PDA

View Full Version : என் காவியக் காதலன் கண்ணன் 1

பிச்சி
26-03-2007, 01:36 PM
லட்சுமி எழுப்பும்
வீணை இசையின்
துளியில், ஒரு அணுவாக
வியாபித்திருக்கும்
நித்தியானந்தன் அவன்!.

உலகோர் செவிகளில்
உள்ளிருக்கும் படலங்களில்
அமர்ந்துகொண்டு
உள் நுழையும் பாடல்களைத்
தணிக்கை செய்யும்
பரம சுந்திரன் அவன்!

ஒளியை மிஞ்சும் வேகத்தில்
கண்களைச் சிமிட்டியும்
இமை முடிகளுக்கு இடைப்பட்ட
இடைவெளியில் நிலைகுலையாமல்
நிற்கும் சுந்திர ரூபன் அவன்!

இறந்துபோன பிக்காசோவை
ஐன்ஸ்டீன் விதிப்படி அழைத்து
சித்திரமாய் தன்னை
வரையச் சொன்ன
நித்தியத் திருமகன் அவன்!

அன்னையின் தாலாட்டில்
ஒவ்வொரு எழுத்துமாய்
நிறைந்து கொண்டு
குழந்தையின் செவிக்குள்
ஊற்றெடுக்கும் நாதசுவரம் அவன்!.

கொக்கரிக்கும் கூட்டத்திற்கு
வெறும் சக்கரத்தைக் காட்டி
குற்றேவல் புரியவைத்து
அவர்களை வெள்ளையாக்கியே
நீலமாய் போனவன் அவன்!

அமரகற்பகம் எனும் ஊருக்குள்
ஆளை அடக்கும் இந்திரனும்
நிந்தனையே என்று நினையாத
நான்முக பிரம்மனும்
நிதமும் தரிக்கும்
திருநாமச் சந்தனம் அவன்!

இத்தனைக்கும் சொந்தக் காரன்
திருநீல வர்ணக்காரன்
சித்திபெற்ற யுத்திக்காரன்
யசோதையின் மைந்தன்
என் கண்களின் துடிப்புகளுக்கு
அடிமையாவது ஏன்?

இளசு
26-03-2007, 10:30 PM
தேடல்...

'ஐடியல்' என ஆங்கிலத்தில் சொல்லும் அந்நபரைத் தேடல்...

நிர்மலனாய் இப்புவியில் எவனும் இலையெனும்போது...
கார்வண்ணனையே பிச்சி வரிப்பதன்றி வேறு மார்க்கம் ஏது?

காலப்பயணம் சென்று, பிக்காஸோவையும் கண்டு
ஒரு 'போர்ட்ரெய்ட்' பெறும் பேராசையும் உண்டு..

சில கருப்பொருள் கையாண்டாலே கவிதை கொட்டும்..
காலகாலமாய் கண்ணனுக்கு இந்தப்பெருமையின் உச்சம்!

வாழ்த்துகள் புதிய தமிழ் ஆண்டாளுக்கு!

மனோஜ்
27-03-2007, 02:02 PM
அருமை கவிதை

பிச்சி
10-05-2007, 03:39 PM
தேடல்...

'ஐடியல்' என ஆங்கிலத்தில் சொல்லும் அந்நபரைத் தேடல்...

நிர்மலனாய் இப்புவியில் எவனும் இலையெனும்போது...
கார்வண்ணனையே பிச்சி வரிப்பதன்றி வேறு மார்க்கம் ஏது?

காலப்பயணம் சென்று, பிக்காஸோவையும் கண்டு
ஒரு 'போர்ட்ரெய்ட்' பெறும் பேராசையும் உண்டு..

சில கருப்பொருள் கையாண்டாலே கவிதை கொட்டும்..
காலகாலமாய் கண்ணனுக்கு இந்தப்பெருமையின் உச்சம்!

வாழ்த்துகள் புதிய தமிழ் ஆண்டாளுக்கு!

நன்றி இளசு அண்ணா.. உங்க விமர்சனம் என் கவிதையைவிட அழகு. என்னை ஆண்டாளாக விளித்தமைக்கு நன்றி அண்ணா

பிச்சி
10-05-2007, 03:40 PM
அருமை கவிதை

நன்றி மனோஜ் அண்ணா. நீங்க பேர மாத்தீட்டீனஙகளா?

மனோஜ்
10-05-2007, 03:52 PM
நன்றி மனோஜ் அண்ணா. நீங்க பேர மாத்தீட்டீனஙகளா?
நீங்கள் ஏன் மாற்ற வில்லை
பிச்சி என்று மாற்றலாமே

பிச்சி
10-05-2007, 03:53 PM
நான் மாற்ற சொன்னேன்ன்ன் யாரும் மாத்தலை.

பென்ஸ்
10-05-2007, 03:54 PM
நான் மாற்ற சொன்னேன்ன்ன் யாரும் மாத்தலை.
மாற்றிடுறோம்....

gragavan
10-05-2007, 04:05 PM
ம்ம்ம்ம்...அத்தனை சிறப்புகளையும் சொல்லி..அந்தச் சிறப்புகள் எல்லாம் என் சிரிப்புக்குக் காத்திருக்கிறதே என்று வியப்பதும் அருமை. கொண்டாடும் இடத்தில் இருப்பான் கண்ணன். உங்கள் கண்களின் சிரிப்பு கண்டிப்பாக அவனை அழைத்து வரும்.

பிச்சி
10-05-2007, 04:06 PM
மாற்றிடுறோம்....

பிச்சி என்று மாத்துங்கண்ணா

பிச்சி
10-05-2007, 04:07 PM
ம்ம்ம்ம்...அத்தனை சிறப்புகளையும் சொல்லி..அந்தச் சிறப்புகள் எல்லாம் என் சிரிப்புக்குக் காத்திருக்கிறதே என்று வியப்பதும் அருமை. கொண்டாடும் இடத்தில் இருப்பான் கண்ணன். உங்கள் கண்களின் சிரிப்பு கண்டிப்பாக அவனை அழைத்து வரும்.
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா