PDA

View Full Version : உறங்காத நினைவு...poo
27-03-2007, 09:25 AM
தேடலின் உச்சத்தில்
வெளிச்சம்
வெறுப்பாகிப்போக
கண்ணில்பட்டது
நகராட்சிப் பூங்கா
தனிமை கிடைக்கும்
பதாகை அங்கீகாரமில்லை.

நிழலில் இளைப்பாற
தரையமர்ந்தேன்
திண்ணை உறக்கங்களை
கலைக்கத் திராணியற்று.

நடந்த பாதங்களை
எண்ணிக்கொண்டு
நடைபாதையேற
துடித்துக் கொண்டிருந்த
புல்வெளிகளிடம்
பேசிக் கொண்டிருந்தேன்
பாதைமாறிய
என் சுவடுகளை..

விழி முன்
விரிந்த விரல்களால்
விலாசம் திரும்பின
எண்ணங்கள்..

விழியோர
சுருக்கங்களோடு
சுருக்குப்பைகளில்
மூச்சுக்காற்றை
அடக்கி "அய்யா".

என்
ஒட்டுமொத்த
தோல்விகளும் எதிரொலித்தன..
என்முன் நின்ற
ஒட்டிய கன்னங்களில்
ஈரம் தேங்கியது.

வெயில் தனிந்து
வீடு திரும்பினேன்.

தொலைந்து போனதா..
தொலைத்துப் போனேனா..
வெற்றுத்தரையில்
வானத்தை வெறித்து
காத்திருக்கிறேன்..

இருள்படர்ந்த
வானில்
பார்வை நிறைய
இதயம் முழுக்க
ஈர விழிகளும்
கன்னச் சுருக்கங்களும்..

சலித்துக் கொண்டது
மனம்..

ஒற்றை
நாணயத்தோடு
வீசிவிட்டு
வந்திருக்கலாமே
அவளது நினைவுகளையும்!!....

பென்ஸ்
27-03-2007, 12:06 PM
சலனங்கள் சுமந்து வரும் பாரங்கள்...

நதிகரையில் முனிவர் இறக்கிவந்த பெண்ணை மனதில் சுமந்து வந்த சிஷ்யன் கதையாய்...

இவன் ரொம்பவும் நல்லவதான் ஆனால் மனதால் முதிர்ச்சி அடையாதவன்....

மற்றவர்களை போலவே இவனும் தன்னை யாரும் கவனிக்க மாட்டார்களா, இல்லை காது கொடுக்க மாட்டார்களா என்று... அடுத்தவரின் நிலையறியாமலே
புல்தானே, எதிற்ப்பு தெரிவிக்கவா போகிறது..!!!!.


சுருக்குப்பைகளில்
சுருக்+குப்பைகளில்
சுருக்கு+ப்பைகளில்

வார்த்தைகளின் பிரயோகம் அதி அழகு...

மனம் சளைத்து போயி விரக்தியில் இருப்பவனின் இயலாமையை இதை விட அழகாக காட்ட முடியுமா...
பிச்சை காரியுடன் ஒப்பீடு.. இவளை விட நான் கேவலாமா??? கேள்விகள்....

எல்லாம் சிந்தனையின் வசங்களில் மட்டுமே...
எதை யோசிக்கிறயோ, அதுவாகவே நீயும்....

நான் மும்பையில் வேலை தேடி கொண்டிருந்த காலங்களில், விண்னப்பம் கொடுக்க அலுவலங்களுக்கு செல்வது வழக்கம். அனேக அலுவலகங்களில் உள்ளே அனுமதிப்பதில்லை.
எல்லோருக்கும் வேலை என்ன ஒரே நாளில் கிடைப்பதா என்ன ???? 30 நாட்கள் கழிந்து இருந்தாலும் என் வேகம் குறைந்திருக்கவில்லை. அதனால் அலுவலக வாசலில் நிற்க்கும் காவலரிடம் எப்படியாவது (எனக்கு தெரிந்த இந்தியில்) பேசி உள்ளே செல்ல பார்ப்பேன், சில நேரங்களில் ஒளித்து செல்லவும் செய்வேன்.
இப்படி ஒரு நாள் நான் அலுவலகத்தின் உள்ளே செல்ல முயல, அந்த காவலர் என் சட்டை காலரை பிடித்து தரதரவெண்ரு இழுத்து வேளியே வீசினார்.
இறங்கி நரிமன் பாய்ன்ட் பகுதி சாலையில் நடக்க ஆரம்பித்தேன்... சாப்பிடால் நேரமாகிவிடும் என்று அதையும் கண்டு கொள்ளாமல் நடக்க நடக்க என்னையும் அறியாமல் என் கண்ணில் இருந்து கண்ணீர்.
வலப்பக்கம் கோட்டும் சூட்டும் போட்டு போகும் மக்கள், இடப்பக்கம் காதில் அழுக்கு எடுத்து வாழும் மக்கள், நடுவில் நான்...
அந்த கண்ணீர் என்னை கரைத்து இருந்தால்... நானும் இடப்பக்கம் ஒதுங்கி இருப்பேன் அல்லவா????

மனம் வலியது... அதை காக்கவேண்டும்.

அன்புரசிகன்
27-03-2007, 12:21 PM
நடந்த பாதங்களை
எண்ணிக்கொண்டு
நடைபாதையேற
துடித்துக் கொண்டிருந்த
புல்வெளிகளிடம்
பேசிக் கொண்டிருந்தேன்
பாதைமாறிய
என் சுவடுகளை..

இருக்குமிடம் புரிந்தேன்.
நடந்த இடமறிந்தேன்.
ஆனால் இருந்தவை புற்கள் அல்ல.
கற்களும் முட்களும்.


விழி முன்
விரிந்த விரல்களால்
விலாசம் திரும்பின
எண்ணங்கள்..
விழியோர
சுருக்கங்களோடு
சுருக்குப்பைகளில்
மூச்சுக்காற்றை
அடக்கி "அய்யா".

என்
ஒட்டுமொத்த
தோல்விகளும் எதிரொலித்தன..
என்முன் நின்ற
ஒட்டிய கன்னங்களில்
ஈரம் தேங்கியது.

இயலாமை எதிரொலிக்கிறது.
கானல் நீரில் குளித்ததால்.


நாணயத்தோடு
வீசிவிட்டு
வந்திருக்கலாமே
அவளது நினைவுகளையும்!!....
இது வரை நானறியேன்
இதிலவளும் அடங்கினாள் என்று.
அருமை பூ:icon_08: வாழ்த்துக்கள்.

அறிஞர்
27-03-2007, 12:24 PM
பூவின் உறங்காத நினைவுகள்
எங்கள் உறக்கத்தை கலைத்துவிடுவது போல்
உள்ளது...

அருமை பூ...


இறங்கி நரிமன் பாய்ன்ட் பகுதி சாலையில் நடக்க ஆரம்பித்தேன்... சாப்பிடால் நேரமாகிவிடும் என்று அதையும் கண்டு கொள்ளாமல் நடக்க நடக்க என்னையும் அறியாமல் என் கண்ணில் இருந்து கண்ணீர்.
வலப்பக்கம் கோட்டும் சூட்டும் போட்டு போகும் மக்கள், இடப்பக்கம் காதில் அழுக்கு எடுத்து வாழும் மக்கள், நடுவில் நான்...
அந்த கண்ணீர் என்னை கரைத்து இருந்தால்... நானும் இடப்பக்கம் ஒதுங்கி இருப்பேன் அல்லவா????

மனம் வலியது... அதை காக்கவேண்டும்.
பென்ஸூ வாழ்க்கையில் உயரும் பலருடைய நிலை கிட்டத்தட்ட இப்படிதான். சென்னை தெருக்களில் நானும் ஒரு சில மாதங்கள் கடினப்பட்டதை எண்ணிப் பார்க்கிறேன்...
இன்று உயர்ந்துள்ளீர்கள்.. இன்னும் உயருவீர்கள்...
பழையவை என்றும் மனதில் நிற்கட்டும்.

march
27-03-2007, 12:44 PM
பென்ஸூ வாழ்க்கையில் உயரும் பலருடைய நிலை கிட்டத்தட்ட இப்படிதான். சென்னை தெருக்களில் நானும் ஒரு சில மாதங்கள் கடினப்பட்டதை எண்ணிப் பார்க்கிறேன்...
இன்று உயர்ந்துள்ளீர்கள்.. இன்னும் உயருவீர்கள்...
பழையவை என்றும் மனதில் நிற்கட்டும்.


என்னி பாருங்கள் இறைவனுக்கு நண்றி செலுத்துங்கள்

வித் லவ்
மார்ஷ்

இளசு
27-03-2007, 09:47 PM
சில நிகழ்வுகளை அதே உணர்வுடன் ..
படிப்பவர் மனதிலும் எழுப்பும்விதம்
வடிக்கத் திறமை வேண்டும்..

அது பூவிடம் அதிகமாகவே உள்ளது..பாராட்டுகள் பூ!

பென்ஸ், அன்புரசிகன் விமர்சனங்கள் லயித்து நிற்கவைத்தன..

poo
28-03-2007, 05:05 AM
பென்ஸ் கையை வைச்சாலே ஒரு நட்சத்திர அந்தஸ்து கூடுதலாக கிடைத்து விடுகிறது.

"எல்லாம் சிந்தனையின் வசங்களில் மட்டுமே...
எதை யோசிக்கிறயோ, அதுவாகவே நீயும்...."

இந்த இரண்டு வரிகளில் இலயிக்கிறேன்... எழுத அமரும்முன் எனக்குள்ளும் வந்துபோன வரிகள்..

உங்கள் கடந்தகாலங்கள் நினைத்து நெகிழ்கிறேன்.. உங்கள் தீர்க்கத்தை வரிகளில் பார்க்கிறோமே..
நிச்சயம் இன்னும் வெற்றி அடைவீர்கள் நண்பா!

அன்பு ரசிகன்.

அழகான விமர்சனத்திற்கு நன்றிகள்.. கூடவே உங்கள் அன்பிற்கும்!
அவளும் வந்து சென்றிருக்கிறாள்... அலைந்து திரிபவனின் நினைவுகளில் ஆயிரம் வரும்.. ஆனால் போகாது.

நன்றி அறிஞரே... உங்கள் உறக்கம் கெடுவதில் மகிழ்கிறேன்.. (ஹிஹி.. என்னை நினைவுகளில் வைத்திருப்பீர்களே...)
ஒவ்வொரு வெற்றியாளருமே கஷ்டப்பட்டவர்கள்தானென நீங்களும் நிருபிக்கிறீர்கள்...

நன்றிகள் அண்ணா... உங்களுடைய தொடர்ந்த ஊக்கமே என் படைப்புகளுக்கு காரணம்..