PDA

View Full Version : எளிய முறையில் ஜாவா - பகுதி 4.



kavitha
26-03-2007, 10:41 AM
ஜாவா ஆணைத்தொடர் அமைப்பு

சென்ற பகுதியில் ஜாவாவின் மொழி கட்டமைப்பினைப்பற்றியும், கீ வோர்ட் (பதிக்கப்பட்ட வார்த்தைகள்) பற்றியும் பார்த்தோம்.
இப்பகுதியில் சாதாரண ஒரு ஆணைத்தொடர் (program) அமைப்பினை எடுத்துக்காட்டோடு எப்படி இயக்குவது என்று பார்ப்போம்.

< > என்ற அடைப்புக்குறிக்குள் (angle bracket) கொடுக்கப்பட்டவை பயனாளர் தேர்வு செய்யும் பெயர்கள் (user variables) ஆகும்.


<type of the class> class <class name>
{
<type of the member>:
<declaration of the class members>;
<definition of the class member>;
public static void main(String args[])
{
<objects>
<methods of class calling by objects>
System.out.println(" <display messages> ");
}
}
--------------------------

(எடுத்துக்காட்டு)

class sample()
{
public static void main(String args[])
{

System.out.println("You are welcome to java programming");
}
}

----------------
இயக்க:
கமன்ட் ப்ராம்ப்டில் (start -> run -> type cmd or command -> enter)
c:\javac sample.java
c:\java sample
கிடைக்கும் பதில்:
output:-
You are welcome to java programming
(javac sample.java என்பது கம்ப்பைலருக்கு தரப்படும் கோப்பின் பெயராகும்.
java sample என்பது இன்டர்ப்ரட்டருக்கு தரப்படும் க்ளாசின் பெயராகும்)



பின்குறிப்பு:-
ஜாவாவை இயக்க

1. ஜாவா விர்ச்சுவல் மெசின் நிறுவப்பட்டிருக்கவேண்டும் (மேலும் விவரத்திற்கு சென்ற பகுதியைக்காண்க)

2. ஜாவா இயங்கு பாதையும் நிறுவப்பட்டிருக்கவேண்டும்.

விண்டோஸ் இயங்கு தளத்தில் இருப்பவர்கள்
my computer -> properties -> environmental variables -> java home -> jdk<version>\bin
-ல் ஜாவா இயங்கு பாதையை நிறுவி விட்டால் எந்த டிரைவிலிருந்தும் உங்களது தரவினை இயக்க முடியும்.




(தொடரும்)


.

இளசு
26-03-2007, 10:47 PM
கவீ...

சொந்தப்பணிகளுக்கு இடையே சிரத்தையுடன் இப்பாடங்களை
தொடரும் ஆர்வம் +உழைப்புக்கு வந்தனம்.

எனக்கு கணினி பரிச்சயம் இல்லையானாலும்
பாடங்கள் சொல்லித்தரும் பாங்கின் எளிமை, வளமை புரிகிறது.

அண்ணனின் அன்பான பாராட்டுகள்..

பின்னூட்டம் குறைவென்ற சோர்வு தாக்காமல் தாங்க நானுண்டு..
தொடரவும்..நன்றி..

paarthiban
27-03-2007, 01:10 PM
மிக்க நன்றி கவிதா. உங்கள் பாடம் நல்லா தெளிவா இருக்கு. நன்றி.

அறிஞர்
27-03-2007, 08:57 PM
அழகான தமிழில்..
எளிய முறையில்..
கவிதாவின் பாடம்

பின் குறிப்பும் உபயோகமான தகவல்...

நன்றி கவி...

aren
28-03-2007, 03:26 AM
நிச்சயம் உங்களை பாராட்டியே ஆகவேண்டும். இவ்வளவு பணிக்கிடையிலேயும் புரியாத பல விஷயங்களை எங்களுக்கு எளிய தமிழில் சொல்லி கொடுக்கிறீர்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இராசகுமாரன்
28-03-2007, 04:34 AM
நல்ல ஒரு கணணித் தொடரை ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள் கவிதா..!

இனி அடிக்கடி உங்கள் ஜாவா தொடரை படிக்கவாவது நிச்சயம் வரவேண்டும்.

மன்றத்தில் இது தொடர்பாக ஏதாவது உதவி தேவைப் பட்டால் எனக்கு தெரிவிக்கவும்.

pradeepkt
28-03-2007, 05:08 AM
கவிதா,
உங்கள் பணி சிறக்கட்டும்.
இந்த class க்கு முன்னால் public சேர்ப்பது நலம். அப்படிச் சேர்க்கும் பட்சத்தில் அந்த கோப்பின் பெயரும் வகுப்பின் பெயரும் ஓன்றாக இருத்தல் வேண்டும்.

சிறு எழுத்துப் பிழைகள் கண்ணில் பட்டன.

public class sample()
{
public static void main(String args[])
{

System.out.println("You are welcome to java programming");
}
}

அடுத்து இந்த public பற்றியும் static பற்றியும் விளக்கமாகச் சொல்லுங்கள்.

மன்மதன்
28-03-2007, 11:27 AM
எங்கும் ஜாவா
எதிலும் ஜாவா
ஆகி விட்ட நிலையில்,
எங்களுக்கு ஜாவா
கற்றுத்தரும் கவிதா மேடத்திற்கு
நன்றிகள் பல...

pradeepkt
28-03-2007, 06:30 PM
ஜாவா படித்தவர்களை இன்னும் வேலைக்கு வாவா என்று கூப்பிடுகிறார்களாமே??? உண்மையா?

kavitha
03-04-2007, 10:52 AM
அண்ணனின் அன்பான பாராட்டுகள்..

பின்னூட்டம் குறைவென்ற சோர்வு தாக்காமல் தாங்க நானுண்டு..
தொடரவும்
:) இப்படி ஒரு ஊக்கம் கிடைக்கையில் ஏது அண்ணா எனக்கு முடக்கம்; உங்கள் அன்பைப்போல இனி எல்லாம் எனக்கு ஏற்றம் தான். நன்றி

kavitha
03-04-2007, 11:00 AM
உங்கள் பாடம் நல்லா தெளிவா இருக்கு நன்றி பார்த்திபன். தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளை இடுங்கள். நன்றி

kavitha
03-04-2007, 11:08 AM
பின் குறிப்பும் உபயோகமான தகவல்...
நன்றி அறிஞரே! மெல்கிக்கு கணினி கற்றுத்தர ஆரம்பித்து விட்டீர்களா?

kavitha
03-04-2007, 11:13 AM
புரியாத பல விஷயங்களை எங்களுக்கு எளிய தமிழில் சொல்லி கொடுக்கிறீர்கள்.

நன்றி ஆரென் அண்ணா



மன்றத்தில் இது தொடர்பாக ஏதாவது உதவி தேவைப் பட்டால் எனக்கு தெரிவிக்கவும்
ஆமாம். .exe கோப்பினை மன்றத்தில் ஏற்றுவது எப்படி?



கவிதா,
உங்கள் பணி சிறக்கட்டும்.
இந்த class க்கு முன்னால் public சேர்ப்பது நலம். அப்படிச் சேர்க்கும் பட்சத்தில் அந்த கோப்பின் பெயரும் வகுப்பின் பெயரும் ஓன்றாக இருத்தல் வேண்டும்.

சிறு எழுத்துப் பிழைகள் கண்ணில் பட்டன.

public class sample()
{
public static void main(String args[])
{

System.out.println("You are welcome to java programming");
}
}

அடுத்து இந்த public பற்றியும் static பற்றியும் விளக்கமாகச் சொல்லுங்கள்.
__________________
நெஞ்சத் தகநக நட்பது நட்பு


நன்றி பிரதீப். தயவு செய்து தொடர்ந்து படித்து உங்கள் பதில்களை இடுங்கள். static மாற்றிவிட்டேன்.

public என்பது ஒன்றுக்கு மேற்பட்ட class/interface இருந்தால் அவசியம்.

அதே போல் class - பெயரும், கோப்பின் பெயரும் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. (குழப்பத்தை தவிர்க்கவே அவ்வாறு செய்யச்சொல்கிறார்கள்)

அடுத்த பகுதியில் class, static, interface பற்றி தெளிவாக விளக்குகிறேன். மிக்க நன்றி

kavitha
03-04-2007, 11:23 AM
எங்கும் ஜாவா
எதிலும் ஜாவா
ஆகி விட்ட நிலையில்,
எங்களுக்கு ஜாவா
கற்றுத்தரும் கவிதா மேடத்திற்கு
நன்றிகள் பல...
இதெல்லாம் உமக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.... போனால் போகட்டும்னு விடரேன்...ஆமா.