PDA

View Full Version : சினிமா மெட்டில் ஆதவனின் கவிதைகள்

ஆதவா
24-03-2007, 08:10 PM
இங்கே சினிமா மெட்டுக்கு ஏற்ற மாதிரி கவிதைகள் எழுதறேன். படித்து இன்புற்று மகிழவும்.. தவறுகள் ஏதாவது இருந்தால் குட்டவும்... :sport-smiley-019:

மெட்டு : வா வெண்ணிலா, உன்னைத் தானே வானம் தேடுதே
படம் : மெல்லப் பறந்தது புறா.

காதல் புறா! வந்ததேனோ என்னைத் தேடியே!
காதல் புறா! வந்ததேனோ என்னைத் தேடியே!
மீன்கண்கள் கொண்டுநீ முள்ளாகவே காண்கிறாய்
மீன்கண்கள் கொண்டுநீ முள்ளாகவே காண்கிறாய்
காதல் புறா! வந்ததேனோ என்னைத் தேடியே!
காதல் புறா! வந்ததேனோ என்னைத் தேடியே!
லா லால லாலலா
லா லால லாலலா
லா லால லா
லா லால லா
தவிக்காதே மானே! தவிக்கின்றேன் நானே!
சிறகாலே என்னை சிறைகொண்ட தேனே
என் தோள்மேல் நீயும்
அஹா அஹா
அமர்ந்தபின் நானும்
ஹே ஹே
விரல்கொண்டு எடுத்து
ஹோ ஹோ
முத்தமிடு வேனே
ஹே
இதற்காக ஆஆஆஆஅ
இதற்காக இந்த உலகில் நான் வாழவேண்டும் ஆண்டுகள்.
காதல் புறா! வந்ததேனோ என்னைத் தேடியே!
காதல் புறா! வந்ததேனோ என்னைத் தேடியே!
மீன்கண்கள் கொண்டுநீ முள்ளாகவே காண்கிறாய்
மீன்கண்கள் கொண்டுநீ முள்ளாகவே காண்கிறாய்
காதல் புறா! வந்ததேனோ என்னைத் தேடியே!
காதல் புறா! வந்ததேனோ என்னைத் தேடியே!
லலல லால லா
லலல லால லா
லலலலலலலல லல்ல
லால லா லால லா லால லா
பூ போல மென்மை, கொண்டதுன் தன்மை
விழி காணும் என்னை, நான் வீழ்வேன் கண்ணே
உருட்டிய விழிகள்
ஆஹா அஹா
திரட்டிய காதல்
ஹே ஹே
தினம்தினம் நானும்
ஹோ ஹோ
தவிப்பதும் அதனால்
ஹே!
உந்தன் மென்மை ஆஆஆஆஅ
உந்தன் மென்மை உந்தன் பெண்மை, என்னை கொன்று போடும் உன்கண்களில்
காதல் புறா! வந்ததேனோ என்னைத் தேடியே!
காதல் புறா! வந்ததேனோ என்னைத் தேடியே!
மீன்கண்கள் கொண்டுநீ முள்ளாகவே காண்கிறாய்
மீன்கண்கள் கொண்டுநீ முள்ளாகவே காண்கிறாய்
காதல் புறா! வந்ததேனோ என்னைத் தேடியே!
காதல் புறா! வந்ததேனோ என்னைத் தேடியே!

இளசு
24-03-2007, 08:16 PM
பாடிப்பார்த்தேன்..

'மீட்டர்' சரியாக சிக்கென.... கச்சிதமாய் உள்ளது ஆதவா...

பாராட்டுகள்...

இந்தவகைக் படைப்புகளில் உள்ள ஆக்க குணங்கள்:

1) சந்தம், சொற்கட்டு பழக்கம்
2) கோர்வையாய் ஒரு கருத்தை ஒரு ஒழுங்குக்குள் அடுக்கும் திறன்
3) முன்னாடி மனதில் தைத்த பழகிய வரிகளை மனப்பயிற்சியால் அமுக்கி, அதை மீறிய சிந்தனையை முன்னிறுத்தும் வன்மை..

கல்லூரி ராகிங் காலங்களில் நானும் இப்பாணியில் சில செய்திருக்கிறேன்..

(ஆனால், அவை பண்பட்டவர் பகுதியையும் தாண்டி வெளியே நிற்க வேண்டியவை..)

ஆதவா
24-03-2007, 08:29 PM
நன்றிங்க இளசு அவர்களே!! உங்களின் ஊக்கம் என் உயர்வுக்கு ஏணி... இது என்னுடைய புது முயற்சி, அந்தவகையில் இதுவே முதல்கவிதை. (பாடல்).........

நேரம் கிடைக்கும்போது நான் இன்னும் சில பாடல்களை எழுதுகிறேன்..

(பண்பட்டவர்பகுதியைத் தாண்டாத ஏதாவது கவியிருந்தால் கொடுக்கவும் அண்ணா)

இளசு
24-03-2007, 08:37 PM
அன்பு ஆதவா...

என்ன தவம் செய்தேன்.. என்ற வரிகளுக்கு ஏற்ற கவிதைக்கண்ணா!

ஏணியாய் உனக்கு இருக்கவே ஒரு வரம் வாய்த்திருக்க வேண்டும்..

என் அன்பும் ஆதரவும் என்றும் உண்டு உனக்கு!

இது முதல் முயற்சி என நம்ப இயலா அளவுக்கு முதல் தரப்பாடல்..

(வாலி போன்றவர்கள் இதுபோன்ற பயிற்சிகளால் கூராகிக் கொண்டவர்கள் ..)

( கொஞ்சம் சைவமாய் தேறினால் தருவேன் நிச்சயம்...

அண்ணனின் தன்னிலை விளக்கம்: ஹிஹி...கல்லூரிக் குசும்பில் சில அத்துமீறல்கள் அனுமதிக்கப்படுகின்றன அல்லவா.. அது ஒரு அசைவக் கனாக்காலம்!)

ஆதவா
25-03-2007, 06:13 AM
மிகவும் நன்றி இளசு அண்ணா!.. உங்களின் ஒவ்வொரு வரிக்கும் சிலிர்த்துப் போகும் என்னை நீங்கள் பாராட்டுவது என்பது எனக்கு மிக மிக பெருமை. மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும் வரிகள்தான் உங்கள் எழுத்துக்கள்..

கல்லூரி படிக்கும் வாய்ப்பு இழந்துவிட்டேன். இருந்தாலும் கல்லூரி குதூகலம் சற்று அறிந்திருக்கிறேன்.. நிச்சயமாக சைவம் கொடுங்கள்.. அசைவம் என்றும் உடலுக்கு அவ்வளவாக ஒத்துக்கொள்ளாது. :liebe028:

:nature-smiley-006:

ஆதவா
25-03-2007, 06:19 AM
பாடல் : ஆதவன்
மெட்டு : உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்
படம் : கவிதை எழுதிய விழியாலே!
பாடியவர் : ஜேசுதாஸ்
நடிகர் : பிரதீப்
நடிகை : மரியா
அழுதவிழிகளுடன் இயக்கம் : மயூரேசன்

நீ காண்கையில் என் மெளனமும் உடையுதே அலறுதே காதலினாலே!
நீ காண்கையில் என் மெளனமும் உடையுதே அலறுதே காதலினாலே!

கனவு இன்றி தவிக்கிறேன்
காத லாலே துடிக்கிறேன்.

விழித்து முழித்ததுன் முகத்திலேதான்
செழித்து வளர்ந்தது அகத்திலேதான்
கருவை சுமந்திட கருத்தரித்தான்
உருவம் அவளென்று பிரித்தறிந்தான்

இதயம் நினைக்கும் கொடுக்கத் தவிக்கும்
இதயம் நினைக்கும் கொடுக்க தவிக்கும்
கவிதை எழுதிட நினைத்தேனே!
எழுதி தினம்தினம் துடித்தேனே!

சிரித்து, அழுது விழிகள் எனை உருவ

நீ காண்கையில் என் மெளனமும் உடையுதே அலறுதே காதலினாலே!
கனவு இன்றி தவிக்கிறேன்
காத லாலே துடிக்கிறேன்.
நீ காண்கையில் என் மெளனமும் உடையுதே அலறுதே காதலினாலே!

பறந்து விரிந்தது நினைவலைதான்
மறந்தும் நினைத்தது தினமுன்னைதான்
திறமை வளர்ந்திட வளைத்திடத்தான்
புருவம் நினைக்குது மறந்துனைதான்

உதடு வரைக்கும் மெளனம் இருக்கும்
உதடு வரைக்கும் மெளனம் இருக்கும்
மழையின் துளியை நீ நினைத்தாயோ?
விழுந்த துளியும் நான் புரிந்தாயோ?

அதரம் விரித்து மொழிகள் தழுவட்டும்

நீ காண்கையில் என் மெளனமும் உடையுதே அலறுதே காதலினாலே!
கனவு இன்றி தவிக்கிறேன்
காத லாலே துடிக்கிறேன்.

தவறுகள் இருந்தால் சொல்லவும்...
பெயர்கள் எல்லாம் சும்மா விளையாட்டுக்கு.. தவறாக எடுத்துக்காதீங்க..:icon_shades:

மதி
25-03-2007, 06:38 AM
நடிகர் : பிரதீப்
நடிகை : மரியா
அழுதவிழிகளுடன் இயக்கம் : மயூரேசன்

இதெல்லாம் ரொம்ப ஓவரு..???

மன்மதன்
25-03-2007, 08:31 PM
இதெல்லாம் ரொம்ப ஓவரு..???

எதச்சொல்றீங்க.. மரியாவையா?? மயூரேசனையா..?? பிரதீப் ஓகேதான்..;) ;)

மெட்டுக்கு பாட்டு கனக்கச்சிதமா உங்க வரிகள் பொருந்துது ஆதவா..

தங்க கம்பி
26-03-2007, 03:13 PM
..

கல்லூரி படிக்கும் வாய்ப்பு இழந்துவிட்டேன். இருந்தாலும் கல்லூரி குதூகலம் சற்று அறிந்திருக்கிறேன்.. . :liebe028:
:nature-smiley-006:

எல்லா விசயங்களிலும் தேர்ந்த நீங்கள் கல்லூரி படிக்கும் வாய்ப்பு இழந்துவிட்டேன் என்கீறீர்களே? என்னால் நம்பவேமுடியவில்லை நண்பரே. இருந்தாலும் இந்த மன்றத்தில் உங்கள் பங்களிப்பு பிரமாதம். கல்லூரிக்கு போகாவிட்டாலும் என்னை பொருத்தவரை நீங்கள் டாக்டரேட் பட்டம் வாங்கிய பேராசிரியர்தான்.

ஷீ-நிசி
26-03-2007, 03:32 PM
நல்ல முயற்சி ஆதவா... வாழ்த்துக்கள்!

pradeepkt
29-03-2007, 05:17 AM
அடப்பாவி ஆதவா,
இந்தத் திரியை எப்படி நான் கவனிக்காம விட்டேன்???
அழுதவிழிகளுடன் மயூரேசன் இயக்கத்தில் நான் மரியாவுடன் ஆ(பா)டும் மற்ற பாடல்களையும் வெளியிடவும்... கொஞ்சம் அப்படி இப்படி வரிகள் இருந்தால் பண்பட்டவர் பகுதிக்கு மாற்றும்படிக் கூறவும்... ஹி ஹி

ஓவியா
29-03-2007, 07:34 AM
ஆதவாவின் கற்ப்பனை என்றுமே அசத்தல் தான்.

இதுவும் நல்லதான் இருக்கு. அப்படியே மெட்டுக்கு கணக்க இருக்கு.

பலே ஆதவா (புது படத்தின் பெயரும் ரெடி) ஹி ஹி ஹி

மரியா ஒரு பெரிய சகாப்தமாகிட்டா போல.

மயூரனுக்கு அக்காவின் ஆருதல்கள் :nature-smiley-002:

அன்புரசிகன்
29-03-2007, 08:02 AM
ஆதவா நீங்கள் அனைத்து திறமைகளையும் உள்ளடக்கியவரப்பா... சுருக்கமாகச்சொன்னால் நீங்கள் ஒரு all in one மனிதர். இப்பொழுதெல்லாம் இசைக்குத்தான் கவியெழுதுகிறார்கள். கவிக்கு இசை என்பது எப்போதாவது ஒன்று இரண்டு வரும்.

விரைவில் இசைத்தட்டுக்களில் உங்கள் பெயரும் சேர்ந்துவர இறைவனை இறைஞ்சுகிறேன்.

அமரன்
29-03-2007, 09:08 AM
பட்டுடன் சேர்ந்து வம்பும் பேசுகின்றீர்களே ஆதவா
பிரதீப் அண்ணாவின் நடிப்பு, மயூரேஷனின் இயக்கம் சூப்பர் மச்சி.

மயூ
30-03-2007, 06:41 PM
அட்ரா அட்ரா... அட்ரா.. கலக்கல் ஆதவா~!!!

ஆதவா
30-03-2007, 06:49 PM
எதச்சொல்றீங்க.. மரியாவையா?? மயூரேசனையா..?? பிரதீப் ஓகேதான்..;) ;)
மெட்டுக்கு பாட்டு கனக்கச்சிதமா உங்க வரிகள் பொருந்துது ஆதவா..
நன்றிங்க மன்மி..

எல்லா விசயங்களிலும் தேர்ந்த நீங்கள் கல்லூரி படிக்கும் வாய்ப்பு இழந்துவிட்டேன் என்கீறீர்களே? என்னால் நம்பவேமுடியவில்லை நண்பரே. இருந்தாலும் இந்த மன்றத்தில் உங்கள் பங்களிப்பு பிரமாதம். கல்லூரிக்கு போகாவிட்டாலும் என்னை பொருத்தவரை நீங்கள் டாக்டரேட் பட்டம் வாங்கிய பேராசிரியர்தான்.

மிகவும் நன்றிங்க தங்கக் கம்பி... உங்கள் பாராட்டு ஒன்றே போதும் எனக்கு டாக்டரேட் பட்டம் வாங்கிய உணர்வு..:icon_give_rose:

நல்ல முயற்சி ஆதவா... வாழ்த்துக்கள்!
நன்றி நண்பா!

அடப்பாவி ஆதவா,
இந்தத் திரியை எப்படி நான் கவனிக்காம விட்டேன்???
அழுதவிழிகளுடன் மயூரேசன் இயக்கத்தில் நான் மரியாவுடன் ஆ(பா)டும் மற்ற பாடல்களையும் வெளியிடவும்... கொஞ்சம் அப்படி இப்படி வரிகள் இருந்தால் பண்பட்டவர் பகுதிக்கு மாற்றும்படிக் கூறவும்... ஹி ஹி
ஹி ஹி..... அண்ணா!! என்ன பாட்டு வேண்டுமென்று சொல்லுங்கள்.. உங்களை ஆடவைக்கிறேன்.............. ஹி ஹி ஹி

ஆதவாவின் கற்ப்பனை என்றுமே அசத்தல் தான்.

நன்றி அக்கா!

ஆதவா நீங்கள் அனைத்து திறமைகளையும் உள்ளடக்கியவரப்பா... .
மிகவும் நன்றி அன்பு!!! உங்கள் அன்பு ஒன்று போதும்...

பட்டுடன் சேர்ந்து வம்பும் பேசுகின்றீர்களே ஆதவா
பிரதீப் அண்ணாவின் நடிப்பு, மயூரேஷனின் இயக்கம் சூப்பர் மச்சி.
நன்றி நரன்
மயூரேசனின் இயக்கத்தில் அடுத்த படத்திற்கு என்ன பாடல் எழுதவேண்டும் சொல்லுங்கள்?

ஆதவா
30-03-2007, 06:50 PM
அட்ரா அட்ரா... அட்ரா.. கலக்கல் ஆதவா~!!!

நன்றி இயக்குனரே!!! அடுத்த படத்திற்கு பாட்டு எழுதிடலாமா? மெட்டு சொல்லுமய்யா!

மயூ
30-03-2007, 07:06 PM
எதச்சொல்றீங்க.. மரியாவையா?? மயூரேசனையா..?? பிரதீப் ஓகேதான்..;) ;)

மெட்டுக்கு பாட்டு கனக்கச்சிதமா உங்க வரிகள் பொருந்துது ஆதவா..

அடப்பாவி ஆதவா,
இந்தத் திரியை எப்படி நான் கவனிக்காம விட்டேன்???
அழுதவிழிகளுடன் மயூரேசன் இயக்கத்தில் நான் மரியாவுடன் ஆ(பா)டும் மற்ற பாடல்களையும் வெளியிடவும்... கொஞ்சம் அப்படி இப்படி வரிகள் இருந்தால் பண்பட்டவர் பகுதிக்கு மாற்றும்படிக் கூறவும்... ஹி ஹி

பட்டுடன் சேர்ந்து வம்பும் பேசுகின்றீர்களே ஆதவா
பிரதீப் அண்ணாவின் நடிப்பு, மயூரேஷனின் இயக்கம் சூப்பர் மச்சி.
ஆ.. ஊனா மயூரேசனை கடிச்சுக் குதறிடுறீங்களே!!! அடடடா அடங்க மாட்டாங்களா???:violent-smiley-010:
மன்மதன் உங்கள் ஆறுதல் தரும் வரிக்கு நன்றி!!!!:icon_03:

ஆதவா
30-03-2007, 07:18 PM
ஆ.. ஊனா மயூரேசனை கடிச்சுக் குதறிடுறீங்களே!!! அடடடா அடங்க மாட்டாங்களா???:violent-smiley-010:
மன்மதன் உங்கள் ஆறுதல் தரும் வரிக்கு நன்றி!!!!:icon_03:

மன்றத்தில ரொம்ப ஹாட் ஸ்மைலி...:violent-smiley-010:...

அடப்பாவமே!! பிரதிப் அண்னாவை இழுத்தா ஆறுதலா!!! இரு இரு,, அண்ணன் வரட்டும்..

மயூ
31-03-2007, 10:18 AM
மன்றத்தில ரொம்ப ஹாட் ஸ்மைலி...:violent-smiley-010:...

அடப்பாவமே!! பிரதிப் அண்னாவை இழுத்தா ஆறுதலா!!! இரு இரு,, அண்ணன் வரட்டும்..
நாம அடிபடும் போது கூட சேர்ந்து ஒருத்தரும் அடி பட்டால் சந்தோஷம் தானே? :ernaehrung004: