PDA

View Full Version : இப்படிக்கு, உன் இதயம்.



டாக்டர் அண்ணாதுரை
27-03-2007, 06:42 AM
இருளிலே நான்....
வெளிச்சத்தை தேடியபோது,
எனக்காக நீ....
மின் விளக்காய் வரவில்லை;
சூரியனாகவே உதித்தாய்!

வெண்ணீர் பாய்ந்த நெஞ்சில்...
சதை கிழிந்த வலியில்
நான் மருந்தை தேடியபோது,
எனக்காக நீ....
மூலிகையாக வரவில்லை;
மயில் இறகாய் படர்ந்தாய்!

வெந்த புண் ஆராமல்....
வேதனை குளத்தில்
முடக்கைகளால் நீச்சல் அடித்தபோது,
எனக்காக நீ....
கரத்தை மட்டும் நீட்டவில்லை;
கரங்களையே தந்துவிட்டாய்!

தூக்கங்களை துக்கங்கள்.....
தூக்கிலிட்டுக்கொண்டிருந்தபொது,
உறக்க தேவதையை
உருக உருக அழைத்தபோது,
எனக்காக நீ....
தலையனையாக வரவில்லை;
தாலாட்டாகவே வந்தாய்!

செவி மேடையில் சோக அவலங்கள்....
அவதாரம் எடுத்து,
ஒப்பாரி கச்சேரி நடத்தியபோது
எனக்காக நீ....
இன்னிசையாக இசைக்கவில்லை;
சங்கீதமாகவே ஒலித்தாய்!

தாங்க இயலாமல் இதயக்கரைகள்....
இடிந்து சரிந்தபோது
எனக்காக நீ....
வார்தைகளால் அணைகட்டவில்லை;
இதயத்தையே தந்துவிட்டாய்!

ஓவியன்
27-03-2007, 07:52 AM
அருமையான வரிகள்!, வாழ்க்கையில் நீங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்!

ஒரு சின்ன திருத்தம் ஒலித்தாய் என்று வரவேண்டிய இடத்தில் ஒளித்தாய் என்று தவறுதலாகத் தந்துள்ளீர்கள். அது கவிதையின் கருத்தினையே மாற்றவல்லது.
தவறைத் திருத்தினால் நன்றாக இருக்கும்

டாக்டர் அண்ணாதுரை
27-03-2007, 08:21 AM
எழுத்துபிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி நண்பரே. திருத்தம் செய்தாகிவிட்டது. தெம்பளிக்கும் பாராட்டிற்கும் நன்றி.

ஓவியன்
27-03-2007, 08:49 AM
நானும் எனது முந்தைய கருத்திலே ஒரு சின்னத் திருத்தம் செய்துள்ளேன். இப்போது உங்களது இந்த திரி இன்னமும் அழகாக இருக்கும்.

நண்பரே தொடருங்கள் உங்கள் கவிப் பயணத்தை..........

பென்ஸ்
27-03-2007, 08:59 AM
ஆனந்த்
நம் தேவைகளுக்கு மட்டும்தான் மனிதர்களை உபயோகிக்கிறொம் இல்லையா...???

தாயன்பில் கூட சற்றே ஒருபக்கமாய்..
சற்றே சுயனலமாய்...

இளசு
27-03-2007, 10:04 PM
ஒரு அழகிய உத்தியில் கவிதை உயரே உயரே பயணிக்கிறது..

ஒரு சூழலுக்கு இயல்பாய் கிடைக்கும் நல்ல தீர்வு ஒன்று.
அதைத்தாண்டி மிக உன்னதமான மற்றொன்று..

இந்த அடுக்கில் கவிதை ஜொலிக்கிறது..


இந்த மாதிரி உத்தி உள்ள திரைப்பாடல்கள் சீக்கிரம் மனம் இறங்கும்..

எ.டு: உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?


வாழ்த்துகள் ஆனந்த்...

இளசு
27-03-2007, 10:07 PM
ஆனந்த்
நம் தேவைகளுக்கு மட்டும்தான் மனிதர்களை உபயோகிக்கிறொம் இல்லையா...???

தாயன்பில் கூட சற்றே ஒருபக்கமாய்..
சற்றே சுயநலமாய்...

சிலருக்கு வழங்குவதில், கரைவதில் இன்பம் என்றால்
அதை சமநீதி சொல்லி தடுக்க முடியுமா பென்ஸ்?

பாரதிக்கு சேவகனாய் கண்ணன்
பாரதத்துக்கு சேவகியாய் அன்னை தெரசா...

இவை உன்னத உதாரணங்கள்...

பெரும்பாலானவை சாதாரண ஒட்டுண்ணி வகைதான்!

அறிஞர்
28-03-2007, 12:34 AM
இருளில் சூரியன்
கிழிந்த நெஞ்சிற்கு மயில் இறகு
துக்கங்களை மறக்க தாலாட்டு
ஒப்பாரி சத்தம் நடுவில் இன்னிசை சங்கீதம்
உடைந்த இதயத்துக்கு மாற்று இதயம்

அருமை.. ஆனந்த்....
இன்னும் தொடரட்டும் தங்களின் கவிகள்..

டாக்டர் அண்ணாதுரை
28-03-2007, 02:35 AM
பெஞ்சமின்,
ஒரு வகையில் நீங்கள் சொல்வதில் உண்மை இருந்தாலும், உலகில் ஒன்றோடு ஒன்று ஒட்டியோ, அல்லது நம்பியோதான் இருக்கின்றது. ஈதில் சுய நலம் நிச்சயம் இருக்கவே செய்யும். ஒன்றை கொடுத்து மற்ற ஒன்றை பெறுவதும் இயற்கையின் நியாய விதிகளின்படி சரி என்றுதான் படுகிறது. இதில் சில விதிவிலக்குகள் இருக்கும்....கட்டாயம் இருக்கும்.

இளசு, அறிஞர்......வாழ்துகளுக்கும் ஆழமான கருத்துகளுக்கும் நன்றி.