PDA

View Full Version : பள்ளத்தில்......!!!!!



டாக்டர் அண்ணாதுரை
27-03-2007, 06:46 AM
கால் தடுக்கி
பள்ளத்தில் விழுந்தேன்.......
பள்ளத்தில் இவ்வளவு பட்டதாரிகளா?

poo
27-03-2007, 07:10 AM
சின்ன வரிகளில் அழகாய் ஆனந்த்... வாழ்த்துகள்.. இன்னும் வரையுங்கள்.

**************
விழுந்தவர்களெல்லாம்
மேலேறிக் கொள்ள
குனிந்திருந்தால்
மேல் வந்திருக்கலாம்..
ஒருவனாகிலும்.
மாறாக விரலொடித்து
விதிநோவதைக் காட்டிலும்.

ஓவியன்
27-03-2007, 07:17 AM
வேலை இல்லாப் பிரச்சினையை மையக் கருவாகக் கொண்டு இக் கவிதை வரையப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் நண்பரே நான் உங்களுக்கு எதிரான கருத்துக் கொண்டவன்.
அதாவது வேலை தேடி வராது நாமாகத் தேட வேண்டுமென்பதே.

அமைதியாகப் பள்ளத்திலேயே கிடந்தால் பள்ளத்தை விட்டு ஒரு போதும் வெளியேற முடியாது. பள்ளத்தை விட்டு வெளியேற எத்தனித்தாலே போதும் நீங்கள் வெளிவரும் வழிகளை இலகுவில் கண்டறிந்து விடலாம்.

Mano.G.
27-03-2007, 10:18 AM
தோழர் ஆனந்தின் கவிதையும்
தம்பி பூவின் விமர்சன கவிதையும்
அருமை,
அதே போல நண்பர் ஓவியனின் கருத்தும்.

ஆனந்த் - ஆச்சரியம்
பூ - ஆதங்கம்
ஓவியன் - ஊக்குவிப்பு

அருமை

வாழ்த்துக்கள் மூவருக்கும்

மனோ.ஜி

march
27-03-2007, 10:32 AM
அமைதியாகப் பள்ளத்திலேயே கிடந்தால் பள்ளத்தை விட்டு ஒரு போதும் வெளியேற முடியாது. பள்ளத்தை விட்டு வெளியேற எத்தனித்தாலே போதும் நீங்கள் வெளிவரும் வழிகளை இலகுவில் கண்டறிந்து விடலாம்.


சொல்றது நல்லாதான் இருக்குது ஆனா பள்ளத்தில் இருந்து மேலேவருபவ்ர்களை மருப்படியும் பல்லத்தில் தள்ளுகிறார்களே
இவர்களை என்ன செய்வது.

வித் லவ்
மார்ஷ்

பரஞ்சோதி
27-03-2007, 10:36 AM
மார்ஷ்

மீண்டும் பள்ளத்தில் தள்ளும் படுபாவிகள், தாமும் முன்பு பள்ளத்திலிருந்து வந்தோமே என்ற எண்ணம் இல்லாதவர்கள். இவர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

march
27-03-2007, 10:39 AM
என்ன செய்வது அவர்களை மன்னித்து விட்டு இது தான் வாழ்க்கை என்று போக வேண்டியது

வித் லவ்
மார்ஷ்

ஓவியன்
27-03-2007, 10:45 AM
சொல்றது நல்லாதான் இருக்குது ஆனா பள்ளத்தில் இருந்து மேலேவருபவ்ர்களை மருப்படியும் பல்லத்தில் தள்ளுகிறார்களே
இவர்களை என்ன செய்வது.

எல்லோரையும் நம்மால் திருத்திவிட முடியாது, ஆனால் நாம் அவர்களிற்கு அறிவுரை கூறலாம்.

திருந்தினால் எல்லோருக்குமே நலம் - இல்லையென்றால் நாம் தூர விலகுவதே நமக்கும் நம்மைச் சார்ந்தோருக்கும் நலம் பயக்கும்.

march
27-03-2007, 10:55 AM
எல்லோரையும் நம்மால் திருத்திவிட முடியாது, ஆனால் நாம் அவர்களிற்கு அறிவுரை கூறலாம்.

திருந்தினால் எல்லோருக்குமே நலம் - இல்லையென்றால் நாம் தூர விலகுவதே நமக்கும் நம்மைச் சார்ந்தோருக்கும் நலம் பயக்கும்

ஆம் உன்மைதான்

வித் லவ்
மார்ஷ்

டாக்டர் அண்ணாதுரை
28-03-2007, 02:39 AM
ஆஹா.....பள்ளத்தில் இத்தனை கருத்துகளா?

அறிஞர்
30-03-2007, 03:05 AM
ஆஹா.....பள்ளத்தில் இத்தனை கருத்துகளா?
பள்ளத்தை எழுதியவருக்கே... இவ்வளவு.. ஆச்சரியமா......

ஆதவா
30-03-2007, 03:12 AM
பல கருத்துக்கள் உள்ளடங்கிய கவிதை,.......... அபாரம் ஆனந்த் அவர்களே!
நாம் பார்த்து சென்றால் கால் தடுக்க வேண்டியதில்லை... அப்படியென்றால் பள்ளத்தில் விழத்தேவையில்லை............ பள்ளத்தை மூடிவிட எவருக்கும் துணிவுமில்லை..

எல்லாமே நம் கையில்தான்.......... அபாரம் சாரே!!

அமரன்
30-03-2007, 08:28 AM
சின்னக் கவிதைதான். ஆனால் கருத்தாழம் மிக்க ஹைக்கூ. வாழ்த்துகள் பல.

டாக்டர் அண்ணாதுரை
30-03-2007, 09:20 AM
ஆதவா, நரன்,
பள்ளத்தை பலர் எட்டிப்பார்த்து சுட்டிக்காட்டிய கருத்துகளில் நான் எண்ணிப்பார்க்காததும் சில...அதுதான் ஆச்சரியம்.
உங்களின் வாழ்துகளுக்கு நன்றி.
அன்புடன்

இளசு
02-04-2007, 06:36 PM
கருத்துப்பள்ளமா?

ஆனந்தும் நண்பர்களும் கொட்டிய விதம் கண்டு
நிறைவாய் இருக்கிறது.. பாராட்டுகள்!

M.Jagadeesan
22-01-2013, 02:30 AM
பள்ளத்திலே பட்டதாரிகள் இருப்பதும்
மேட்டிலே தற்குறிகள் இருப்பதும்
அவரவர் முயற்சியைப் பொறுத்தது.

shreemurali
24-01-2013, 04:27 AM
அப்பா பட்டுபாவாடை பொம்மை மிட்டாய்
வாங்கி தந்தாா்
குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த
குழந்தையின் கனவில்