PDA

View Full Version : குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கĩபிச்சி
26-03-2007, 02:39 PM
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் 6

கு. கண்கள் பகுதி ஐந்தும் பார்க்கவேண்டுமானா...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7338


உதிர்வினில் அழுதிடும்
மெல்லிலை மேலே
வெட்கம் பொருள் பாறாது
உமிழ்கிறாய்
உன் தாய் படைத்த வாயிலிருந்து

என்றாவது உதிர்பூக்களின்
விம்மிய மனத்தினைப் பார்த்ததுண்டா ?
உன் சந்தடி பட்டு
பொடியாய்ப் போகும் அவைகளின்
மனவேதனை ஒலியாவது கேட்டதுண்டா?

வாசம் வீசும் ஏலக்காயின்
உட்புற விதைகளை
உன் எச்சில் படுத்தி
எரிமலையின் உலைக்களமாய்
மாற்றிவிட்டாய்
உன் கொட்டம் அடக்கத்தான்
புனைப்பெண்ணாய் மாறினேனோ?

ஈறு பற்களின்
சந்து இடைவெளியில்
ஊறும் புழுக்களைப் போக்குவதில்லை
உன் காமவேட்கை படிந்த விரல்கள்
உள்துழாய்க் குடல்களின்
நாற்றத்தை மீறி
பரிகாசமாய் சிரிக்கிறது
உன் மந்தப்புத்தியுடைய மனது

கீறிய ரணங்களிலிருந்து
ஒரு துளி விழுந்திடினும்
புகைச்சல் ஆரம்பமாகும்
உன் கெட்டுப்போன இதயத்தின்
மேற்புற சவ்வுகளிலிருந்து..........

வீக்க மிகுதியில்
இடும் சாபங்களின் உஷ்ணம்
உன் உடலை எரித்துவிடும்.
உன் கனவை கலைத்துவிட்டு
நித்திரை கொள் புழுவே !
மிடிமை கொண்ட இதயத்திற்கு
என்று பிச்சி
அடிமை கொள்ளமாட்டாள்
பூச்சடங்கிய இதயத்திற்கு
எந்த பெண்ணும் மயங்கமாட்டாள்..

தொடரும்///

இளசு
26-03-2007, 11:15 PM
பிச்சிக்கு

ஆரம்பத்தில் உங்கள் கவிதைகளை வாசித்து வந்தவன் நான் - பின் இடைவெளி...

ஒரே திரியில் அடுக்கும்போது, தொடக்க இடைவெளி சிலநாளில்
தொடரும் இடைவெளியாகி விடுகிறது. மன்னிக்க!

இப்படி தனியாய் பதித்து, பிறகு தொகுத்துக்கொள்ளுதல் என்ற
ஆலோசனையை ஏற்றதற்கு நன்றி..

--------------------------------------------------------------


புதிய பெண்ணிய பாணிக்கவிதை..
(இந்த பாணி இன்னமும் எனக்கு அந்நிய பாணி)..

படித்துப் பழகிக்கொள்கிறேன்.

------------------------------------------

உன் தாய் தந்த வாயால் -

இந்த வரி சொல்லொணா உணர்வுகளை எழுப்புவது..

பெற்றவளைத் தெய்வம் என்று பூசிக்கும் வாய்
மற்றவளைக் கூசும் சொல்லால் அர்ச்சிக்கும் வாய்...


ஆண்களின் இரட்டை நிலையை
அப்பட்டமாய் உரிக்கும் வரி..

----------------------------------------

ரணம், புழு - என தேர்ந்த வார்த்தைகளால்
புரையோடிய மனப்புண்ணைக் கீறி..
ஒரு தீர்வு தேடி தீர்மானமாய் நகரும் பெண்மனம்...

நோய்நாடி நோய்முதல்நாடி
வாளால் அறுத்துச்சுடும்
மருத்துவச்சி பிச்சிக்குப் பாராட்டுகள்!

ஷீ-நிசி
27-03-2007, 04:33 AM
வார்த்தைகள் மிக அழகாய், இயல்பாய் அமைகிறது பிச்சி.... எப்படி இப்படி எழுதுகிறீர்கள் என்று உங்களை பலமுறை பிரமிக்கிறேன்..

மனோஜ்
27-03-2007, 03:09 PM
கவிதை இப்படி ஆழகாய் அமைவது பிரமிப்புதான் உங்கள் வரிகளில்

பென்ஸ்
27-03-2007, 03:36 PM
குழந்தை...
உன் வரிகளுக்கு வலிமை கிடைக்க ஆரம்பித்திருக்கிறது...

அமைதியாய் இருந்து ரசித்து வருகிறேன் உன் வளர்ச்சியை...
வார்த்தைகளின் வலிமையை...
வரிகளின் தேர்ச்சியை...
உவமைகளின் அணிவகுப்பை...

எங்கேனும் தவறு கண்டால் சுட்டிகாட்டுகிறேன்..

poo
28-03-2007, 06:27 AM
பிச்சி.. கண்டுகொண்டேன்...
உங்கள் கவிதையின் மூலம் நீங்கள் உச்சத்தில் நிற்பதை கண்டு கொண்டேன்..

வாழ்த்துக்கள் தொடருங்கள்....

பிச்சி
05-04-2007, 10:30 AM
நன்றி அண்ணா... உங்கள் அனைவருக்கும் நன்றி.