PDA

View Full Version : ஆசை



செல்விபிரகாஷ்
25-03-2007, 07:14 AM
http://bp3.blogger.com/_e_laRiU0vmM/RfaOi8GU40I/AAAAAAAAACU/6nTF_klG_UQ/s400/AsaiKavithai.jpg

உன் கண்ணில் உறைய
ஆசைதான்..!
கருவிழியாய்...
உன் இதழில் உறைய
ஆசைதான்..!
புன்னகையாய்...
உன் கருவினில் உறைய
ஆசைதான்..!
மழலையாய்...
உன் மனதில் உறைய
ஆசைதான்..!
எண்ணங்களாய்...
உனக்குள் உறைய
ஆசைதான்..!
காதலாய்...
என் ஆசை நிறைவேற
ஆசைதான்..!
என் முடிவிலாவது...

என்றும் அன்புடன்
செல்விபிரகாஷ்

இளசு
25-03-2007, 07:43 AM
ஆசைகள் கனவுகளாகும்
கனவுகள் இலக்குகளாகும்
இலக்குகள் முயற்சிகளாகும்
முயற்சிகள் வெற்றிகளாகும்..

கனாக்காணுங்கள்... நல்லவைக்காக..

வாழ்த்துகள் செல்வி..

மனோஜ்
25-03-2007, 08:36 AM
ஆசைகள் நிறைவேறினால்
எனக்கும் ஒரு ஆசை
எனது உற்றவள் உறவுகள் ஆகிட
கவிதை வரிகள் அருமை

பரஞ்சோதி
25-03-2007, 11:17 AM
சின்னச் சின்ன ஆசைகளை கேட்ட எங்களுக்கு உங்களது ஆசைகள் அதிசயமாக இருக்குது. இதே ஆசைகள் அனைவரும் கொள்ள வேண்டும்.

நல்ல கவிதைகள் படைக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.

march
25-03-2007, 11:31 AM
கவிதை அருமை, ஆசைகள் இல்லாமல் இருப்பது நல்லது
லவ் வித்
மார்ஷ்

ஆதவா
25-03-2007, 11:44 AM
கவிதை அருமை, ஆசைகள் இல்லாமல் இருப்பது நல்லது
லவ் வித்
மார்ஷ்


கவிதை அருமை அக்கா!! என்னென்னவோ சொல்ல ஆசை..

-----------

மார்ச்! ஆசையின்றி உலகில் எதுவுமில்லை... ஆசைதான் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம்...

march
25-03-2007, 11:50 AM
பொன்னை உயர்வையும்
புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள்
தின்னத் தகாதென்று.........


நீங்களே ஒப்புகொண்டீர்

லவ் வித்
மார்ஷ்

ஆதவா
25-03-2007, 12:43 PM
பொன்னை உயர்வையும்
புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள்
தின்னத் தகாதென்று.........


நீங்களே ஒப்புகொண்டீர்

லவ் வித்
மார்ஷ்

வரிகளைத் தப்பாக புரிந்துகொண்டீர்கள்..

இங்கே ஆசை வேண்டாம் என்று எங்கே வந்தது.....
பொன்னும் உயர்வும் புகழும் விரும்பிடும் எனக்கு கவலைகள் வரவேண்டாம் கண்ணம்மா என்று பாடுகிறார் பாரதி... இதில் நீங்கள் சொன்னதற்கு அர்த்தமே இல்லை./...

march
25-03-2007, 01:13 PM
தின்னத் தகாதென்று.........

அப்படி யென்றால் வேண்டாம் என்று பொருள் இல்லையா.!

சரி யெனி வே ஒ கே

லவ் வித்
மார்ஷ்

ஆதவா
25-03-2007, 02:33 PM
தின்னத் தகாதென்று.........

அப்படி யென்றால் வேண்டாம் என்று பொருள் இல்லையா.!

சரி யெனி வே ஒ கே

லவ் வித்
மார்ஷ்

நன்றி..

விகடன்
25-03-2007, 05:42 PM
உங்கள் ஆசைகள் ஆசைகளாக இருப்பதில் மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள்.

செல்விபிரகாஷ்
26-03-2007, 05:23 AM
நன்றி நண்பர்களே