குதே.

நடத்த விடமாட்டாங்க போலிருக்குது.


நடக்கும் தாங்கள் வெற்றி :sport-smiley-003: கோப்பையுடன் :icon_drunk: வரிவீர்கள் அண்ணா