PDA

View Full Version : நான் மட்டும் கண்ட அபூர்வ நட்சத்திரங்கள்



ஓவியா
27-03-2007, 01:18 AM
இங்கு நான்
என்னால் கோர்க்கப்பட்ட தமிழ் எழுத்துக்களின் கோர்வைகளை வரைந்துள்ளேன்.

நட்சத்திரம் 1

முதல் கன்னிப் பதிவை எழுத தூண்டிய அன்பு நண்பர் முகிலனுக்கு நன்றிகள் பல. ஏதோ எழுத தோன்றவே இதை எழுதினேன்.


என் 1000வது பதிவு

ஒரு உண்மைக்கதை, ஊமையாய்,

http://en.epochtimes.com/news_images/2006-10-11-india-child.jpg

http://perfilip.typepad.com/photos/uncategorized/poor_needy_child.jpg

ஊனமான நிரந்தர முகவரி......................

சந்தேகம் என்ற மாயை
சாக வேண்டும் என்று
தீயிட்டுகொண்ட தாயுடன் கருகியதா
இவள் நிரந்தர முகவரி

கடந்த காலம் செழிக்க
சதா நீர் உற்றி சுயநினைவில்லாமல்
செத்துபோன அப்பாவுடன் கறைந்ததா
இவள் நிரந்தர முகவரி

காசு வேண்டும் என்று மாமா
அக்காவை துபாய்க்கு பொட்டலம் கட்டினாரே
அவளுடன் பொட்டலம் பொய் விட்டதா
இவள் நிரந்தர முகவரி

இல்லை பசிக்கு திருடிய
அண்ணனுடன் சிறையில் அடைபட்டிருக்கின்றதா
இவள் நிரந்தர முகவரி

நீங்கள் சொல்லுங்களேன்
எங்கே தொலைந்தது இந்த சிறுமியின்
நிரந்தர முகவரி...........


கவிதையின் விமர்சனம் காண இங்கே சுட்டவும்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7014

ஓவியா
27-03-2007, 01:18 AM
நட்சத்திரம் 2

இந்த மன்றத்தில் எனக்கு கிடைத்த அன்பு சகோதரன் பெஞ்சமின், அவரின் ஊக்கம் எனக்கு ஒரு அருமருந்து. அவருக்கு எனது நன்றிகள்.


காதலர் தின கவிதை போட்டிக்கு அனுப்பியது

கற்சிலையும் உயிர் பெறும் காதலில் (முதல் பரிசு)




http://i13.photobucket.com/albums/a282/aringar/5-1.jpg




அன்பே நான்


அந்தி ஆதவனின் வெளிச்சம் போல்
ஆயிரம் முறை பூமியில் வந்து போக விரும்பவில்லை


அதோ கரையும் மேக கூட்டம் போல்
ஆசையுடன் உரசி செல்லும் வானமாகவும் எண்ணமில்லை


அங்கம் தழுவும் புடவை போல்
ஆனந்தக்கூத்தாடும் புல்வெளியின் பிறப்பினை கேட்கவில்லை


அமைதியாய் அசையும் மரம் போல்
ஆழ வேர் ஊன்றி நிலைத்து நிற்க நினைக்கவில்லை


அக்கரை மாளிகை போல்
ஆண்டுகள் பல வேண்டும் என வேண்டவில்லை


அனவைரையும் அணைத்திடும் அரியணையைப் போல்
ஆயுள் முழுவது அற்ப சுகத்தினை காண ஆவலில்லை


அந்த ஆற்று நீர் போல்
ஆதிசிவனின் அமுத சுரபியாக வாழ ஆசையுமில்லை



என் ஆசையெல்லாம்

என் முதுகெலும்பு வில் போல் வளைந்து
உன் புருவத்துடன் போட்டிக்கு வந்துவிடும் முன்

சொல் கண்ணே
அந்த ஒரே சொல்லை

என் கண்கள் இமைப்பதை மறக்கும் முன்
என் உதடுகள் உச்சரிப்பை இழக்கும் முன்

சொல் கண்ணே
அந்த ஒரே சொல்லை

என் நாசி சுவாசத்தை நிறுத்தும் முன்
என் செவிகள் ஒலியை தொலைக்கும் முன்

சொல் கண்ணே
அந்த ஒரே சொல்லை


என் உணர்வுகள் ஜடமாவதற்கு முன்
நானே பிணமாவதற்கு முன்

சொல் கண்ணே
அந்த ஒரே சொல்லை



நம்
உருவம் மட்டுமே கல்
இதயம் பூவிலும் மென்மை
கற்சிலையும் காவியம் பாட
சொல் கண்ணே

கற்சிலையை தகர்த்தெறிந்து இதே ஜென்மத்தில்
நாம்
மீண்டும் உயிர்பெற
சொல் கண்ணே

கல்லையும் கனியாக்குமாமே
அந்த ஒரு சொல்
அதை
சொல்லிவிடு






கவிதையின் விமர்சனம் காண இங்கே சுட்டவும்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7901

ஓவியா
27-03-2007, 01:18 AM
நட்சத்திரம் 3

இங்கு எனக்கு கிடைத்த முதல் உறவு செல்வன் அண்ணா. அன்பை பொழியும் அண்ணாவுக்கு நன்றிகள் பல.

கவிதை போட்டி - 3க்கு அனுப்பியது (முதல் பரிசு)



http://i13.photobucket.com/albums/a282/aringar/4-1.jpg



பெண்களிடம் என்றுமே தோற்றுத்தான் போவாய் நீ





அலையிடம் அவன்:
பூமி ஒரு லோகம் என்பதனைப் பொய்யாக்கி
பூமிக்குள்ளே இரு லோகத்தை உருவாக்கிய சமுத்திரமே!
முக்கால் பாகம் என்னாட்சி என்று மார்தட்டும் கடலலையே!
வேகமாக வா! முடிந்தால் ஓடி வா!


எங்களிடம் நீர் (நீ) சுருட்டியதை விட - உன்னிடம்
நாங்கள் சுருட்டியதே அதிகம் என்பதனை அறிந்தும்
நான்தான் வல்லவன் என்று பாறையுடன்
கும்மியடிக்கும் மடையனே! வா!
மீண்டுமொருமுறை அதிவேகமாக வா!


உன்னுள் புதைந்துள்ள அந்த ரகசியத்தினை - இன்னமும்
காணக்காண கண்கள் விரியும் என் விஞ்ஞானிகளின்
கண்ணில் மண்ணை தூவும் நீயும் மண்ணரசன்தான்.
ஆணையிடுகிறேன் வேந்தே! உடனே வா(ங்க)


பிச்சைக்கு மேலாக கால் பாகம் நிலத்தினை மட்டும் தந்து
மானிடனுக்கு தண்ணிகாட்டிய வள்ளலே!
உன் குணத்தினை எள்ளி நகையாட வந்துள்ளேன்.
ஆச்சரியப் படாமல் இக்கணமே அருகில் வா!


என்னவளின் கேள்வியை ஒருமுறையேனும் கேட்டு - உன்
நித்திரை கொள்ளா அலைப் போராட்டத்தை நிறுத்துவாயா என்று
பார்க்க வந்துள்ள எங்களைக் காக்க வைக்காமல் வா!
இன்னும் சற்று வேகமாக புயல் போல் வா!






அலையிடம் அவள்:

பூத்ததும் ஒருவனை
முதலில் பார்க்கும் பதுமையின்
நாணப் போராட்டத்தைப் பார்த்துள்ளாயா நீ?


பருவத்தில் காளையர்களின்
கண் கணைகளை சகி(ரசி)க்கும் பெண்ணின்
பருவப் போராட்டத்தைப் பார்த்துள்ளாயா நீ?


மதிப்பில்லை என்று
காதலை சொல்லாமல் தவிக்கும் கன்னியின்
மௌனப் போராட்டத்தைப் பார்த்துள்ளாயா நீ?


பழகி சிரித்து உரசியவனுக்கு
சுவை இழந்த கனியாய் தோன்றும் காரிகையின்
பூகம்பப் போராட்டத்தைப் பார்த்துள்ளாயா நீ?


நிலவு போனபின்னும்
விடியாத இரவாய் தவிக்கும் முதிர்கன்னிகளின்
விரகப் போராட்டத்தைப் பார்த்துள்ளாயா நீ?


காலனின் கொடுமையில்
கைம்பெண்ணாகும் கைகையின்
கண்ணீர் போராட்டத்தைப் பார்த்துள்ளாயா நீ?


உலகமே அறியாமல்
வாழ்ந்து பொட்டிழக்கும் ஒரு பூவின்
மரணப் போராட்டத்தைப் பார்த்துள்ளாயா நீ?


வாழ்த்திய சேய் - சுடலை போக
வாய்க்கரிசியிடும் சௌபாக்கியவதியின்
தாய்மை போராட்டத்தைப் பார்த்துள்ளாயா நீ?



அலையிடம் அவர்கள் :SIZE]

இதெல்லாம் தெரியாமல், அறியாமல், புரியாமல்
என் ராஜ்யம் மட்டுமே எனக்குப் பெரிது,
நான் தான் சகலகலா வல்லவன் எனும் நீ


எத்தனை அலைகளை அனுப்பி போராட்டம் நடத்தினாலும்
உன் உப்பு தண்ணீருக்கும்
எம்குல பெண்களின் உப்பு கண்ணீருக்கும்
ஒப்பிட்டுப் பார்ப்பின் - புவியில்
உனக்கு இரண்டாமிடம் மட்டுமே!


வெற்றியின் களிப்பில் நாங்கள் ஆடும் ஆனந்தக்கூத்தைப் பார் !
மானிடப் பெண்களிடம் என்றுமே தோற்றுத்தான் போவாய் [SIZE=7]நீ !




கவிதையின் விமர்சனம் காண இங்கே சுட்டவும்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7997
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8303

ஓவியா
27-03-2007, 01:19 AM
நட்சத்திரம் 4

என்றும் எனக்கு பிடித்த அன்பு சகோதரன் பிரதீப் அவர்களின் அன்புக்கும் நான் என்றும் அடிமை. மிக்க நன்றி


"முதல் முத்தம்..." கவிதை போட்டி - 4க்கு அனுப்பியது

அன்பின் ஒரே மொழி முத்தம்

அம்மா கொடுத்தாள்
முதல் அன்பு முத்தம்
அப்பா கொடுத்தார்
முதல் ஆசை முத்தம்
அன்பின் ஒரே மொழி முத்தமாம்

தாத்தா கொடுத்தார்
முதல் செல்ல முத்தம்
பாட்டி கொடுத்தாள்
முதல் இனிய முத்தம்
அன்பின் ஒரே மொழி முத்தமாம்

தங்கை கொடுத்தாள்
முதல் பிரிய முத்தம்
நண்பன் கொடுத்தான்
முதல் நட்பு முத்தம்
அன்பின் ஒரே மொழி முத்தமாம்

காதலி கொடுத்தாள்
முதல் ஸ் ஸ் காம முத்தம்
மனைவி கொடுத்தாள்
முதல் மோக முத்தம்
அன்பின் ஒரே மொழி முத்தமாம்

மகன் கொடுத்தான்
முதல் பாச முத்தம்
மகள் கொடுத்தாள்
முதல் நேச முத்தம்
அன்பின் ஒரே மொழி முத்தமாம்

பேரன் கொடுத்தான்
முதல் எச்சில் முத்தம்
பேத்தி கொடுத்தாள்
முதல் பறக்கும் முத்தம்
அன்பின் ஒரே மொழி முத்தமாம்

அத்தனையும்
என் முதல் முத்தம் தான்....
இதில் எது தான் - என்
நிஜ (ஒரிஜினல்) முதல் முத்தம்!!!!!!


அடகொக்காமக்கா
அன்பின் ஒரே மொழி முத்தமாம்


:icon_08:
கவிதையின் விமர்சனம் காண இங்கே சுட்டவும்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8208
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8477

ஓவியா
27-03-2007, 01:58 AM
நட்சத்திரம் 5

அன்பை அள்ளி வழங்கும் மனோ அண்ணாவும் எனக்கு கிடைத்த இன்னோர் உறவு. அண்ணாவுக்கும் எனது நன்றிகள்


"முதல் முத்தம்..." கவிதை போட்டி - 4க்கு (2) அனுப்பியது (முதல் பரிசு)



அந்த முதல் முத்தத்தை அறியாமலே நான்

முதல் நாள்
என் உயிர்டா நீ - அம்மாவின்
உண்மை அன்பில் முதல் முத்தத்தை அறிந்தேன்
வாடா என் சீம தொர - அப்பாவின்
பாச அரவணைப்பில் முதல் முத்தத்தை அறிந்தேன்

10 வயதில்
சிங்கக்குட்டிடா நீ - தாத்தாவின்
சுருட்டு வாசத்தில் முதல் முத்தத்தை அறிந்தேன்
ராஜாடா நீ - பாட்டியின்
வெற்றிலை எச்சிலில் முதல் முத்தத்தை அறிந்தேன்


15 வயதில்
அரும்பு மீசையில் குறும்பு பார்வையில்
உஷா உரசி - உரசி ஒட்டியும் - கண்ணியம் காக்க
அந்த முதல் முத்தத்தை அறியாமலே நான்

20 வயதில்
பருவ வண்டாய் சுற்றி திரிகையில்
சுமாவும் சுந்தர விழியும் - கண்ணியம் காக்க
அந்த முதல் முத்தத்தை அறியாமலே நான்


30 வயதில்
குடும்பம் காக்கும் காளையாய்
கவிதாவும் கட்டழக மேனியும் - கண்ணியம் காக்க
அந்த முதல் முத்தத்தை அறியாமலே நான்

35 வயதில்
மெல்ல துளிர் விடும் தனிமையில்
தமயந்தியும் மலர் முகமும் - கண்ணியம் காக்க
அந்த முதல் முத்தத்தை அறியாமலே நான்


40 வயதில்
கட்டுக்கடங்கா காமத்தின் உச்சத்தில்
கனகாவும் கடைக்கண் பார்வையும் - கண்ணியம் காக்க
அந்த முதல் முத்தத்தை அறியாமலே நான்

45 வயதில்
நரைக்கு மையிட்ட மனிதனாய்
பொன்னும் பொருளும் சேர்த்தும் - இன்னமும்
அந்த முதல் முத்தத்தை அறியாமலே நான்


50 வயதில்
பாக்கெட்டில் ஜாதகம், லாக்கரில் உருக்கா தங்கம்
என்னவளின் ஒரு துளி எச்சில்க்கு - இன்னமும்
அந்த முதல் முத்தத்தை அறியாமலே நான்

70 வயதில்
இன்று நான் பாடையில்
பூலோக அமிர்தமாம், மோட்சத்தின் உச்சமாம்
எட்டா கனியாக அந்த முதல் முத்தத்தை அறியாமலே


கடைசி நாள்
உமிழ்நீரெல்லாம் வற்றி போய்
அந்த முதல் முத்தத்தை அறியாமலே
கருத்த உதட்டுடன் நான் பிணமாய்

என் ஆவியோ ஒரு ஓரமாக
தீ தீண்டுமா என்ற யோசனையில்....


:icon_08:
கவிதையின் விமர்சனம் காண இங்கே சுட்டவும்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8208
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8477

ஓவியா
27-03-2007, 02:15 AM
வணக்கம் மக்களே,

யாரேனும் விமர்சனம் எழுத ஆசைப்பட்டால் இந்த திரியில் தாராளமாக எழுதலாம்.
அன்புக் கரங்கூப்பி வரவேற்க்கிறேன். :music-smiley-019:


முக்கியமாக தவறுகளை சுட்டி காட்டுங்கள் :violent-smiley-010: :violent-smiley-010:

மனோஜ்
27-03-2007, 02:05 PM
இன்னும் அதிக நட்சத்திரம் பெற வாழ்த்துக்கள் ஓவி

அறிஞர்
27-03-2007, 02:07 PM
தொடரட்டும்.. சிறந்த பதிவுகளின் தொகுப்பு...

march
27-03-2007, 02:10 PM
ஆமாம் தொடரட்டும்.. சிறந்த பதிவுகளின் தொகுப்பு

வித் லவ்

மார்ஷ்

இளசு
27-03-2007, 09:50 PM
அனைத்தும் நான் மிகவும் ரசித்த, வியந்த கவிதைகள்..

மன்றப் படைப்பாளிகளில் கொஞ்சம் எழுதினாலும் கவிதைகளில் அதிகம் அங்கீகாரம் அள்ளும் நட்சத்திரம் ஓவியாவுக்கு வாழ்த்துகள்!

பால்வீதியாய் நட்சத்திரங்கள் பல்கட்டும்...

ஓவியா
30-03-2007, 10:23 PM
நட்சத்திரம் 6

என் தமிழ் ஆசான். என் தமிழ்த் தொண்டில் மிகவும் அக்கறை கொண்ட எம் பாரதி அண்ணாவுக்கும் எனது நன்றி.



ஹைக்கூ கவிதை போட்டிக்கு அனுப்பியவை (இரண்டாவது பரிசு)

ஆசைக்கு எச்சமாக்கினான் ஒருமுறை
நாளிதழ்களோ காசுக்குப் பலமுறை
- கற்பழிக்கப்பட்டவள்


முப்பது நாட்கள் உதிரம் உதிரும்
ஒரே நாளில் வற்றிய முலை
- ஏழைத்தாய்


தினமும் எண்ணில்லா குளியல்
கறை மட்டும் கரையாமல்
- தாசி


மேனி கொதிக்க நோவு
உயிரில் அமிர்த இன்பம்
- தாய்மை


ஒட்டியாணம் முழுக்க வைரம்
பஞ்சணையில் அணைக்கத் தலையணை
- முதலாளி மனைவி



சுட்டி
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8393

(விமர்சனம்) http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8552

ஆதவா
31-03-2007, 03:09 AM
முதல் பரிசு வென்ற கவிதைகளாயிற்றே!!! கோர்த்த உங்களுக்கு மிகவும் நன்றி,,,,,,,,,,

ஓவியா என்ற பெயரில் உள்ள பதிவுகளை நான் முதன் முதல் புரட்டும்போது எந்த ஒரு திரியும் ஆரம்பித்திருக்கவில்லை...... அதாவது கவிதையோ அல்லது வேறெதுவோ!! ஊனமான நிரந்தர முகவரி திரியை கொஞ்சம் தட்டி எழுப்பியது நாந்தான் என்ற முறையில் கவிதையைக் கண்டதும் வியந்தேன்... இந்த பெண் அழகாக எழுதும்போது ஏன் இடைவிடாது எழுதவில்லை என்று சற்று கோபமும் கூட....

கவிதைப் போட்டிக்கு கடைசியாக வந்து விழுந்த ஒரு நட்சத்திரம்... கண்டதும் வியந்தேன்..... கொடுக்கப்பட்டிருந்த படத்திற்கு மிகச் சரியாக எழுதப்பட்டிருந்தது எப்படி?... எனக்குள் சந்தேகம் வேறு... நல்ல அருமையான கவிஞர்கள்தான் இம்மாதிரி எழுதுவார்கள். இந்த பெண் எப்படி எழுதுவார்? கேட்டே விட்டேன்.... சந்தேகம் மட்டும் இருந்து வந்தது.. அதற்கு காரணம் இவர் மன்றத்தில் அடித்த லூட்டி.. மனம் புண்படுத்தாமல் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர். இவரை வெறுப்பவர் உலகில் உண்டோ? சரி ! இருந்தாலும் கவிதை பிடித்துவிட்டமையால் விமர்சனம் இட்டேன்.. ஆனால் நான் செய்த தவறு போட்டி முடிவுகளுக்கு முன்னேயே விமர்சனம் இட்டது. அடுத்த முறை இந்த தவறை திருத்திவிடலாம் என்று நினைத்திருந்தேன்..
சரி கவிதையைப் பற்றி சொல்லவில்லையே!!!..... ஏற்கனவே சொன்னவைகள் இன்னும் தணியாமல் இருக்க... இன்னும் எண்ணை ஊற்றுவதா? கூடவே கூடாது... நீரை சுடவைக்க முடியும்! நெருப்பை??..

சரி போகட்டும் விடுங்கள். மூன்றாவது கவிதைப் போட்டியில் இந்த முறை சற்று சாக்கிரதையாகவே இருக்க முயன்றேன்... நம்பிக்கை என்பது பாதிவரையில்தான் இருந்தது.. போட்டிக்கு கவிதை தொடுப்பதற்கு முன் எனக்கு ஒரு தனிமடல்... பார்த்தால் ஓவி.
தம்பி, பிழை இருக்கு சரி செய்து கொடுப்பா! என்று கவிதையைக் கொடுத்து இருந்தார்... படித்தவுடனே புரிந்துகொண்டேன்... இந்தப் பெண் தன் திறமையை மறைக்கிறார் என்பது...

பிழை திருத்தம் செய்து முடித்த பின் எனக்கே ஒரு சங்கடம்.. அடுத்த போட்டியில் பங்கேற்கலாமா வேண்டமா? மறுபடியும் தோற்கத்தான் போவோமே என்று! நான் நினைத்தது போலவே வெற்றி மீண்டும்..
ம்ம்... இது கதைக்கு ஆவறதில்லை என்று நினைத்துக்கொண்டேன்... இருந்தாலும் என்னோட ஓட்டையும் இக்கவிதைக்கே பதிவு செய்தேன்.. நினைத்தவாறே வெற்றி... என்ன செய்ய... ஆனால் உள்ளம் ஒன்று மட்டும் நினைத்தது... பெண்களின் வெற்றி இந்த உலகிற்கே வெற்றி.... ஆகையால் என் சந்தோசங்கள் சிறகு கட்டி பறந்தது..........

சரி நான்காம் போட்டிக்கு வந்த கவிதையாவது முதலிடம் பெறாமல் இருக்க, என்று வேண்டிக்கொண்டேன்... பின்னே!! நாங்களெல்லாம் முதலிடம் பெறுவது எப்படி//? ஆனால் இம்முறை என் ஓட்டு ஒவியாவுக்கு இல்லை என்று தீர்மானித்துக்கொண்டேன்.. இம்முறை போட்டியாளர்களின் பெயரும் இடம்பெறாதது எனக்கு ஒருவகையில் மகிழ்ச்சி அளித்தாலும் ஒருவகையில் கவலையாக இருந்தது... ஓவி இந்த போட்டியில் பங்குபெற்றாரா இல்லையா என்பது தெரியாமல் இருந்தது,.... தனிமடலில் நான் ஓவியிடம் (யாரிடமும்) கேட்கவில்லை.... அது இழுக்கு... அதனால் பார்த்து பார்த்து கடைசியில் இட்டேன் என் ஓட்டை........... நல்லவேளை அந்த கவிதை ஓவியா பரிசு பெற்ற முதல் கவிதை இல்லை... ஆனால்

இரண்டாவதாக இன்னொரு கவிதை இட்டிருந்தார், அதற்கு என் ஓட்டு போய்விட்டது... ஹி ஹி.... இம்முறையும் ஓவியே முதலில்...... என்றுமே சிறந்த கவிதைதான் ஓட்டைப் பெறும் என்பது எனக்கு தெளிவாகிவிட்டது.... அதோடு ஓவியாவின் கவித்திறம் என்னை வியப்பில் ஆழ்த்தியது... மீரா, பிச்சி போன்றவர்கள் பல கவிதைகள் எழுதியவர்களாதலால் அவ்வளவாக தெரியவில்லை... கவிதைகளைக் காணாமலே திடீரென்று தாக்குதல் நடத்தி பரிசு பெற்றது எனக்கு வியப்பும், பொறாமையும் கூட....

சரி போகட்டும்... இனி அடுத்து ஹைக்கூ ஆச்சே இந்த பெண்ணுக்கு ஹைக்கூ தெரியுமா என்று நினைத்திருந்தேன்... எல்லா கவிதைகளையும் படித்து விட்டு மூன்று ஓட்டுகள் மட்டுமே போட்டேன்..... அட ஆண்டவா!! அந்த மூன்றில் இரண்டு ஓவியாவுக்கா????

ஆனால் இதுவரை எழுதிய கவிதைகளிலேயே நான் ரொம்பவும் வியந்த கவிதை...மூன்று வரிகளில் என்னே ஒரு அர்த்தம்..... சே! நானென்ல்லாம் ஒரு கவிஞனா என்று என்னை நானே நொந்துகொள்ளும் அளவிற்கு அமைந்திருந்த கவிதை....

ஆசைக்கு எச்சமாக்கினான் ஒருமுறை
நாளிதழ்களோ காசுக்குப் பலமுறை
- கற்பழிக்கப்பட்டவள்


முப்பது நாட்கள் உதிரம் உதிரும்
ஒரே நாளில் வற்றிய முலை
- ஏழைத்தாய்

ஒரு பெண்ணால் மட்டுமே இம்மாதிரி நினைக்கமுடியுமோ? நான் வாக்கிட்டதும் இந்த கவிதைகளுக்குத் தான்.....

என்ன செய்ய!! இந்த அபூர்வ நட்சத்திரங்களின் வரிசையில் நானும் ஜொலிக்கத்தான் ஆசை.... வேறென்ன ? ஒரு சிறந்த கவிஞையிடம் நட்பு பாராட்டுவதைவிட கவிதை எழுதுவது மேலா?

ஓவி! தொடர்ந்து ஜெயிக்க வாழ்த்துக்கள்...
அடுத்த முறை பிழை திருத்தம் ஏதாவது இருந்தால் என்னிடம் கொடுக்கவும்... எது உங்கள் கவி என்று தெரிந்துகொண்டு ஓட்டு போடாமலாவது இருப்பேன்......... ஹி ஹி/

நன்றி
அன்புத்தம்பி
ஆதவன்.

மயூ
31-03-2007, 12:33 PM
அடடா... அடடா...
அக்காவைக் கவீஞராகப் பார்ப்பதில் மகிழ்ச்சி!!!

மனோஜ்
31-03-2007, 02:47 PM
ஏங்கப்பா ஓவியின் புகழ் ஆதவவிடம் வெளிப்பட்டது

பிச்சி
05-04-2007, 09:53 AM
வாழ்த்துக்கல் அக்க. சிறந்த கவிதாயினினு நிரூபிச்சிட்டீங்க/

இந்த லிஸ்டில் நானும் இருக்கிறேனா?

paarthiban
05-04-2007, 10:04 AM
அழகிய தொகுப்பு. நன்றி கவிஞர் ஓவியா அவர்களே.

இளசு
06-04-2007, 07:07 AM
கவீ.யின் இக்கவிதையில்...

..http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5401


இன்றைய பத்திரிகை 'தர்மத்தை' வெளிச்சம் போட்டார்!




இங்கே ஓவியா நறுக்கென குட்டியுள்ளார்:







ஹைக்கூ கவிதை போட்டி

ஆசைக்கு எச்சமாக்கினான் ஒருமுறை
நாளிதழ்களோ காசுக்குப் பலமுறை
- கற்பழிக்கப்பட்டவள்




பரபரப்பு,வியாபார நோக்கம் -
எத்தனை பாதக செயல்களைச் செய்யவைத்துவிடுகிறது..


பாராட்டுகள் ஓவியா!

ஓவியா
04-05-2007, 07:42 PM
இன்னும் அதிக நட்சத்திரம் பெற வாழ்த்துக்கள் ஓவி

நன்றி மனோஜ் தம்பி.



தொடரட்டும்.. சிறந்த பதிவுகளின் தொகுப்பு...

நன்றி அறிஞரே.



ஆமாம் தொடரட்டும்.. சிறந்த பதிவுகளின் தொகுப்பு

வித் லவ்

மார்ஷ்

நன்றி மார்ஷ்..

ஓவியா
04-05-2007, 07:47 PM
அனைத்தும் நான் மிகவும் ரசித்த, வியந்த கவிதைகள்..

மன்றப் படைப்பாளிகளில் கொஞ்சம் எழுதினாலும் கவிதைகளில் அதிகம் அங்கீகாரம் அள்ளும் நட்சத்திரம் ஓவியாவுக்கு வாழ்த்துகள்!

பால்வீதியாய் நட்சத்திரங்கள் பல்கட்டும்...

நன்றி இளசு சார்.




அடடா... அடடா...
அக்காவைக் கவீஞராகப் பார்ப்பதில் மகிழ்ச்சி!!!

நன்றி மயூ.



அழகிய தொகுப்பு. நன்றி கவிஞர் ஓவியா அவர்களே.

நன்றி ஆசிரியரே.
எத்தனை மக்கள் பாராட்டினாலும்.. ஒரு ஆசிரியரின் பாராட்டிற்கு சமம்ன்றோ!!!!!!!!!

ஓவியா
04-05-2007, 07:58 PM
இதுவரை எழுதிய கவிதைகளிலேயே நான் ரொம்பவும் வியந்த கவிதை...மூன்று வரிகளில் என்னே ஒரு அர்த்தம்..... சே! நானென்ல்லாம் ஒரு கவிஞனா என்று என்னை நானே நொந்துகொள்ளும் அளவிற்கு அமைந்திருந்த கவிதை....

ஆசைக்கு எச்சமாக்கினான் ஒருமுறை
நாளிதழ்களோ காசுக்குப் பலமுறை
- கற்பழிக்கப்பட்டவள்


முப்பது நாட்கள் உதிரம் உதிரும்
ஒரே நாளில் வற்றிய முலை
- ஏழைத்தாய்

ஒரு பெண்ணால் மட்டுமே இம்மாதிரி
நினைக்கமுடியுமோ? நான் வாக்கிட்டதும் இந்த கவிதைகளுக்குத் தான்.....

என்ன செய்ய!! இந்த அபூர்வ நட்சத்திரங்களின் வரிசையில் நானும் ஜொலிக்கத்தான் ஆசை.... வேறென்ன ? ஒரு சிறந்த கவிஞையிடம் நட்பு பாராட்டுவதைவிட கவிதை எழுதுவது மேலா?

ஓவி! தொடர்ந்து ஜெயிக்க வாழ்த்துக்கள்...
அடுத்த முறை பிழை திருத்தம் ஏதாவது இருந்தால் என்னிடம் கொடுக்கவும்... எது உங்கள் கவி என்று தெரிந்துகொண்டு ஓட்டு போடாமலாவது இருப்பேன்......... ஹி ஹி/

நன்றி
அன்புத்தம்பி
ஆதவன்.


நன்றி ஆதவா. உன் விமார்சனம் எப்பொழுதுமே எனக்கு கற்க்கண்டு.



வாழ்த்துக்கல் அக்க. சிறந்த கவிதாயினினு நிரூபிச்சிட்டீங்க/

இந்த லிஸ்டில் நானும் இருக்கிறேனா?

நன்றி பிரபா..


கவீ.யின் இக்கவிதையில்...

..http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5401

இன்றைய பத்திரிகை 'தர்மத்தை' வெளிச்சம் போட்டார்!

இங்கே ஓவியா நறுக்கென குட்டியுள்ளார்:


ஆசைக்கு எச்சமாக்கினான் ஒருமுறை
நாளிதழ்களோ காசுக்குப் பலமுறை
- கற்பழிக்கப்பட்டவள்

பரபரப்பு,வியாபார நோக்கம் -
எத்தனை பாதக செயல்களைச் செய்யவைத்துவிடுகிறது..

பாராட்டுகள் ஓவியா!

நன்றி இளசு சார்.

ஓவியா
04-05-2007, 08:03 PM
நட்சத்திரம் 7

இம்மன்றத்திலே என்னை மிகவும் கவர்ந்தவர், மதிப்புமிகு இளசு அவர்கள்.
இவரின் பின்னூட்டங்கள்தான் இன்றும் என்னை உங்களுடன் இணைத்துள்ளது. மிக்க நன்றி இளசு.


கவிதை போட்டி - 6க்கு அனுப்பியது (இரண்டாவது பரிசு)
http://www.geocities.com/benjlu/tamilmantram/sad_boy.JPG

வாழ்க்கைப் போராட்டத்தில் ஒரு விளங்காத புதிர்


என்னை உருவாக்க இரண்டு உடல்கள் மட்டுமே!!
உன்னை உருவாக்க இரண்டு கைகள் மட்டுமே!!

ஒரு துமி நீரில் நான் உயிர் பெற்றேன்.
சில துளி நீரால் நீ உருவம் பெற்றாய்.

உன்னில் கலந்துள்ள அந்த மெல்லிய காற்று - என்
சுவாசத்தையும் இயக்கிக் கொண்டுதான் இருகின்றது.

நெருப்பிலிடப்பட்டு நீ பதம் பார்க்கப்பட்டாய் - நானோ
மனிதாபிமானம் புதைக்கப்படுவதால் அனலாகிறேன்.

பிறவிப் பயனால் நீ தரையை நிரப்பி ஆகாயம் காண்கிறாய்.
பிறவி முடிவால் நான் மூர்ச்சையுற்று ஆகாயம் காண்கிறேன்.

ஒரு பிடி மண் குழைய நீ பாண்டமாய் வந்தாய்
ஒரு பானை சாம்பலாய் நான் உன்னுள் கலக்கிறேன்[

வாழ்வின் அர்த்தம் கண்டு, நீ உடைக்கப்பட்டாய்
சுகத்திற்காக விதைக்கப்பட்டு நான் பிச்சையாக்கப்பட்டேன்.

முப்பாலுக்கும் அப்பால், எங்கோ மறைந்துள்ள அந்த மாய இருள்
ஏன்? அமாவாசை இருளிலும் எனக்கு ஒளி கொடுக்கின்றது???

பாருங்கள், என் கண்களின் ஒளி அதையும் மிஞ்சிவிடுகிறதே!!
மனிதன் என்ன வாழ்க்கைப் போராட்டத்தில் ஒரு விளங்காத புதிரா!

ஆதவா
04-05-2007, 11:10 PM
அதெப்படி? நீங்க "மட்டும்" கண்ட அபூர்வ நட்சத்திரம்? நாங்க காண மாட்டோமா?

ஓவியா
04-05-2007, 11:23 PM
அதெப்படி? நீங்க "மட்டும்" கண்ட அபூர்வ நட்சத்திரம்? நாங்க காண மாட்டோமா?

அது என் கவிதை என் எண்ணத்திற்க்கு மட்டும் தெரிந்தவை. என் சிந்தனையில் மட்டும் உத்தித்தவை. அதான் நான் மட்டும் 'கண்ட அபூர்வ நட்சத்திங்கள் அவை'

யப்பா ஆதவானந்தா, (நேற்றிலிருந்து நீர் மாலை போட்டு விட்டீறே....ஹி ஹி ஹி)
உங்க நட்ச்சதிரத்தோடு ஒப்பிட்டால், நீர் சூரியான் நான் புளூட்டோலே.

சக்தி
05-05-2007, 02:49 AM
தோழி ஓவியாவிற்கு,

முதற்கண் இந்த ரோஜாவின் வணக்கம், ஆசிகள், மற்றும் வாழ்த்துக்களுடன். உங்கள் எழுத்துக்களுக்கு நான் ரசிகன் ஆகிவிட்டேன். நானும் இது போல் எழுதவேண்டும் என்ற் முயட்சி செய்து பார்க்கிறேன் முடியவில்லை. எனது கவிதை ஒரு குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே சுழல்கிறது. ஆனால் உங்கள் கற்பனையோ எல்லையற்றது. பிரபஞ்சங்களை தாண்டும் வலிமையுள்ளது. எனவே தங்களின் சேவை தமிழ்மன்றத்திற்கு தேவை.

ஓவியா
06-05-2007, 04:18 PM
தோழி ஓவியாவிற்கு,

முதற்கண் இந்த ரோஜாவின் வணக்கம், ஆசிகள், மற்றும் வாழ்த்துக்களுடன். உங்கள் எழுத்துக்களுக்கு நான் ரசிகன் ஆகிவிட்டேன். நானும் இது போல் எழுதவேண்டும் என்ற் முயட்சி செய்து பார்க்கிறேன் முடியவில்லை. எனது கவிதை ஒரு குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே சுழல்கிறது. ஆனால் உங்கள் கற்பனையோ எல்லையற்றது. பிரபஞ்சங்களை தாண்டும் வலிமையுள்ளது. எனவே தங்களின் சேவை தமிழ்மன்றத்திற்கு தேவை.


மிக்க நன்றி ரோஜா அவர்களே.

ஆம், என் நண்பர்கள் அனைவரும் என்னுடைய சிந்தனை மிகவும் விசித்திரமாக இருகின்றது என்று கூருவார்கள். அப்பொழுதெல்லம் நான் அதை கண்டுக்கொள்ளவே மாட்டேன், இங்கு வந்தபிந்தான் எனக்கும், அது உன்மையோ என எண்ணத் தோன்ருகிறது.

நான் எதயுமே குறுகிய வட்டத்தினுல் வைத்து காண மாட்டேன், தூர நோக்கு சிந்தனையுடன் அனுகுவேன். அனைத்திலும் காதலை புகுத்த மாட்டேன்.

உங்கள் விமர்சனம் என்னை உற்ச்சாக படுத்திவிட்டது, இனி நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், என் பதிப்பினை தொடருவேன்.

உங்கள் ஆசிக்கு மிக்க நன்றி. அது ரொம்ப பெரியா வார்தைங்கோ. நன்றி நன்றி நன்றி :icon_08: :icon_08: :icon_08:

ஓவியா
06-05-2007, 04:43 PM
நட்சத்திரம் 8

இம்மன்றத்திலே எனக்கு கிடைத்த இன்னோரு நல்ல நண்பர். நண்பர் விஷ்தா அவர்கள். அவர்களுக்கு என் நன்றி.

(இந்த படமும் அவர் வழங்கியதே. அதற்க்கு நான் எழுதிய கவிதையும், பாராட்டிய பிரதீப் மற்றும் மணிமேகளை அவர்களின் சுட்டியும் இணைதுல்லேன்.)

http://www.jwz.org/bigheads/capt.sge.ruu60.100304235833.photo00.default-380x284.jpg


சமுதாயம்

என்னையும் சேர்த்தே
தமிழ் நாட்டில்
6 கோடி மக்களாம்

ஒரூ வேலை
உணவன்றி
3 கோடி மக்களாம்

அரிசி விளம்பரத்திற்க்கு
அரபு நாட்டு மங்கையாம்



ஓவியா...
வாயடைத்துப் போய் விட்டேன்...
வாழ்த்துவதைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை... :icon_03:
ஏற்கனவே உங்களிடம் ஐகேஷ் எக்கச்சக்கமாக இருப்பதால் வாழ்த்து மட்டுமே..


ஓவி....டச் பண்ணிட்டீங்க........:icon_08:

மூவருக்கும் எனது நன்றிகள்.

இணைய நண்பன்
06-05-2007, 04:50 PM
அன்பின் ஓவியா
நீங்கள் கண்ட நட்சத்திரங்களில் என்னையும் சேர்த்திருக்கிறீர்கள்.நன்றி..நீண்ட இடைவெளிக்கு பின்னர் மன்றத்தில் மீண்டும் நுழைந்தேன்.அதனால் இன்று தான் உங்கள் " நான் மட்டும் கண்ட அபூர்வ நட்சத்திரங்கள்" பக்கத்தைப்பார்த்தேன்...பாராட்டுக்கள்!!

ஓவியா
06-05-2007, 10:43 PM
மிக்க நன்றி விஷ்தா,

நேரமிருக்கும் பொழுது கவிதைகளை படித்து பின்னூட்டமிடுங்களேன்.

அக்னி
06-05-2007, 11:44 PM
நட்சத்திரங்களால் ஒரு தமிழ் மாலை. பிரகாசத்திற்குப் பஞ்சமில்லை.
வித்தியாசமான சிந்தனைக்கீற்று, உங்கள் மதிப்பின் ஒளிக்கீற்றாக...

வாழ்த்துக்கள்...

ஓவியா
06-05-2007, 11:48 PM
நன்றி அக்கினியாரே

ஒரு கவிதையை கூட விமர்சனம் செய்யவில்லையே!! அவ்வலோ மோசமா?

அக்னி
07-05-2007, 12:21 AM
நன்றி அக்கினியாரே

ஒரு கவிதையை கூட விமர்சனம் செய்யவில்லையே!! அவ்வலோ மோசமா?

மோசமா...? இல்லவே இல்லை. பொதுவான வாழ்த்து கூறியிருந்தேன். தனித்தனியாக ஒவ்வொன்றாக கட்டாயம் பின்னூட்டம் இடுவேன். எனது தட்டச்சு உங்களைப்போன்று விரைவானது இல்லை. ஒவ்வொரு பதிப்பிற்கும் நெடுநேரம் எடுக்கின்றது. பொறுத்தருள்க.

நான் ரசிகனாயிருக்கும் சிலரில் நீங்களும் ஒருவர்...

ஓவியா
09-05-2007, 09:53 PM
மோசமா...? இல்லவே இல்லை. பொதுவான வாழ்த்து கூறியிருந்தேன். தனித்தனியாக ஒவ்வொன்றாக கட்டாயம் பின்னூட்டம் இடுவேன். எனது தட்டச்சு உங்களைப்போன்று விரைவானது இல்லை. ஒவ்வொரு பதிப்பிற்கும் நெடுநேரம் எடுக்கின்றது. பொறுத்தருள்க.

நான் ரசிகனாயிருக்கும் சிலரில் நீங்களும் ஒருவர்...

பரவாயில்லை நண்பரே, நேரம் இருக்கும் பொழுது விமர்சியுங்கள்.

மிக்க நன்றி.

mravikumaar
11-05-2007, 03:53 AM
ஓவியா,

முதலில் என் வாழ்த்துக்கள்.

இதுவரை இந்த நட்சத்திரம் என் கண்களில் எப்படியோ படவில்லை. இப்போதுதான் பார்த்தேன்.

உண்மையில் அனைத்தும் நல்ல ரசிக்க கூடிய கவிதைகள்.

மேலும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்

அன்புடன்,
ரவிக்குமார்

ஓவியா
11-05-2007, 04:40 PM
நட்சத்திரம் 9

இந்த மன்றத்தில் எனக்கு கிடைத்த அன்பு சகோதரன் மதி, அவரின் ஊக்கமும், அக்கா அக்கா என்று எனக்கிடும் பின்னூட்டங்களும் என்றுமே எனக்கு பசுமையானவைகள். பாசமான தம்பிக்கு எனது நன்றிகள்.


கவிச்சமரின் நான் எழுதிய சில உடனுக்குடன் கவிதைகள்.


கவிதையின் தலைப்பு : ஈ என்று பறக்கும் என் காதல்

இல்லை என்று கூறுவதால்
இருக்கும் என் காதல்
இல்லாமல் போகாது
இல்லையென்பதுதான் - காதலில்
இருக்கும் என்ற வசனமாம்.




கவிதையின் தலைப்பு : என்னை வாங்கிச்செல்

நீ
என்னை நீங்கிச் சென்றதால்
நான் இன்னும் நானாகவே
இருக்கிறேன்
நீ என்னை வாங்கிச் சென்றிருந்தால்
நான் நாமாக இருந்திருப்போமே!!!




கவிதையின் தலைப்பு : உன்னுடையது

உன்
இதயத்தை
நீயே வைத்துக்கொள்
என்
இதயத்தை மட்டும்
எடுத்துச் செல்
அது என்றுமே
உன்னுடையதுதான்.




கவிதையின் தலைப்பு : என் ஏசு பிரான்

என் உயிரும்தான்
என் உடலும்தான்
என் உள்ளமும்தான் - அனைத்தும்
என்னைகாக்கும்
என் ஏசு பிரானுக்கே




கவிதையின் தலைப்பு : நிஜம்

இறைவனிடம் கேட்டு கேட்டு
சலித்து விட்டது என் முகவரியை

இனி ஒருமுறை அவன்
இல்லை என்று சொன்னால்
கல்லறை மட்டுமே கதி.....இது நிஜம்.

அறிஞர்
11-05-2007, 04:43 PM
நன்றி அக்கினியாரே

ஒரு கவிதையை கூட விமர்சனம் செய்யவில்லையே!! அவ்வலோ மோசமா?
யார் சொன்னா அப்படி.....
உம் கவிதை ரொம்ப அருமை..
தொடருங்கள் தோழி..

ஷீ-நிசி
11-05-2007, 04:46 PM
கவிதையின் தலைப்பு : என்னை வாங்கிச்செல்

நீ
என்னை நீங்கிச் சென்றதால்
நான் இன்னும் நானாகவே
இருக்கிறேன்
நீ என்னை வாங்கிச் சென்றிருந்தால்
நான் நாமாக இருந்திருப்போமே!!!

நான் ரசித்தது... என்னால் நிச்சயமாக சொல்லமுடியும்.. மேலே இருக்கும் தொகுப்புகளில் முதல் ராங்க் இதுவென.. சரிதானா ஓவியா..

ஓவியா
11-05-2007, 04:54 PM
யார் சொன்னா அப்படி.....
உம் கவிதை ரொம்ப அருமை..
தொடருங்கள் தோழி..

நன்றி சார். உங்க பின்னூட்டம் எனக்கு வைட்டமீன் தான்.



நான் ரசித்தது... என்னால் நிச்சயமாக சொல்லமுடியும்.. மேலே இருக்கும் தொகுப்புகளில் முதல் ராங்க் இதுவென.. சரிதானா ஓவியா..

அதே அதே சபாபதே!!!!

உங்க விமர்சனம் கண்டு மகிழ்ந்தேன் ஷீ. நன்றி சகோ.

மதி
13-05-2007, 05:18 AM
தன்யனானேன் அக்கா...
நீங்கள் கண்ட நட்சத்திரங்களுள் நானும் ஒருவனா..அதற்குத் தகுதியானவனா..? தெரியவில்லை...

ஷீ-நிசியின் கருத்தே என்னுடையதும்..

ஓவியா
13-05-2007, 01:09 PM
ஓவியா,

முதலில் என் வாழ்த்துக்கள்.

இதுவரை இந்த நட்சத்திரம் என் கண்களில் எப்படியோ படவில்லை. இப்போதுதான் பார்த்தேன்.

உண்மையில் அனைத்தும் நல்ல ரசிக்க கூடிய கவிதைகள்.

மேலும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்

அன்புடன்,
ரவிக்குமார்

நன்றி ரவி.

உங்கள் ஊக்கம் என்னை மேன்மேலும் எழுத தூண்டும்.

எனக்கு கவிதை எழுதவே தெரியாது, இதெல்லாம் தான் ஆரம்பம்.

ஓவியா
13-05-2007, 01:10 PM
தன்யனானேன் அக்கா...
நீங்கள் கண்ட நட்சத்திரங்களுள் நானும் ஒருவனா..அதற்குத் தகுதியானவனா..? தெரியவில்லை...

ஷீ-நிசியின் கருத்தே என்னுடையதும்..

நன்றி மதி.

நீ எப்பொழும் அக்காவின் செல்ல தம்பிதான். :icon_08:

அக்னி
22-05-2007, 02:07 AM
கற்சிலையும் உயிர் பெறும் காதலில்

சொல் கண்ணே... சொல் கண்ணே... என்று சொல்லாமலே விட்டுவிட்ட அந்த வார்த்தை, கவிதையின் மகுடம்...
எதிர்பார்ப்பை அள்ளித் தந்து, காதலைத் திணிக்காமல் எம்மையே தீர்மானிக்க வைத்த கவிதை...


என் முதுகெலும்பு வில் போல் வளைந்து
உன் புருவத்துடன் போட்டிக்கு வந்துவிடும் முன்

இன்றைய இளமையுடன் நாளைய முதுமை... தொடர்பாடல் அருமை.


உருவம் மட்டுமே கல்
இதயம் பூவிலும் மென்மை

கல்லும் பெருமை கொள்ளும் இக்கவிவரியால்...

பாராட்டுக்கள் ஓவியா...

meera
22-05-2007, 05:50 AM
ஓவி,

உங்களின் இந்த தொகுப்பு நன்று.இத்தனை நாள் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்.

lolluvathiyar
22-05-2007, 11:36 AM
ஓவியா பல கவிதைகளை ஒன்றாக
படிக்கும் போது அந்த சந்தோசத்தை எப்படி சொல்வது என்று தெரியவில்லை

பாலும், தேனும், கல்கண்டும், பழமும், தேங்காயும் கலந்து
சாப்பிட்டது போல இருக்கு. ஆனாலும் தித்திப்பு இல்லை.

ஓவியா
23-05-2007, 03:15 PM
சொல் கண்ணே... சொல் கண்ணே... என்று சொல்லாமலே விட்டுவிட்ட அந்த வார்த்தை, கவிதையின் மகுடம்...
எதிர்பார்ப்பை அள்ளித் தந்து, காதலைத் திணிக்காமல் எம்மையே தீர்மானிக்க வைத்த கவிதை...

இன்றைய இளமையுடன் நாளைய முதுமை... தொடர்பாடல் அருமை.

கல்லும் பெருமை கொள்ளும் இக்கவிவரியால்...

பாராட்டுக்கள் ஓவியா...

நன்றி நண்பரே.




ஓவி,

உங்களின் இந்த தொகுப்பு நன்று. இத்தனை நாள் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்.

மிக்க நன்றி. விமர்சனமெங்கே!!!!




ஓவியா பல கவிதைகளை ஒன்றாக
படிக்கும் போது அந்த சந்தோசத்தை எப்படி சொல்வது என்று தெரியவில்லை

பாலும், தேனும், கல்கண்டும், பழமும், தேங்காயும் கலந்து
சாப்பிட்டது போல இருக்கு. ஆனாலும் தித்திப்பு இல்லை.

இப்படியெல்லாம் பாராட்டினா எனக்கு ஆனந்த கண்ணீர்தான் வரூம்.

புகழ்யாவும் தமிழ்மன்றத்திற்க்கே.


மிக்க நன்றி.

சிவா.ஜி
24-05-2007, 09:53 AM
பிரமிப்பாய் இருக்கிறது.எவ்வளவு அழகான வார்த்தை ப்ரயோகங்கள்,சொல்ல வந்ததை தெளிவாக சொல்லும் தன்மை,ஆழம்,நையாண்டி...அசத்தல் கவிதைகள்.உளமார்ந்த பாராட்டுக்கள்

meera
24-05-2007, 11:31 AM
நன்றி நண்பரே.





மிக்க நன்றி. விமர்சனமெங்கே!!!!





இப்படியெல்லாம் பாராட்டினா எனக்கு ஆனந்த கண்ணீர்தான் வரூம்.

புகழ்யாவும் தமிழ்மன்றத்திற்க்கே.


மிக்க நன்றி.




விமர்சனம் கொஞ்சம் தாமதமாய் வரும் தோழி.

ஓவியா
31-05-2007, 07:28 PM
பிரமிப்பாய் இருக்கிறது.எவ்வளவு அழகான வார்த்தை ப்ரயோகங்கள்,சொல்ல வந்ததை தெளிவாக சொல்லும் தன்மை,ஆழம்,நையாண்டி...அசத்தல் கவிதைகள்.உளமார்ந்த பாராட்டுக்கள்

நீங்களோ சிறந்த பத்திரிக்கை எழுத்தாளர், உங்கள் மோதிரகையால் பாராட்டா!! மிக்க நன்றி. நண்பரே.



விமர்சனம் கொஞ்சம் தாமதமாய் வரும் தோழி.

விமர்சனம் போடாவிட்டாலும் பரவாயில்லை தோழி. நீர் வந்து எட்டி பார்த்து விட்டு போனதே எனக்கு மிக்க சந்தோஷம். :icon_dance:

ஃடேங்க்ஸ் மை லவ்.

ஓவியா
31-05-2007, 07:49 PM
நட்சத்திரம் 10

இங்கு எனக்கு கிடைத்த மன்ற நண்பர் அறிஞர் சார். அன்பை அள்ளி பொழியும் மன்ற தளபதிக்கு நன்றிகள் பல.


கவிதை போட்டி 7க்கு அனுப்பியது (3வது பரிசு)

http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/rain.jpg


கன்னியிவள்
கனவுகளின் காட்சிகளைக்
கண்ணில் சுமந்து

காலமெல்லாம் கால் கடுக்கக்
கவி பலப் பாடிக்
காத்திருக்க


கண்ணனவனோ
கவிக்குயிலின்
அழகற்ற முகத்தினைக்
கண்டு

காதலதைக் கொள்ளாமலே
நழுவினான்
கை கழுவினான்


கரைந்து போகும் பணத்திலும்,
அழகிலும்,
ஜாதி மதத்திலும்,

காதலது அன்று கலைந்து,
அலைந்து
பின் தொலைந்தும் போனது


கற்கண்டு காரிகையின்
கரும்பு வாழ்வை
கருக்கி கசப்பாக்கி

காற்று வேகத்தில் கடந்து
இரயில் பயணமானன்
கலாபக் கயவன்


கள்வனின் பாதச் சுவடுகளை
கன்னிமயில் தேடித்தேடி
கல்லாகினாள்

காயம்பட்ட இதயமாய்
கலைந்த கூந்தலுடன்
களைத்தும் போனாள்


கட்டழகுமங்கையோ
கருப்புச்சின்னமாகி
காக்கைக்கும்
கேலிச்சித்திரமானாள்

காதல் வடுக்களைக்
கவிதையாக்கி
கல்லறையில் பதிப்பாளாம்
காவியமாய்


கடவுளும்
கருணையுடன்
கசங்கியவளுக்காக
கண நேரம் அழுதாராம்

கார் மேகமும் கண்டு
மழை நீராய்
காலை மாலை
தொடர்ந்ததாம்


கந்தலான தாரகை
கருப்பணிந்து
கரும் பூவாகி - தன்
கண்ணீரின் பிம்பத்திலே - அவன்

கால் சுவடுகளை நோக்கி
கருப்பு விதவையாய்
நிதமும் பயணிக்கிறாளாம்.


.

அறிஞர்
31-05-2007, 07:52 PM
நட்சத்திரம் 10

இங்கு எனக்கு கிடைத்த மன்ற நண்பர் அறிஞர் சார். அன்பை அள்ளி பொழியும் மன்ற தளபதிக்கு நன்றிகள் பல.

மங்கையவள் படம்.. கவிதை..

10வது நட்சத்திரமாக எம்மை நினைவுகூர்ந்ததற்கு நன்றி மேடம்.

ஓவியா
06-06-2007, 04:26 PM
பிரமிப்பாய் இருக்கிறது.
எவ்வளவு அழகான வார்த்தை ப்ரயோகங்கள்,சொல்ல வந்ததை தெளிவாக சொல்லும் தன்மை,ஆழம்,நையாண்டி...அசத்தல் கவிதைகள். உளமார்ந்த பாராட்டுக்கள்

மிக்க நன்றி சிவா அண்ணா.

ஆதவா
06-06-2007, 06:48 PM
ஃடேங்க்ஸ் மை லவ்.

தமிங்கில வார்த்தைகளை வன்மையாக கண்டிக்கிறேன்... :wub: :082502now_prv: :nature-smiley-006:

அமரன்
06-06-2007, 06:54 PM
ஃடேங்க்ஸ் மை லவ்.

தமிங்கில வார்த்தைகளை வன்மையாக கண்டிக்கிறேன்... :wub: :082502now_prv: :nature-smiley-006:
ஆதவா எங்கே போனாலும் ஓவியாவை வம்புக்கிழுப்பதே உமக்கு வேலையாகப் போய்விட்டது...ஓவியன் அன்ட் கோ இருப்பதை மறந்து விட்டீர்

ஓவியா
06-06-2007, 06:56 PM
இந்தத்திரிக்குதான் நீங்கள் (கவிஞர்கள்) யாருமே வருவதில்லையே என்று போட்டேன். விமர்சனம் பண்ணா வராதீக, இப்படி ஏதாவது பாசமா போட்டா ஓடி வந்து குட்டுங்க ராசா.


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

இனி வரும் பின்னூட்டங்கள் அனைத்தும் தங்கத்தமிழில் வரும்.

மன்னிக்கவும் மேற்ப்பார்வையாளரே.

அமரன்
06-06-2007, 06:58 PM
உங்கள் கவிதைகளின் சுட்டிகளை எங்கே பார்க்கலாம். உங்கள் கவிதைகளைப் படிக்க ஆசை.

ஓவியா
06-06-2007, 06:59 PM
என் அனைத்து கவிதைகளும் இங்குதான் குடிகொண்டுள்ளன.

ஒரு 10 கவிதைகள் இருக்கும்.

அமரன்
06-06-2007, 07:04 PM
என் அனைத்து கவிதைகளும் இங்குதான் குடிகொண்டுள்ளன.

ஒரு 10 கவிதைகள் இருக்கும்.
விரைவில் தேடிப்பிடித்து படித்துவிடுகின்றேன்.

ஓவியா
06-06-2007, 07:20 PM
விரைவில் தேடிப்பிடித்து படித்துவிடுகின்றேன்.

தேடி பிடிக்க வேண்டாம். நட்சத்திரம் 1, 2, 3, என்று 10 வரை இருக்கும் அதை கண்டாலே போதும். வெற்றி நிச்சயம்.

ஆதவா
06-06-2007, 07:23 PM
. நட்சத்திரம் 1, 2, 3, என்று 10 வரை .

நட்சத்திரம் என்பது சம்ஸ்கிருத வார்த்தை, தமிழல்ல.
1 2 3 என்பதும் தமிழல்ல. ஆகவே பிறமொழி வார்த்தைகளைப் பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்..

(விமர்சனம் கிட்டத்தட்ட எல்லா கவிதைகளுக்கும் கொடுத்திருப்பேன்.)

ஓவியா
06-06-2007, 07:25 PM
நீங்க விமர்சனம் போடாத கவிதைகள் தான் ஜாஸ்தி

(சம்ஸ்கிருத வார்த்தையை பயன்படுதுகிறேன் அட்வான்ஸ் மன்னிப்புகள்)

ஓவியா
10-06-2007, 01:33 AM
நட்ச்சத்திரம் 11

அன்பை மட்டுமே பரிசளிக்கும் அன்புத்தோழி மீராவிற்க்கு நெஞ்சார்ந்த நன்றி.


http://farm1.static.flickr.com/151/352631262_094e42fd6e.jpg


இப்படியும் போகி கொண்டாடலாமா?


1.
எழுந்தது புகை மேகம்
புதுப்பித்து கொண்டிருந்தார்கள்
வாழ்வை....

எரிந்து கொண்டிருந்தது
பழைய பொருட்கள்
எரித்து கொண்டிருந்தார்கள்
நம்மவர்கள்.....

என்னிடம் என்ன இருக்கிறது
எரிக்கும் அளவிற்கு
உன் நினைவைத்தவிர.....


2.
எரித்தேன்
- எண்ண அலைகளை
எரித்தேன்
- எழுதிய கவிகளை
எரித்தேன்
- எனக்கான உன்னை
எரித்தேன்
- என் எழுதா காவியத்தை

அமரன்
08-08-2007, 07:18 PM
அருமைக் கவிதை.
இலக்கம் இரண்டு அருமையோ அருமை.

ஓவியா
09-08-2007, 01:43 AM
நன்றி அமர்.