PDA

View Full Version : எனை மறந்த உன்னை..........



பிச்சி
26-03-2007, 01:41 PM
ஈரம் மிகுந்த ஒரு கவிதையின்
வார்த்தைகளை சிதறிவிட்டாய்
அதன் உன்னத பொருள் தெரியாமல்
எழுத்துக்கள் எல்லாம் ஒன்று கூடி
பதம் பார்க்கும், என் காதலை
பங்கப்படுத்திய உன்னை.

விழிப்படலங்களின்
விந்தையான சக்தியில்
உன்னை நான் சந்தித்தேன்
உறுதியில்லாமல் உதறிவிட்டாய்
கதிர்களின் பாய்ச்சலை!
வெளிச்சம் தர மறுக்கும் (உனக்கு)
ஒளியின் பிள்ளைகள்.

ஏங்கி ஏங்கி கண்ணீரில்
வீங்கிப் போன இதயத்தை
உனக்காக காண்பித்தும்
கண்கள் கோண
மறுத்துப் போகிறாய்
இரத்த நாளங்கள்
பீய்ச்சி அடிக்கிறது
உன் கோரம் படிந்த முகத்தில்

இதயம் ஏற்ற கணமே
அறியாமல் போனதினால்
இன்று கனமாகப் போகிறது
என் நெஞ்சுக்குள்
உனக்காக" என்று நான் நினைத்த
இதயம்

வெறும் வாலிபத்தை
உபயோகித்த
உன்னை.
வார்த்தைகளால் சாகடிப்பேன்.

அறிந்து கொண்டேன்
உன் அழுகிய கண்களை
இன்றும் இறைவன்
இருப்பதால்தான்
அழுகாமல் இருக்கிறது
என் இதயம்.
:(

ஓவியன்
26-03-2007, 02:26 PM
அருமையான வரிகள்!

எப்படித் தான் உங்களால் இப்படி வரிகளைத் தத்ரூபமாகக் கோர்க்க முடிந்ததோ?

வாழ்த்துக்கள்.

இளசு
26-03-2007, 10:22 PM
வஞ்சிக்கப்பட்டவளின் நெஞ்ச நெருப்பை
விஞ்சுவது நரகத்தீக்கும் அரிது - படித்திருக்கிறேன்..

இங்கே மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறேன்...

பொய் சொல்லி செய்த அபகரிப்பும்
'மெய்' சுவைத்தபின் செய்யும் நிராகரிப்பும்..

நெஞ்சிருக்கும் வரை கரையானாய் அரிக்கும்..


பாராட்டுகள் பிச்சி!

அறிஞர்
26-03-2007, 10:36 PM
வெறும் வாலிபத்தை
உபயோகித்த
உன்னை.
வார்த்தைகளால் சாகடிப்பேன்.

அறிந்து கொண்டேன்
உன் அழுகிய கண்களை
இன்றும் இறைவன்
இருப்பதால்தான்
அழுகாமல் இருக்கிறது
என் இதயம்.
:(
நோகடிக்கப்பட்ட...
ஒரு இதயத்தின் குமுறல்...

உணர்வுகளின் வெளிப்பாட்டை
வார்த்தைகள் கொட்டி கொன்றாலும்
ஆறுதல் அடையுமா...
இந்த இதயம்.

தொடருங்கள் பிச்சி...

பென்ஸ்
27-03-2007, 08:50 AM
குழந்தை...

கவிதைகள் எழுத்துகள் அல்ல உணர்வுகள்..
அதில் இருப்பது வார்த்தைகள் அல்ல வலிகள்

இந்த கவிதை, உணர்வு என்னும் உளியால் வடித்திருக்கிறாய்...
சிறப்பு: ஒரு மரு கூட இல்லை...

ஆனாலும், இந்த ஒரு காரியத்தையும் பலவழிகலில் பார்க்கலாம், அதில் ஒன்று நீ பார்ப்பது.

கால ஓட்டத்தின் ஒரு சில நாட்கள் முன் சென்று பார், காதலை கொடுத்து சுதந்திரத்தை பறிக்கவா ..!!!
காதலை கண்ணிருக்கு கல்யாணம் செய்து பார்க்கவா வேண்டும்...
கண்ணிர் தாங்கிய கவிதையாக வேண்டுமா... போடி போ, இவர்கள் உன் கண்ணீரில் எலிமிச்சை பிளிந்து தாகம் தணித்து கொள்வார்கள்...
ஏங்கி ஏங்கி வீங்கி போன இதயத்தை காண்பிக்க போகிறாயா, போ, அதில் வளியும் ரத்தத்தில் முகம் கழுவி கொள்வார்கள்...

நீ உன்னை பத்திர படுத்திக்கொள், இதயம் பத்திரமாக இருக்கும்.
வார்த்தைகள் கொடுக்கும் வலி தற்காலிகமானது, மொளனத்தை கொடு, இவர்களுக்கு இதை விட கொடியதாக எதுவும் கொடுக்க முடியாது.

ஆனால், அதற்கு முன் அவன் நிலையில் இருந்து ஒருமுறை யோசித்து கொள்...

ஷீ-நிசி
27-03-2007, 09:17 AM
காதல் ஏற்கபடாத இதயத்திலிருந்து வந்த 'லப்டப்' கொஞ்சம் அதிகமாகவே துடிக்கின்றது...

வார்த்தை நயம் நன்றாக உள்ளது..

பிச்சி
17-05-2007, 08:55 AM
அருமையான வரிகள்!

எப்படித் தான் உங்களால் இப்படி வரிகளைத் தத்ரூபமாகக் கோர்க்க முடிந்ததோ?

வாழ்த்துக்கள்.

எல்லாம் உங்க தயவு தான்

பிச்சி
17-05-2007, 08:57 AM
வஞ்சிக்கப்பட்டவளின் நெஞ்ச நெருப்பை
விஞ்சுவது நரகத்தீக்கும் அரிது - படித்திருக்கிறேன்..

இங்கே மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறேன்...

பொய் சொல்லி செய்த அபகரிப்பும்
'மெய்' சுவைத்தபின் செய்யும் நிராகரிப்பும்..

நெஞ்சிருக்கும் வரை கரையானாய் அரிக்கும்..


பாராட்டுகள் பிச்சி!

இந்த பதிவு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி இளசு அண்ணா.

பிச்சி
17-05-2007, 08:59 AM
நோகடிக்கப்பட்ட...
ஒரு இதயத்தின் குமுறல்...

உணர்வுகளின் வெளிப்பாட்டை
வார்த்தைகள் கொட்டி கொன்றாலும்
ஆறுதல் அடையுமா...
இந்த இதயம்.

தொடருங்கள் பிச்சி...

நன்றி அறிஞர் அண்ணா

பிச்சி
17-05-2007, 09:00 AM
குழந்தை...

கவிதைகள் எழுத்துகள் அல்ல உணர்வுகள்..
அதில் இருப்பது வார்த்தைகள் அல்ல வலிகள்


கால ஓட்டத்தின் ஒரு சில நாட்கள் முன் சென்று பார், காதலை கொடுத்து சுதந்திரத்தை பறிக்கவா ..!!!
காதலை கண்ணிருக்கு கல்யாணம் செய்து பார்க்கவா வேண்டும்...
கண்ணிர் தாங்கிய கவிதையாக வேண்டுமா... போடி போ, இவர்கள் உன் கண்ணீரில் எலிமிச்சை பிளிந்து தாகம் தணித்து கொள்வார்கள்...
ஏங்கி ஏங்கி வீங்கி போன இதயத்தை காண்பிக்க போகிறாயா, போ, அதில் வளியும் ரத்தத்தில் முகம் கழுவி கொள்வார்கள்...


ஆனால், அதற்கு முன் அவன் நிலையில் இருந்து ஒருமுறை யோசித்து கொள்...


அடேயப்பா இத்தனை விளக்கம. சூப்பர். நன்றி அண்ணா....

அக்னி
17-05-2007, 10:56 AM
இதயத்தில் இரத்தம் சுரந்தால்.., இயல்பு.
இதயத்தில் கண்ணீர் சுரந்தால்.., வலி.

விழிகளில் கண்ணீர் சுரந்தால்.., இயல்பு.
விழிகளில் இரத்தம் சுரந்தால்.., வலி.


ஏங்கி ஏங்கி கண்ணீரில்
வீங்கிப் போன இதயத்தை
உனக்காக காண்பித்தும்
கண்கள் கோண
மறுத்துப் போகிறாய்
இரத்த நாளங்கள்
பீய்ச்சி அடிக்கிறது
உன் கோரம் படிந்த முகத்தில்

தாங்க முடியாத வலிகள்... இயல்பான வரிகளில்...

இக்கவிதை எவருக்கும் பொய்யாக மட்டுமே இருக்கவேண்டும் என்பது என் அவா...

வாழ்த்துக்கள் பிச்சி...

mravikumaar
17-05-2007, 11:17 AM
பிச்சி
உங்கள் கவிதைகளில் உயிரோட்டத்தைக் காண்கிறேன்

வாழ்த்துக்கள் பிச்சி

அன்புடன்,
ரவிக்குமார்

பிச்சி
25-05-2007, 07:21 AM
நன்றி அக்னி ரவிக்குமார். உங்கள் வாழ்த்து மட்டுமே போதுமே

சக்தி
25-05-2007, 07:55 AM
கண்ணுக்குள் வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை. அந்த கண்ணே இல்லையெனில் கனவுகள் எதற்கு. சொல்லுக்குள் அடங்கா வலிகள் நெஞ்சுக்குள் சொல்லியவிதம் அருமை.

பாராட்டுக்கள் பிச்சி

பிச்சி
11-06-2007, 03:29 PM
நன்றி சக்தி அண்ணா