PDA

View Full Version : கவிதை எழுதுவது எப்படி?



ஆதவா
27-03-2007, 01:00 AM
கவிதை எழுதுவது எப்படி?...

வணக்கம் நண்பர்களே!
இங்கே கவிதை அரசர்களும் தளபதிகளும். வீரர்களும் கவிதை அரசிகளும் உலாவந்தாலும் எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன். கவிதை எழுதுவது எப்படி என்று... (பதிவு இங்கே வைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்). நம்மில் பலருக்கு கவிதை எழுத தோன்றும் ஆனால் எழுதத் தெரியாது.. இன்னும்சிலர் திறமையை வைத்துக்கொண்டு மறைப்பார்கள்... அவர்கள் எல்லாருக்கும் இந்த திரி பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்... இங்கே உலாவும் ஜாம்பாவான்களும் இப்பாடத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களைத் தருவார்கள் என்று நினைக்கிறேன்...

சரி, ஆதவனுக்குத் தெரிந்த பாடம் என்ன?

கவிதை எழுதுவது என்ன கஷ்டமான வேலையா? கிடையவேகிடையாது... எண்ணங்களை எண்ணுவது எப்படி சுலபமோ அம்மாதிரி எண்ணங்களை எழுதுவதும் சுலபம்தான்..
கவிதைக்கு என்ன என்ன தேவை?


தமிழில் ஆழ்ந்த சொற்கள் அல்லது கருத்துக்கேற்ப சொற்கள்
சொல்லவரும் கருத்து
அழகுபடுத்தும் திறன் அதாவது கற்பனை
சொல்லடுக்கு (இது அடுத்த பரிமாணம்//)
போதாது என்ற மனம்ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவேன் ; பாரதியின் புத்தகம் படியுங்கள் கவிதை எழுதிடலாம் என்று... தமிழில் ஆழ்ந்த சொற்கள் அதைவிட சிறந்த இடத்தில் கிடைக்காது.. சொற்களை நமக்குத் தேடுவதில் பிரச்சனை இருக்காது.. தமிழராகவே நாம் இருக்கும் பஷத்தில் சொற்கள் பல தானாகவே வந்துவிடும். தகுந்த தமிழ் சொற்கள் அடங்கிய புத்தகம் வாங்கிக்கொள்ளலாம்.. விற்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.. இல்லையெனில் ?? நமக்குத் தெரிந்த தமிழை வைத்துதான் முதலில் கவிதை ஆரம்பிக்கவேண்டும்........................

அடுத்து கருத்து:

நம் வாழ்க்கையில் எத்தனையோ காட்சிகள் காணுகிறோம்.. இல்லையானால் காதல், நட்பு என்று சில உறவுமுறைகள் காணுகிறோம்... அங்கிருந்தே நாம் கவிதையை ஆரம்பிக்கலாம்.. கவிதை ஆரம்பத்தில் நாம் எழுதும்போது அது எதைப்பற்றிவேண்டுமானாலும் இருக்கலாம்.. ஏற்கனவே எழுதியிருப்பார்களே என்ற கவலை இல்லாமல் எழுதவேண்டும்... சரி உதாரணமில்லாமல் பாடம் நடத்தினால் சரியாக இருக்காது... உதா:க்கு காதலை மையமாக வைத்துகொண்டு கவிதை எழுதுவதாகக் கொள்வோம்..

காதலியே!
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை

இப்படி ஒன்றன்கீழ் ஒன்றாக இட்டுவிடுங்கள்.... மேலே எழுதப்பட்ட மூன்றுவரிகள் நிச்சயம் ஒவ்வொரு கவிஞனும் எழுதியிருப்பார்கள். அந்த கவலை நமக்குவேண்டாம்.. ஆனால் இம்மாதிரி சில யோசிக்கலாம்.. சரி இந்த வரிகளை எப்படி அலங்காரப்படுத்தலாம்?

சொல்லவந்த கருத்து:

நாம் கவிதையில் என்ன சொல்லவருகிறோம் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். கருத்து இல்லாமல் கவிதை எழுதி பிரயோசனமில்லை... மேற்கண்ட உதாரணக் கவிதையை எடுத்துக்கொண்டால், காதலின் மகத்துவம் இருக்கிறது..... நமக்குள் கருத்து எதுவும் தோன்றாவிடில் மிகவும் எளிதாக, எழுதப்பட்ட வரிகள் யாவும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும்ம்ம் உதாரணம்

காதலியே!
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
என்னிடம்
காதல் சொல்ல வந்தாய்
நான் வேண்டாம் என்கிறேன்

மேற்கண்ட வரிகளில் பாருங்கள்.. சற்று கருத்து வேறுபாடாக இருக்கிறது.. காதலியை உயர்த்தி பேசிவிட்டு, காதலை ஏற்காதவன் போல் சொல்வது ஒட்டாமல் இருக்கிறது பாருங்கள்.. அதை சற்றே மாற்றி கீழ்கண்டவாறு இடலாம்.... நன்றாக ஒட்டும்..

தோழியே!
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
உன்னிடம்
காதல் சொல்ல வந்தேன்
நீ வேண்டாம் என்கிறாய்

சரி சரி... கருத்து என்பது நம் மனதுக்குள் , கவிதைக்குள் திணிக்கப்படும் விதை... அது இன்றி கவி எழுதினால் எப்போதுமே நன்றாக இருக்காது...


அடுத்த பரிமாணம் கற்பனை:

இங்கேதான் நமக்கு பிரச்சனையே!! கற்பனை எப்படி உதிக்கிறது?,,, என் நண்பர்கள் பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன்... கற்பனை என்பது பிறப்பிலிருந்தே வரவேண்டுமாம்.... இல்லவே இல்லை.. பிறவிக் கவிஞர்கள் உண்டு.... ஆனால் இல்லாதவர்கள் திறனை வளர்த்துக்கொள்ளலாம்..சரி எப்படி கற்பனை செய்வது...

முதலி ஒப்புமைகள் இடலாம்... அதாவது இதைப் போல நீ இருக்கிறாய் ; அதைப் போல நான் இருக்கிறேன் என்று சொல்வது...
முதலில் கற்பனை நம்முள் உதிக்க நாம் நிறைய பார்க்கவேண்டும்... இயற்கையிடம் இல்லாத கற்பனை இல்லை.. கவிதையில் பொய்தான் அதிகம் பேசப்படும்.. மேற்கண்ட வரிகளோடு கற்பனையைப் பொருத்தலாம்..

தோழியே
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
உன்னிடம்
காதல் சொல்ல வந்தேன்
நீ வேண்டாம் என்கிறாய்
நான் நிழல் போலத் தொடருவேன்.

கவனியுங்கள்.. நிழல் நம்மை எப்போதுமே தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.. அதை நாம் கவனித்திருப்போம். ஆனால் வேறெந்த கற்பனையும் செய்திருக்கமாட்டோம்...

நான் காணும் காட்சிகளிலிருந்துதான் நாம் கற்பனையை எடுக்கவேண்டும்.. நீங்கள் ஒரு பறவையைப் பார்க்கிறீர்கள்.. உதாரணத்திற்கு மைனாவைப் பார்க்கிறீர்கள் ; அழகாக இருக்கிறது என்றால்

மைனாவைப் போல என் காதலி .

என்று யோசியுங்கள் தவறே இல்லை... கவிதைக்கு முதல்படியே இதுதான்.. சரி விடுங்கள் வழியில் ஒரு பாறாங்கல்லைப் பார்க்கிறீர்கள்...
பாறாங்கல்லின் குணம் என்ன? உடைக்கமுடியாததும் வலிமையானதும், அதிக எடை கொண்டதும்தானே!!! உடனே

பாறாங்கல்லாக இருக்குதே உன் மனது

என்று எழுதுங்கள்... உடைக்க முடியாமல் இருக்குதே என்ற அர்த்தம் வரும்.. கற்பனைகள் நாம் நினைப்பதைப் பொறுத்து நிறைய வரும்... சாதாரணக் கற்பனைதான் நாளடைவில் அசாதாரணக் கற்பனையாக மாறக்கூடும்......
நம் உதாரணத்தைத் தொடருவோம்


தோழியே!
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
உன்னிடம்
காதல் சொல்ல வந்தேன்
நீ வேண்டாம் என்கிறாய்
நான் நிழல் போலத் தொடருவேன்.
நீ பாறாங்கல் மனதை வைத்திருக்கிறாய்


அடுத்து சொல்லடுக்கு :

கொஞ்சம் கவிதை எழுதிப் பழகியவுடன் இந்த சொல்லடுக்கு காணலாம்..


சொற்களாலே கவிதையை அழகு படுத்தலாம்...
இலக்கணம் சற்று தழுவி எழுதலாம்
வார்த்தை விளையாட்டுக்களை புகுத்தலாம்இப்படி பல்வேறு உள்ளன... ஆனால் இவையனைத்திற்கும் பல தமிழ்சொற்கள் நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.. நாம் கவிதை எழுத எழுத தானாக வந்தமையும் இந்த சொல்லடுக்கு.... இல்லையென்றால் மிகவும் எளிது: பாரதியின் கவிதையை மிக ஆழமாக படிக்கவும்..........

போதாது என்ற மனம் :

எத்தனை கவிதை எழுதினாலும் போதாது என்ற மனமிருந்தாலே நாம் நிச்சயம் பல வலிமையான அழகான கவிதை தரமுடியும்... நம்பிக்கை மட்டுமே இதற்குத் தூண்... நீங்கள் எழுதுவது எப்படி இருப்பினும் அதை மீண்டுமீண்டும் எழுத எழுத கூர் செய்யப்படும்.... யாரும் எடுத்த எடுப்பில் மிகப்பெரிய கவிஞராகிவிடமுடியாது... பிறவிக்கவிஞனுக்கு மட்டுமே உரிய பழக்கம் அது..
அதேபோல நாம் எழுதும் கவிதைகள் இன்னும் சீர்படுத்த வேண்டுமென்றால் பல புத்தகங்கள் படிக்கலாம்.. கற்பனைகளை நன்றாக வளர்த்தலாம்.. நிச்சயம் முடியும்...

முடியுமென்ற நம்பிக்கையும் இது போதாது; இன்னமும் வேண்டுமென்ற நம்பிக்கையும் இருந்தாலே போதும்.. எல்லாருமே கவிதை எழுதலாம்...


இன்னும் சந்தேகமிருந்தால் இதே திரியிலேயே சந்தேகம் எழுப்புங்கள்.. நிவர்த்தி செய்ய நானோ அல்லது கவிதை ஜாம்பவான்களோ இருப்பார்கள்... உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்..............

நிச்சயம் பல கவிஞர்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு...

வாழ்க தமிழ்
வளர்க மன்றம்

ஆதவன்

ஆதவா
27-03-2007, 03:21 AM
பாடங்கள் தொடரும்...
இன்னும் ஆழமாக...... மன்றத்து கவிஞர்கள் ஒத்துழைத்தால் இந்த கவிட்டுரையை இன்னும் அழகு படுத்தலாம்..

ஷீ-நிசி
27-03-2007, 03:25 AM
நல்ல அருமையான முயற்சி ஆதவா.. தொடர்ந்து நடத்துங்கள்.. நானும் இங்கே நிறைய கற்றுக்கொள்ளமுடியும் என்று நம்புகிறேன்...

ராஜா
27-03-2007, 03:55 AM
படிக்கும் போது எளிதாகத் தெரிகிறது ஆதவரே..

ஆனால் தட்டச்சு செய்ய ஆரம்பித்தால் ஒன்றுமே வரமாட்டேன் என்கின்றதே..

கவிதை எழுத தனித் திறமை வேண்டுமய்யா..!

poo
27-03-2007, 05:57 AM
உற்சாக டானிக் பதிவு. நிச்சயமாய் கைகொடுக்கும் எனக்கும்!

எந்தவொரு கவிஞனும் எழுதத் தயங்கும் இதை துணிந்து எழுத வந்தமைக்கு பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள் ஆதவன். தொடர்ந்து கொடுங்கள்..

ஆதவா
27-03-2007, 06:21 AM
நன்றிகள்................ எனக்குத் தெரிந்ததை நான் எழுதுகிறேன்... அதேமாதிரி கவிஞர் பூ மற்றும் கவிஞர் ஷீ-நிசி ஆகியோரும் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்...........

poo
27-03-2007, 06:41 AM
கவிஞர் பூ. --- இப்படி என் மனம் என்று உணர்கிறதோ அன்று நிச்சயமாக தெரிந்தால் எழுதுகிறேன் ஆதவன். (அந்நிலை வர ஆதவனின் பாடங்கள் பல பகுதிகள் வரவேண்டும்..)

ஓவியன்
27-03-2007, 08:25 AM
ஆதவா பிரயோசனமாக உள்ளது தொடருங்கள்!

மன்றத்தின் மற்றைய கவிஞர்களும் தங்களது வழி முறைகளைத் தரலாமே?

மனோஜ்
27-03-2007, 08:41 AM
எனக்கு உண்மையில் அருமையான பாடம் நன்றி ஆசிரியர் ஆதவரே
ஆனால் முதலில் ஒரு திரி பாதியில் நிர்கிறது அதையூம் தொடருங்கள்

ஆதவா
27-03-2007, 04:18 PM
நன்றி ஓவியன் மற்றூம் மனோ@@@ ஓவியன் சொன்னதுபோல மன்ற நண்பர்கள் தங்கள் அனுபவத்தைச் சொன்னால் இன்னும் பயனுள்ள திரியாக இருக்கும்............... எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கவிஞர்களை உருவாக்க முடியும் என்று...........

அமரன்
27-03-2007, 04:20 PM
படித்தேன் ரசித்தேன். இதன் அடிப்படையில் என் கவிதை விரைவில். இன்னும் பாடம் சொல்லுங்க ஆதவா.

பென்ஸ்
27-03-2007, 06:06 PM
எப்படி ராசா.. உன்னால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது...
சும்மாவே மன்றத்தில் வலம் வரும் மக்கள் காதல் கவிஞர்கள் ஆயிடுறாங்க.. இதில் நீங்க வேற இதுமாதிரி பதிவு கொடுத்தால் ...
எனக்கு கஸ்டமாயிடும்.. (கவிதை போட்டி நடத்ததான்).

தொடரட்டும் உங்கள் பதிவுகள்...
வளரட்டும் தமிழ் பணி...

இளசு, கவிதா, நண்பன், ப்ரியன், பிரியன் , பூ, பாரதி, ஷீ, ஓவி என்று எல்லோரும் கண்டிபாக தங்கள் கருத்துகளை பதிக்க வேண்டிகொள்கிறேன்.

ஆதவா
27-03-2007, 06:12 PM
அப்படியே கழண்டுக்க பாக்குறீங்களே!!!!

இன்னும் நல்லா ஆழமா போனா நிச்சயம் உண்டு.....

பாருங்க...... அடுத்த கலக்கலான பதிவை....

அமரன்
27-03-2007, 06:16 PM
பாருங்க...... அடுத்த கலக்கலான பதிவை....


சீக்கிரம் தாங்க ஆதவா

இளசு
27-03-2007, 10:36 PM
வாழ்வில் ஒரு கவிதையாவது எழுதாமல் ஒருவன் இருக்கமுடியாது என்பார்கள்..

வாராந்தரி ராணி, வாரமலர் தினமலர் வாசகர் கவிதை (!) படித்தால்
இதை நம்பவேண்டியிருக்கும்.

எல்லா திறன்களும் பெரும்பாலானோரால் ஓர் அடிப்படை அளவுக்கு
பயிற்சியால் வளர்த்துக்கொள்ளக்கூடியவையே..

கார் ஓட்ட பயிற்சி எடுப்பவரில் , நல்ல முயற்சியால் 90 சதத்துக்கும் மேல் ஓட்டுநராக முடியும்..

ஆங்கிலத்தில் Competent - (திறனர்)
இந்த முதல் நிலையை அடைய ஆர்வம், முயற்சி, முறைப்படுத்தப்பட்ட பயிற்சி... இவை இருந்தால் நிச்சயம் அடையலாம்...

Expert - வல்லுநர் என்னும் இரண்டாம் நிலையை அடைய
இன்னும் கொஞ்சம் உள்திறமை, இன்னும் பயிற்சி, சிதறா முனைப்பு - இவை வேண்டும்.

Master - மேதை என்னும் மூன்றாம் உச்ச நிலையை ஒரு சிலர் அடைவதைத்தான்
அறிவால் அறிய முடியவில்லை!
வல்லுநர் எப்போது மேதையாகிறார்?
மெல்லிய கோடாய் எந்த நிகழ்வு அவர்களை பிரித்து உயர்த்துகிறது?
அங்கே பயிற்சி, ஈடுபாடு தாண்டி, ஒரே சிந்தை,
மோனத்தவ மூழ்கலில் அந்த அதிசயம் நிகழ்கிறதா? பிறவிப்பெரும்பயனா?

ஒரு பாரதி, ஒரு இளையராஜா, ஒரு சுப்புலட்சுமி, ஒரு டாவின்சி..
இவர்களும் முதல் இரண்டு நிலைகளில் நீந்தி ,
பின் மூன்றாம் நிலைக்கு உயர்ந்துவிட்ட துருவ நட்சத்திரங்கள்..!


நண்பர்கள் அனைவரும் முதலில் முதல் நிலை நட்சத்திரங்களாய் ஆவோம்..

தாளா ஆர்வம்,
செயலில் முழுமை +
செய்ததில் வெற்றி +
நல்ல பின்னூட்டம்+
அன்பான செப்பனிடும் ஊக்கம்
+ பரவும் அங்கீகாரம்
இவை வாய்ப்பவர்கள்
நிச்சயம் இரண்டாம் நிலைக்கு உயர்வார்கள்..
(இக்கட்டுரை ஆசிரியர் ஆதவன், நண்பன், ராம்பால்,பூ போல சிலர்
ஏற்கனவே இங்கே இருக்கிறார்கள்).

பின்னூட்டம் - Feedback
என்ன அழகான தமிழ் ஈட்டுச்சொல்!

ஒரு செயலைச் செய்வதால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி, நிறைவே
எந்த செயலுக்கும் முக்கிய உந்து.

அதை மீண்டும் செய்ய, இன்னும் சிறப்பாய் செய்ய
முதலில் செய்ததின் வெற்றிச்சுவை அடுத்த உந்து.

வெற்றியை அறிவது பின்னூட்டங்கள் மூலம் மட்டுமே!

ஆக்கமான செப்பனிடும் விமர்சனங்கள் குறை குறைக்க உதவும்..

பின்னூட்டங்கள் இன்றி தொடர் கவிஞன் இல்லை!!



நெஞ்சில் ஓர் அக்கினிக்குஞ்சாய் கவிதை வேள்வி வளர்த்து
வெந்து தணிந்து மேதையாய் நம்மவர்களில் சிலர் வரலாம்..வரவேண்டும்...


உயரவைக்கும் ஏணிக்கு முதல் மூங்கில் எடுத்துவரும் நம் ஆதவனுக்கு
உளமார்ந்த வாழ்த்துகள்..


(பி.கு.: இந்த மூன்று நிலைகள் கவிதைக்கு மட்டுமல்ல-
நீங்கள் , நான் பார்த்துக்கொண்டிருக்கும் பணிக்கும்தான் மக்கா..)

அறிஞர்
28-03-2007, 12:30 AM
என்னை போன்றவர்களுக்கு உபயோகமான பதிவு... ஆதவன்...

இளசுவின் கருத்துக்களும் அருமை... முதல் மூங்கிலில் ஏறி.. ஏணியின் உச்சிக்கு அனைவரும் இணைந்து செல்வோம்.

ஆதவா
28-03-2007, 03:50 AM
இளசு அண்ணாவின் பதிலில் எத்தனை அடங்கியிருக்கிறது!!!!! இக்கட்டுரைக்கு முதல்பக்கம் எப்படி எழுதவேண்டும் என்பதை அண்ணனைப் பார்த்து அறிந்துகொள்ளலாம்....நான் தற்போது இளசு அவர்கள் சொன்னதுபோல முதல்நிலையிலிருந்து ஆரம்பிக்கிறேன்.......
இனி நான் எப்படி அடுத்த பாகத்தைத் தொடங்குவனோ தெரியவில்லை.... சற்று பயமும் இருக்கிறது.............


அறிஞர், இளசு, போன்ற பெருந்தகையர்கள் இருக்கையில் இன்னும் ஒளிரலாம்..............

poo
28-03-2007, 05:19 AM
இளசு அண்ணனின் தொடர்ந்த பின்னூட்டமே இந்த பாடத்தினை இன்னும் சிறப்பாக வழிநடத்தும். அண்ணனின் ஆய்வுக்கட்டுரை சம்பந்தமான பதிவை (அவரிடம் சொல்லாமலே..) பிரதியெடுத்து என் கல்லூரி முதல்வருக்கு கொடுத்திருக்கிறேன்.

ஆதவன் வாழ்த்துக்களோடு தொடருங்கள்... ஆதரவாய் நிற்க ஆயிரம் கரங்கள்.

விகடன்
28-03-2007, 05:44 AM
என்ன ஆதவா!
உங்களது தகவலைப்படித்தபின் "பூ இவ்வளவுதானா?" என்று சொல்லிக்கொண்டு கவிதை எழுத முற்பட்டேன், வெற்றியும் கண்டேன் ... கவிதை எழுதுவதில்...

படித்துப் பார்த்தபோது என்னாலேயே சகிக்க முடியவில்லையே.

ஓவியன்
28-03-2007, 05:53 AM
என்ன ஆதவா!
உங்களது தகவலைப்படித்தபின் "பூ இவ்வளவுதானா?" என்று சொல்லிக்கொண்டு கவிதை எழுத முற்பட்டேன், வெற்றியும் கண்டேன் ... கவிதை எழுதுவதில்...

படித்துப் பார்த்தபோது என்னாலேயே சகிக்க முடியவில்லையே.

அப்ப நீங்கள் எழுதினது கவிதையில்லை கழுதையாக்கும்

:icon_shout: :icon_shout:

pradeepkt
28-03-2007, 08:59 AM
அடங்கொக்காமக்கா...
ஆதவா, என்ன ஒரு உபயோகமான அனுபவ பூர்வமான பதிவு.
இதை எழுத வேண்டும் என்று தோன்றியதற்காகவே உனக்குத் தொப்பியைத் தூக்கி விட்டேன்.
வாழ்த்துகள். தொடருங்கள் கவிஞர்களே...

அமரன்
28-03-2007, 11:05 AM
இளசு அவர்களின் பதிவும் பயன் மிக்கதாக இருக்கின்றது. நன்றி.

march
28-03-2007, 11:49 AM
[QUOTE=benjaminv;185382]
எப்படி ராசா.. உன்னால மட்டும் இப்படி
எல்லாம் யோசிக்க முடியுது...
சும்மாவே மன்றத்தில் வலம் வரும்
மக்கள் காதல் கவிஞர்கள் ஆயிடுறாங்க..
இதில் நீங்க வேற இதுமாதிரி பதிவு
கொடுத்தால் ...
எனக்கு கஸ்டமாயிடும்..
(கவிதை போட்டி நடத்ததான்).

தொடரட்டும் உங்கள் பதிவுகள்...
வளரட்டும் தமிழ் பணி...)

இப்போது புரிகிறதா கவிதை எழுதுவதை விட
படிபவருக்குதான் கஸ்டம் அதிகம்
மன்னிக்கவும்

மார்ஷ்

ஆதவா
28-03-2007, 04:59 PM
நன்றி பூ!! ஓவியன், அலெக்ஸ், பிரதீப்.......

-*---------------------
ஜாவா!! நீங்கள் வெற்றியாளர்.... முயற்சி செய்திருக்கிறீர்கள்... தயங்காமல் அந்த கவிதையை இடுங்கள்... நிச்சயமாக நாங்கள் கேலி செய்ய மாட்டோம்... எங்களின் மனம் அப்படிப்பட்டதல்ல...............

மேலும் தொடர்ந்து பாடம் படியுங்கள்.. நிச்சயம் என்னால் உங்களை கவிஞனாக்க முடியும்...
-------------------

வேலைப் பளு காரணமாக ஒருங்கிணைப்பாக தொடரமுடியவில்லை..... விரைவில் தொடங்குகிறேன்.

விகடன்
28-03-2007, 05:04 PM
அப்ப நீங்கள் எழுதினது கவிதையில்லை கழுதையாக்கும்

:icon_shout: :icon_shout:

எழியாரை வலியார் கேட்க, வலியாரை தெய்வம் கேட்குமாம்.

என்னை நக்கலடிக்கிறீர் ஓவியரே, உமக்கு மேலும் உம்மை விட வல்லமை பொருந்தியவன் இருக்கத்தானே வேண்டும். அதுவரைக்கும் பொறுமை காக்கிறேன். தருணம் வரும்போது களத்தில் குதிப்பேன்.

விகடன்
28-03-2007, 05:08 PM
ஜாவா!! நீங்கள் வெற்றியாளர்.... முயற்சி செய்திருக்கிறீர்கள்... தயங்காமல் அந்த கவிதையை இடுங்கள்... நிச்சயமாக நாங்கள் கேலி செய்ய மாட்டோம்... எங்களின் மனம் அப்படிப்பட்டதல்ல...............

மேலும் தொடர்ந்து பாடம் படியுங்கள்.. நிச்சயம் என்னால் உங்களை கவிஞனாக்க முடியும்...
.

உங்களின் ஊக்கத்திற்கு ஆயிரம் நன்றிகள். கூடிய விரைவில் என் திருப்தியுடன் பதிக்கிறேன்.

பி.கு:- எனது ஆக்கத்தினை (கவிதை என்று சொல்லவே வெக்கமாக இருக்கிறது) படித்து உங்கள் திறமைகளை மழுங்கடிக்க விட்டுவிடாதீர்!

ஆதவா
28-03-2007, 05:24 PM
நண்பர் ஜாவா!!! எல்லோருமே எடுத்த எடுப்பிலே மாபெரும் கவிஞனாக நாமெல்லாம் பாரதியா? சும்மா வுடுங்கப்பா!!! எனக்கு தனிமடலிலாவது அனுப்புங்க.... என்னதான் முயன்றிருக்கிறீங்கன்னு பார்ப்போம்... எனக்கும் பாடம் தொடர்ந்து செல்ல உதவியா இருக்கும்ல...

ஷீ-நிசி
28-03-2007, 05:47 PM
நண்பர்களே!

நான் கவிதை எழுதும் முறை...

சில கவிதைகள் நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும்..
சில கற்பனையின் அடிப்படையில் இருக்கும்..

நிஜ சம்பவங்கள் எழுதுவது என்றால் சுனாமி, கும்பகோணத்தீ உதாரணங்கள்..

சுனாமி...

சுனாமியின் போது என்னென்ன நடந்தது என்பதை எண்ணிப்பார்த்துக்கொள்வேன்..

1. கடலோர மக்கள்.
2. காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள்
3. அங்கு விளையாடின சிறுவர்கள்
4. தெருவெங்கும் ஓடினது...

இப்படியான முக்கியமான கருப்பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்...

1. கடலோர மக்கள்..

இதை எப்படி கவிதை நடையில் அமைக்கலாம்..

கடலோர மக்கள் நம்பியது கடலை...

சரி!

கடலோர மக்களுக்கு
வாழ்வை அளித்தது கடல்..

இன்றைக்கு என்ன செய்தது.. சுனாமி வந்து உறவுகளை பலர் இழந்திருக்கிறார்கள்..

கடலோர மக்களின் உயிரை பலிவாங்கியது..

ஒரு பகுதி கிடைத்துவிட்டது கவிதைக்கு..

கடலோர மக்களுக்கு
வாழ்வை அளித்தது கடல்
கடலோர மக்களின் உயிரை பலிவாங்கியது..

இது படித்துப் பார்த்தால் கவிதை நடையில் இல்லை.. சரி.. கொஞ்சம் வார்த்தைகளை அலசுவோம்...

கடலோர மக்களுக்கு வாழ்வை அளித்தது, முதல் வரியில் எங்கெல்லாம் எதுகைகள் (எதுகை என்றால், அம்மா, சும்மா, கிரிக்கெட்டு, தற்கெட்டு, இப்படி அமையும் வார்த்தைகள்! கவிதைக்கு இதானே அழகு... டி,ஆர் இப்படி அமைப்பதில் கில்லாடி) அமையும் என்று பாருங்கள்..

கடலோர, உடலோர.. வாழ்வை, வால்வை.. அளித்தது, அழித்தது..

இந்த மூன்றில் அளித்தது, அழித்தது.. மிக பொருந்துகிறது...
முதலில் கடல் கொடுத்தது.. பின் எடுத்துக்கொண்டது என்று சொல்லாடல் அமைக்க அளித்தது, அழித்தது.. எனபதை பயன்படுத்திக்கொள்ளலாம்..

கடலோர மக்களுக்கு
வாழ்வை அளித்தது;
கடலோர மக்களின்
வாழ்வையே அழித்தது!

இதை இன்னும் மெருகூட்டி, காலங்களை சேர்த்துக்கொள்ளலாம்..

இதுவரை
கடலோர மக்களுக்கு
வாழ்வை அளித்தது;
இன்று
கடலோர மக்களின்
வாழ்வையே அழித்தது!

மிகப்பெரிய பத்தி ஆகிவிட்டது.. நான்கு அடி வரி இருந்தால் படிப்பவருக்கு புரிந்துகொள்ள இலகுவாயிருக்கும்.. ஆறடியிலும் அமைக்கலாம் தேவைப்பட்டால்...

இதுவரை
கடலோர மக்களுக்கு
வாழ்வை அளித்தது;

இன்று
கடலோர மக்களின்
வாழ்வையே அழித்தது!

இப்படி மூன்று மூன்றாய் பிரித்துக்கொள்ளலாம்..

இதை இன்னும் கொஞ்சம் வேறுவிதமாய் நீங்கள் கடலைப்பார்த்து கேட்பது போலவும் மாற்றிக்கொள்ளலாம்..

இதுவரை
கடலோர மக்களுக்கு
வாழ்வை அளித்தாய்;

இன்று
கடலோர மக்களின்
வாழ்வையே அழித்தாயே!

இப்படி...

இந்த பாடத்தை தொடருகிறேன்.. உங்கள் எண்ணங்களைக் கூறுங்கள்.. புரியும்படி இருந்ததா இல்லையா என்று..

ஆதவா
28-03-2007, 05:52 PM
கலக்கல் கலக்கல்...... ஆஹா!!! நானும் நிறைய தெரிந்துகொள்ளலாம் போலத் தெரிகிறதே!!!.... எப்படி கருத்தை பிரித்தறியவேண்டும் என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள்................... வொண்டர்,..

நண்பரே! என்னோடு இணைந்ததற்கு மிகவும் நன்றி..... தொடரலாம் நாம் பல பாடங்கள்... (அட இப்படியாவது ஆசிரியர் ஆகலாம் பாருங்க..)

ஷீ-நிசி
28-03-2007, 05:55 PM
நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக தொடருகிறேன் ஆதவா.. ஆனால் இந்த திரியை அணைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. உம்மளவு ஒரு கவிஞரோ/கவிஞையோ உருவாகும்வரை...

மன்மதன்
28-03-2007, 06:15 PM
என்னைப் போன்றவர்களுக்கு இந்த கவிட்டுரை உதவியாக இருக்கும் .. தொடர்ந்து எழுதுங்க ஆதவா..

அறிஞர்
28-03-2007, 07:09 PM
ஷீ-நிசியும் இணைந்து கொடுப்பதில் மகிழ்ச்சி...

உருவாக போகும் புதுக் கவிஞர்களுக்கு முன்னோடிகள் இங்கு கருத்துக்களை கொடுக்கிறார்கள்...

leomohan
28-03-2007, 07:36 PM
ஆதவா ஷீயின் பாடங்கள் அற்புதம். ஆனால் கவிதை எழுதுவது ஒரு spontaneous activity அல்லவா. திடீரென்று பீறிக் கொண்டு வரும் கவிதை எண்ணங்களை எவ்வாறு வரையறைக்குள் கொண்டு எழுதுவது. ஒருவேளை மனதில் வந்ததை எழுதிய பிறகு அதை மெருகேற்ற வேண்டுமோ?

ஆதவா
28-03-2007, 07:53 PM
ஆதவா ஷீயின் பாடங்கள் அற்புதம். ஆனால் கவிதை எழுதுவது ஒரு spontaneous activity அல்லவா. திடீரென்று பீறிக் கொண்டு வரும் கவிதை எண்ணங்களை எவ்வாறு வரையறைக்குள் கொண்டு எழுதுவது. ஒருவேளை மனதில் வந்ததை எழுதிய பிறகு அதை மெருகேற்ற வேண்டுமோ?

நன்றி மோகன்
திடீரென பீறிக்கொண்டு வருமாயினும் அதை வரையறைக்குள் அடுக்க வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்................ பீறிட்ட எண்ணங்களை சுருக்கமாக அதேசமயம் புரியும்படியும் அடக்கலாம்... மற்றபடி மெருகேற்ற வேண்டியது பீறிட்டு வரும் கவிக்கு அல்ல.. மற்றைய கவிதைகளுக்கு அம்மாதிரி செய்யலாம்.. இது என் அனுபவம் மட்டுமே! எனக்கு பீறிட்டு வந்தால் எதுகையும் மோனையும் இல்லாமல் எழுத முடியாது. நான் பழகியதே மரபுக் கவிதையால்தான். ஆனால் ஒன்று மட்டும்..............
கவிதையை செதுக்க வேண்டும்......... தேவையானதல்லாதவற்றை நீக்கிவிட்டு தேவையானவற்றைப் போட்டு................

ஷீ-நிசி
29-03-2007, 03:37 AM
என்னைப்பொருத்தவரை பீறிட்டு அதாவது உணர்ச்சிபெருக்கில் வரும் கவிதைகள் மிக எளிதில் எதுகை மோனைக்குள் அடங்கும்...

இளசு
29-03-2007, 06:23 AM
ஷீ-நிசியின் அருமையான பங்களிப்பும்
மோகனின் தூண்டுகோல் கேள்வியை ஒட்டிய அலசலும்...
இந்தக்கட்டுரையை செழுமைப்படுத்துகின்றன..

பாராட்டுகள்.. தொடருங்கள்..


(முடிவில் எல்லா மணிகளையும் கோர்த்து ( தேவையற்றதைக் கத்தரித்து) மாலையாக்குவது
ஆதவனின் கைவண்ணத்தில் அமைய வேண்டுகோள்..)

அமரன்
29-03-2007, 06:34 AM
ஷீநிஷியின் பாடமும் அருமை.
காதல்க் கவிஞர் ஓவியாக்கா எப்படி எழுதுகின்றார் என்பதை சொல்ல மாட்டாரா?

ஆதவா
29-03-2007, 05:27 PM
நன்றி நண்பர்களே! இனி அடுத்து..

முன்பு எழுதியது முன்னுரையாகக் கொண்டால் இனி எழுதப்போகிற கருத்துக்கள் யாவும் விளக்கவுரையாகக் கொள்ளலாம்.

முதல் நிலை :

ஓவியனுக்கும் காவியனுக்கும் முதலில் தேவை

கரு
நிகழ்வுகளை அப்பட்டமாக படம்பிடிக்கும் தன்மை
கற்பனை
திறமைநமக்குள் இது எதுவுமே இல்லையென்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் வளர்த்திக்கொள்ள வேண்டும். நம் கண்கள் தான் எல்லாவற்றுக்குமே ஆதாரம் ; ஆகாரம்.
நாம் கண்களை ஒரு பதிவகமாக வைத்துக்கொள்ளவேண்டும்.. அதாவது நாம் என்ன காண்கிறோமோ அதை மனதில் போட்டு அசைத்துக்கொண்டே இருக்கவேண்டும்..
அதுமட்டும் போதாது. காண்பவற்றிற்கு ஏற்ப சம்பந்தமான பொருள்களையும் மனதில் கொண்டு வரவேண்டும்....

உதாரணத்திற்கு:
மழையை காண்கிறோம்... உடனே நம் மனதில் நினைப்பவை என்னவாக இருக்கவேண்டுமென்றால்,

மேகம், மின்னல், இடி, தூறல், சாரல், துளி, தண்ணீர், குடை, சளி, வானம், மண், மண்வாசனை, சேறு, இருமல், இன்னும் பல...

இம்மாதிரி நாம் நினைப்பது எப்படி என்றால், ஒன்றிற்கொன்று தொடர்பு வைத்துக்கொண்டே நினைத்தால் தானாகவே வந்துவிடும்.
உதாரணத்திற்கு (வேறு தருகிறேன்)

நெருப்பு என்று வைத்துக்கொள்வோம். உடனே தொடர்புடைய வார்த்தை

நெருப்பை அணைக்க நீர்;
நெருப்பை பற்றவைக்க தீக்குச்சி
நெருப்பு பற்றினால் எரியும்
நெருப்பு எரிந்தால் சாம்பல்
நெருப்புக்கு இரும்பு இரையாகாது..
இப்படி பல.....

இதில் இன்னொன்று விசேசம் என்னவென்றால் மேற்கண்ட நீர், தீக்குச்சி, சாம்பல். இரும்பு போன்றவைகளால் இன்னும் பல வார்த்தைகள் சிக்கும்.........
சரி.. இது இன்னும் அடுத்த பாகத்தில் விரிவாகக் காணலாம்..

கவிதை புனைய நாம் இயற்கையை ரசிக்கவேண்டும்.. இயற்கையிலிருந்து கிடைக்கும் கவிதைகள் பலப்பல.... மேலே சொன்ன மழை , நெருப்பு போன்றவைகளும் இயற்கையே!! நாம் உவமை அல்லது உருவகங்கள் சொல்ல கண்டிப்பாக ஒப்பிலா பொருள் தேவை.. அது பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே அமையவேண்டும்.

நாம் கண்களால் காணுபவை யாவும் இயற்கையே! அதனால் கவிதையில் இயற்கைத்தனத்தை மிகுதியாக இடுவதில் தவறில்லை...
கற்பனைகள் வளர இதுவொன்றே மிக அருமையான களம்.

நமக்கு வார்த்தைகள் எப்படி பிடிப்படுகின்றது என்பதைப் பார்த்தோம்.. ஒரு கவிதைக்கு கரு கிடைத்ததும் அதை அலங்காரப்படுத்த வார்த்தைகளால் மட்டுமே முடியும்.. வார்த்தைகளை வலிமைப் படுத்த நாம் பல கவிதைகள் இயற்றி , கருவை சொன்ன விதத்தைச் சுருக்க வேண்டும்... அது இரண்டாம் நிலை.. அது பின்பு பார்க்கலாம்.

சரி தற்போது வரை பார்த்தவரை நீங்கள் செய்யவேண்டியது இதுதான்..
நீங்கள் கண்களை மூடுகிறீர்கள். ஏதாவது ஒரு இயற்கையைச் சார்ந்த பொருள்களை நினைக்கிறீர்கள். அதை அப்படியே எழுதுகிறீர்கள்...

இனி அதைவைத்து என்ன செய்யலாம்.?

நான் சொல்லும் இந்த பாடங்கள் யாவும் முதலில் காதலை மையமாக வைத்தே செல்லும்.. அதுதான் மிகவும் எளிது. சமூகக் கருத்துள்ள கவிதைகளுக்கு சற்று வலிமையான வார்த்தைகள் தேவை...

இயற்கை பற்றிய உங்கள் நினைப்பு + காதல் + பொய் = அழகிய கவிதை...

உதாரணத்திற்கு :

மேகத்தைவிடவும் மென்மை
உன் கூந்தல்
மின்னலை விடவும் கூர்மை
உன் கண்கள்..

இதில் கவனிக்கவேண்டிய சில விஷயங்கள் மென்மை, கூர்மை.... குணங்களைப் பற்றி நாம் சொல்ல இருக்கிறோம்........... அல்லது இப்படி க்கூட எழுதலாம்.

மேகம் போன்ற கூந்தல்
மின்னல் போன்ற கண்கள்

அது எப்படி மேகம் போன்ற கூந்தல்? மேகத்திற்கும் கூந்தலுக்கு என்ன சம்பந்தம் என்று கேள்விகள் எழலாம்... அங்கேதான் பொய் விளையாடுகிறது...
என்ன என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்...

தொடரும்..

leomohan
29-03-2007, 06:00 PM
நல்ல திரி. சுவராஸ்யமாக இருந்தது.

இளசு
29-03-2007, 08:08 PM
அடுத்த பாகத்தை(யும்) மிக வலுவாகக் கொடுத்த ஆதவனுக்குப் பாராட்டுகள்.

தொடர்புபடுத்தல், சங்கிலியாய் நினைவுப் பெட்டகத்தில் இருந்து சொற்கோர்வைகளை அள்ளல்,
இயற்கை அன்னையிடமிருந்து சலிக்காமல் உவமைகளை இரவல் வாங்கல் என
கவிதையை வடித்து, அலங்கரிப்பதற்கான அடிப்படைக் கூறுகளை சொன்ன விதம் பாந்தம்!

காதலிக்காமல் கூட இருந்துவிடுங்கள்..
காதல் கவிதை எழுதாமல் இருக்காதீர்கள்..

ஆதவன் பார்வையால் வெளிச்சப்பார்வை பரவட்டும்..

பாராட்டுகள் ஆதவா.. தொடர்க இளவலே!

அறிஞர்
29-03-2007, 08:12 PM
அருமை ஆதவா.. நெருப்பை வைத்து எப்படி வார்த்தை அமைக்கலாம்..
மேகம், மின்னல்.. என உதாரணங்களுடம் பாடம் பிரமாதம்...

இன்னும் நிறைய எழுதி.. புத்தகமாக தொகுத்து வெளியிடலாம்.

ஷீ-நிசி
30-03-2007, 04:01 AM
இரண்டாம் பகுதியும் நன்றாக செல்கிறது ஆதவரே!

அமரன்
30-03-2007, 08:19 AM
கலக்கல் ஆதவா

திராவிடன்
30-03-2007, 09:57 PM
மிக்க அருமையான ஒரு திரி.அனைவரையும் கவிஞர்களாக மாற்றும் என்னமோ.வளர்க தங்களின் முயற்சி,

ஓவியா
30-03-2007, 10:52 PM
எப்படி ராசா.. உன்னால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது...
சும்மாவே மன்றத்தில் வலம் வரும் மக்கள் காதல் கவிஞர்கள் ஆயிடுறாங்க... :violent-smiley-010: :violent-smiley-010: :traurig001: :traurig001: :traurig001: :traurig001:





இளசு, கவிதா, நண்பன், ப்ரியன், பிரியன் , பூ, பாரதி, ஷீ, ஓவி என்று எல்லோரும் கண்டிபாக தங்கள் கருத்துகளை பதிக்க வேண்டிகொள்கிறேன்.

பெஞ்சு,
நேரம் இரூப்பின் அவசியம் செய்வேன் குருவே!!!
மன்னிக்கவும். தற்ப்பொழுது கொஞ்சம் பிசி.

ஓவியா
30-03-2007, 11:09 PM
மல்லி மன்றத்தை மாமல்லி மன்றமாக இந்த ஒரு சிறந்த பதிவு போதும். (தொடர்ந்தால் ஹி ஹி ஹி)


ஆதவாவின் பாடம் கண்டு அசந்துப் போனேன். ஆதாவின் கவிதை நுணுக்கம் அப்பாடா....சபாஷ் ஆதவா :aktion033:

இளசு வா கொ.... என்பது போல் சூப்பரான பதிவு. பாராட்டுக்கள் தல.:aktion033:

ஷி-நிஷியின் பதிவும் சும்மா தூள்தான். எப்படிதான் .....பலே ஷி :aktion033:

பாரதியண்ணா, பூ, லெனின், மதுரகன், டாக்டர் ஆனந்த், நரேன், மோகன், பெஞ்சமீனின் பதிவுகளை அடியேன் மிகவும் எதிர்ப்பார்க்கிறேன்.
(எப்படி கவிதை எழுதுவது என்று)


பாராட்டுக்கள் ஆதவரே.:icon_give_rose: :icon_give_rose: :icon_give_rose: :icon_give_rose:

ஓவியா
30-03-2007, 11:12 PM
ஷீநிஷியின் பாடமும் அருமை.
காதல்க் கவிஞர் ஓவியாக்கா எப்படி எழுதுகின்றார் என்பதை சொல்ல மாட்டாரா?

நன்றி.

அவசியம் எழுதுகிறேன் நரேன். கொஞ்சம் அவகாசம் தாருங்கள்.

ஆதவா
31-03-2007, 10:49 AM
நன்றி நண்பர்களே!

ஏதோ எழுதவேண்டுமே என்று எழுதியது.... உங்களின் பதில்களைக் கண்டு மீண்டும் மீண்டும் எழுதத் தோணுகிறது...
சரி.. அடுத்த பகுதி...

இந்த பகுதியில் நாம் காண இருப்பது..

குணங்கள்
பொய்ஒரு பொருளின் குணத்தினால் நாம் ஒப்பிடும்போது கவிதையின் கனமும் அழகும் கூடும். அதை பொய் கலந்து மட்டுமே
சொல்ல முடியும்.. இனி இதைப்பற்றி காண்போம்

குணங்கள்

முந்தைய பதிவில் நாம் இன்ன பொருளை நினைக்கவேண்டும் என்பது பற்றி அறிந்தோம். தற்போது அதை எப்படி
கோர்ப்பது என்பது பற்றி தெளிவாக காணலாம்..
உதாரணத்தோடு செல்வோம்...

நம் கண்களின் வழியே காண இருப்பது ஒரு மரம்.

மரத்தை நினைக்கையில் நமக்கு உடனே நினைவுக்கு வருவது வேர், மரம், கிளை, இலை, பூ, பூவின் உதிர்வு அல்லது
இலையின் உதிர்வு, காற்றால் மரம் அசைவது போன்றவைகள்..
இதன் குணம் என்னென்ன என்பதையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.. கவிதையில் முக்கியமாக நாம் எடுத்துக்கொள்ள
இருப்பது ஒரு பொருளின் குணம்.... மேகம் மென்மையாக இருக்கிறது என்பதால் அதை " மேகத்தைப் போல கூந்தல் "
என்று கவிதை சொல்லுகிறோம். பொருத்தமில்லாமல் எழுதினால் அதில் அர்த்தமில்லை அல்லவா? உதாரணத்திற்கு "
இடியைப் போல கூந்தல் "

இதுபோல மரத்தின் குணம் பற்றி அறிவது...

உறுதியானது வேர்
நிலையானது மரம்
பொருளுக்கேற்ப கிளையின் பொருத்தம் மாறும்..
மென்மையானது பூ
பூவின்உதிர்வு என்பது ஒரு இழப்பைக் குறிக்கிறது.

இம்மாதிரி பல.

" வேர் போல உறுதியானது நம் காதல் "
" மரம் போல நிலையாக நிற்கிறாய் நீ "
" உன் இதயம் பூ போல மென்மையானது "
" என்னிடமிருந்து ஒரு பூவின் உதிரலாய் சென்றுவிட்டாய் "
" பூவின் உதிர்தல் கண்டு மரம் அழுகிறது. "

எப்படிங்க இந்த மாதிரி யோசிக்கிறது என்று கேட்பது தெரிகிறது.,,,
கடைசி பாராவை படியுங்கள்..

நாம் காண்பவற்றின் குணங்களால் மட்டுமே நாம் உவமைகளைப் பொருத்த முடியும். சிலவற்றிற்கு விதிவிலக்கும் உண்டு,,,

பொய்:

நம் அன்றாட வார்த்தைகள் பல பொய்யாகவே சொல்லிவருகிறோம்.. இங்கே கற்பனை கலந்த பொய்களை அள்ளி
வீசவேண்டும்.. நம் பொய்கள் எல்லாமே நிஜமாகத் தோன்றுவதுதான் கவிதையின் சிறப்பு.. எந்த ஒரு இடத்திலும் இதை
பயன்படுத்தலாம். நாம் எழுதும் பொய்கள் பொருத்தமாக இருந்தாலே போதுமானது..........
" நீ நிலவைப் போல அழகு " என்றால் அது பொய்தானே! :D உண்மையில் நிலவுக்கு என்று அழகு ஏது? இம்மாதிரி சில
கற்பனைகளை கலந்து விட்டால் பொய் நிஜமாகிவிடும்.

" மான்களின் கண்கள் உனக்கு " மானின் கண்களை நாம் அவ்வளவாக கண்டிருக்க மாட்டோம்.. இருப்பினும் பொய்
இங்கே விளையாடுவது பாருங்கள்..
" தேன் போன்ற இனிமையான பற்கள்" தேனுக்கும் பற்களுக்கும் என்ன சம்பந்தம்? சும்மா போட்டு விடுவதுதான்.... பற்கள்
உங்களுக்கு பிடிக்கவில்லையா? சொற்கள் என்று மாற்றிவிடலாம்.... :D

காதல் எந்த உவமைக்கும் பொருந்தும். சரி இப்போது நான் உதாரணம் கொடுக்கப் போவதில்லை. நீங்களாகவே
வார்த்தைகளை வைத்து கவிதை அமையுங்கள்..

நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.........

காதலியை வர்ணிக்கிறீர்கள்... நீங்கள் கண்ட ஒரு இயற்கைப் பொருளை வைத்து................... அதன் குணத்தை வைத்து,,,
(கவிதை கற்கும் நண்பர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.)

------------------------------------------------------------------------------------

ஒரு பொருளைக் கண்டால் அதைப் பற்றி நன்கு சிந்திப்பது ஒன்றே கவிதையை அழகாக எழுதும் வழி.. ஒரு இலையை
காண்கிறீர்கள்...

அது மெல்லியதாக இருக்கிறது..
பச்சையாக இருக்கிறது
அதில் இலையின் நரம்புகள் இருக்கிறது
காம்பு இருக்கிறது
சற்றே இதய வடிவில் இருக்கிறது. அல்லது நீளமான வடிவில் இருக்கிறது
காகிதம் போல கிழிந்துவிடும்
இலையின் உதிர்வுக்குப் பின் அதன் காலம் குறைவு
இலைதான் பின் சருகாக மாறும்
சருகாக மாறியபின் பொடிப்பொடியாக போய்விடும்

இம்மாதிரி ஒவ்வொரு பொருளையும் ஆராய்ச்சி செய்யவேண்டும்................ இது நிச்சயம் சாத்தியமே!! இதை எப்படி
ஒப்பிடுவது என்பது பிறகுதான்.. முதலில் நமக்கு வார்த்தைகள் அமையவேண்டும். கருவுக்கு சம்பந்தமே
இல்லையென்றாலும் அந்த வார்தைகளை நாம் சம்பந்தப்படுத்திவிடலாம்.............

நினையுங்கள்.. கவிதை எழுதுங்கள்...

சில கவிதைகள் உங்களிடமிருந்து வந்தபின் அடுத்த பாகத்தைத் தொடருவேன்.....

மதுரகன்
31-03-2007, 06:39 PM
மீண்டும் பலநாட்களின் பின் கவிதைப்பகுதியில் என் பிரவேசம்...

என்னுடைய கருத்துக்கள்.... அனுபவங்கள்....

நான் முதல் கவிதை எழுதியதெல்லாம் எப்பொதென்று தெரியாது

ஆனாலும் தொடர்ச்சியாக கவிதை எழுத ஆரம்பித்தது
அதாவது என் கவிதை வாழ்வின் ஆரம்பம் ஆவணி 2004 இன்னமும் 3 வருடங்கள் கூட நிறைவடைய வில்லை ஆனால் ஏதோ குறிப்பிடத்தக்க அளவில் எழுத முடிகின்றது இது பற்றி...

நணபர்களே நீங்கள் பேசுகின்ற கருத்துக்கள் உங்கள் ஆழ்மனங்களிலிருந்து பிறக்கின்றன..
உங்கள் ஆழ்மனத்தின் மொழி அழகானது...
இலக்கணம் பூண்டதல்ல கட்டுப்பாடுகள் அற்றது....
அதாவது ஒரு விடயம் பற்றிய உங்கள் சிந்தனை கவதையாகவே ஒவ்வொருவர் மனதிலும் உதிக்கின்றது..
இனியாவது ஒவ்வொருவரும் உணருங்கள் ஏதாவது ஒன்று பற்றி எம் மனம் எவ்வாறு சிந்திக்கின்றது வார்த்தைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது பற்றி...

மனிதர்கள் தாம் பேசும் போது கவிதைகளை உரைகளாக்குகின்றனர் இது ஒவ்வொருவரும் அறியாது எம்முள் நடப்பது. எம்முள் பிறக்கும் கவிதைகளை அப்படியே சொல்பவன் கவிஞன். வார்த்தைகளாக்குபவன் தன்னால் எழுத முடியாதென்கிறான்..

எனவே ஒருவிடயம் பற்றி ஈடுபாட்டுடன் சிந்திக்கும்போது உங்கள் மனதில் பிறப்பும் வார்த்தைகளை எழுதிப்பாருங்கள் கவிதையாக பிறந்திருக்கும்...

ஒன்று கவனியுங்கள் கவிதை எழுதுகிறேன் பேர்வழி என்று உட்கார்ந்து எழுதும் கவதைகளை விட அவ்வப்போது உங்கள் மனதை உந்திக்கொண்டு புறப்படும் வார்த்தைகளே உன்னதமானவை...

புதுக்கவிதையின் பிறப்பே எண்ணங்களில் தான் ஆரம்பிக்கின்றது...

உங்கள் ஒவ்வொரு செயற்பாட்டிலும் கூடுபாடு அவசியம் கூடுபாடின்றி எழுதினால் நிச்சயம் ஓர் போலித்தனம் காணப்படும்...

"எங்களுடைய மூடி வைக்கப்பட்ட ஒவ்வொரு
மெளனங்களும் வெடித்து கவிதைகள் பிரசவிக்கப்படுகின்றன"

மதுரகன்

எனது அனுபங்களும் தொடரும்....

ஓவியன்
01-04-2007, 03:21 AM
எழியாரை வலியார் கேட்க, வலியாரை தெய்வம் கேட்குமாம்.

என்னை நக்கலடிக்கிறீர் ஓவியரே, உமக்கு மேலும் உம்மை விட வல்லமை பொருந்தியவன் இருக்கத்தானே வேண்டும். அதுவரைக்கும் பொறுமை காக்கிறேன். தருணம் வரும்போது களத்தில் குதிப்பேன்.

என்ன யாவா!

ஒரு பேச்சுக்குச் சொன்னா இப்படி கோவிச்சுக்கிறீங்களே!

:music-smiley-008:

அரசன்
02-04-2007, 07:44 PM
ஆதவா அவர்களே! கவிதை அனுப்பும் வழிமுறையை எனக்கு கூறவும்.

ஆதவா
02-04-2007, 07:57 PM
ஆதவா அவர்களே! கவிதை அனுப்பும் வழிமுறையை எனக்கு கூறவும்.

வணக்கம் மூர்த்தி! உங்களை நீங்கள் கீழ் கண்ட இடத்தில் அறிமுகம் செய்துகொள்ளலாமே!

http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38

அப்படியே விதிமுறைகளையும் படியுங்களேன்...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5133
---------------------------------------------------

இப்போது எப்படி எனக்கு பதில் எழுதினீர்களோ அதேமாதிரிதான்.... உங்கள் கவிதையை தயங்காமல் அனுப்புங்கள்.. தவறில்லை.....

நன்றி...

இளசு
02-04-2007, 09:02 PM
கற்றலில் நான்கு நிலைகள் உண்டு.


முதல் நிலை:

என்ன அறியாதிருக்கிறோம் என்பதையே அறியாதிருப்பது.

கருவில் இருக்கும் குழந்தை நிலை..

எனக்கு ஆஸ்திரேலியப்பழங்குடியினர் என்று ஒரு இனம் இருப்பதே தெரியாது என வைத்துக்கொள்ளலாம்.
பின் அவர்கள் என்ன மொழி பேசுவார்கள் எனத் தெரியுமா??

என்ன எனக்குத் தெரியாது என்பதையே தெரியா நிலை இது.

உலகில் 99 சதத்துக்கும் மேலான அறிவுப்புதையல் இந்த கட்டத்துக்குள் அடங்கும்.



இரண்டாம் நிலை:

என்னென்ன எனக்குத் தெரியவில்லை என தெரிந்துகொள்ளும் நிலை..

விழிகளும், செவிகளும் மனதுக்குச் சாளரங்களாகி செய்திகள் அனுப்பும் நிலை -
அடடா..இதெல்லாம் எனக்குத் தெரியவில்லையே என ஏங்கும் நிலை..

கற்கத்தொடங்கும் மாணவன் ஆசானைப் பார்த்து வியக்கும் நிலை..

புதிதாய் வயலின் வகுப்பில் சேர்ந்தால், வித்வானான குருவைப்பார்த்து ,
அவர் விரல் விளையாட்டுகளைப் பார்த்து வருமே
அந்த அழகான மலைப்பு நிலை..

(கவிதை எழுதலாம் என எண்ணம் வந்து, ஆதவா, பூ, ராம்பால், நண்பன், ஷீ-நிசி, லெனின், ஓவியா...............................
இவர்கள் கவிதைகளை வாசிக்கும் வாசக-ரசிகனுக்கு வரும் நிலை..)


மூன்றாம் நிலை:

அறிவு விழித்திருந்து, அணு அணுவாய் வழிநடத்த புதிய செயலை -ஆற்றலை நாம் புதிதாய்க் கற்று -கைகொள்ளும் நிலை..

பக்கத்தில் சொல்லித்தருபவர் இருக்க, கொஞ்சம் பிரேக் இளக்கி, கொஞ்சம் வேகம் முடுக்கி,
அழுந்தப்பற்றிய கையால் திசை திருப்பி கார் பழகும் அந்த நிலை..

ஏறும் மூங்கில் ஏணியின் ஒவ்வொரு கணுவும் -
கண் பார்க்க, கால் சரியாய்ப் பதிய, கை பிடித்துக்கொள்ள செயல்படும் கற்றல் நிலை..

நடைவண்டி விட்டு முதல் முதலாய் தளர்நடை போடும் , பெற்றவரையும் மற்றவரையும்
ஓரப்பார்வையால் பார்த்து அங்கீகாரம் வேண்டும் பாப்பா நிலை..


நான்காம் நிலை:

இது தன்னை மறந்து, (பீறிட்டு ) சிக்கலான செயல்களையும் அநாயசமாய் சிறப்பாய் செய்துவிட்டு
போய்க்கொண்டே இருக்கும் நிலை..

நரேன் கார்த்திக் காரோட்டும் நிலை..

பாலா பாடும் நிலை..

கார்ல் லூயிஸ் ஓடும் நிலை..

திறனர் நிலை...


------------------------------------------

நான்காம் நிலையில் உள்ளவர் ஆசான் பொறுப்பேற்கும்போது
அவர் நான்காம் நிலையில் இருந்து, மூன்றாம் நிலைக்கு
மிகவும் முயன்று, மனக்குவிப்பால் மீள்நடை நடந்து வந்தால்மட்டுமே..

இரண்டாம் நிலையில் வரும் மாணவனுக்குப் பாடம் சொல்ல முடியும்..

எல்லா திறனரும் நல்ல ஆசிரியர் ஆகிவிட முடியாது.
அவர்களால் செய்ய முடியும்...
(ஒரு மின்விளக்காய் அவர்கள் ஒளிவீச முடியும்..

ஆனால் இன்னொரு தீபத்தை ஏற்ற முடியுமா?)

ஆதவன் நமக்காக ஒரு நிலை இறங்கி வந்து இங்கே சொன்ன பாடங்கள்.....

ஆசிரிய இலக்கண வேதங்கள்...

ஆதவனால் இது முடியும்..
ஏனெனில் ஆதவன் ஒரு தீபம்..

paarthiban
03-04-2007, 12:00 PM
அபிமான ஆதவா அவர்களுக்கும் என் அருமை இளசு அண்ணா அவர்களுக்கும் மிக்க நன்றி. நானும் விரைவில் உங்களால் கவிஞன் ஆயிடுவேன், இப்ப இரண்டாவது நிலையில் இருக்கேன் அண்ணா

ஆதவா
03-04-2007, 12:57 PM
இளசு அண்ணாவின் பதிவை நேற்றே பதிக்கும் போதே கண்டுவிட்டேன். இருந்தாலும் நான் கிட்டத்தட்ட நாலைந்து முறை படித்துப் பார்த்தேன்..... உண்மையில் என்னுள் இதயம் சிலிர்த்தது.. இளசு அண்ணாவின் பாசமழையில் சலதோசமின்றி நனைகிறேன். என்ன கைமாறு செய்யமுடியும்!

நிலைப்பாடுகளை சரியான முறையில் அழகாய் விளக்கி எழுதி ஆச்சரியப்படுத்த இளசு அண்ணாவால் மட்டுமே முடியும்... எனக்குள் பல தெளிவுகள் உண்டாகி இருக்கிறது. அதேசமயம் பயமும்..... நான் எதிர்பார்க்கும் அளவிற்கு கொடுப்பேனா என்று பயம்... இருந்தாலும் நம்பிக்கை இருக்கிறது இளசு என்ற செந்நிற வர்ண வடிவில்..

கூடவே ஒட்டியாக மாற்றப்பட்டிருப்பது இன்னும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்...அதற்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லக் கடமமப்படுகிறேன்.
நண்பர்கள் ஒத்துழைக்கும் பஷத்தில் நாம் சிறந்த கவிஞர்கள் ஆவோம்..... நம்பிக்கை என்றுமே வாழ்க்கையில் மூன்றாம் கை...

மதுரகன் அனுபவங்களும் அருமையாக இருக்கிறது/ இன்னும் தொடருங்கள் நண்பரே! நாம் மட்டும் எழுதினால் போதுமா என்ன? மற்றவர்களின் வார்த்தைப் பிரயோகம் பார்த்தபின்னரே நான் எழுதும் கவிதைகளுக்கெல்லாம் அர்த்தமிருக்கும்.........

பார்த்திபன் அவர்களே! முன்னம் எழுதிய கவிதைகள் கண்டேன்... எமக்குத் தெரிந்த விஷயங்களை எழுதுகிறே இங்கே... உமக்கு அதில் எடுத்துக்கொள்ள விடயமிருந்தால் நிச்சயம் நான் பெருமையும் பயனும் கொள்வேன்... விரைவில் உங்கள் கவிதையை எதிர்பார்க்கிறேன்...
---------------------------------------------------------------
நண்பர்களே! இதுவரை நாங்கள் சொன்ன விஷயங்களை மனதில் கொண்டு கவிதை எழுதி இருப்பின் தயவு செய்து பதியுங்கள்... நாங்கள் செல்லும் பாதை சரிதானா என்று சோதித்துக்கொள்ள உதவும்... தயக்கம் மட்டும் வேண்டாம்... இங்கே கேலியாக யாரும் பார்க்க மாட்டார்கள். பென்சிலின் முனை முதலில் மரத்தூள் மூடியவாறு பட்டையாக இருக்கும்... கூர்படுத்த படுத்த முனை எவ்வளவு அழகாய் தெரியும் பார்த்தீர்களா? அதுபோலத்தான்.... ஒருவேளை இங்கே பதிக்க விருப்பமில்ல்லை என்றால் எங்களுக்கு தனிமடலாவது அனுப்புங்கள்...
உங்கள் எண்ணம் மட்டும்தான்... அதில் என்ன தவறு என்ன சரி என்பதை நாங்கள் சொல்லுவோம்...... அவ்வளவுதான்....

paarthiban
04-04-2007, 11:31 AM
பார்த்திபன் அவர்களே! முன்னம் எழுதிய கவிதைகள் கண்டேன்... எமக்குத் தெரிந்த விஷயங்களை எழுதுகிறே இங்கே... உமக்கு அதில் எடுத்துக்கொள்ள விடயமிருந்தால் நிச்சயம் நான் பெருமையும் பயனும் கொள்வேன்... விரைவில் உங்கள் கவிதையை எதிர்பார்க்கிறேன்...
...


நிச்சயம் எழுதுகிறேன் என் அபிமான ஆதவா அவர்களே

ஆதவா
05-04-2007, 12:51 AM
நண்பர்களே! ஏதோ இரு கவிகள் எழுதுங்கள்.. எனது அடுத்த பாகத்திற்கு வசதியாக இருக்கும்........
---------------------------------------------------------------
கவிஞர்களே! உங்கள் அனுபவத்தை இங்கே நான் மீண்டும் வேண்டுகிறேன்

lenram80
05-04-2007, 03:10 AM
கவிதை எழுதுவதில் என்னைப் பொருத்தவரை 4 நிலைகள் உள்ளன.
1.வர்ணனை
2.பிரச்சனைகளைக் கையாளுதல்
3.சிறுகதை
4.கதை

1. வர்ணனை
இது கவிதை எழுதுவதின் முதல் நிலை. ஏதாவது ஒரு கருவை எடுத்துக் கொண்டு, அதைப் பற்றி விதம் விதமாய் சிந்திப்பது.
கரு என்பது ஒரு பொருளாக, செயலாக, நிகழ்வாக இருக்கலாம்.
உதாரணமாக, 'மழை" என்று எடுத்துக் கொண்டால்,

மேகக் குடையில் யார் ஓட்டை போட்டது?
இந்த பூமித் தலையில் நீர் அப்படியே வழிகிறதே!

ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது போல்
பூமியின் தலையிலேயே எச்சில் துப்பும் மேகங்கள்!

இதில் கொஞ்சம் காமெடி/சமூக அவலம் / சமூக நடப்புகளையும் சேர்க்கலாம்.

காமெடி

என்ன மேகமே! நிலவை 'சைட்' அடிக்கிறாயா?
ஜொள்ளில் பூமியை நனைக்கிறாயே!

சமூக அவலம்

என்ன மேகமே? உங்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு கிடையாதா?
தண்ணீர் குழந்தைகளை 'மளமள'வென்று பெத்துக் கொண்டேயிருக்கிறீர்களே!

சமூக நடப்பு

மேகமே! ஜாதிச் சண்டையா அங்கேயும்?
இவ்வளவு வெண்ரத்தம் எங்கள் மேல் கொட்டுகிறதே!

வர்ணனைகளில் வசதி என்னவென்றால், எதை வேண்டுமானாலும் நாம் நினைத்து அதை வைத்து எழுதலாம். எதை வேண்டுமானலும் ஒன்றாக இதில் கலக்கலாம். அறிவியல், இலக்கியம், வரலாறு போன்ற மூன்றையும் இங்கே ஒன்றாக கலக்கி எழுதலாம்.

வள்ளுவனின் நெறிமுறைகள்!
கம்பனின் கற்பனைகள்!
ரவி வர்மாவின் ஓவியங்கள்!
பாரதியின் கவிதைகள்!
காந்தியின் அஹிம்சா!
மழலையின் சிரிப்பு!
பூக்களின் அழகு!
மான்களின் துள்ளல்!
குயிலின் குரல்!
கொஞ்சம் நுனி மூக்கு கோபம்!
சொன்னவை அனைத்தையும்
சோதனைக் குழாயில் போட்டு
சொர்க்கத்தில் வைத்து
98.6 F-ல் ஆராய்ந்த போது
அவதரித்தவளே!

இந்த நிலைதான் கவிதை எழுதுவதன் முதல் நிலை. புதியவர்கள் இந்த நிலையில் ஆரம்பிக்கலாம்.

2.பிரச்சனைகளைக் கையாளுதல்
இந்த நிலையில் சின்ன பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு, அதன் தாக்கம், அதன் விளைவு, அதற்கு தீர்வு என்ற முறையில் எழுதுவது.
இதை திரைப்படத்துறையில் 'குறும்படங்'களோடு ஒப்பிடலாம்.
பிரச்சனைகளைக் கையாளுதல் = வர்ணனை + அதன் தாக்கம/ அதன் விளைவ / அதற்கு தீர்வு

உதாரணமாக காதல் தோல்வி, தண்ணீர் பஞ்சம், பூகம்பம் .... இவற்றை சொல்லலாம்.

குஜராத் பூகம்பம்
==========

(ஜனவரி 26, 2001-ல் குஜராத் பூக்கம்பத்தை உலுக்கியது ஒரு பூகம்பம்.
அந்த பூகம்பம் பறித்த பூக்களுக்கு, இக்கவிதை சமர்ப்பணம்.)

கும்பாபிஷேகம் நாளை என்று
குஷியாய் இருந்த கோவில்கள் எத்தனையோ!

மணநாள் நாளை என்று மயக்கத்திலிருந்து
பிணமாய் போன மனங்கள் எத்தனையோ!

எதைக் கண்டு சிலிர்த்தாய் பூமித்தாயே!

மனிதனை உண்ணவா, உன் மேல் தாடையை அசைத்தாய்?
இல்லை,
கட்டிடங்கள் விழவா நீ கரகாட்டம் ஆடினாய்?

வரலாறு எழுதவா நீ தகராறு செய்தாய்?
சரித்திரத்தில் இடம் பெறவா இந்த தரித்திர வேலை செய்தாய்?

குடியரசு அன்று கும்மாளம் அடிக்கலாம் என்றிருந்து
கூழாகிப் போன குழந்தைகள் எத்தனையோ!

ஒரு வேளை பசிக்கு, ஊரையே அழித்தவளே!
என் பூமித்தாயே,
"தாய் மண்ணே வணக்கம்" என்றால் இனி மணக்குமா?

அன்னையே நீயும் அனைத்துண்ணி என்று சொல்லவா
அத்தனையையும் தின்றாய்?

அகழ்வாரைத் தாங்கும் நிலமா நீ?
அநியாயமாய் அத்தனை பேரையும்
அரை நொடியில் அழித்து விட்ட பிறகும் கூட,
வள்ளுவா! என்ன தாமதம்?
குறளை மாற்றி எழுது!

அணுகுண்டை உன் மேல் போட்ட போது
அமைதி காத்து விட்டு - நாங்கள் அமைதியாய் இருந்த போது
ஆடித் தொலைத்து விட்டாயே!

உன் முகத்தின் பருவாய் வீடு போட்டோம்!
உன் கரத்தின் ரேகையாய் ரோடு போட்டோம்!
வேறு என்ன பாவம் செய்தோம்?

உன் பொன்னை தோண்டி எடுத்து
எங்கள் பெண்கள் அணிவதால்
சண்டைக்கு வந்த சண்டாளியா நீ?

அத்தனை பேரும் உன்னை மிதிப்பதால்
ஆத்திரப்பட்டுத் தான் ஆடித் தொலைத்தாயோ?

எங்கள் மழலைகளின் மயக்கும் மந்திரப் புன்னகையை
ரசிக்கும் ரசனை கூட இல்லாத ராட்சசியா நீ?

உன் குழந்தைகளை நீயே அழுக்கும் நீ
எங்களுக்கெல்லாம் தாயா? அல்லது
தாய் என்று ஏமாற்றி வந்த பேயா?

பூமியே! நிச்சயம் உனக்கு அழிவு உண்டு!
இத்தனை பேரை கொன்று விட்டு
தண்டனை கிடைக்காமல் போனால் அது தவறு!
தவறு செய்தவன் தண்டிக்கப் படவேண்டும்!
இது இயற்கையின் நியதி!
அதாவது, நீயே உனக்கு விதித்துக் கொண்ட விதி!

3. சிறுகதை:
இதை திரைப்படத்துறையில் 'திரைப்படங்'களோடு ஒப்பிடலாம். பாத்திரங்களை படைத்து, பிரச்சனைக் கூறி, முடிவு சொல்லல்.
இதற்கு வைரமுத்துவின் "தண்ணீர் தேசம்" சொல்லலாம்.

4. கதை:
இதை திரைப்படத்துறையில் 'திரைப்பட விழா"க்களோடு ஒப்பிடலாம். உதாரணம் "கம்ப ராமாயணம்".


என்னைப் பொறுத்த வரையில், வர்ணனை & பிரச்சனைகளைக் கையாளுதல் - இதை எடுத்துக் கொண்டாலே பெரும்பாலான கவிதைகளை
இதில் அடைக்கலாம்.
கவிதை எழுத ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள்!!!!

poo
05-04-2007, 06:41 AM
அருமை ராம்... இதான்பா... புடிச்சிக்கோன்னு எளிமையாக அள்ளி வீசியிருக்கிறீர்கள்....

ஆதவா
05-04-2007, 04:50 PM
அருமை ராம்!!! பூ சொன்னபிறகு நான் என்ன சொல்ல?

இளசு
05-04-2007, 08:38 PM
கவிதை எழுதுவதில் என்னைப் பொருத்தவரை 4 நிலைகள் உள்ளன.
1.வர்ணனை
2.பிரச்சனைகளைக் கையாளுதல்
3.சிறுகதை
4.கதை




மிக மிக அழகாக , பொருத்தமான உவமைகள், எடுத்துக்காட்டுகள் சொல்லி,
மிக அவசிய பாடம் தந்து கைகோர்த்த நம் லெனினுக்கு
மிகச் சிறப்பான நன்றியும் பாராட்டும்..


அடுத்து நம்மவர்கள் கவிதைகளைத் தந்தால்
நம் கவிஞர் குழு அலசி, செப்பனிட்டு
பாடம் அடுத்த நிலைக்கு உயரும்..

வாருங்கள்.. சேருங்கள்..தாருங்கள்!

ஏணி ஒன்று உருவாகும் காட்சியை
க்(அ)ணு க்(அ)ணுவாய்க் காணும்
உன்னத அனுபவம்..


ஆதவா, ஷீ, லெனின் - அற்புதக்கூட்டணி..
மற்ற கவிஞர்களும், கவிஞர் ஆக முனைபவர்களும்
கலந்து கச்சேரி இன்னும் களைகட்டட்டும்!

க.கமலக்கண்ணன்
06-04-2007, 01:33 PM
என்னை பொருத்த வரை கவிதை என்பது நறுக்கென்று சில வரிகளில் பாமரனுக்கும் புரிந்து கொள்ளும் வகை அமைத்தால் அது மிக அழகிய கவிதை.

அன்பே உன்னை
பார்த்தவுடன்
என்னை மறந்தேன்
உன் தங்கையை
பார்த்தவுடன்
உன்னையே மறந்தேன்.

இப்படியும் எழுதலாம்.

ஆனால் சொல்ல வருகின்ற கருத்தை சட்டென்று சொல்லிவிட்டால் அது மிக நல்ல கவிதையே...

(தொடரும்)

s_mohanraju
06-04-2007, 02:58 PM
உங்க பாடம் படிச்சுட்டு வழ்க்கையில் நான் எழுதிய முதல் கவிதை

இந்தாங்க அப்பு நான் புதுசு அதிகம் நக்கல் அடிக்காமல் எழுத்துப்பிழையும் சொற்பிழையும் களையுங்களேன்.:spudnikbackflip:

என் அன்பே

என்னை காதலி என்றேன்
வெறுப்புடன் ஒரு பார்வை
என் சம்பளம் லகரம் என்றேன்
நகைப்புடன் சிறு பார்வை
மகாபலிபுரம் வரை டேட்டிங் என்றேன்
கோபத்துடன் அவள் பார்வை
நம் தேன்நிலவு ஊட்டியில் என்றேன்
கன்னத்தில் குழிவிழ அவள் புன்னகை

பென்ஸ்
06-04-2007, 03:35 PM
உங்க பாடம் படிச்சுட்டு வழ்க்கையில் நான் எழுதிய முதல் கவிதை

இந்தாங்க அப்பு நான் புதுசு அதிகம் நக்கல் அடிக்காமல் எழுத்துப்பிழையும் சொற்பிழையும் களையுங்களேன்.:spudnikbackflip:

என் அன்பே

என்னை காதலி என்றேன்
வெறுப்புடன் ஒரு பார்வை
என் சம்பளம் லகரம் என்றேன்
நகைப்புடன் சிறு பார்வை
மகாபலிபுரம் வரை டேட்டிங் என்றேன்
கோபத்துடன் அவள் பார்வை
நம் தேன்நிலவு ஊட்டியில் என்றேன்
கன்னத்தில் குழிவிழ அவள் புன்னகை

முதல் கவிதைக்கு வாழுத்துகள்.....
அப்படியே
ள -- La, lla
று -- Ru, rru
இவற்றை உபயோகிக்கலாம்...

நல்வரவு...

ஆதவா
06-04-2007, 04:27 PM
நன்றிங்க அனைவருக்கும்...
-----------------------------------------------------

நாங்கள் எடுத்த முயற்சிக்கு முதல் வெற்றி........ மோகன்ராஜ்...

உங்க பாடம் படிச்சுட்டு வழ்க்கையில் நான் எழுதிய முதல் கவிதை

இந்த வரிகளைக் காணும் போது எனக்குள்ளே பூரிப்பு..... என் வாழ்த்துக்கள் மோகன்ராஜ்,,,,, இன்னும் இளசு அண்ணா பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்... எனக்கு திரி எப்போதுதான் வளர்வதாகத் தோணுகிறது... என்னுடன் லெனின், ஷீ. மதுரகன், அதிமுக்கியமாக இளசு அண்ணா,. இருக்க கவலை விடுங்கள்.... கவிதை எளிது இனி

என்னை காதலி என்றேன்
வெறுப்புடன் ஒரு பார்வை
என் சம்பளம் லகரம் என்றேன்
நகைப்புடன் சிறு பார்வை
மகாபலிபுரம் வரை டேட்டிங் என்றேன்
கோபத்துடன் அவள் பார்வை
நம் தேன்நிலவு ஊட்டியில் என்றேன்
கன்னத்தில் குழிவிழ அவள் புன்னகை

முதல்நிலைக் கவிதை
காதலில் அமைந்தது நன்று...

நாங்கள் இங்கே அலசப்போகும் நிறைகுறைகளை உங்கள் கவிதைத் திறன் வளர்ச்சிக்காக எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்... தவறுகள் திருத்தப்பட்டால் பூரணம் உண்டாகும்.

கவிதை அழகாக எழுதப்பட்டிருக்கிறது... முதல் கவிதைக்கு என் முத்தான வாழ்த்துக்கள்.

முதலாவதாக நீங்கள் கவனிக்கவேண்டியது...

இன்னும் வேண்டும் என்ற உணர்வு.
வர்ணனைகள் சேர்த்துதல்
உவமைகள் சேர்த்துதல்
சொற்களை அடக்குதல்
சொற்களை அடக்குவதைப் பற்றி பின் பார்க்கலாம்...

நம் கவிதை என்றுமே நமக்குத் திருப்தியாக இருக்கக் கூடாது... அதனால் நமக்கு கவித்தாகம் ஏற்படும்.. இன்னும் சிறப்பாக செய்யவேண்டுமே என்ற உணர்வு வரும்.

நீங்கள் இட்ட கவிதையில் வர்ணனைகள் இன்னும் சேர்த்தலாம்... கூடுமானவரையில் இருக்கிறது..

வெறுப்புப் பார்வை, நகைப்புப் பார்வை, கோபப்பார்வை என்று பல்வேறு பாவனைகள் எடுத்துக் கையாண்டிருப்பது மிகச் சிறப்பு.

உவமைகள் முதல்நிலைக் கவிதையில் அவ்வளவாக நான் கண்டதில்லை. அப்படியே இருந்தாலும் அதிசிறப்பாக இருப்பதில்லை.. இருப்பினும் நாம் முயலவேண்டும். காதலி அப்படிப் பட்டவள் இப்படிப்பட்டவள், பறவை மூக்கு, மீன் கண்ணு, இந்த மாதிரி... ஆரம்ப காலக் கவிதைகள் இம்மாதிரி எழுதினாலும் பிற்பாடு அப்படியே தானாக மாறிவிடும்... இதிலேயே சொற்களை அடக்குதலும் வரும்.. (மீண் போன்ற விழிகள் = கயல்விழி ,)

அடுத்ததாக குறைகள் என்று பார்த்தால் அவ்வளவாக இல்லை.. என்றாலும் கவிதைக்குண்டான கரு சற்று விலகி இருக்கிறது. காதலியிடம் தேன்நிலவு பற்றி பேசும்போது மட்டுமா சிரிக்கிறாள்.. (அவள் காதலியும் இல்லை என்பதை முதல்வரி சுட்டுகிறது,)
நீங்கள் பரவாயில்லை, இவ்வளவு சொல்கிற நான் (ஹி ஹி என்னைக் கவிஞன் என்று இங்கே ஒத்துக்கொண்டிருக்கிறார்கள் :icon_03: ) ஆரம்ப காலக் கவிதைகள் மோசமாகத்தான் எழுதினேன்..

நீங்கள் எழுதிய கவிதைக்கு அருகிலே கூட நிற்காதவாறு என் நண்பன் ஒருவன் கவி எழுதினான். ஆனால் படிப்படியாக முயன்று இன்று நன்றாகவே சிந்திக்கிறான்.. :food-smiley-011:

நம் சிந்தனையில் உள்ளது... எல்லாமே!.. மேலும் எழுதுங்கள்... இயற்கையைக் கலந்து காதலை போட்டு சமைத்து எழுதுங்கள்.... முதல் படியே நாம் ஆழமாக வைப்போம்..

வாழ்த்துக்கள் மீண்டும்..:food-smiley-011:

ஆதவா
06-04-2007, 04:33 PM
என்னை பொருத்த வரை கவிதை என்பது நறுக்கென்று சில வரிகளில் பாமரனுக்கும் புரிந்து கொள்ளும் வகை அமைத்தால் அது மிக அழகிய கவிதை.

அன்பே உன்னை
பார்த்தவுடன்
என்னை மறந்தேன்
உன் தங்கையை
பார்த்தவுடன்
உன்னையே மறந்தேன்.

இப்படியும் எழுதலாம்.

ஆனால் சொல்ல வருகின்ற கருத்தை சட்டென்று சொல்லிவிட்டால் அது மிக நல்ல கவிதையே..

(தொடரும்)

எங்களோடு அகரவரிசைக் கவிராயர் இணைந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது... உங்கள் கருத்தை அப்படியே ஒத்துக்கொள்கிறேன்.. சுருங்கச் சொல்லி விளங்கவை என்பதுதான் கவிதை... இன்னும் உங்கள் அனுபவங்களைத் தாருங்கள்...

நன்றி....

பாரதி
06-04-2007, 05:57 PM
முதலில் மிகவும் அவசியமான ஒரு திரியை ஆரம்பித்த ஆதவாவுக்கு என் பாராட்டுக்கள்.

அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்டதை வார்த்தைகளில் வடிப்பதன் மூலம், புதிய உறவுகளுக்கு எழுதுவதில் உள்ள தயக்கத்தை உடைத்தெறிய தூண்டும், அதற்கான வழியைக் காட்டும் இந்த பதிவின் நோக்கமும் பாராட்டிற்குரியது. ஆர்வத்துடன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் அத்தனை மன்ற உறவுகளுக்கும் என் நன்றி.

கவிதை எழுதுவது குறித்து என்னுடைய கருத்துக்களை விரும்பி சில மன்ற உறவுகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களுக்கு என் மீது
இருந்த நம்பிக்கைக்கு என் நன்றி. ஆனால் கவிதை எழுதுவது குறித்து அடிப்படை எதுவும் எனக்குத்தெரியாது என்பதுதான் உண்மை. என்னால் உபயோகப்படும்படியான கருத்துக்களோ, விளக்கங்களோ சொல்ல முடியுமா என்பது சந்தேகமே. எனினும் என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சில நேரங்களில் சாதாரணமான வாக்கியங்களை உடைத்து எளிதினால் கூட வடிவான கவிதையாக அமையும். இலக்கணம் உள்ள மரபுக்கவிதைகள், ஹைக்கூ போன்றவை தவிர்த்து புதுக்கவிதைகளில் எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல், எளிய, விரும்பிய வடிவில் கவிதை அமைத்துக்கொள்ள வசதிகளும் இருக்கின்றன.

கவிதைகளில் நேரடியாக சொல்ல வந்ததை சொல்வது ஒரு வகை; குறியீடுகள் மூலம் வாசகர்களை சற்று யோசிக்க வைத்து புரிய வைப்பது மற்ற வகை. இரண்டு வகைக்கவிதைகளும் பெரும்பாலும் நல்ல வரவேற்பைப் பெறும். குறிப்பிட்ட சில நவீனத்துவக்கவிதைகள் வாசகர்களை சென்றடைவதில்லை. எனினும் அதைப்போன்ற கவிதைகளை விரும்பும் நண்பர்களும் உண்டு.

மன்றத்தில்தான் எனது கவிதைகள் (?) என்றழைக்கப்படும் சில பதிவுகள் வெளியாகி இருக்கின்றன. என்னைப்பொறுத்த மட்டில் கவிதை வடிவில் எழுத வேண்டும் என்று எப்போது தோன்றுகிறதோ அப்போதுதான் அந்த முயற்சியை மேற்கொள்ளுகிறேன். இதில் எந்தவிதமான அகம்பாவமோ, வீம்போ இல்லை. மன்றத்தில் இணைந்த ஆரம்ப காலங்களில், சில கவிதைகளைப் படித்த உடன் இதற்கு இப்படித்தான் கருத்து சொல்ல வேண்டும் என்று கவிதை வடிவில் பதிலளிக்க முனைந்தது உண்டு. ஆனால் இப்போது அதற்கான தகுதியும் முயற்சியும் என்னிடம் குறைந்து விட்டன என்று எண்ணுகிறேன். ராம்பால், இளசு அண்ணா ... இன்னும் சிலரின் கவிதைகள் இவற்றிற்கு விதிவிலக்கு. பொதுவாக முன்பெல்லாம் எல்லாக்கவிதைகளையும் படித்து விடுவேன். நான் படித்து மனதிற்குள்ளே மட்டும் பாராட்டிய பலப்பல கவிஞர்களும் என்னை மன்னீப்பீர்களாக.

பெரும்பாலும் உணர்வுகள்தான் கவிதைகளை எழுதத் தூண்டுகின்றன. சரியான கரு கிடைத்து விட்டால் எழுதுவதில் சிரமம் இருக்காது. வார்த்தைகளின் அலங்காரம் உணர்வின் பிரதிபலிப்பை அதிகரிக்கச் செய்யும் என்றாலும் அதற்காக போராட வேண்டியதில்லை. ஆனால்
எந்தவிதமான உணர்வு என்பதை பொறுத்தே மெருகூட்டும் வார்த்தைகளின் அவசியம் தேவைப்படும்.

எழுதியதை சில முறை நாமே படித்துப்பார்க்க வேண்டும். நமக்கு முழுத்திருப்தி எனில் அந்தக்கவிதையைப் பதிவு செய்வதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை. திருப்தி இல்லையெனில் சில தினங்கள் கழித்து படித்துப்பார்க்கலாம். கண்டிப்பாக ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்று தோன்றினால் செய்து விட்டு மறுபடியும் சிலமுறை படித்துப்பார்த்து பின்னர் பதிக்கலாம்.

எப்படி எழுதுவது - கவிதை எழுத எது முக்கியம் என்பதை சில நண்பர்கள் இங்கு விளக்கமாகவே கூறியுள்ளனர். எனக்குத்தெரிந்த வகையில் 'சித்திரமும் கைப்பழக்கம் - செந்தமிழும் நாப்பழக்கம்' என்று சொல்வார்கள் - ஆகவே முதலில் தேவையானது வீண் அச்சத்தை ஒதுக்குதல்; நம்மால் முடியுமா என்ற சந்தேக வேரை வெட்டி விட வேண்டும்.

வள்ளுவன் சொன்ன 'முயற்சிதன் மெய்வருத்தக்கூலி தரும்' என்பதில் நம்பிக்கை வைக்க வேண்டும்; நிறைய படிக்க வேண்டும்; நிறைய எழுத
முயற்சிக்க வேண்டும்; இயன்ற வரை பிழையின்றி எழுதப்பழகுதல் வேண்டும்; எழுதிய பின் தேவையற்ற வார்த்தைகளை எவ்வளவுக்கெவ்வளவு நீக்க இயலுமோ நீக்கி விட வேண்டும்;பலமுறை படித்துப்பார்க்க வேண்டும். திருப்தியெனில் பதித்து விட வேண்டும்.

பதிலாக வரும் கருத்துக்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் மாணாக்கனாக இருக்க வேண்டும். பாராட்டுக்களில் மகிழலாமே தவிர
மதிமயங்கக்கூடாது.

நண்பர் நண்பன் அடிக்கடி சொல்லுவதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன் - "எழுதுங்கள்; எழுதுங்கள் - எப்போதாவது கவிதை வந்து விடும்".

நான் கவிதை என்று நினைத்து எழுதினால், எப்போதும் பாராட்டும் - பாராட்டக் காத்திருக்கும் மன்ற நெஞ்சங்கள் அனைவருக்கும் இந்தத்
தருணத்தில் நன்றி சொல்வதில் மகிழ்கிறேன்.

பென்ஸ்
06-04-2007, 06:03 PM
ஒரு திரியின் மதிப்பு அதில் வரும் பதிவு எண்ணிக்கையில் இல்லை, அந்த பதிப்பில் இருக்கும் விஷயங்களும், அதன் பயனையும் கொண்டே உள்ளது, அந்த வகையில் இந்த மன்றத்தின் சிறந்த திரியாக இதை கருதுகிறேன்.
ஆரம்பித்த ஆதவனுக்க்ய் ஒரு "செல்ல தட்டு"...
பங்களித்த அனைவருக்கும் நன்றிகள்...

ஒரே வருத்தம் என்னுடைய பங்கு இதில் இல்லையே என்பதில்...

இளசு
06-04-2007, 09:38 PM
என்னை பொருத்த வரை கவிதை என்பது நறுக்கென்று சில வரிகளில் பாமரனுக்கும் புரிந்து கொள்ளும் வகை அமைத்தால் அது மிக அழகிய கவிதை.

சொல்ல வருகின்ற கருத்தை சட்டென்று சொல்லிவிட்டால் அது மிக நல்ல கவிதையே...

(தொடரும்)


கமலக்கண்ணன்,

உங்கள் கருத்தோடு தனிப்பட்ட முறையில் ஒத்துப்போகிறேன்..

உதாரணமாய் நீங்கள் கொடுத்த கவிதை - எனக்குப் பிடித்த
எளிமை -நேரிடைப் பாணி கவிதை!

ஆனால், இன்னொரு பாணி கவிதைகள் உண்டு.. கொஞ்சம் இருண்மை-குறியீடுகளால் சொல்லவந்ததை மறைகுறிப்பால் உணர்த்துவது..

இதை வாசகர் ஆழ்ந்து படித்து பிரிந்துகொள்தல் என்பது..
குறுக்கெழுத்துப்புதிர் விடுவித்து அடையும் ஆனந்தத்துடன் ஒப்பிடுகிறார்கள்..

குறுக்கெழுத்துகளிலும் எளிய, கடின வகைகள் உண்டல்லவா..
அதைப்போல் இப்பாணி கவிதைகளிலும் உண்டு..

பயிற்சி உள்ளவர்கள் புதிரை சுலபமாய் அவிழ்ப்பார்கள்..
பரிச்சயம் இல்லாதவர்கள் ?

இவ்வகைக்கவிஞர்கள் - குழைத்த உணவை ஊட்டும் தாய்கள் அல்லர்!
காட்டில் வேட்டையாடி உண்ண அழைக்கும் தந்தையர்கள்!


எனக்கு தனிப்பட்ட முறையில் நேரிடை கவிதைகள் பிடிக்கும்.

கொஞ்சம் மன்றத்தில் வாசித்து எளிய படிமக்கவிதைகளில் பாதி புரிந்துகொள்ளும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன்.. அதற்கு ராம்பால், நண்பனுக்கு என் முதல் நன்றி...

எல்லாம் பழக்கத்தால் வசப்படும்.. நான் இன்னும் பழகுகிறேன்.
அண்மையில் பூ, ஆதவா கவிதைகளில் நான் கற்றவை நிறைய...

இளசு
06-04-2007, 09:45 PM
உங்க பாடம் படிச்சுட்டு வாழ்க்கையில் நான் எழுதிய முதல் கவிதை




வாழ்த்துகள் மோகன்ராஜ்

திருமணம் என்ற மந்திரத்தால்
கன்னிமன மாங்காய்கள்
சட்டென பழுக்கும் அதிசயத்தை
நகைச்சுவாய்ச் சொன்ன விதம் அழகு..

ஆதவனின் ஆக்கபூர்வ விமர்சனங்கள் அருமை!

தொடர்ந்து எழுதுங்கள்..மோகன்ராஜ்!
எழுத எண்ணி அதைச் செய்ததிலேயே வெற்றி வந்துவிட்டது உங்களிடம்!


(ஆதவனின் இத்திரி பெறப்போகும் பல வெற்றிகளுக்கு
மோகன்ராஜின் கவிதையே கட்டியம்.. பாராட்டுகள் ஆதவா!)

இளசு
06-04-2007, 09:52 PM
.

கவிதை எழுதுவது குறித்து அடிப்படை எதுவும் எனக்குத்தெரியாது என்பதுதான் உண்மை. என்னால் உபயோகப்படும்படியான கருத்துக்களோ, விளக்கங்களோ சொல்ல முடியுமா என்பது சந்தேகமே. எனினும் என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
................

................

நண்பர் நண்பன் அடிக்கடி சொல்லுவதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன் -
"எழுதுங்கள்; எழுதுங்கள் - எப்போதாவது கவிதை வந்து விடும்".

.

சொல்ல ஒன்றுமில்லை என்ற முன்னுரையுடன்
சொல்லவேண்டியவற்றை தேர்ந்த சொற்களால்
சொல்ல உன்னால்தான் முடியும் பாரதி...என்ன
சொல்ல உன் நிறைந்த பக்குவ மன அழகை!

நண்பனின் அந்த வாசகம் -
நாம் அனைவரும் பின்பற்றல் அவசியம்..
நிறைய நிறைய வாசிக்க அடிக்கடி நமக்கு
நினைவூட்டல் செய்ததும் அவரும் ராம்பாலும்..

ஓவியன்
07-04-2007, 04:09 AM
ஆதவனின் இந்த ஆக்க பூர்வமான திரியும் அதில் கருத்தளித்து வரும் திறமைசாலிகளது அனுபவங்களும் கவிதை எழுத வேண்டுமென்று தத்தி தத்தி நடை பயிலும் சின்னக் குழந்தையாக இருக்கும் எனக்கு நல்ல ஊக்க மருந்தாக இருக்கின்றது.

ஆதவா!
என்றாவது ஒரு நாள் இந்த ஓவியன் உருப்படியாக ஒரு கவிதையை எழுதினால் அதற்கு வித்திட்ட முதற் பெருமை உங்களையே சாரும்.

க.கமலக்கண்ணன்
07-04-2007, 12:15 PM
நன்றி இளசு மற்றும் ஆதவா அவர்களே...

எனது பெரியப்பா ராமலிங்கத்தின் மகள் பெயர் கஸ்தூரி அவருக்கு திருமண முடிவாகி விட்டதை எனது சகோதரி எனக்கு தகவல் சொல்லுகிறார்.

அதற்காக அவருக்கு அளித்த வார்தை விளையாட்டு

ராசியான என் அன்பு அக்காவிற்கு
கல்யாணமாம்...
ஸ்வரங்கள் எல்லாம்
தூரிகை பிடித்து என்னை
ரிதம் செய்கின்றன.

இப்படி சொன்ன உடனே அவர்கள் மகிழ்ந்து பாராட்டியது மறக்க முடியாதது.

1. முதலில் நாம் எதற்கா இந்த வார்தைகளை கோர்கின்றமோ அதை முதலில் வெளியிட வேண்டும். (இளசு அவர்கள் சொன்ன மாதிரி கடைசியில் சொன்னாலும் தனி இன்பம்தான்)
2. பிறகு நம்முடைய வாழ்த்துக்களோ அல்லது மன நெகிழ்வின் நிலையை செல்லிவிட்டால் அது அத்துடன் முடிந்துவிடும். (மனநிலை என்பது சந்தோசமாகவும் இருக்கலாம் அல்லது சோகமாகவும் இருக்கலாம் )

இதை எல்லாம் ஏன் எழுதுகிறோம் என்றால் இதை படிப்பவர்கள் கவிஞர் ஆகாவிட்டாலும், சில கவிதைகள் அவர்களால் படைக்கப் பட்டால் அதுவே இந்த திரியின் வெற்றி...

இந்த திரி முழுவது படித்தால் நிச்சயம் சாதாரமான ஒருவர் மிக தரமான கவிதையை படைக்க முடியும் - என நான் நம்புகிறேன்... அதற்காக ஆதவா விற்கு எனது உள்ளம் கனிந்த பாராட்டுக்கள்...

(தொடரும்)

ஆதவா
07-04-2007, 05:07 PM
மிகவும் நன்றிங்க பாரதி... தெரியாது என்று சொல்லுபவர்களிடம் நிறைய விஷயங்கள் தெரியும் என்று சொல்வார்கள்.. அது உண்மைதான்... இந்த திரி மூலம் அடுத்தவர்கள் எப்படி எழுதுவார்கள் என்பதை அறிய முயன்றது என் சுயநலம்.. நல்ல ஆழத் தோண்டி விதை விதைத்திருக்கிறீர்கள்... திரி ஆரம்பித்தவன் என்ற முறையில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சொல்லிக்கொள்கிறேன்...

இந்த நேரத்தில் நண்பன் அவர்கள் இங்கு வந்து கைகொடுத்து உதவினார் என்றால் நமக்கு பெரும் பாக்கியமாக இருக்கும்.../// நமக்காக அல்லாவிடினும் தமிழுக்காக அவர் வருவார் என்று எதிர்பார்க்கிறேன்.
-----------------------------------
நன்றிங்க பென்ஸ்,,, சீக்கிரமே உங்கள் பதிவை நான் மிகவும் எதிர்பார்க்கிறேன்...
---------------------------------
இளசு அண்ணா! மறைமுகப் பொருளோடு கவிதை எழுத எனக்கு எண்ணம் ஏற்பட்டதில்லை.. உவமை அல்லது உருவகக் கவிதைகள் மட்டும் விதிவிலக்கு.... ஆனாலும் சில கவிதைகள் எளிமை அல்லாததற்கு காரணம் சொற்களை அடக்குவதால்தான் என்று நினைக்கிறேன்.... உங்கள் கருத்து என்ன?. என்னுடைய உதாரணம். பூ அண்ணாவின் கவிதை திரைவிலகக் காத்திருக்கிறேன்!....
--------------------------------------------
ஓவியன்... இதுவரை படித்தவரை நீங்கள் புரிந்தது என்னவோ அதைமட்டுமாவது எழுதுங்கள்... நன்றி....
------------------------------------------------
கமலக்கண்ணன் அவர்களே! வெகு விரைவில் அடுத்த பாடம் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.. அதை எளிமையாகவும் அழகாகவும் கொடுத்தது இன்னும் அழகு... நீங்கள் குறிப்பிட்டது போல ஒரு நல்ல கவிஞனை உருவாக்கும் வழியைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். இங்குள்ளவர்கள் பயனடைய வேண்டும் என்பதே எனக்கு விருப்பம்... எம்மோடு கைகோர்த்து எளிதில் புரியும்படி கொடுத்தமைக்கு மீண்டும் நன்றிகள் பல..

விகடன்
07-04-2007, 06:24 PM
ஆதவா!
என்றாவது ஒரு நாள் இந்த ஓவியன் உருப்படியாக ஒரு கவிதையை எழுதினால் அதற்கு வித்திட்ட முதற் பெருமை உங்களையே சாரும்.

மன்னிக்கவேண்டும் ஆதவா.
ஏதோ தெரியல வழமையாக ஓவியனையே கடித்துக்குதறிக்கொண்டிருக்கும் என்னால் இவருடைய இந்தப்புறுடாவை மட்டும் ஏற்க சகிக்கமுடியாமலே இப்படி எழுதுகிறேன்.

கம்பராமாயணம் பாடிய கம்பரின் அவையடக்கத்தைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோலத்தான் இந்த ஓவியனின் மேலுள்ள கூற்றும்.:icon_03:

இந்த ஓவியனிற்கு ஓவியங்கள் மட்டுமின்றி கவிதைகளும் நன்றாக வரையத் தெரியும். இந்தப் பொய்யிலிருந்தே கவிதையில் அவாரின் புலமை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஏன் இன்னும் மௌனமாக இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. இதைப்படித்த பின்னராவது தனது திறமையை வெளிக்காட்டுவார் என்று நம்புகிறேன்.

அவரும் உங்களுடன் சேர்ந்து களத்தில் விளையாட எனது வாழ்த்துக்கள்.

பி.கு: ஓவியரே. உம்மை கடிப்பது ஒருகாலமும் விடமாட்டேன்... நீராக வந்து சரணடையும் வரையில்.. ஹி...ஹி....ஹி....:D

ஆதவா
07-04-2007, 07:11 PM
மன்னிக்கவேண்டும் ஆதவா.
இந்த ஓவியனிற்கு ஓவியங்கள் மட்டுமின்றி கவிதைகளும் நன்றாக வரையத் தெரியும். இந்தப் பொய்யிலிருந்தே கவிதையில் அவாரின் புலமை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.



ஓவியரே! குட்டு வெளிப்பட்டு விட்டது... விரைவில் எழுதுங்கள்...

ஜாவா !!! நீங்கள் முயலுங்கள்... ஏற்கனவே எழுதத் தெரிந்தால் எழுதுங்கள்....

இளசு
07-04-2007, 07:57 PM
கமலக்கண்ணன்..

அழகாய்த் தொடர்கிறீர்கள்..
உங்கள் அக்கா அடைந்த அதே மகிழ்ச்சியை - கவிதை படித்த நானும் அடைந்தேன் பாருங்கள்..

அதுதான் எழுத்தின் வெற்றி!

தொடருங்கள் நண்பரே..


--------------------------------------

ஓவியன்,

தமிழர்கள் அதிகம் அடக்கமானவர்கள் என மேற்கு நாட்டவர் சொல்கிறார்கள்..

திறமையை தகுந்த இடத்தில் வெளிக்காட்டாமல் இருப்பது அடக்கம் அல்ல... கூச்சம்!

நாம் இங்கே ஒரே குடும்பம்..

கூச்சம், தயக்கம் விட்டு -தாருங்கள் கவிதைகளை!

--------------------------------------------

பென்ஸின் பாராட்டுகள் இத்திரிக்குத் தகும்...

ஆதவனுக்கு என் வாழ்த்துகள்!

ஓவியன்
08-04-2007, 04:06 AM
இந்த ஓவியனிற்கு ஓவியங்கள் மட்டுமின்றி கவிதைகளும் நன்றாக வரையத் தெரியும். இந்தப் பொய்யிலிருந்தே கவிதையில் அவாரின் புலமை தெரிந்திருக்கும்:sport-smiley-007: என்று நினைக்கிறேன்.

ஏன் இன்னும் மௌனமாக இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. இதைப்படித்த பின்னராவது தனது திறமையை வெளிக்காட்டுவார் என்று நம்புகிறேன்.

அவரும் உங்களுடன் சேர்ந்து களத்தில் விளையாட எனது வாழ்த்துக்கள்.:sport-smiley-007:


என்னப்பா யாவா இப்படி வம்பிலே மாட்டி விடுறீங்களே!??
:sport-smiley-017:

என் மீது உமக்கு இவ்வளவு நம்பிக்கையா புல்லரிக்குதப்பா!:icon_wink1:

ஓவியன்
08-04-2007, 04:16 AM
ஓவியன்,

தமிழர்கள் அதிகம் அடக்கமானவர்கள் என மேற்கு நாட்டவர் சொல்கிறார்கள்..

திறமையை தகுந்த இடத்தில் வெளிக்காட்டாமல் இருப்பது அடக்கம் அல்ல... கூச்சம்!

நாம் இங்கே ஒரே குடும்பம்..

கூச்சம், தயக்கம் விட்டு -தாருங்கள் கவிதைகளை!


நன்றி அண்ணா!

பாடசாலைக் காலங்களில் கவிதை நான் கைப் பிடிக்க மறந்த (தவறிய) தோழி (ஓவியமெனும் தோழியைக் கரம் பற்றியதால் வசதிப் படவில்லை என்பதும் ஒரு காரணம்), வசனப் பிரயோகங்கள் செய்யும் போது எதுகை மோனையுடன் பாவிப்பதுண்டு, அவ்வளவே.

இதுவரை முழுமையாக எந்தக் கவிதையையுமெழுதியதாக ஞாபகமில்லை. இங்கு வந்த போது கவி ஜாம்பவான்களின் எழுத்து ஜாலங்களால் கவரப் பட்டேன். அவர் தம் கவி வரிகள் தாம் என்னையும் ஏதாவது எழுது, எழுது என்று தூண்டுகின்றது.

எழுத எத்தனிக்கின்றேன், நிச்சயமாக எழுதுவேன், இதே பகுதியிலும் பதிப்பேன்.

உங்கள் எல்லோருடைய இந்த ஆதரவு போதாதா எனக்கு?

ஓவியன்
08-04-2007, 04:19 AM
ஓவியரே! குட்டு வெளிப்பட்டு விட்டது... விரைவில் எழுதுங்கள்...
....

ஹா,ஹா,ஹா!!!

குட்டு வெளிப்படவில்லை!
மாறாக - யாவா என் தலையில் ஓங்கிக் குட்டி விட்டாரப்பா!! :sport-smiley-007:

க.கமலக்கண்ணன்
08-04-2007, 08:38 AM
மிக்க நன்றி இளசு மற்றும் ஆதவா அவர்களே...

அடுத்த கட்ட பாடத்தை விரைவில் ஆரம்பிக்கிறேன்...

பிச்சி
08-04-2007, 09:03 AM
பரீட்சை முடிந்து பின் நானும் தொடர்கிறேன்..

எல்லார் பாடமும் நன்றாக இருக்கிறது.

விகடன்
08-04-2007, 09:16 AM
ஹா,ஹா,ஹா!!!

குட்டு வெளிப்படவில்லை!
மாறாக - யாவா என் தலையில் ஓங்கிக் குட்டி விட்டாரப்பா!! :sport-smiley-007:

புலி பதுங்குவதே பாய்வதற்குத்தான்!

என் தலையில் குட்டு விழுந்ததென்றால் உம் தலையில் இடியல்லவா விழப்போகிறது!!!

விகடன்
08-04-2007, 09:18 AM
[B]ஜாவா !!! நீங்கள் முயலுங்கள்... ஏற்கனவே எழுதத் தெரிந்தால் எழுதுங்கள்....

எழுதிக்கிட்டுத்தானே இருக்கிறேங்க.:icon_wink1:

அதுதாங்க....

இப்படு போட்டுக்கொடுப்பது....:waffen093:

க.கமலக்கண்ணன்
09-04-2007, 09:41 AM
பொதுவாக கவிதை என்பது ஒருமுழு பக்கத்திற்கு உள்ள செய்தி அல்லது நிகழ்ச்சியினை சுருக்கி 10 அல்லது 15 வரிகளில் சொல்லி விளங்க வைப்பது. அதற்கு வார்த்தை கோர்வை மிகவும் முக்கியம். சிறு தவறு நேர்ந்தாலும் சொல்ல வருகின்ற கருத்து மாறிவிடும்.

அதனால் சொல்ல வருகின்ற செய்திக்கும் நாம் தொடுக்கின்ற வார்த்தைகளை மற்றவர்கள் படிக்கும் போது, இந்த வார்த்தைகளை இப்படியும் சேர்க்கலாமோ என்று வியக்கும் வண்ணம் வார்த்தைகளை கோர்த்தால் அந்த வரிகள் அனைவரையும் கவரும்...

ஒருமுறை, நான் எனது தோழியின் வீட்டுக்கு ஒருமுறை சென்று இருந்தேன். அவர் பெயர் கலா, அவருக்கு லதா, சித்ரா என்ற இரண்டு சகோதரிகள், மதன் என்ற ஒரு சகோதரர். அவரது தந்தை மிகவும் அன்பானவர்.

வீட்டுக்குச் சென்றதும் எனது தோழியின் தந்தை மிகவும் அன்புடன் வரவேற்று அழகாக பேசிக் கொண்டு இருந்தார். எனது தோழி கலாவும் அவரது சகோதரி சித்ராவும் மதியம் சுவையோடு சமைத்து அன்போடு பரிமாறினார்கள். மாலை வரை உரையாடிவிட்டு ஊருக்கு கிளம்பினேன். கலாவின் சகோதரர் மதன் என்னை பேருந்து நிலையம் வரை வந்து பேருந்து ஏற்றிவிட்டார். அந்த நாளை மறக்க முடியாது என்பதை அகர வரிசையில் எழுதி அனுப்பினேன். அவர்கள் அதை பார்த்துவிட்டு பாராட்டியதை மறக்க முடியாது. அதிலும் எனது தோழி கலா " நீங்கள் சினிமாவிற்கு பாட்டு எழுத போகலாம் " என்று பாராட்டியதை மறக்க முடியாது...

அந்த வரிகள்...

அன்பாக உபசரித்து
ஆர்வத்துடனும்
இன்முகத்துடனும் அப்பா பேச
ஈடு இல்லாத சுவையோடு
உணவு வகை வகையாக சமைத்து
ஊட்டத்துடன் சித்ராவும் கலாக்காவும்
எனக்கு அளிக்க, மதனும் வந்து பஸ்
ஏற்ற, மறக்க முடியாத நாள் என்பதில்
ஐயம் இல்லை.
ஒவ்வொரு ஞாயிறுக் கிழமையும்
ஓடி வருவேன் உங்கள் இல்லத்திற்கு
ஒளவைத் தமிழைப் போல அந்த நாளை
அஃதே இனிக்க செய்த
. உங்கள் அனைவருக்கும் நன்றி !

1. இதில் வரிசையாக முதலில் நடந்தவைகளை வரிசையாக சொல்லி இருக்கிறேன்.
2. அவர்களுடைய பெயருடன் அவர்கள் செய்தவைகளை சொல்லும் போது அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
3. பேருந்தில் ஏற்றி விடுவது சின்ன வேலைதான் என்றாலும் அதை முக்கியமாக சொல்லுதின் மூலம் அவர்களின் நினைவில் என்னை நிறுத்தும்.
4. அந்த சூழ்நிலையில் நான் எவ்வாறு இருந்தேன் என்பது முடிவுரை.
5. அகர வரிசையில் எழுதியது சற்று கூடுதல் கவர்ச்சி...

(இன்னும் வளரும்...)

இளசு
09-04-2007, 10:35 AM
நிகழ்வுகளை அழகிய கவிதையாக்க
சொற்சுருக்கம், சொற்கோர்வை தவிர
நல்ல ரசனை, நல்லவற்றை மனம்விட்டுப்பாராட்டும் குணம்
அதைச் செயலாக்கும் முனைப்பு இவையும் வேண்டும்..

அமைந்தவர் கமலக்கண்ணன்..

கலாக்கா மகிழ்ந்து பாராட்டியது
வெறும் உயர்வு நவிற்சியல்ல..உண்மை!

kavitha
09-04-2007, 10:48 AM
தொடரும் இப்பதிவு புதியவர்களுக்கு நல்ல ஊக்கமருந்து.. :) தொடருங்கள். நன்றி

ஓவியன்
12-04-2007, 03:49 AM
கமலக் கண்ணன்!, அருமையாக இருக்கின்றது உங்கள் கவி வரிகளும் நீங்கள் அதனை விளக்கும் விதமும்.

வாழ்த்துகள் நண்பரே!

ஆதவா
13-04-2007, 12:35 PM
ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும், பார்வையிட்டு குறிப்பெடுத்த அனைவருக்கும் என் நன்றிகள்
உரித்தாகுகின்றன..
சரி... இந்த திரியின் மூலம் எனக்கேற்பட்ட அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது உதவும் என்று
நினைக்கிறேன்

நண்பர் ஒருவரிடம் இத்திரியைக் காண்பித்தேன். அவரும் படித்து விட்டு, எனக்கு கற்பனையே வரவில்லை என்றார்..
நானும் விடாமல், முயன்று பாருங்கள். சில கவிதைகள் எழுதிவிட்டாலே கற்பனை ஊறிவிடும் என்று அடித்துச்
சொன்னேன்.
அவர் சிரமப் பட்டு எழுதிய கவிதைதான் கீழிருக்கும் கவிதை.

என்னவளே!
என் அருகில் நீ இருப்பாய்
எனக்கு மறந்துபோகிறது
வாழ்க்கை..

இதுதான் அவர் எழுதிய முதல் கவி.. நன்றாக இருந்தாலும் சில திருத்தங்கள் செய்தேன்... முதலில் நான் எழுதியவற்றை
சரியாகப் படிக்கச் சொன்னேன்.. இயற்கையைக் கலந்து எழுதச் சொல்லி பதிவிட்டிருக்கிறேன். ஆனால் இந்த
கவிதையில் அது இல்லை. இயற்கை ஏதாவது ஒன்றை கலந்து எழுதச் சொன்னேன்... காரணம்.. ஒப்புமைகள் கவிதைக்கு
சற்று பொலிவைக் கொடுக்கும்..
கீழ்கண்ட திருத்தம் அவர் எழுதியது..

என்னவளே
என் அருகில் காற்றுபோல நீ இருக்கிறாய்
எனக்கு மறந்து போகிறது வாழ்க்கை

நான் இன்னும் முயன்று எழுதச் சொன்னேன்... வெறும் காற்று என்ற வார்த்தை மட்டுமே சேர்த்தியிருக்கிறார்.. அதிலும்
'போல என்ற வார்த்தையைக் குறைத்து எழுதச் சொன்னேன்.. இது இரண்டாம் நிலை.. கவிதையின் வார்த்தைகள்
குறைவாகவும் கருத்து அதிகப் படியாகவும் இருக்கவேண்டும்.. (இதைப் பற்றி விளக்கமாக பிறகு சொல்லுகிறேன்)
மீண்டுமொரு திருத்தம்

என்னவளே
அருகிலிருக்கிறாய் காற்றாக
மறந்துபோகிறது என் வாழ்க்கை

ம்ம்ம்ம்.... பரவாயில்லை... இருப்பினும் எனக்கு ஏதோ திருப்தி இல்லை. வார்த்தை குறைக்கப்பட்டாலும் இன்னும்
முயன்றிருக்கலாமோ என்று தோன்றியது... திரும்பவும் அவரை யோசிக்க வைத்தேன். முதலில் என்னவளே ஐ எடுக்கச்
சொன்னேன்.. அதற்குப் பிறகு அவரிட்ட வார்த்தை "காதலியே"

காதலியே!
அருகிலிருக்கிறாய் காற்றாக
பறந்துபோகிறது என் வாழ்க்கை
இலவம் பஞ்சாக

நான் சிரித்தே விட்டேன். நன்றாகத்தான் இருக்கிறது,. முதல் கவிதையை அப்படி இப்படியா கொண்டு வந்துவிட்டேன்
என்றாலும் எனக்கு திருப்தியில்லை, அவருக்கோ பரம் திருப்தி.... அங்கேதான் அவர் தவறு செய்கிறார்.. திருப்தியே
இருக்கக் கூடாது.. இன்னும் நன்றாக எழுதவேண்டும் என்ற தாகம் எப்போதும் இருக்கவேண்டும்.. நான் அவர் சென்ற
பிறகு சின்ன திருத்தம் செய்தேன்...
முடிவாக,

காதலியே!
அருகிலிருக்கிறாய் காற்றாக
பறந்துபோகிறது என் எண்ணங்கள்
இலவம் பஞ்சாக

எண்ணங்கள் என்ற வார்த்தை மட்டும் சேர்த்திருக்கிறேன்,... இது என் அனுபவம். ஆனால் அவரால் ஏதோ ஓரளவு
பேர்சொல்லும்படியான கவிதை எழுத வைத்தது என் வெற்றி.. கற்பனைகள் யாருக்கும் தானாக அமையாது. நாமாக
நினைக்கவேண்டும்.. நீங்கள் ஒரு தூசியைப் பார்த்தீர்களானாலும் அதை கவிதையின் இடையே சொறுகிக்கொள்ள
வேண்டும்... கவி எழுதுபவர்கள் எல்லோருமே கவிகள் தான்... ஆனால் ஏன் சிலர் மட்டும் வேறுபடுகின்றனர்?.. கற்பனை,
அதீத சிந்தனை, சிறப்பான கருத்து. இவற்றில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள்.. பிறந்தவுடனே வா அம்மாதிரி
ஆகிறார்கள்? இல்லை.

கற்பனை இல்லாத மனிதன் உலகிலில்லை, கற்பனை வந்தாலே கவிதை தானாக வரும்... இன்னும் மன்ற நண்பர்கள் சில
கவிதைகள் எழுதி எங்கள் மடலுக்கு இடுங்கள்... பெயர் இடாமல் அதை அலசுகிறோம்...

சித்திரை மாதம் தொடங்கி அடுத்த பாடங்கள்......

இளசு
13-04-2007, 04:28 PM
ஆதவனின் நண்பர் கொடுத்து வைத்தவர்..
அருகில் ஆதவன் இருந்தால்
எனக்கும் வரும்ப்பா... பல பா!

தொடரட்டும் இத்தொடர் - புத்தாண்டில் புதுவேகத்துடன்..

ஷீ-நிசி
16-04-2007, 03:59 AM
ஆதவன், பரவாயில்லையே! மிக அருமையாக இருந்தது அந்தக் கவிதை..

காதலியே!
அருகிலிருக்கிறாய் காற்றாக
பறந்துபோகிறது என் வாழ்க்கை
இலவம் பஞ்சாக

ரசித்தேன்!

உம்முடைய முயற்சியில் ஒரு வெற்றிக் கல்

இதை இப்படி மாற்றலாம்..

காதலியே!
அருகிலிருக்கிறாய் காற்றாக!
பறந்தன கவலை பஞ்சாக!

இதில், காற்றையும், அதனால் உண்டாகும் நிகழ்வையும் மையப்படுத்தி,
-------

காதலியே!
அருகிலிருக்கிறாய் காற்றாக!
வழிகிறது இன்பம் ஊற்றாக!

இதில் காற்றையும், ஊற்றையும், என்று சொல்லழகு படுத்தி...

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், சும்மாவா சொன்னாங்க!....

பழக பழகத்தான், கற்பனை கவிதையாய் வடியும்!

தொடருங்கள் ஆதவா!

ஆதவா
16-04-2007, 04:26 PM
நன்றிங்க ஷீ!! உங்கள் பாடமும் தொடரவேண்டுமென்பது என் குறிக்கோள்

ஓவியன்
21-04-2007, 06:54 AM
நன்றிங்க ஷீ!! உங்கள் பாடமும் தொடரவேண்டுமென்பது என் குறிக்கோள்

நிச்சயமாக ஆதவா!

தொடருங்கள் ஷீ-நிசி!

ஓவியா
22-04-2007, 06:51 PM
யப்பா.........
எல்லோரும் ஆகாயத்தில் கவிஜேட்டில் பறக்கின்றீர்கள். நான் தரையில் நடந்து செல்கிறேன்...ஒன்னுமே புரியலையே!!!!!!!!!

சிறப்பான திரி, தொடங்கிய ஆதவாவிற்க்கு பாராட்டுக்கள். கலந்து சிறப்பிக்கும் நண்பர்களுக்கு நன்றிகளுடன் பாராட்டுக்கள்.

RRaja
23-04-2007, 04:19 AM
இதப்படிச்சா நானும்கூட கவிதை எழுதிடுவேன்போல இருக்கு! நன்றி ஆதவா.

சுட்டிபையன்
23-04-2007, 04:54 AM
யப்பா.........
எல்லோரும் ஆகாயத்தில் கவிஜேட்டில் பறக்கின்றீர்கள். நான் தரையில் நடந்து செல்கிறேன்...ஒன்னுமே புரியலையே!!!!!!!!!

சிறப்பான திரி, தொடங்கிய ஆதவாவிற்க்கு பாராட்டுக்கள். கலந்து சிறப்பிக்கும் நண்பர்களுக்கு நன்றிகளுடன் பாராட்டுக்கள்.

அக்கா நீங்களாச்சும் தரைவில நடக்கிறீங்கள்
நான் தவண்டுதான் திரியுறேன்
ஆதாவாண்ண தயவிலதான் நிக்கவே போறேண்

ஆதாவாண்ணா பிரயோசமான தகவல், தொடர்க உங்கள் பணி:aktion033:

க.கமலக்கண்ணன்
25-04-2007, 09:21 AM
இந்த திரியில் படித்து பாராட்டினால் மட்டும் போதாது...

அனைவரும் கவிதை எழுதி கலக்க வேண்டும்...

அப்படி எழுதினால்தான் இத்திரிக்குமட்டும் அல்ல எங்களுக்கும் பெருமை...

lolluvathiyar
26-04-2007, 05:07 AM
ஒரு சந்தேகம்
காதல், ஆனந்தம், சோகம், வருமை
இந்த அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டும்
கவிதை வருகிறது.
கவிதையில் இதுவே பிரதானமாக இருகிறது

காதல் என்ற உனர்வு தான் கவிதை திறமையை கூர்மை ஆக்குமா
அல்லது காதல் கவிதை தான் ரசிக்கும் திறமையை கூர்மை ஆக்குமா

கவிதை கறந்து வந்தால் சிறப்பாக இருக்குமா
அல்லது சுர்ந்து வந்தால் சிறப்பாக இருக்குமா

என் குணம்
காம உனர்வுகள் அதிகம், ஆனால் காதல் உனர்வுகள் குறைவு
கவிதைகள் வாசித்திருகிறேன், ஆனால் யாசிக்கவில்லை
வருமையை சந்தித்திருகிறேன், ஆனால் வருமையின் கொடுமையை சந்திக்க வில்லை
பிரிவை சந்தித்திருகிறேன், ஆனால் பிரிவின் சோகத்தை சந்திக்கவில்லை
மதபற்று இருக்கு, ஆனால் பக்தி இல்லை
ஓட்டு போடுவேன், ஆனால் எந்த அரசியல் கட்சியையும் பிடிக்காது
நாட்டு பற்று இல்லை, ஆனால் தேச துரோகம் செய்யாதவன்.


இப்படி நான் செண்டிமெண்ட் இல்லாமலே வாழ்ந்தவன்.
சீக்கிரம் உனர்ச்சிவசபடுபவன், ஆனால் அதை கவனிக்க அறிவில்லாதவன்
என் போண்ற குண்ம் கொண்டவன் கவிதை எழுத வேண்டுமானால்,
எந்த வகையில் கவிதையை சிந்திக்கலாம்

ஷீ-நிசி
26-04-2007, 06:32 AM
உங்களை பற்றியே சிறிது நேரம் தனிமையில் சிந்தியுங்கள்.. உங்களைப் பற்றியே கவிதை வரைய முயற்சியுங்கள்... எதை நாம் நன்கு அறிந்திருக்கிறோமோ அதை கவிதையாக்கிட முயற்சித்தால், அருமையாக அமைந்திடும்.. முயற்சித்துப் பாருங்கள்.. வாத்தியாரே!

ஓவியன்
28-04-2007, 04:15 AM
உங்களை பற்றியே சிறிது நேரம் தனிமையில் சிந்தியுங்கள்.. உங்களைப் பற்றியே கவிதை வரைய முயற்சியுங்கள்... எதை நாம் நன்கு அறிந்திருக்கிறோமோ அதை கவிதையாக்கிட முயற்சித்தால், அருமையாக அமைந்திடும்.. முயற்சித்துப் பாருங்கள்.. வாத்தியாரே!

உண்மைதான் ஷீ-நிசி !

இன்னும் கொஞ்சம் விளக்கமாக உங்கள் அனுபவங்களை முன்வைத்தால் அது எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையுமே?

ஷீ-நிசி
28-04-2007, 04:34 AM
ஓவியன்.. நீங்கள் உங்களைப்பற்றி மிக அதிகமாய் அறிந்திருப்பீர்கள்... உங்களைப்பற்றி ஒரு கவிதை எழுதிட முயற்சித்தால் வரிகள் வார்த்தைகள் நிறைய கிடைக்கும்..

பிரியாணி செய்து பார்க்கணும்னு ஆசைப்பட்டா, அரிசி வாங்கனும், கறி வாங்கனும், பட்டை லவங்கம், அது இது எல்லாம் வாங்கனும்.. அப்பதான் பிரியாணி செய்ய முடியும்...

கவிதை எழுத விரும்பினால், எதைப் பற்றி எழுத விரும்புறோமோ அதைப் பற்றின சில விஷயங்களை சேகரிக்கனும்...

பிச்சைக்காரனைப் பற்றி கவிதை எழுத விரும்பினீங்கனா, முதல்ல, நீங்க போகிறபாதையில எதிர்ப்படும் பிச்சைக்காரர்களை பார்த்துக்கொள்ளுங்கள், (அவங்களை பின் தொடர சொல்லவில்லை) அவர்களின் தோற்றம், செயல் எல்லாம் மனதில் வாங்கிக்கொண்டு, ஏற்கெனவே நம் மனதில் அவர்களைப் பற்றி இருக்கிற எண்ணங்களையும் கலந்து, வார்த்தைகளை வரிகளாய் முன்னவும் பின்னவும் மாற்றி மாற்றி முயற்சித்துக்கொண்டிருந்தால், முதலில் ஒரு வடிவம் கிடைக்கும், அதை தட்டி, தட்டி செதுக்கி, பர்ஃபெக்ட் நிலைக்கு கொண்டுவரவேண்டும், எடுத்தவுடனே பர்ஃபெக்டாக அமையாது, கிடைக்கின்ற வடிவத்தை அந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்...

பழக பழகத்தானே குழந்தை கூட ம்மா விலிருந்து அம்மா என்று சொல்ல ஆரம்பிக்கிறது....

ஓவியன்
28-04-2007, 12:07 PM
அடடா அருமை ஷீ-நிசி!

கவிதை வரைவதும் கிட்டத் தட்ட ஒரு ஓவியம் வரைவது போல...
உங்களுடைய உதாரணம் அருமை.
நானும் வெகுவிரைவில் பிரியாணி சமைப்பேன் ஷீ-நிசி!

ஆதவா
02-05-2007, 07:32 AM
சில இன்னல்களில் என் மனதில் தொலைந்துபோனது என் பாடங்கள்... இன்று இரவு தொடரும்

ஓவியன்
02-05-2007, 07:33 AM
சில இன்னல்களில் என் மனதில் தொலைந்துபோனது என் பாடங்கள்... இன்று இரவு தொடரும்

தொடரட்டும் ஆதவா! - ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

வெற்றி
06-05-2007, 07:01 AM
எளிதாக சொல்லட்டுமா???(எனக்கு தெரிந்ததை)
வித்தியாசமாக சிந்தியுங்கள்...
சிந்தித்ததை உடனே பதிவு செய்யுங்கள்...(சிறிது தள்ளி போட்டாலும் அது பிழையாக தோன்றும்)
அதில் இருக்கும் நடை சரி தானா என மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள்...
அவ்வளவுதான்...கவிதை தயார்...
இது போல் சில பல கிறுக்கலுக்கு பின் நீங்களும் ஒரு கவிஞர்..
இறுதியாக ஒன்று...(இது கவிஞர்களை பற்றி ஒரு கவிஞன் தீட்டிய கவிதை)
பயங்கரமாய் பசிக்கும் போது
வயிறு முட்ட தண்ணீர் குடிப்பன்
ஒரு கவிஞனாகத்தான் இருப்பான்

ஓவியன்
06-05-2007, 07:09 AM
பயங்கரமாய் பசிக்கும் போது
வயிறு முட்ட தண்ணீர் குடிப்பன்
ஒரு கவிஞனாகத்தான் இருப்பான்

அட அருமை நண்பரே!:icon_clap:

poo
09-05-2007, 07:32 AM
மிக எளிதாக இதைவிட சொல்லித்தர முடியாது ஷீ..

உங்கள் ஈடுபாட்டில் மகிழ்கிறேன்.. தொடருங்கள் நண்பரே..

ஷீ-நிசி
09-05-2007, 07:48 AM
அடடா... நன்றி பூ... நீங்கள் எதுவும் கவிதை இலக்கணம் பேசாமலிருப்பதுதான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.. நீங்களும் உங்கள் இலக்கணங்களை சொல்லலாமே!

ஆதவா, இன்னும் இரவு வரவில்லையா??

ஓவியன்
09-05-2007, 07:52 AM
ஆமாம் பூ அண்ணா!

உங்கள் பாடங்களையும் தொடரலாமே??

அன்பு ஷீ உங்கள் அன்பினால் நானும் சொன்ன மாதிரி பிரியாணி தயாரிக்கத் தொடங்கி விட்டேன் என்று நினைக்கின்றேன். இனி நீங்கள் தான் சுவையைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

அறிஞர்
09-05-2007, 08:29 PM
அனைவரும் தயாரிக்கும் பிரியாணியை ருசிக்க நாங்க ரெடி...

ஆதவா
11-05-2007, 04:45 AM
இன்றோ அல்லது நாளையோ எழுதிவிடுகிறேன் நண்பர்களே! தடங்கலுக்கு வருந்துகிறேன்

leomohan
11-05-2007, 04:49 AM
ஓவியன்.. நீங்கள் உங்களைப்பற்றி மிக அதிகமாய் அறிந்திருப்பீர்கள்... உங்களைப்பற்றி ஒரு கவிதை எழுதிட முயற்சித்தால் வரிகள் வார்த்தைகள் நிறைய கிடைக்கும்..

பிரியாணி செய்து பார்க்கணும்னு ஆசைப்பட்டா, அரிசி வாங்கனும், கறி வாங்கனும், பட்டை லவங்கம், அது இது எல்லாம் வாங்கனும்.. அப்பதான் பிரியாணி செய்ய முடியும்...

....

ஷீ அம்பி கவிதையோட பிரியாணியும் நன்னா பண்ணுவார் போலிருக்கே. பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு

தாமரை
11-05-2007, 05:11 AM
இந்தத் திரி ஆரம்பித்த நாள் முதல் இன்றுதான் முதன் முறையாகப் படிக்கிறேன்...

ஆதவரே சரிதான்..

மக்கள் இருவகை
தன்னைச் சுற்றிப் பார்ப்பவர்கள்
தன்னுள்ளே பார்ப்பவர்கள்
சுற்றிப் பார்ப்பவர்களுக்குள்
வார்த்தைகள் உண்டு
கருத்துக்களை தேடுகிறார்கள்
உள்ளே பார்ப்பவர்களிடம்
கருத்துக்கள் உண்டு
வார்த்தைகளைத் தேடுகிறார்கள்..
ஒவ்வொருவருக்கும் தேடல்கள் வேறு..

என்னுடைய கவிதைகளில் பலவற்றைக் கண்டால்
நான் சுற்றிப் பார்ப்பவன் என்று புரியும்..

ஒரு கரு கிடைத்தால் அலசி ஆராய்ந்து
மெருகேற்றி என் எண்ணங்களை ஏற்றி
வடித்து முடித்து விடுகிறேன்..
ஏனென்றால்
என்னிடம் சொற்கள் உண்டு
அவைகளை அடுக்கி
அர்த்தம் கொடுத்தால் போதும்.

சில பல கவிதைகளை
உள்ளூர
ஊறவைத்து
களிமண்ணாய் பிடித்து
சிற்பமாக்கி இருக்கிறேன்..

இது போல இருவழிகளும்
இன்னும் பலவழிகளும் உண்டு..

ப்ரியா நீ கொடுத்த
பிரியாணி
வாழ்க்கைப் பாதையில் நாம்
சக பிரயாணி

என வர்த்தைகள் அடுக்குவது எளிதா அரிதா?

ஜின் ஜின்னா ஜாக்கடி
செவத்த பொண்ணு
சிரிக்க ஒரு ஜோக்கடி
ஃபன் ஃபன்னா பண்ணாடி
படுக்கப் போகும் முன்னாடி
கழட்டு உனக்கெதுக்கு கண்ணாடி

இப்படியெல்லாம் வார்த்தைக் கோலம் பொட்டு பார்த்தால் தவறா? இல்லையா?
தவறில்லை என்றுதான் சொல்லுவேன்.. தொண்டையில் அடைத்துக் கொண்டு வார்த்தைகளில் வருவதற்கு பல எண்ணங்கள் தவிக்கும்..
அவற்றைக் கொண்டு வரவேண்டுமெனில் வார்த்தைகளை உபயோகப்படுத்திப் பழகிக் கொள்ளல் வேண்டும்..

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

ஜெயாஸ்தா
11-05-2007, 06:51 AM
உச்சிமீது வானிடிந்து வீழ்ந்தது போலிருந்தது
உடனடியாய் ஒரு கவிதை வேண்டுமாம்....
உயிரைக் கேட்டால்கூட தருவேனே என்னுயிரே
உடனடி கவிதை கேட்டால் எப்படியடி?

தேமாவும் தெரியாது புளிமாவும் தெரியாது
எதுகையும் தெரியாது மோனையும் தெரியாது
தீபகற்பத்தை தீபாகற்பம் என்றெழுதி...
வகுப்பறைக்கு வெளியே முட்டியிட்டவன் நான்...!

சொந்தமாய் ஒரு கவிதை தந்தால்தால்தான்
பந்தமாவாய் என்னோடு என்றாயே....
கவிதை தராவிட்டால் கவிழ்ந்திடுமோ
நம் டைட்டானிக் காதல்....?

இரவு முழுவதும் முயற்சித்தேன்...
தூக்கம் துறவு கொண்டது!
பேனா பீரங்கியிலிருந்து காகிதகுண்டுகள்
என் அறைமுழுவதும் சிதறியது..!

எழுதுகோலால் நெற்றிதாக்கி யோசித்தபோது
என்னுள்ளே ஒரு ஞாபகமின்னல்...!
தமிழ்மன்றம்-கவிப்பட்டறை சென்று
கவியெழுதுவது எப்படி என்று பயின்றால் என்ன?

தண்ணியடித்தேன், டீக்குடித்தேன், புகைவிட்டேன்
கவிதை வரவில்லை, கடுமையான வாந்திதான் வந்தது...!
ஒன்றும் உதவவில்லை... ஒரு வரிகூட வரவில்லை
கவிதையெழுத என்னால் முடியவில்லை

கல்லூரிவரை காப்பியடித்தே தேறியவன்,
காதலுக்கு ஒரு கவிதை காப்பியடிக்க
மனசாட்சி தடுக்குதடீ... தோழீ- அந்த
மானங்கெட்ட கவிதை நமக்கு தேவையாடி?


கவியெழுதி தந்தால்தான் காதலென்றால்
காதலிக்க தகுந்தவர்கள் ஆதவனும், ஷீநிசியும்தான்...!
எனக்கு வேண்டாம் அந்த காதல்... போடி...
நான் தேடப்போறேன் வேறு ஜோடி....!



இந்தக் கவிதை எப்படி இருக்கிறது?

ஷீ-நிசி
11-05-2007, 08:58 AM
அருமையான கவிதை... உங்களுக்கு கவிதை மிக இயல்பாக வருகிறது நண்பரே! வாழ்த்துக்கள்!

அறிஞர்
11-05-2007, 01:55 PM
வாவ்... அருமை ஜே.எம்.... துரித உணவு.... பிரியாணியை தூக்கி சாப்பிடும் போல் உள்ளது.. தொடருங்கள்..

அறிஞர்
11-05-2007, 01:57 PM
ஒரு கரு கிடைத்தால் அலசி ஆராய்ந்து
மெருகேற்றி என் எண்ணங்களை ஏற்றி
வடித்து முடித்து விடுகிறேன்..
ஏனென்றால்
என்னிடம் சொற்கள் உண்டு
அவைகளை அடுக்கி
அர்த்தம் கொடுத்தால் போதும்.

சில பல கவிதைகளை
உள்ளூர
ஊறவைத்து
களிமண்ணாய் பிடித்து
சிற்பமாக்கி இருக்கிறேன்..

இது போல இருவழிகளும்
இன்னும் பலவழிகளும் உண்டு..

ப்ரியா நீ கொடுத்த
பிரியாணி
வாழ்க்கைப் பாதையில் நாம்
சக பிரயாணி

என வர்த்தைகள் அடுக்குவது எளிதா அரிதா?

ஜின் ஜின்னா ஜாக்கடி
செவத்த பொண்ணு
சிரிக்க ஒரு ஜோக்கடி
ஃபன் ஃபன்னா பண்ணாடி
படுக்கப் போகும் முன்னாடி
கழட்டு உனக்கெதுக்கு கண்ணாடி

இப்படியெல்லாம் வார்த்தைக் கோலம் பொட்டு பார்த்தால் தவறா? இல்லையா?
தவறில்லை என்றுதான் சொல்லுவேன்.. தொண்டையில் அடைத்துக் கொண்டு வார்த்தைகளில் வருவதற்கு பல எண்ணங்கள் தவிக்கும்..
அவற்றைக் கொண்டு வரவேண்டுமெனில் வார்த்தைகளை உபயோகப்படுத்திப் பழகிக் கொள்ளல் வேண்டும்..

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
செல்வனின் கையில் சொற்கள்
எப்படி விளையாடுகிறது.....

அருமை செல்வன்....

மதி
11-05-2007, 02:01 PM
அட்டகாசமான கவிதை...ஜே.எம்.

ஆதவா
14-05-2007, 10:58 AM
வணக்கம் நண்பர்களே!
வெகு காலம் ஓடிவிட்டது இந்த பட்டறையில் பணியைச் சொல்லி.. சரி. இன்று நாம் எடுத்துக் கொள்ளும் பாடம் " வார்த்தை ". சொல்லின் செல்வர் தாமரைச் செல்வர் கொடுத்த பாடங்களில் அனுபவமும் முதிர்ச்சியும் அழகிய பாடமும் அடங்கியிருக்கிறது... அவர் சொன்னதிலிருந்து கவிதை எழுதுவதற்குண்டான அச்சம் தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். கவிஞர் ஜே.எம் அழகிய கவிதை எழுதிக் கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள்...

வார்த்தை :

கவிதைகளில் வார்த்தைகள் மிக முக்கியம். ஒரு கவிதையின் பலம் இவைகள். அதை சரியான முறையில் அடுக்கி அல்லது சரியான இடத்தில் சரியான வார்த்தை உபயோகித்து பழகவேண்டும்.. அதோடு எளிமையாகவும் எல்லாருக்கும் தெரியும் வலிய வார்த்தைகள் உபயோகிக்க வேண்டும்/

உதாரணத்திற்கு :

தூக்கம் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு சொல். சாதாரண வடிவம் இதையே வலிமையாக்குவது எப்படி?

தூக்கம் - எளிய சொல்
உறக்கம் - இதுவும்கூட
நித்திரை - " "

ஆழ்ந்த உறக்கம் - கொஞ்சம் வலியது
கடும் நித்திரை - கொஞ்சம் வலியது

இம்மாதிரி.. அதேபோல ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கும். பல வார்த்தைகளுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். உதாரணத்திற்கு

கோடி - பண எண்ணிக்கை, முனை, அல்லது மூலை

திரை - திரைச்சீலை, அலை (திரைகடல் ஓடியும்)

இன்னொன்று பாருங்கள். இவை பல பொருள் கொடுக்கக் கூடியவை

ஒற்று - தூது
ஒற்று - உளவு
ஒற்று - ஒற்றெழுத்துக்கள்
ஒற்று - ஒற்றியெடுக்கும்படி கட்டளை இடுதல்


இன்னும் சில பிரித்தால் பல பொருள் கொடுக்கக் கூடியவை./. இம்மாதிரி வார்த்தைகள் வைத்து எழுதும்போது கொஞ்சம் புரிவதில் சிரமம் இருக்க நேரிடும்,.

என்றாவது - என்றைக்கு, என்று ஆடு வருவது, என்று ஆவது,
தாயகம் - தாயின் உள்ளம், தாய்நாடு,
தாமரைச்செல்வன் - மான் போலத் தாவிச் செல்பவன், தம்மை குறையென்று நினைத்துச் செல்பவன், தாமரையின் செல்வன், இம்மாதிரி பல


இம்மாதிரி பல வார்த்தைகள் தெரிந்துகொள்வதோடு கொஞ்சம் கடினமான வார்த்தைகளான :

அந்தரம் - வானம்,
குருதி - ரத்தம்
அதரம் - உதடு,
உதிரம் - ரத்தம்
உதரம் - வயிறு,
தொ(து)ளை - ஓட்டை போடு (துளையிடு)
திரி - அலை (அலைந்து திரி), விளக்குத் திரி
மேவு - பரவு அல்லது பரவல்
புடை - அடித்தல் (அடி)
களி - விளையாடு பார்

போன்றவைகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும்

காதல் கவிதைகளில் நான் அதிகம் இம்மாதிரி வார்த்தைகள் கண்டதில்லை இத்தனைக்கும் இவையாவும் நமக்குத் தெரிந்த வார்த்தைகள் தான். புதுமைக் கவிஞன் பாரதியின் பாடல்கள் படித்தாலே போதுமே இந்த வார்த்தைகள் தானாய் வாயில் வரும்.

மேற்சொன்ன வார்த்தைகள் சில... இன்னும் எவ்வளவோ வார்த்தைகள் உண்டு. இவற்றை நிச்சயம் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை.. ஆனால் தொடர்ந்து இரண்டாம் வரி வார்த்தைகளே பயன்படுத்துவதற்கு மாற்றாக பயன்படுத்தலாம் அல்லவா? தமிழில் வார்த்தைகள் தெரியாவிடில் சட்டெனவோ அல்லது அழகாகவோ நல்ல கவிதை எழுதமுடியாது. சொற்களஞ்சியம் நம்முள் வரவேண்டும். இதற்காக தமிழ் அகராதி தேடவேண்டிய அவசியமில்லை. இம்மாதிரி கடின வார்த்தைகளோடு கவிபாடும் சிலரின் கவிதைகளைக் கேட்டு அது என்ன வார்த்தை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். என்னால் முடிந்தவரை உதவமுடியும். அல்லது பாரதி, பாரதிதாசன், போன்றவர்கள் மற்றும் மரபுக் கவிதை எழுதுபவர்கள் அல்லது கடினவார்த்தையில் வலுவான கருத்து சொல்லும் கவிஞர்கள் புத்தகங்களைப் படித்து தெரிந்துகொள்ளலாம்.

இவற்றால் நமக்கு பல பயன்கள் உண்டு..

வெகு சீக்கிரத்தில் ஒரு கவிதை பாடலாம்
அழகான வார்த்தை அமைப்பில் கவிதை உண்டாக்கலாம்
கவிதை விளையாட்டுக்கள் அரங்கேற்றலாம்
சொல் விளையாட்டுக்கள் ஏற்படுத்தலாம்
புதுமையாக எதுவும் செய்யலாம்.வார்த்தைக் களஞ்சியமில்லையேல் எடுபடாமல் போகும் கவிதைகள் ஏராளம். ஆனால் புதுமைக் கவிகளில் எளிமை புகுத்தவும் தவறக்கூடாது. சரி ஒரு கேள்வி எழலாம்.. மேற்சொன்ன வார்த்தைகள் சாதாரண பாமர மக்களுக்குத் தெரியவாய்ப்பில்லையே என்று,
நாம் எழுதும் கவிதைகளை ஒருவேளை புத்தகமாய் வெளியிடும் பட்சத்தில் இந்த பாமர மக்களா வாங்குவார்கள் ? இல்லை.. தொண்ணூறு சதம் கவிதை எழுதுபவர்களும் மிக மிக கவிதை விரும்பிகளும்தான்.. சினிமா புத்தகங்கள் வாங்கும் நம் நாட்டில் கவிதை புத்தகங்கள் தோற்றுவிடுகின்றன. அதனால் பயப்படாமல் எழுதலாம். அடுத்தவருக்குப் புரியவேண்டும் என்பதில் கவனம் கொண்டு கருத்தை சுமாராகச் சொல்லக் கூடாது,. அது மிக முக்கியம். கவிச்சமர் போன்றவற்றில் பங்கேற்று சிறப்பாக போரிடவேண்டுமென்றால் நிச்சயம் வார்த்தைகள் அதிகம் தெரிந்துவைத்திருக்க வேண்டும். பழகு தமிழ் மிக எளிது என்பதாலும் பழைய வார்த்தைகள் பல இன்னும் உயிரோடு இருப்பதாலும் எளிதில் நாம் கற்றுக் கொள்ளலாம். தமிழுக்கு வசதியே அதுதான்.


இனி அடுத்து எதுகை மோனைகள் போன்ற இலக்கணங்களை புதுக்கவிதையில் எப்படி புகுத்தலாம் என்று பார்க்கலாம்.

சூரியன்
17-05-2007, 01:43 PM
ஆதவா உங்களின் இந்த திரி மிகவும் பயனுள்ளதாக உள்ளாது உங்களின் முயற்சிக்கு மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் இந்த மகத்தான பணி

ஆதவா
17-05-2007, 02:41 PM
நன்றி மிக்கி... கவிப்பட்டறையில் உளி என்று புதிதாக எழுதப் போகிறேன். அதையும் சேர்த்து படியுங்கள்....

நண்பர்களே! என்னாச்சு? இந்த பக்கம் கொஞ்சம் எட்டிப் பாருங்க... கஷ்ரப்பட்டு எழுதியிருக்கேன்.. நன்றி

lolluvathiyar
20-05-2007, 08:38 AM
அன்புள்ள ஆதவா
ஏதோ என்னால் முடிந்த வரை ஒரு சில கவிதைகளை
உங்கள் ஊக்குவிப்பின் விளைவு எழுத முடிந்தது.
முதல் இரு கவிதை எழுதியவுடன் பெரும் சந்தேகம் வந்து விட்டது

இரவு சில கவிதைகள் யோசித்தால், காலையில் அவை நினைவில் வருவதில்லை.

ஏதாவது கவிதை எழுதலாம் என்று யோசித்தால் எனக்கு கவிதை தோன்றுவதில்லை.


கவிதை பதியாமல் சும்மா டைப் பன்னி விட்டு
சிறிது நேரம் கழித்து அதை மேம்படுத்தலாம்
என்று முயன்றால் அனைத்து வரிகளும் அழிக்க பட்டு விடுகின்றன


ஆனால் தமிழ் மன்றத்தில் சுத்தி கொண்டிருக்கும் போது தீடிரென ஏதாவது கவிதை வருது
அந்த மாதிரி கவிதைகள் தான் நான் எழுதிய காதலித்தால், காலை எழுந்தவுடன், அவரச அட்வைஸ்

ஏண் இப்படி, ஆழம் யோசித்து எழுதினால் சிறப்பாக வருமல்லவா, இந்த ஸ்டைல் சரியானதா.

யாராவது விளக்கவும்

ஷீ-நிசி
20-05-2007, 09:20 AM
இரவு நேரங்களில் உங்களுக்கு தோன்றும் சில வரிகளை மறக்காமல் இருக்கு அப்படியே உங்கள் மொபைலில் பதித்து கொள்ளுங்கள்... முடிந்தால் ஒரு பேனா, பேப்பர் வைத்துக்கொண்டு அதை தொடர முயற்சியுங்கள் வாத்தியாரே!

சூரியன்
20-05-2007, 09:40 AM
எளிய மற்றும் சிறந்த வழி உங்கள் ஒய்வு நேரங்களில் ஒரு குறிப்பிட்ட கருவை வைத்து கவிதை எழுத முயற்சிசெய்யுங்கள் நான் அப்படி தான் செய்கிறேன்.

தாமரை
22-05-2007, 01:51 PM
கவிச்சமர் ஒரு நல்ல பட்டறையாக் இருக்கிறது.
கவி எழுத முயற்சி செய்வோர், கவிப்போர், கவிச்சமர் போல சில பகுதிகளில் பங்களிக்கலாம்.

அமரன்
12-06-2007, 09:02 PM
ஐயகோ நான் கவிதை எழுதப்படிப்பதர்கு முன்னர் பள்ளியை மூடி விட்டார்களே! என் செய்வென். என் கவிதைப் பாடம் அரையாக நிற்கின்றதே! ஆதவா,நிஷி,செல்வர்,இளசு,லெனின் இன்னும் பலர் எங்கே. பள்ளிக்கூடம் மீண்டும் எப்போ திறக்கும். சீக்கிரம் திறந்து விடுங்கள்.

ஓவியன்
17-06-2007, 12:28 PM
கவிச்சமர் ஒரு நல்ல பட்டறையாக் இருக்கிறது.
கவி எழுத முயற்சி செய்வோர், கவிப்போர், கவிச்சமர் போல சில பகுதிகளில் பங்களிக்கலாம்.

உண்மைதான் அண்ணா!

நான் அனுபவத்தில் கண்ட உண்மை இது!, தத்தித் தவறிக் கவி எழுத முற்பட்ட நான் இந்தக் கவிச் சமரால் இப்போது ஓரளவு நானும் கவி எழுதுவேன் என்ற நம்பிக்கையைப் பெற்றுள்ளேன் - அதனைச் சாதித்தது கவிச் சமரே!

ஆதவா
17-06-2007, 04:15 PM
ஐயகோ நான் கவிதை எழுதப்படிப்பதர்கு முன்னர் பள்ளியை மூடி விட்டார்களே! என் செய்வென். என் கவிதைப் பாடம் அரையாக நிற்கின்றதே! ஆதவா,நிஷி,செல்வர்,இளசு,லெனின் இன்னும் பலர் எங்கே. பள்ளிக்கூடம் மீண்டும் எப்போ திறக்கும். சீக்கிரம் திறந்து விடுங்கள்.

மே மாச விடுமுறைங்க.... பொறுங்க. நேரம் கிடைக்கட்டும். எழுதுகிறேன்..

aren
12-07-2007, 04:00 AM
இதுவரை இந்தப் பக்கமே தலை காட்டாமல் இருந்தேன். நேற்று நீங்களும் ஓவியனும் கொடுத்த தைரியத்தில் இந்த பக்கம் வந்து உங்கள் பதிவை படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

நான் ஒரு வரியாவது எழுதவேண்டும் என்ற ஆசை. உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்து தெரிந்துகொண்டு நிச்சயம் எழுதமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்.


உங்கள் பதிவு நிஜமாகவே அசத்த வைக்கிறது ஆதவன். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஆதவா
12-07-2007, 04:57 AM
இதுவரை இந்தப் பக்கமே தலை காட்டாமல் இருந்தேன். நேற்று நீங்களும் ஓவியனும் கொடுத்த தைரியத்தில் இந்த பக்கம் வந்து உங்கள் பதிவை படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

நான் ஒரு வரியாவது எழுதவேண்டும் என்ற ஆசை. உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்து தெரிந்துகொண்டு நிச்சயம் எழுதமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்.


உங்கள் பதிவு நிஜமாகவே அசத்த வைக்கிறது ஆதவன். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்



அண்ணா.. சில*ர் சொல்வார்க*ள். மோதிர*க்கையில் குட்டு வாங்கினால் சுக*ம்தான் என்று... ஆனால் அதே மோதிர*க்கையில் வாழ்த்து வாங்கினால்?? அந்த* நிலைதான் என*க்கு.. உங்க*ள் ஆசியும் பாராட்டும் இருக்கும் வ*ரை நான் அச*த்திக் கொண்டே இருப்பேன்.. மேலும் ம*ன்ற*மும் ந*ண்ப*ர்க*ளும் ம*ட்டுமே இந்த* நிலைக்குக் கார*ண*ம் என்ப*தை ம*றுக்க* முடியாது..

இந்த* ப*குதியைத் தொட*ர்கிறேன்.

அமரன்
12-07-2007, 08:53 AM
ஆரென் அண்ணா இத்திரி படித்து கவிதை எழுதியவன் நான். இதைபடித்து நீங்களும் எழுதினால் மிகவும் சந்தோசப்படுவேன்.

kalaianpan
09-08-2007, 06:49 PM
ஆதவன் சார் உங்க கைய கொடுங்க சார்.
புதியவன் நான்.....
இப்படியான வழிகாட்டலை தேடுகிறேன்.......
நானும் ஏதாவ*து ப*டைக்க....
நன்றி.

இன்னும் சொல்லித்தாருங்கள்...............

ஆதவா
09-08-2007, 07:57 PM
கலையன்பன். சார் எல்லாம் வேண்டாம்... சொல்லப்போனால் உங்களைக் காட்டிலும் வயதில் சிறியவனாகவே நான் இருக்கக் கூடும்.. இன்னும் தொடருவேன்.. (நினைவூட்டியமைக்கு நன்றி.)

அமரன்
09-08-2007, 07:59 PM
ஆமா கோடை விடுமுறைன்னு சொன்னவர் ஆரம்பிக்கவில்லை...இப்போதாவது இந்தப்பக்கம் வந்தாரே..!

ஓவியன்
09-08-2007, 08:00 PM
ஹா ஆதவா!

நிறைய விடயங்கள் விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன போல, நேரங்கிடைக்கையில் பதிவுகளாக்குங்கள், பலருக்கும் பயன் தரும்.

ஆதவா
09-08-2007, 08:08 PM
நண்பரே! இன்னும் சில விஷயங்கள் மனதில் நினைத்து வைத்திருக்கிறேன்... அவைகளை நாளையாவது தருவதற்கு முயற்சிக்கிறேன்.... எனது அடுத்த பெரிய பதிவு இதுவாகத்தான் இருக்கும்..

ஓவியன்
09-08-2007, 08:14 PM
தாருங்கள் ஆதவரே − ஆவலுடன் காத்திருக்கிறோம்.

ஆதவா
07-09-2007, 07:44 AM
நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன். மன்னிக்கவும்.

கவிதை எழுதுவதில் சில வழிமுறைகளைக் கண்டிருப்பீர்கள். எனக்குத் தெரிந்து என்ன இருக்கிறதோ அதை மட்டுமே கொடுத்து வருகிறேன். அதற்கு மேலும் பல விஷயங்கள் உள்ளன.. இப்போது கவிதையில் எதுகைகள் மோனைகள் அமைத்து கொஞ்சம் அழகு படுத்தலாம்./

எதுகைகள் என்பது என்ன? இலக்கணத்தில் தொடை என்று சொல்வார்கள். பல தொடைகள் உள்ளன. இப்போதைக்கு அது தேவையில்லை. பிறிதொரு நாள் கவனித்துக் கொள்ளலாம்.. ஒரு வார்த்தையில் இரண்டாம் எழுத்து ஒன்று போல அமைந்திருந்தால் அது எதுகை எனப்படும்.. இது கவிதை அல்லது செய்யுள் படிப்பதற்கு வசதியாகவும் அழகாகவும் இருக்கும். உதாரணத்திற்கு

ஆற்று மணற்பரப்பில் - நாம்
அன்புற்ற ஞாபகங்கள்
நேற்று நிகழ்ந்தவைபோல் - என்
நெஞ்சை அழுத்துமடி - வைரமுத்து.

ஆற்று
நேற்று, இவ்விரு வார்த்தைகளில் இரண்டாமெழுத்து ஒன்று போல் அமைந்திருக்கிறது (ற்) அல்லவா? ஆகவே அது எதுகை எனப்படும்.. இது கவிதைகளை அழகு படுத்த.... ஷீ-நிசி கவிதைகள் பெரும்பாலும் எதுகைகள் அமைத்து காணப்படும்..

மீண்டும் வா...
மீண்டும் எனைத்
தீண்ட வா..

இம்மாதிரி வார்த்தைகளை முதலில் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். வார்த்தைகள் இல்லாமல் கரு இருப்பினும் கவிதை எழுத முடியாதல்லவா? இதற்கு எப்படி பயிற்சி எடுத்துக் கொள்வது? ஒரு வார்த்தை மனதினுள் நினைத்துக் கொள்ளுங்கள். அதனோடு தொடர்புடைய வார்த்தைகளை நீங்களாகவே சொல்லிப் பாருங்கள். உதாரணத்திற்கு

"பஞ்சு" என்ற வார்த்தையை நினைத்துக் கொள்ளுங்கள்... அப்படியே கீழ்கண்டவாறு சொல்லிப் பாருங்கள்

பஞ்சு
நெஞ்சு
அஞ்சு
குஞ்சு
மஞ்சு
நஞ்சு
இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று நம் தமிழ் வார்த்தைகள் எல்லாமே க,ச,ஞ,த,ந,ப,ம,ர,வ, மற்றும் உயிரெழுத்துக்கள் ஆகிய எழுத்து வரிசைகளில் மட்டுமே தொடங்கும். ஆகவே மற்ற வார்த்தைகளோடு நினைப்பதை விட்டுவிடலாம்.. உதாரணத்திற்கு

கஞ்சு
சஞ்சு
ஞஞ்சு
தஞ்சு
நஞ்சு
பஞ்சு
மஞ்சு
ரஞ்சு
வஞ்சு

இதில் சில வார்த்தைகள் தமிழில் இருக்கிறதா என்று யோசனை வந்தால் உடனே அதை அழித்து விட்டு வேறு இடுங்கள்.

கஞ்சு - கஞ்சி
சஞ்சு - சஞ்சலம், சஞ்சு என்ற வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கிறது,
ஞஞ்சு - நிச்சயம் இருக்காது.
தஞ்சு - தஞ்சம்
ரஞ்சு - ரஞ்சனி, ரஞ்சி
வஞ்சு - வஞ்சம்,

இதேபோல எல்லா வரிசைகளிலும் முயற்சி செய்தால் நிச்சயம் வார்த்தைகள் கிட்டும்.. பெரும்பாலும் நமக்குத் தெரிந்த வார்த்தைகளே சிக்கும்......... இந்த பயிற்சி அவசியம்..

சரி.. வார்த்தைகள் தெரிந்துகொண்டால் எழுதிவிடமுடியுமா?

மிகச் சரியான பொருத்தம் அமைக்கவேண்டும். கவிதையில் தான் எதுகைகள் இருக்கவேண்டுமே தவிர எதுகையில் கவிதை இருக்கக் கூடாது. கவிதையோடு வார்த்தைகள் ஒட்டியிருக்கவேண்டும். தனித்து தெரியக்கூடாது.

தங்கத்தாமரை நிலவோ அவள்
அங்கத்தால் மதி களவோ?
நெஞ்சத்தே ஒரு பனியோ அவள்
வஞ்சித்தால் ஒரு பணியோ?

முதலிரண்டு அடிகளில் முதல் வார்த்தையில் (சீர்) கவனியுங்கள். அதே சமயம் நிலவோ, களவோ, பனியோ, பணியோ ஆகியவையும் சந்தங்களே! எதுகைகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.. அவை ஒரே சப்தத்தைக் கொடுக்கின்றன. மேலும் ஒரு கவிதையை எதுகைகள் கெடுத்து விடக்கூடாது. அதில் நாம் முனைப்பாக இருக்கவேண்டும். எதுகைகள் வாராவிடில் அப்படியே கவிதை எழுதலாம். அவற்றை வைத்தே எழுத வேண்டும் என்ற அவசியமில்லை. அது முகத்திற்குப் போடும் முகச் சாயம் போலத்தான்... வெறும் அழகுக்கு மட்டுமே பயன்படும்.

நீங்கள் முயற்சி செய்து அதன் பலனை எனக்குச் சொல்லுங்களேன்..

கற்பனை வராதவர்களுக்கு அடுத்த பாகம் முதல்...

கலைவேந்தன்
07-09-2007, 03:33 PM
மிக பயனுள்ள தொடர் ஆதவா!
நான் ஆரம்பத்திலிருந்து படித்துவிட்டு என் கருத்துக்களையும் எழுதுகிறேன்!

மலர்
09-09-2007, 08:49 AM
கற்பனை வராதவர்களுக்கு அடுத்த பாகம் முதல்...

பாக்கலாம் இனிமேலாவது உதிக்குதான்னு...........

அக்னி
09-09-2007, 08:54 AM
பாக்கலாம் இனிமேலாவது உதிக்குதான்னு...........
உதிக்கும்... உதிக்க வேண்டும்...
கவிதாயினி மலர் ஆக வாழ்த்துக்கள்...

மலர்
09-09-2007, 08:58 AM
உதிக்கும்... உதிக்க வேண்டும்...
கவிதாயினி மலர் ஆக வாழ்த்துக்கள்...

கேட்கும் போதே ரொம்ப சந்தோசமா இருக்கு...
நன்றி அக்னியாரே....உங்கள் வாழ்த்தே என்னை மாற்றும்..

அக்னி
09-09-2007, 09:10 AM
கேட்கும் போதே ரொம்ப சந்தோசமா இருக்கு...
நன்றி அக்னியாரே....உங்கள் வாழ்த்தே என்னை மாற்றும்..
இத்திரியின் வழிநடத்தல்கள், உங்கள் முயற்சி என்பன வெற்றியைத் தரும்...

ஓவியன்
10-09-2007, 03:09 AM
மிக பயனுள்ள தொடர் ஆதவா!
நான் ஆரம்பத்திலிருந்து படித்துவிட்டு என் கருத்துக்களையும் எழுதுகிறேன்!
ஆகட்டும் கலை கவிதை எழுதுவதில் உங்களது முறைகளையும் அறிய மிக்க ஆவல்.........!!

உதிக்கும்... உதிக்க வேண்டும்...
கவிதாயினி மலர் ஆக வாழ்த்துக்கள்...

ஆமா, ஆமா!!!
கவிதாயினி மலருக்கு முன் வாழ்த்துக்கள்.............!!! :smartass:

அமரன்
10-09-2007, 10:37 AM
அப்பாடா பள்ளிக்கூடம் மீளத்திறந்தாச்சா. வாத்தியாரே நடத்துங்க.

ஆதவா
11-09-2007, 02:10 PM
அனைவருக்கும் நன்றி.....

எனக்குத் தெரிந்த நண்பர் ரொம்ப பிரயத்தனப்பட்டு கவிதை எழுத முற்பட்டார். ஆனால் அவரால் முடியவில்லை.. அவருக்கு கற்பனையே தோன்றவில்லை.. அவரிடம் ஒரு மரத்தைப் பார்த்து என்ன தெரிகிறது என்று கேட்டால், மரம், கிளைகள், மலர்கள், இலைகள் ஆகியவை மட்டுமே தெரிகிறது என்கிறார்... கவிஞன் என்பவன் எல்லாவற்றையும் கற்பனை செய்தாகவேண்டுமா? இல்லை. வார்த்தைகளை அடக்கி எழுதத் தெரிந்தவன் கவிஞன்.. அவ்வளவே.. பிறகு நான் சொன்னேன். அந்த மரத்தில் காம்பொடிந்து இலைகள் விழுகின்றன, மலர்களின் சோம்பல் முறிந்து புத்துணர்ச்சி தருகின்றன. வண்டுகளின் காதலில் தேன் ஒழுகிக் கொண்டிருக்கின்றன. காற்றோடு கலந்து காதால் அறியா ஒரு பாடலை அந்த மரமே பாடிக் கொண்டிருக்கிறது என்று..... என்னை விட நல்ல கவிஞன் அதை இன்னும் கவனித்திருக்கக் கூடுமல்லவா...

சரி. இப்படிப்பட்டவர்களை எப்படி தயார்படுத்துவது? கவிதைக்குள் அலங்காரப்படுத்தத் தெரியாதவரை எப்படி உபயோகப்படுத்தலாம். அவர் கண்ட காட்சியைக் கவிதைப்படுத்தச் சொல்லலாமே! உங்களுக்கு எதுவுமே தோணாவிடில் நீங்கள் காண்பவற்றை காட்சிப்படுத்தி கவிதைபடுத்துங்கள்... அது முதல் அடியாக இருக்கும்...

எங்கள் வீட்டுப் பகுதியில் இரவு ஒரு ஆவி நடமாடுவதாக வதந்தி பரவியது. எனக்குத் தெரிந்து ஒன்றுமே இல்லை. வெறும் நாய்கள் தான் குலைத்துக் கொண்டு இருக்கும். இதை எப்படி கவிதை ஆக்கலாம்? அந்த இடத்தில் என்ன என்ன தோன்றியது.??

இரவு நேரத்தில் ஆவிகள்
உலாவுகின்றன
நாய்கள் குலைக்கின்றன,
மக்கள் பீதியில் இருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு கவிதையா என்று கேலியாக பேசவேண்டாம்.. ஏனெனில் இது முதல் அடி இது ஒரு காட்சி,. அவ்வளவே. இதில் கரு இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் அந்த காட்சியை மக்கள் நினைக்கும் வகையில் செய்யவேண்டும். அதில் தான் கவிஞனின் திறமை இருக்கிறது, மேலும் அந்த காட்சியில் என்னென்ன இருக்கின்றது?

இரவு நேரத்தில் ஆவிகள்
உலாவிறதாம்.
ஊருக்குள் வதந்தி
நாய்கள் மட்டுமே நடமாடுகின்றன.
மக்கள் எவரும் தலை காட்டவில்லை
ஒரே பீதி.

மேலும் அந்த காட்சியில் வேறு எது இருந்தாலும் இடலாம்... பெரும்பாலும் கவிதையை சுருக்குவதில் நம் கவனம் இருக்கவேண்டும்.. தரம் கெடக்கூடாது.... சற்றே மாற்றியமைத்துப் பார்ப்போமா?

இரவு நேரத்தில்
ஆவிகள் உலாவுவதால்
நாய்கள் குலைக்கின்றன.
ஊர் அடங்கியிருக்கிறது.

இன்னும் கவிதை வடிவம் தரவில்லை. எனினும் கருவை சுற்றீ வார்த்தைகளை சுருக்கிவிட்டோம்... ஏதேனும் கருத்து சொல்லுவதைப் போல இருக்க வேண்டும். அதேசமயம் "நாய்கள் குலைக்கின்றன" என்பது பழைய வாக்கியம். சற்று மாற்றியமைத்தால் " நாய்கள் ஓலமிடுகின்றன " என்று வரும்... அதைப் பொருத்திப் பார்த்தால்,

இரவு நேர
ஆவிகளின் உலாவலில்
ஊர் அடங்கிப் போகிறது
அங்கங்கே நாய்களின்
ஓலங்கள் மட்டும்
அடங்குவதேயில்லை.
இது உங்களுக்கு கவிதையாகத் தெரிந்தால் நீங்கள் எழுதுங்கள். ஒருவிஷயம் கவனிக்கவேண்டும். இதில் ஆவிகள் உலாவுவதை நியாயப்படுத்துவதாகத் தெரியும். ஆனால் நாய்கள் ஓலங்கள் மூலம் அவை பொய் என்ற மறைமுக செய்தி அடங்கியிருப்பதை உணரவேண்டும்.

கண்ணால் கண்டவற்றை கவிதை படுத்துங்கள்... கற்பனை அவசியமில்லை.. இதற்கு மேலும் உதாரணங்கள் அடுத்த பாகத்தில்.. இன்னொருவரின் கவிதையோடு

aren
12-09-2007, 07:29 AM
அருமை ஆதவா. ஆனால் படிக்கும் பொழுது எளிதாகத்தான் தெரிகிறது. ஆனால் எழுதும்பொழுது.....

அமரன்
12-09-2007, 07:37 AM
அருமை ஆதவா. ஆனால் படிக்கும் பொழுது எளிதாகத்தான் தெரிகிறது. ஆனால் எழுதும்பொழுது.....
இன்னும் இலகுவாக இருக்கும்...

சிவா.ஜி
12-09-2007, 07:42 AM
இரவு நேர ஆவி உலாவல்
நாய்களின் ஓலங்களில்
மட்டுமே காண முடிகிறது
காணாத ஆவியால்
காலியான வீதி.....!

ஆசிரியர் ஆதவா இது பரவாயில்லையா...?

aren
12-09-2007, 03:01 PM
இன்னும் இலகுவாக இருக்கும்...

வெந்த புண்ணில் நீங்கள் வேறு வேல் பாய்ச்சுகிறீர்கள். முடியைப் போட்டு பிச்சுக்கிறது எங்களுக்குத்தான் தெரியும்.

ஆதவா
18-09-2007, 11:35 AM
அருமை ஆதவா. ஆனால் படிக்கும் பொழுது எளிதாகத்தான் தெரிகிறது. ஆனால் எழுதும்பொழுது.....

அண்ணா. இன்று நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்.... இன்னும் கொஞ்சம் வார்த்தை சுருக்கம் வேண்டுமென்று நினைக்கிறேன்... என்றாலும் உங்கள் கவிதைக் காடு மிக அதிவேக வளர்ச்சியில் இருக்கிறது.. உங்களிடம் கருக்கள் அதிகமுண்டு..... அதனால் பிரச்சனையில்லை....

ஆதவா
18-09-2007, 11:40 AM
இரவு நேர ஆவி உலாவல்
நாய்களின் ஓலங்களில்
மட்டுமே காண முடிகிறது
காணாத ஆவியால்
காலியான வீதி.....!

ஆசிரியர் ஆதவா இது பரவாயில்லையா...?

ஆசிரியர் என்றே முடிவு கட்டிவிட்டீர்களா.... அதற்கு தகுதி துளிகூட இல்லைங்க சிவா அண்ணா.. ஒவ்வொருமுறையும் எழுதும்போதும் பயம் கலந்தே எழுதுகிறேன்....

உங்கள் கவிதை இன்னும் சற்று மாற்றியமைக்கலாம்....(என் கருத்து..)

நாய்களின் ஓலங்களால்
வீதெயெங்கும் சூன்யம்
ஆவியைக் காணவில்லை..
------------------------
இரவில் ஆவிகள் நடமாட்டங்கள்
நாய்களின் ஓலங்கள்
வெறுமையான வீதிகள்
வீண் பயத்தில் மக்கள்
------------------------
ஆவியெனும் புரளியில்
அச்சம் மக்களுக்கு
நாய்களுக்கில்லை.
---------------------

இப்படி பல ரூபங்களில் கொண்டு செல்லலாம்.....

ஆதவா
18-09-2007, 11:41 AM
காட்சிபடுத்தும் கவிதைகள் : இரண்டாம் வகை.

இந்த பதிவு எழுதுவதற்கு முன்னர் அலுவலகத்தில் மின்சாரமில்லை. அது இரவு நேரம். ஒரே புழுக்கமாக இருந்தது... உடனே எனக்குத் தோன்றிய எண்ணம்..

இரவு நேரத்தில் மின்சாரத் தடை
இருக்கும் இடத்தில்
ஒரே புழுக்கம்
அதனால் வியர்வை.

இதுதான் செய்தி. இங்கே "இருக்கும் இடத்தில்" தேவையில்லை. ஏனெனில் நாம் இருக்கும் இடத்தில் தான் மின்சாரத்தடை என்பதால் அந்த வார்த்தைகள் தேவையில்லை. படிப்பவர் நெஞ்சில் தானாகவே அந்த வரி அமைந்துவிடும்.. அடுத்து, புழுக்கத்தால்தான் வியர்வை வரும். ஆகவே புழுக்கம் என்ற வார்த்தையும் கட்.

இரவு நேரத்தில் மின்சாரத் தடை
அதனால் வியர்வை.

இன்னும் கவிதை வடிவம் வரவில்லை. "வியர்வை வழிகிறது" என்று இடுவோமா?

இரவு நேரத்தில்
மின்சாரத்தடை
வியர்வை வழிகிறது.

வியர்வை வழிகிறது என்ற வார்த்தை அதிக உபயோக வார்த்தையாக இருக்கலாம். சற்றே மாற்றினால் வடிகிறது என்று வரும்.. இல்லையா?, அதேசமயம் மேற்கண்ட கவிதை சற்றே வார்த்தைகள் ஒட்டாமல் இருக்கின்றன. ஆகவே இறுதியாக மாற்றியமைத்தபடி,

இரவு நேர மின்சாரத் தடையால்
வடிகிறது
வியர்வை.

அவ்வளவுதான்... இதில் நீங்கள் பல்வேறு அர்த்தங்கள் பொருத்திக் கொள்ளமுடியும். அதுசரி, இதெல்லாம் ஒரு கவிதையா என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.. ஒரே கருத்தை எழுதிக் கொண்டிருப்பதைவிட சற்று வித்தியாசமாக சிந்திப்போம். உலகம் வித்தியாசப்படுபவர்களை மட்டுமே நோக்கும். உங்கள் சிந்தனை வித்தியாசமாக இருக்கவேண்டும். மேற்படி மூன்று வரிக் கவிதை பிற்பாடு நீங்கள் உபயோகித்துப் பழகலாம்..

என்னிடம் வந்த ஒரு மாணவனிடம் ஆங்கிலம் பற்றி சொல்லிக் கொண்டிருந்த பொழுது அவன் சொன்னான்,

Please come
The office
Meet him
Go fast

போன்ற சிறு சிறு வார்த்தைகளை விடுத்து பெரிய வார்த்தை சொல்லிக் கொடுங்கள் என்றான்... நீங்கள் யோசித்துப் பாருங்கள்.. இந்த சிறு வார்த்தைகள் இல்லாவிடில் எந்த பெரிய வார்த்தைகளும் அமைக்கமுடியாது,... சிறு சிறு வார்த்தைகள் சேர்ந்ததுதான் ஒரு மொழியே!! இல்லையா?

சிறு சிறு கவிதைகள் மூலமும் பெரிய கவிதை எழுதி வாருங்கள். வெற்றி நிச்சயம்..

அமரன்
18-09-2007, 03:27 PM
தொடரைத் தொடரும் ஆதவாவுக்கு நன்றி...

இரவு நேர மின்சாரத் தடையால்
வடிகிறது
வியர்வை.

இதை இப்படி எழுதலாமா?

இரவில் மின்தடையால்
ஓடுகிறது வியர்வை...!
----------------------
இரவில் மின்தடை
ஓடுகிறது வியர்வை...!
----------------------------
வடிகிறது என்பதை விட ஓடுகிறது /பாய்கிறது என்னும்போது மின் தடையின் தாக்கம் அதிகமாக சொல்லப்படுகிறதாக நினைக்கின்றேன்.
அடுத்தது...முதல் கவிதையில் மின் தடையுடன் ஆல் சேர்கிறது....இரண்டாவதில் அது இல்லை...இதில் எது சரியானது/சிறப்பானது?

ஷீ-நிசி
18-09-2007, 03:52 PM
உடல் முழுதும்
அழ ஆரம்பித்தன....
மின்சாரம் மறைந்துவிட்டதாம்!!

இப்படியும் எழுதலாம் ஆதவா....

aren
18-09-2007, 03:58 PM
இரவில் மின்சாரம் வரவில்லை
வியர்வை கேட்காமல் வருகிறது!!!

இப்படி எழுதலாமா

மீனாகுமார்
18-09-2007, 04:01 PM
கிட்டத்தட்ட கவிதையும் கையெழுத்தைப் போல... ஒவ்வொருவருடைய சிந்தனையும், தேர்ந்தெடுக்கும் சொல்லும் அந்த சொற்களைக் கோர்த்திடும் விதமும் மாறுபடும். அங்கு தான் சுவையே தோன்றுகிறது....

தம்பி ஆதவாவின் இந்த திரி நல்லதொரு கையேடு... நான்கு சக்கர வாகனம் ஓட்டக் கற்பது போல... ஓட்டத்தெரிந்த பின் சும்மா விட்டு வாங்கலாம்..... தொடருங்கள் ஆதவா...

மீனாகுமார்
18-09-2007, 04:13 PM
தகதகவென வியர்வை
இரவிலும்கூட வேலைநிறுத்தம்
செயலிழந்த மின்சாரம்...

இன்னொரு கட்டு -
சம்சாரமும் மின்சாரமும்
முன்னறிவிக்காது செயலிழக்கும்
மனதோடுஉடலும் புழுங்கிடும்....

அமரன்
18-09-2007, 04:17 PM
அட...அட...அட....அட்டகாசமாக அள்ளித் தருகிறார்களே தெவிட்டாத அமிர்தத்தை.......எல்லாம் தமிழ் தந்த வரம்.

ஆதவா...இப்போ உங்கள் முன் ஒரு பணிவான வேண்டுகோள்...
மின்சாரத்தடை கவிதைகளை ஒப்பு நோக்குக..

ஆதவா
21-09-2007, 10:33 AM
தொடரைத் தொடரும் ஆதவாவுக்கு நன்றி...

இரவு நேர மின்சாரத் தடையால்
வடிகிறது
வியர்வை.

இதை இப்படி எழுதலாமா?

இரவில் மின்தடையால்
ஓடுகிறது வியர்வை...!
----------------------
இரவில் மின்தடை
ஓடுகிறது வியர்வை...!
----------------------------
வடிகிறது என்பதை விட ஓடுகிறது /பாய்கிறது என்னும்போது மின் தடையின் தாக்கம் அதிகமாக சொல்லப்படுகிறதாக நினைக்கின்றேன்.
அடுத்தது...முதல் கவிதையில் மின் தடையுடன் ஆல் சேர்கிறது....இரண்டாவதில் அது இல்லை...இதில் எது சரியானது/சிறப்பானது?

முதல் வரியில் வார்த்தைகளை சுருக்கி எழுதியமைக்கு பாராட்டுக்கள். அதோடு இங்கே ஆசிரியனாக நான் எதுவும் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்தவைகள் மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறேன். இருப்பினும்....

எனக்குத் தெரிந்து இரண்டுமே ஒரே அர்த்தத்தைக் கொடுக்கின்றன. ஆல் சேர்க்காமல் இருந்தாலும் அதே அர்த்தம்தான் கொடுக்கிறது... வாக்கியம் இரண்டாகத் தெரியும்....

மின்தடையின் தாக்கம்: உண்மைதான்.. தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.

ஆதவா
21-09-2007, 10:37 AM
இரவில் மின்சாரம் வரவில்லை
வியர்வை கேட்காமல் வருகிறது!!!

இப்படி எழுதலாமா


என்னை ஆசிரியன் என்றே முடிவு கட்டிவிட்டீர்கள்...:)..


இது இன்னும் கவிதை வடிவம் பெறவேண்டும் அண்ணா. அல்லது எனக்கும் சரியாகத் தெரியவில்லை.

தமிழ்சுவடி
22-09-2007, 05:55 PM
நண்பர் ராஜா அவர்கள் கூறியதைப் போல் படிக்கும் போது சுலபமாய் தெரிந்த கவிதை எழுதும் வழி, தட்டச்சு செய்யும் போது வருவதில்லை என்பது உண்மை தான். முதலில் ஒரு தாளில் எழுதி வைத்து களை நீக்கி, பின் மீண்டும் படித்து, பொருள் புரிந்து, திருத்திய பிறகு, தட்டச்சு செய்ய பழகவும். கவி எழுத மனநிலை முக்கியம். இது ஒன்றும் பாஸ்ட் புட் ஐட்டங்கள் கிடையாது.

காதல் கவி எழுதும் போது காதல் உணர்வை மனதில் இருத்த வேண்டும். சமூக கவி எழுதும் போது சமூக அவலங்கள் மனதில் நிழலாட வேண்டும்.
வேண்டாத வரிகளில் ஆரம்பித்து, கவி புத்துணர்வு பெற்று கோர்வையாய் எழுத்துகள் சேரும்போது, நல்ல கவிதை தானே வந்து விழும்.

மீண்டும் மீண்டும் ஒரே வார்த்தைகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். தான் எனும் வார்த்தையை முற்றாய் தவிர்க்க வேண்டும். அது உங்கள் திறனை குறைத்து விடும். ( டி. ராஜேந்தர், தேவா போன்றோரின் பாடல்களில் 'தான்' அடிக்கடி வந்து விழுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்).
எழுதிய கவிதையை உங்கள் மனைவியிடமோ , நண்பரிடமோ காட்டி அவர்களின் விமர்சனத்தை பெற்று, அதை மனதளவில் ஏற்று, உங்கள் கவிதையை திருத்தினால், அது மேலும் சுவை படும். சுய விமர்சனம் மிக மிக முக்கியம். விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் மனோபாவமும் அதைவிட முக்கியம். தான் என்ற கர்வம் கவிக்கு எதிரி.

என்னவன் விஜய்
22-09-2007, 08:22 PM
மின்சாரதடை
அழுகிறது மெய்

ஆர்.ஈஸ்வரன்
18-08-2008, 03:01 PM
நல்ல பயனுள்ள பகுதி. ஆதவா அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து கற்றுக்கொடுங்கள்.

rameshkumar2509
18-11-2008, 05:48 AM
நல்ல அருமையான முயற்சி.

ஆதவா
28-03-2009, 07:15 AM
கவிதை எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் எப்படியோ அமைந்துவிடுகின்றன. மண்ணில் விழும் மழைத்துளிகள் சிலவற்றை ரோசாப்பூக்கள் பறித்துக் கொள்வதைப் போல சங்கல்பங்கள் இல்லாமல் யதார்த்தமான சூழலில் கவிதைக்கான கருக்கள் அமைந்துவிடுகின்றன

நேற்று (27-03-09) எழுதிய மூன்று கவிதைகள் எதிர்பாராத சூழலில் அமைந்தவை.. உண்மையிலேயே நான் எழுத நினைத்த கரு,

கவிதை எழுத நினைக்கும் பொழுது அகப்படாத காகிதம் குறித்தும்,
கனவின் வெளித்தோற்றம் குறித்தும்.

சொற்கள் இல்லாததால் அக்கவிதைகள் எழுதுவதை தள்ளிப் போட்டிருந்தேன். அந்த இடைவெளியில் நிரப்பப்பட்ட கவிதைகள் தான் இவை. அகப்படாத காகிதத்தில், ஒரு சுனையைப் போன்று பொங்கி எழும் கவிதை உணர்வுகளை எழுதமுடியாத உணர்வை பதிக்க நினைத்திருந்தேன். அது எழுதப்படும் பொழுது கடிதம் என்றும் குறியீடாக மாறி கவிதையின் பாதை மாறிவிட்டது.. கடிதங்கள் எழுதுவது குறைந்து போன இக்காலத்தில் எதைக்குறித்து எழுதுவது என்பதே ஒரு பிரச்சனையாக இருந்தது. அப்பொழுது சட்டென்று நுழைந்தது ஒரு பெண்.... பெண்ணின் மனத்திலிருந்து கடிதம் குறித்து எழுதலாம் என்று யோசித்து பின் அதுவே ஒரு பெண்ணுக்கு வந்த கடிதமாக மாற்றிக் கொண்டேன்.

ஒவ்வொரு படிமத்திலிருந்து உரித்து உரித்து நன்கு தேய்த்து ஜொலிக்கப்பட்ட ஆபரணம் போல கவிதைகள் இருக்கவேண்டும் என்று முயற்சிப்பதால் சில சமயம் கால இடைவெளிகள் ஏற்படுவதுண்டு. அந்த இடைவெளிகளை நிரப்ப பல யுக்திகளைக் கையாளுவதுண்டு. யுக்திகளின் தோல்விகளைக் குறித்து கவலைப்படவேண்டியதில்லை.. ஏனெனில் அவை உங்களுக்கான திறமையை வெளிப்படுத்தும் ஆயுத உறையாக இருக்கும். உறைகள் என்றுமே பாதுகாப்பானவை! கத்திகளை மட்டும் சீவி வையுங்கள். சில சமயம் நான் (மொக்க)கதைகள் எழுதுவதுண்டு. எனக்கு புரிதலின் தொடக்கம் சிறுகதை எழுதிய பிறகு கதைகளின் மீதுண்டான ஆர்வம் குறைந்துவிட்டது. ஆனால் கதைக்களனை கவிதைக் கத்திகளுக்கான உறைகளாக பயன்படுத்திக் கொண்டேன். அதன் பின்னுள்ள விபரங்கள் கதை படிப்பவருக்குப் புரியாமல் இருக்கலாம்... ஏனெனில் மன்றம் என்றுமே எனக்கு சோதனை களமாகத்தான் காட்சியளிக்கிறது.

சரி, இப்ப எழுத வந்தது..

ஒரு கரு அமையும் பொழுது அதைச் சுற்றியிருக்கும் சூழலை எண்ணுங்கள்.

முறிந்த சிறகு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19740) கவிதைக்குப் பிந்தியுள்ள வரலாறே தனிதான். குருதி தோய்ந்த விரல்களை உடையவன் எழுதும் கடிதம் என முதலில் ஆரம்பித்தது. பிறகு குருதி தீண்டி இறந்து போன கவிதை யாக தொடர்ந்தது. அதன் பின்னரும் இறந்து போன கவிதை மீண்டெழுதலில் தொடர்ந்தது. மீண்டெழுந்த கவிதை என்னுள் நுழையும் பொழுது கிடைக்காத காகிதமாக நீண்டது. காகிதம் கடிதமாகி பெண் எனும் பெயர்ச்சொல்லோடு பயணித்தது.. பிறகு அதுவே தனிமையை உள்ளிருத்தி முறிந்த சிறகாக முடிந்துவிட்டது... இது இன்னும் நீளலாம்..

கவிதைகள் எழுதும் பொழுது அது குறியீடாக தரும் சொற்களை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். பிற்பாடு பயன்படலாம்.. அவை தொடர்ச்சியாக கவிதை எழுத உதவலாம். சில கவிதைகள் முந்தைய கவிதைகளின் நீட்சியாக இருக்கும்.. உதாரணத்திற்கு

குளியலைறைக் கவிதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19735) இன்னொரு கவிதையின் (குளியலறைப் பல்லி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19349)) நீட்சி.. அதைப் போன்றே எல்லாமுமாகிய இறைவனும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19741) இன்னொரு கவிதையின் (கடவுளைக் கொல்லுதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19389)) நீட்சிதான். இப்படி சில நீட்சிகள் உண்டு. இப்படியும் தொடரலாம்.. மன்றத்தில் தொடர்ச்சி கவிதைகளை சற்று இடைவெளியில் வெளியிடுங்கள். படிப்பவர்களுக்கு பொதுவாக தொடர்பின்மையைக் காட்டுவதற்கு இந்த யுக்தி உதவலாம்..

இந்த தொடர்ச்சிகள் ஒன்றையொன்று தொடாதவாறு பார்த்துக் கொள்ளுவது நீங்கள் கட்டும் சொற்களில் இருப்பது நல்லது!!

மீண்டும் பின்னர் சந்திப்போம்...

(இணைப்புகளை சரியாக சேர்த்த எனக்கு எடிட்டர் வேலை செய்யவில்லை... இப்பதிவை எழுதி கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரமாக காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது... இரண்டு உலாவிகள் (Browser) மாற்றிப் பார்த்துவிட்டேன்!! தமிழ்மன்றம் டெட் ஸ்லோ!! அதனால் கீழே தனியாக கொடுத்திருக்கிறேன்.)

அனுராகவன்
03-10-2010, 04:03 PM
அடடே ஆதவா..மிக அருமை..விடுப்பில் பல கவிதை எழிதி விட்டு வருகிறேன்..இந்த திரியே நான் பார்க்கவே இல்லை.....நன்றி என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்..

sridhara
31-07-2011, 04:01 PM
மிகவும் நன்றாக இருக்கிறது.....
ஆதவா...................

jpl
28-08-2011, 10:33 PM
காட்சிபடுத்தும் கவிதைகள் : இரண்டாம் வகை.

இந்த பதிவு எழுதுவதற்கு முன்னர் அலுவலகத்தில் மின்சாரமில்லை. அது இரவு நேரம். ஒரே புழுக்கமாக இருந்தது... உடனே எனக்குத் தோன்றிய எண்ணம்..

இரவு நேரத்தில் மின்சாரத் தடை
இருக்கும் இடத்தில்
ஒரே புழுக்கம்
அதனால் வியர்வை.

இதுதான் செய்தி. இங்கே "இருக்கும் இடத்தில்" தேவையில்லை. ஏனெனில் நாம் இருக்கும் இடத்தில் தான் மின்சாரத்தடை என்பதால் அந்த வார்த்தைகள் தேவையில்லை. படிப்பவர் நெஞ்சில் தானாகவே அந்த வரி அமைந்துவிடும்.. அடுத்து, புழுக்கத்தால்தான் வியர்வை வரும். ஆகவே புழுக்கம் என்ற வார்த்தையும் கட்.

இரவு நேரத்தில் மின்சாரத் தடை
அதனால் வியர்வை.

இன்னும் கவிதை வடிவம் வரவில்லை. "வியர்வை வழிகிறது" என்று இடுவோமா?

இரவு நேரத்தில்
மின்சாரத்தடை
வியர்வை வழிகிறது.

வியர்வை வழிகிறது என்ற வார்த்தை அதிக உபயோக வார்த்தையாக இருக்கலாம். சற்றே மாற்றினால் வடிகிறது என்று வரும்.. இல்லையா?, அதேசமயம் மேற்கண்ட கவிதை சற்றே வார்த்தைகள் ஒட்டாமல் இருக்கின்றன. ஆகவே இறுதியாக மாற்றியமைத்தபடி,

இரவு நேர மின்சாரத் தடையால்
வடிகிறது
வியர்வை.

அவ்வளவுதான்... இதில் நீங்கள் பல்வேறு அர்த்தங்கள் பொருத்திக் கொள்ளமுடியும். அதுசரி, இதெல்லாம் ஒரு கவிதையா என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.. ஒரே கருத்தை எழுதிக் கொண்டிருப்பதைவிட சற்று வித்தியாசமாக சிந்திப்போம். உலகம் வித்தியாசப்படுபவர்களை மட்டுமே நோக்கும். உங்கள் சிந்தனை வித்தியாசமாக இருக்கவேண்டும். மேற்படி மூன்று வரிக் கவிதை பிற்பாடு நீங்கள் உபயோகித்துப் பழகலாம்..

என்னிடம் வந்த ஒரு மாணவனிடம் ஆங்கிலம் பற்றி சொல்லிக் கொண்டிருந்த பொழுது அவன் சொன்னான்,

Please come
The office
Meet him
Go fast

போன்ற சிறு சிறு வார்த்தைகளை விடுத்து பெரிய வார்த்தை சொல்லிக் கொடுங்கள் என்றான்... நீங்கள் யோசித்துப் பாருங்கள்.. இந்த சிறு வார்த்தைகள் இல்லாவிடில் எந்த பெரிய வார்த்தைகளும் அமைக்கமுடியாது,... சிறு சிறு வார்த்தைகள் சேர்ந்ததுதான் ஒரு மொழியே!! இல்லையா?

சிறு சிறு கவிதைகள் மூலமும் பெரிய கவிதை எழுதி வாருங்கள். வெற்றி நிச்சயம்..



கண்ணயரா இரவில்
ஒழிந்தோடும்
ஓடையாய் வியர்வை..
................................
மின்னலென மின்வெட்டோ..

மாலை மட்டுமா
இரவிலும் கண்ணாமூச்சு
விளையாட்டு
வழிந்தோடும் வியர்வையோடு
மின்சாரத்தோடு..

jpl
28-08-2011, 10:53 PM
உச்சிமீது வானிடிந்து வீழ்ந்தது போலிருந்தது
உடனடியாய் ஒரு கவிதை வேண்டுமாம்....
உயிரைக் கேட்டால்கூட தருவேனே என்னுயிரே
உடனடி கவிதை கேட்டால் எப்படியடி?

தேமாவும் தெரியாது புளிமாவும் தெரியாது
எதுகையும் தெரியாது மோனையும் தெரியாது
தீபகற்பத்தை தீபாகற்பம் என்றெழுதி...
வகுப்பறைக்கு வெளியே முட்டியிட்டவன் நான்...!

சொந்தமாய் ஒரு கவிதை தந்தால்தால்தான்
பந்தமாவாய் என்னோடு என்றாயே....
கவிதை தராவிட்டால் கவிழ்ந்திடுமோ
நம் டைட்டானிக் காதல்....?

இரவு முழுவதும் முயற்சித்தேன்...
தூக்கம் துறவு கொண்டது!
பேனா பீரங்கியிலிருந்து காகிதகுண்டுகள்
என் அறைமுழுவதும் சிதறியது..!

எழுதுகோலால் நெற்றிதாக்கி யோசித்தபோது
என்னுள்ளே ஒரு ஞாபகமின்னல்...!
தமிழ்மன்றம்-கவிப்பட்டறை சென்று
கவியெழுதுவது எப்படி என்று பயின்றால் என்ன?

தண்ணியடித்தேன், டீக்குடித்தேன், புகைவிட்டேன்
கவிதை வரவில்லை, கடுமையான வாந்திதான் வந்தது...!
ஒன்றும் உதவவில்லை... ஒரு வரிகூட வரவில்லை
கவிதையெழுத என்னால் முடியவில்லை

கல்லூரிவரை காப்பியடித்தே தேறியவன்,
காதலுக்கு ஒரு கவிதை காப்பியடிக்க
மனசாட்சி தடுக்குதடீ... தோழீ- அந்த
மானங்கெட்ட கவிதை நமக்கு தேவையாடி?


கவியெழுதி தந்தால்தான் காதலென்றால்
காதலிக்க தகுந்தவர்கள் ஆதவனும், ஷீநிசியும்தான்...!
எனக்கு வேண்டாம் அந்த காதல்... போடி...
நான் தேடப்போறேன் வேறு ஜோடி....!



இந்தக் கவிதை எப்படி இருக்கிறது?

சிலுசிலுத்த சிற்றோடை நடையில்
எளிய எழுத்துக்களில் அழகிய
எண்ணப் பின்னல்கள்.

jayanth
02-02-2012, 12:14 PM
கவிதை சொல்லப்போய் தமிழாசிரியரிடம் வாங்கிக்கட்டிகொண்டது

படிக்கும் காலத்தில் (...ம் எங்கே படித்தோம் !!!) தமிழாசிரியர் ஒவொருவராக குறுங்கவிதை ஒன்று சொல்லச்சொன்னார். அதற்கு சற்று முன்புதான் அவர் கண்ண பிரானின் தோற்றதைப் "கூந்தல் கார்மேகம் ", 'நெற்றி வெண்மதி","கண்கள் கருமை","உடல் கருநீலம்" மற்ற, மற்ற ..... என்று வர்ணித்திருந்தார்.கவிதை சொல்லும் ஆசை யாரைத்தான் விட்டது . நானும் எழுந்து நின்று "ஐயா! "பல கடவுள்களை போற்றும் உலகில் கண்ணா பிரான் ஒரு "Multi colour Modern god " என்றேன். பாராட்டுவார் என்று நினைத்தேன். வரச்சொன்னார் ஆசிரியர் அறைக்கு.பாராட்டுவதற்கு இல்லை.

தாமரை
02-02-2012, 01:06 PM
மின்சாரம் இருந்தால் சுடுதண்ணியில் குளிக்கிறோம் வியர்க்கிறது..
இல்லாட்டி வியர்வையிலேயே குளிக்க வேண்டியாதாகிறது..
நம்ம வாழ்க்கையோட சாரமாகவே மின்சாரம் ஆகிடுச்சி...


குளித்து வியர்த்தேன்
வியர்த்துக் குளித்தேன்
மின் - சாரம்!

இப்படிக் கூட எழுதலாமில்ல ஆதவா!!!:icon_ush::rolleyes:

ஆதவா
02-02-2012, 03:46 PM
மின்சாரம் இருந்தால் சுடுதண்ணியில் குளிக்கிறோம் வியர்க்கிறது..
இல்லாட்டி வியர்வையிலேயே குளிக்க வேண்டியாதாகிறது..
நம்ம வாழ்க்கையோட சாரமாகவே மின்சாரம் ஆகிடுச்சி...


குளித்து வியர்த்தேன்
வியர்த்துக் குளித்தேன்
மின் - சாரம்!

இப்படிக் கூட எழுதலாமில்ல ஆதவா!!!:icon_ush::rolleyes:

:eek::eek:

இதெல்லாம் இன்னுமா படிச்சுட்டு இருக்கீங்க....??

மின்சாரம்,
தமிழ்நாட்டில்
சட்டசபையின் எதிர்கட்சியென.

வெளியே(ற்)றுகிறது
இருட்டிலிருந்து ஒளியை
உடலிலிருந்து வியர்வை

இருட்டு குளித்ததில்
வெளிச்சம் கரைந்தது
பவர் சோப்!!

நைட்டு ஃபுல்லா பவரு கட்டு
ஒடம்பு ஃபுல்லா ஸ்வெட்டு!!
ஒய் திஸ் கொலவெறி........

நீ ஒளி
நான் இருள்
அவன் உடல்
அது வியர்வை!

இருள்
கண்களை மாற்றியமைக்கிறது
சிலநேரங்களில்
மனதையும்!!

தமிழ்நாடே ”இருளில் மூழ்கிக் கொண்டிருக்கிறது” - விஜயகாந்த் ஆ’வேசம்’, - தலைவரூ சரக்கடிச்சாலும் கவிதையாத்தான் ஒளருவாரு!
இருளில் மூழ்குதல்!!! ஒரு அழகான கவித்துவம் மிகுந்த மென்மையான வரி இல்லையா? ஆனால் சூழ்நிலையோடு சேர்ந்து அது கண்டிக்கிறது!

தமிழ்கவிநேசன்
01-03-2012, 07:07 AM
உங்கள் திரி சுவை தருகிறது
சுவர் தருகிறது
சுறுசுறுப்பு தருகிறது
சுகம் தருகிறது
ஏன் சுவாசமான தமிழுக்கு
அணிகலன் பூட்டியதுக்கு
நன்றி

===> தமிழ்கவிநேசன் <===

கலைவேந்தன்
11-04-2012, 06:53 PM
ஆதவா,
இத்தொடரில் பயனுள்ள பகுதிகளைப் பயன்படுத்திக்கொண்டேன். நன்றி..!

பாவூர் பாண்டி
21-12-2012, 08:56 AM
உங்களின் இந்த பதிவு தெளிவு பெற வைத்திருகிறது என் கவிதை எழுதும் தரத்தை.
நன்றி நண்பரே ......

kulandaivel
27-07-2013, 12:02 PM
ணான் முதலில்

சின்ன வயது விலயாட்டு
னான் தான் முதலில்
முதுமையிலும் விலயாட்டு
னி தான் முதலில்
ஆன் என்ட்ரால்
குன்ஙுமம் இல்லாத
உன் முகக்ட்தை நான்
கடசி நாலிலும்
பார்க்க விரும்பலை..
என் கன்னெ

அன்புடன்
குலன்டை வெல் .மு

Arudkavi Ganesh
11-02-2014, 06:56 PM
தமிழும் கலையும் தலைசிறந் தோங்குமெம்
திமிதிமி தாளமும் திரைகடற் கப்பாலும்
அமிர்தமாய் இனித்திடும் அன்பரே உம்பணி
இமயமாய் வளர்ந்திட ஏற்றினேன் வாழி!

கன்னித் தமிழின் களிப்பாம் சுவையெலாம்
உன்னிப் பார்ப்பின் உள்ளது மரபிலே!
பின்னிடப் பயிற்றுக பிழையற! எழுத்து
நன்னசை சீரடி நாலொடு தளைதொடை
என்பன தெளிவுற! இனிதுற வாழி!
அருட்கவி

ஆர்.ஈஸ்வரன்
09-05-2015, 10:36 AM
மிக மிக அருமையான கருத்துக்கள்.