PDA

View Full Version : உலகக்கோப்பை 2007 பின் இந்திய அணி

aren
24-03-2007, 02:53 AM
உலகக்கோப்பை 2007 இந்திய மக்களின் கனவு காற்றோடு காற்றாக போய்விட்டது. இனிமேல் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மக்களே நீங்கள் நினைப்பதை இங்கே பதிவு செய்யுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
24-03-2007, 03:08 AM
எனக்குத் தெரிந்து உடனடியாக நடக்கும் செயல்கள்:

ஆட்டத்திற்கு தகுந்து ஊதியம் கொடுக்கப்படலாம்;
வருட காண்டிராக்ட் திட்டம் முடக்கப்படலாம்;
அனைத்து ஆட்டக்காரர்களும் சமம், அந்த நாள் ஆட்டத்தில் எப்படி ஆடுகிறார்களோ அல்லது அந்த சீரியஸில் எப்படி ஆடுகிறார்களோ அதைப் பொருத்தே சம்பளம்;
விளம்பரப்படங்களில் நடித்தால் அதன் ஒரு பகுதி சம்பளம் கிரிக்கெட் வாரியத்திற்கு வரவேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாம்;
அனைவரும் ரஞ்சி கோப்பையில் ஆடி ஜொலித்தால்தான் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு தேர்ந்தெடுக்க்ப்படுவர். குறைந்தது வருடத்தில் இத்தனை மாட்ச்களாவது அவர்கள் ஆடவேண்டும் என்று ஒரு விதி நடைமுறை படுத்தப்படலாம்;
ரஞ்சி மற்றும் அனைத்து உள்நாட்டு போட்டிகள் நடக்கும் மைதானங்கள் அனைத்துலக தரத்திற்கு மாற்றப்படலாம். அப்பொழுதுதான் நம் வீரர்கள் எங்கே சென்றாலும் சிறப்பாக ஆட முடியும்;
மண்டல அடிப்படையில் இருக்கும் தேர்வுக்குழு மாற்றப்பட்டு அதற்கு பதிலாக ஒரு குழு சம்பள அடிப்படையில் அமர்த்தப்படலாம். அவர்களுடைய போனஸ் இந்திய டீம் எப்படி ஆடுகிறது என்பதைப் பொருத்தே அமையும் என்று ஒரு விதியையும் கொண்டுவரலாம்.

மேலே கூறியுள்ளது அனைத்தும் கிரிக்கெட் வாரியம் செய்யவேண்டியது.

தேர்வுக்குழு செய்யவேண்டியது.

பெரிய தலைகளில் பலரை வீட்டிற்கு அனுப்பலாம்.
சச்சினை மரியாதையாக ரிடையர் ஆகச் சொல்லலாம், அப்படி செய்யவிடில் அவரை குழுவிலிருந்து நீக்கலாம். அவர் குழுவில் இருக்கிறார் என்ற தைரியத்தில் மற்ற வீரர்கள் சரியாக ஆடுவதில்லை, அதேபோல் சச்சினும் முன் மாதிரி ஆடுவதில்லை. அவர் இருப்பதால் எந்த பிரயோஜனமும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரை 3rd Man-ல் நிறுத்தி வைத்ததிலிருந்தே இது தெரிகிறது.
திராவிடை குழுத்தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு யுவராஜ்சிங்கை தலைவராக அறிவிக்கலாம்.
கங்குலி இத்தோடு ரிடையர் ஆகிவிடுவார் என்று எதிரிபார்க்கிறேன்.
தோனி, ஹர்பஜன், அகர்கர், திராவிட், கங்குலி, சச்சின், கும்ளே ஆகியோர் இல்லாத ஒரு குழுவை யுவராஜ் தலைமையில் இந்தியா தேர்வு செய்யவேண்டும்.
அந்த புதிய குழுவில் யுவராஜ், ஷேவாக், கார்திக் (விக்கெட் கீப்பராக), முனாஃப் படேல், இர்பாஃன் பத்தான், ஸ்ரீசந்த், ஜாஹீர்கான், உத்தப்பா ஆகிய உலகக்கோப்பை குழுவில் இடம் பெற்ற வீரர்களும் மற்றும், பெங்காலின் திவாரி, டெல்லியின் சேகர் திவான், தமிழகத்தின் யோ மகேஷ் மற்றும் பதிரிநாத், மும்பையின் ரோமேஷ் பவார், உத்தரபிரதேசத்தின் பியூஷ் சாவ்லா மற்றும் சுரேஷ் ரைனா ஆகியோரைக் கொண்டு ஒரு புதிய டீம் உருவாக்கலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

pradeepkt
24-03-2007, 03:12 AM
ஆரென் அண்ணா
சரியாகச் சொன்னீர்கள்.
அத்தோடு இந்த வெளங்காத ஆட்டக்காரர்களுக்கும் விளையாட்டுக்கும் மக்கள் கொடுக்கும் அனாவசிய முக்கியத்துவம் குறைந்து மற்ற விளையாட்டுகள் முன்னேறட்டும்.

ஆதவா
24-03-2007, 03:40 AM
அருமையான யோசனை அண்ணா!! இந்த வீரர்களுக்கு நாளை என்ன நடக்குமோ?... பேசாமல் கவுரவமாக ரிடையர்ட் ஆவதுதான் சிறந்தது...

தங்கவேல்
24-03-2007, 04:00 AM
இந்தியா முன்னேறுகிறது என்பதை சிம்பாலிக்காக காட்டும் ஒரு நிகழ்வு இது.

தங்கவேல்

saguni
24-03-2007, 08:25 AM
ஆதவன் அண்ணா உங்கள் கருத்தில் எனக்கென்னவோ உடன்பாடில்லை. அணி முன்னேறவேண்டுமானால் முக்கியமாய் வீரர்கள் மாற்றம் அவசியம் தான் அதற்காக முண்ணனி வீரர்களை நீக்குதல் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

துவக்க ஆட்டக்காரர், இரண்டாவது, மூன்றாவது என ஒவ்வொரு நிலையில் இறங்கும் வீரருக்கும் இந்த சராசரி இருக்கவேண்டும் என நிர்ணயித்து அதை முக்கியமாய் ஒவ்வொரு வீரரும் அந்தத் தொடரில் சராசரியை நீட்டிக்கவேண்டும் என்ற முறை அமுல்படுத்தப்பட வேண்டும். அதற்காக 150 பந்தில் 40 எடுப்பார்கள் என்பதால் ரன் ரேட்டும் இருக்கவேண்டும் எனவும் நிர்ணயிக்கவேண்டும். பல ஆல் ரவுண்டர்களை கொண்டுவரவேண்டும். முழு நேர பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனாகவும் அவர் இருக்கவேண்டும். அவரவர் விளையாடும் விளையாட்டைப்பொறுத்து புள்ளிகள் கொடுக்கப்பட்டு அந்த புள்ளிகள் இருந்தால் மட்டுமே வாய்ப்பு எனக் கூறவேண்டும்.

பொறுப்பின்றி ஆடும் புதியவீரர் உத்தப்பா, அகர்கர், ஜாஹிர்கான்,ஹர்பஜன் நீக்கப்பட்டு ஆல் ரவுண்டர்களை கொண்டுவரவேண்டும். பந்துவீச்சாளர்கள்தான் முக்கியமாய் மோசம். சேவாக், தெண்டுல்கர், கங்குலி, யுவராஜ், திராவிட் ஆகியோருக்கு கடைசி வாய்ப்பு என ஒரு தொடர்மட்டும் அளிக்கப்பட வேண்டும். தோனி சிறந்த ஆட்டக்காரரே. இந்தமுறை விளையாடவில்லை என்பதால் அவர் திறமையை குறைத்து மடுப்பிடுதல் தவறு. அவரை துவக்க ஆட்டக்காரராய் இறக்கி 2 வாய்ப்புகள் அளித்து மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். பெரும்பாலான ஆட்டங்களில் கடைசிவரை போராடும் எந்த சூழ்நிலையிலும் பாதுகாவலர் போல் இருக்கும் திராவிட் ஆட்டக்காரராய் தொடர்தல் அவசியம்.

தினேஸ் மோங்கியா, தினேஸ் கார்த்திக், பாலாஜி ஆகியோரை திரும்ப கொண்டுவராமல் இருப்பதே நலம். அதற்குப்பதில் பதான், சுரேஸ் ரைனா ஆகியோருக்கு விளையாட முழு வாய்ப்பு அளித்து ஊக்கிவிக்கவேண்டும்.

விளம்பரவருமானத்தில் ஐம்பது சதவீதம் வருமானவரி கட்டப்படவேண்டும். இது எந்த உழைப்புமின்றி மக்கள் ஆதரவால் கிடைப்பதென்பதால் அந்தப்பணம் மக்கள் மற்றும் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக செலவிடப்படவேண்டும். அணியில் இருந்தால் மட்டுமே வீரர்கள் அனுபவித்துக்கொள்ளலாம் என பல உயர்தர வசதிகள் கொடுக்கப்படவேண்டும்.

அன்புரசிகன்
24-03-2007, 08:56 AM
பொறுப்பின்றி ஆடும் புதியவீரர் உத்தப்பா, அகர்கர், ஜாஹிர்கான்,ஹர்பஜன் நீக்கப்பட்டு ஆல் ரவுண்டர்களை கொண்டுவரவேண்டும்.

ஒரு விடயம். நேற்றய 254 என்பது பெரிய ஓட்ட எண்ணிக்கையே இல்லை. உத்தப்பாவை தவிர நீங்கள் கூறியவர்கள் திறமையாகத்தான் விளையாடி இருந்தனர். ஹர்பஜன் பந்து வீச்சில் ஜொலிக்கவில்லை என்பதும் உண்மை.

தோனி சிறந்த ஆட்டக்காரரே. இந்தமுறை விளையாடவில்லை என்பதால் அவர் திறமையை குறைத்து மடுப்பிடுதல் தவறு. அவரை துவக்க ஆட்டக்காரராய் இறக்கி 2 வாய்ப்புகள் அளித்து மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். பெரும்பாலான ஆட்டங்களில் கடைசிவரை போராடும் எந்த சூழ்நிலையிலும் பாதுகாவலர் போல் இருக்கும் திராவிட் ஆட்டக்காரராய் தொடர்தல் அவசியம்.

இந்திய ஆட்டக்காரர்கள் அனைவரும் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடியவர்களே. இப்படிப்பார்த்தால் சடகோபன் ரமேஷ் கூடத்தான் நன்றாக விளையாடியிருந்தார்.

அதற்குப்பதில் பதான், சுரேஸ் ரைனா ஆகியோருக்கு விளையாட முழு வாய்ப்பு அளித்து ஊக்கிவிக்கவேண்டும்.

பதானை நன்றாக பதப்படுத்தினால் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் தயார். அவருடய bating action மிகச்சிறந்நது. ஒரு அனுபவம் வாய்த ஆட்டக்காரர் போல் ஆடுவார்.

இது எந்த உழைப்புமின்றி மக்கள் ஆதரவால் கிடைப்பதென்பதால் அந்தப்பணம் மக்கள் மற்றும் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக செலவிடப்படவேண்டும்.
அவர்களின் சம்பளம் பல ஏழை மக்களின் இரத்தத்தால் ஆனது. ஏழை வாங்கும் ஒரு சலவை கட்டியிலிருந்த கூட அது செல்கிறது. ஒருநாள் சன் டிவியில் பார்த்த ஞாபகம். இந்தியா அவுஸ்திரேலியா விளையாடும் பொழுது ஒரு அனாதை இல்லத்தில் சிறு குழந்தைகள் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். விளங்கியிருக்கும் என நினைக்கிறேன். இந்தியாவில் விளம்பரங்களால் உளைப்பவர்களில் முன்னணியில் உள்ள சச்சின் இந்தியாவிற்கு உதவியதிலும் ஸ்டீவோவ் உதவியது அதிகம்.

அமரன்
24-03-2007, 09:29 AM
ஆரென் உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. ஒரு விடயத்தில் உடன் பாடில்லை. யுவராஜை தலைவராகப் போடுவதில் பிரச்சினை. அவர் கங்குலியைப் போன்றவர். திறமை இருந்தாலும் ஒரு விதமான தலைக்கனம் மிக்கவர். கேப்டனுக்குரிய பலபண்புகள் அவரிடம் இருந்தாலும் மற்றவர்களை மதிதல் என்ற முக்கியமான பண்பு அவரிடம் இல்லை என்றே நினைக்கின்றேன். இந்திய ரசிகர்கள் ஒரு வீரர் ஒரு ஆட்டத்தில் பிரகாஷித்தார் என்றால் அவரை ஏதோ தேவ தூதன் போல நினைக்கின்றார்கள். அதனால் ஒரு சதத்தினை வைத்து இரண்டு வருடங்கள் அணியில் நிலைத்து விடுகின்ரார்கள். இந்த நிலை மாற வேண்டும். முதலில் சப்பலை மாற்றவேண்டும். இலங்கை உலகக்கிண்ணதை ஜெயிக்காதுவிட்டாலும் அணியில் முன்னேற்றம் தெரிகின்றதல்லவா. நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளிலும் திறமையாக விளையாடி மூன்று அரைச்சதங்களை பெற்ற சில்வாவைத் தேடிப்பிடித்தது பயிற்சியாளர் ரொம் மூடி. இவர் இந்தியாவினால் நிராகரிக்கப்பட்டவர்.
எல்லாவற்றும் காரணமான அரசியல் .................

மயூ
24-03-2007, 09:55 AM
இன்று காமல ஆபீஸ் போனதும் நண்பர்கள் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்...
"இந்தியாட்ட மாற சாட்டர் பங்"
நான் விசயம் தெரியாத மாதிரி பேசாம கணனியில் சொறிந்துகொண்டு இருந்தேன்... நம்ம இந்திய அணிப் பசங்களை என்ன செய்வதோ தெரியவில்லை!!!

அமரன்
24-03-2007, 10:09 AM

மயூரேசன் நாட்டில ஏதாவது விலை அதிகரிப்பு ஏர்பட்டுள்ளதா. இலங்கை அணியின் ஒவ்வொரு வெற்றியின் போதும் மக்களுக்கு சுமை ஏற்றுவது நம் நாட்டு வழக்கம் அல்லவா

ஆதவா
24-03-2007, 10:24 AM
ஆதவன் அண்ணா உங்கள் கருத்தில் எனக்கென்னவோ உடன்பாடில்லை. அணி முன்னேறவேண்டுமானால் முக்கியமாய் வீரர்கள் மாற்றம் அவசியம் தான் அதற்காக முண்ணனி வீரர்களை நீக்குதல் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

துவக்க ஆட்டக்காரர், இரண்டாவது, மூன்றாவது என ஒவ்வொரு நிலையில் இறங்கும் வீரருக்கும் இந்த சராசரி இருக்கவேண்டும் என நிர்ணயித்து அதை முக்கியமாய் ஒவ்வொரு வீரரும் அந்தத் தொடரில் சராசரியை நீட்டிக்கவேண்டும் என்ற முறை அமுல்படுத்தப்பட வேண்டும். அதற்காக 150 பந்தில் 40 எடுப்பார்கள் என்பதால் ரன் ரேட்டும் இருக்கவேண்டும் எனவும் நிர்ணயிக்கவேண்டும். பல ஆல் ரவுண்டர்களை கொண்டுவரவேண்டும். முழு நேர பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனாகவும் அவர் இருக்கவேண்டும். அவரவர் விளையாடும் விளையாட்டைப்பொறுத்து புள்ளிகள் கொடுக்கப்பட்டு அந்த புள்ளிகள் இருந்தால் மட்டுமே வாய்ப்பு எனக் கூறவேண்டும்.

பொறுப்பின்றி ஆடும் புதியவீரர் உத்தப்பா, அகர்கர், ஜாஹிர்கான்,ஹர்பஜன் நீக்கப்பட்டு ஆல் ரவுண்டர்களை கொண்டுவரவேண்டும். பந்துவீச்சாளர்கள்தான் முக்கியமாய் மோசம். சேவாக், தெண்டுல்கர், கங்குலி, யுவராஜ், திராவிட் ஆகியோருக்கு கடைசி வாய்ப்பு என ஒரு தொடர்மட்டும் அளிக்கப்பட வேண்டும். தோனி சிறந்த ஆட்டக்காரரே. இந்தமுறை விளையாடவில்லை என்பதால் அவர் திறமையை குறைத்து மடுப்பிடுதல் தவறு. அவரை துவக்க ஆட்டக்காரராய் இறக்கி 2 வாய்ப்புகள் அளித்து மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். பெரும்பாலான ஆட்டங்களில் கடைசிவரை போராடும் எந்த சூழ்நிலையிலும் பாதுகாவலர் போல் இருக்கும் திராவிட் ஆட்டக்காரராய் தொடர்தல் அவசியம்.

தினேஸ் மோங்கியா, தினேஸ் கார்த்திக், பாலாஜி ஆகியோரை திரும்ப கொண்டுவராமல் இருப்பதே நலம். அதற்குப்பதில் பதான், சுரேஸ் ரைனா ஆகியோருக்கு விளையாட முழு வாய்ப்பு அளித்து ஊக்கிவிக்கவேண்டும்.

விளம்பரவருமானத்தில் ஐம்பது சதவீதம் வருமானவரி கட்டப்படவேண்டும். இது எந்த உழைப்புமின்றி மக்கள் ஆதரவால் கிடைப்பதென்பதால் அந்தப்பணம் மக்கள் மற்றும் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக செலவிடப்படவேண்டும். அணியில் இருந்தால் மட்டுமே வீரர்கள் அனுபவித்துக்கொள்ளலாம் என பல உயர்தர வசதிகள் கொடுக்கப்படவேண்டும்.

கிரிக்கெட் ஆடப்படுவதே கிட்டத்தட்ட உலக்கோப்பையைக் கைப்பற்றத்தான்.... என்னதான் நம் வீரர்கள் நிறைய போட்டிகளில் தோற்றிருந்தாலும் உலகக் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருந்துவந்தது.. நீங்கள் சொன்ன முண்ணனி வீரர்கள் இதை புரிந்துகொண்டு ஆடியிருந்தால் தகும். முக்கிய ஆட்டமான உலகக்கோப்பைத் தொடரில் ஆடாமல் வேறெதில் ஆடி என்ன பிரயோசனம்? இவர்கள் முண்ணனி வீரர்கள் என்பதை மட்டுமே பார்க்கும் நீங்கள், இவர்களை அடுத்து துடிப்பாக ஆட நினைக்கும் உள்ளூர் வீரர்களை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்?.

கடைசியாக விளையாடிய சுமார் 50 போட்டிகளில் சேவக், சச்சின்,. கடைசி ஐந்து போட்டிகள் தவிர கங்குலி, திராவிட் ஆகியோர் என்ன சாதித்தார்கள்?. குறிப்பாக சேவக்கினால் வாய்ப்பிழந்தவர்கள் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?. பதானை ஏன் எடுக்கவில்லை? தினேஸ் கார்த்திக்கிற்கு எத்தனை வாய்ப்பு கொடுக்கப்பட்டது?

தோனி , யுவராஜ், போன்றவர்களுக்கு இன்னும் திறமை இருக்கிறது. ஒரு போட்டியில் மட்டுமே நாம் குறைவாக என்ன முடியாது என்றாலும், வாழ்வா சாவா என்ற முறையில் ஆடிய இலங்கை ஆட்டத்தில் மண்ணைக் கவ்வுவதுதான் முண்ணனி வீரர்களுக்கு சிறப்பா?

நேற்றைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் தான் மோசன் என்று எப்படி சொல்கிறீர்கள்? 255 ரன்கள் எல்லாம் ஒரு ரன்னா? மூன்று பேர் பத்தாயிரம் ரன்கள் கடந்து இருக்கிறார்கள், அதிரடிக்கு தோனி, சேவக், உத்தப்பா இருக்கிறார்கள் இதுபோக எப்போதாவது பேட்டிங்கில் கலக்கும் அகர்கர், ஜாஹீர்,, இதெல்லாம் ஒழுங்காக ஆடாமல் பவுலிங்கை குறைசொல்வது நியாயமா?. முதலில் நம் அணிக்கு தலைமை சரியில்லை... கங்குலி தலைமை இருந்திருந்தால் அணி நிச்சயம் வென்றிருக்கும்...
தேவையின்றி ஹர்பஜன் எதற்கு எடுத்தார்கள்... டிராவிட் சப்போர்ட்...
சேவக் இன்றுவரை நீடிப்பதற்கும் அவரே காரணம்..................

டிராவிட் முற்றிலும் கேப்டனுக்குத் தகுதியில்லாதவர்..............

மீண்டும் மற்ற கருத்துக்கள் நம் நண்பர்கள் கொடுப்பார்கள்...

ஆதவன்

உதயசூரியன்
24-03-2007, 11:26 AM
புதிய வீரர்கள் மட்டும் ஒழுங்காக ஆடினால் நாம் ஏன் பழையவர்களை ஏன் தொங்க வேண்டும்..

புதியவர்கள் இடம் பிடிக்கும் வரை தான் ஒழுங்காக விளையடினார்கள்
டெண்டுல்கர், கங்குலி, திராவிட்.. இவர்களெல்லாம் புதிதாக வரும்போது இவ்வளவு தெனாவட்டாக ஆடியதில்லை...
குறைந்த அளவு 40ரன் ஆக தொடர்ந்து அடித்து இருக்கிறார்கள்

தோனியின் அந்த பார்வை , பொறுப்பில்லாத கீப்பிங்க்..
புதியதாக அதுவும் உலக கோப்பையில் 3 முறை தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க பட்ட ஊத்தப்பா ..அய்யோ கொடுமை..
நம்ம ஆளுங்க மட்டும் தான் போளர்கள் என்றால் அது எத்தனை வருடமானாலும் பேட்டிங்கே செய்ய கூடாது என்று சபதம் எடுத்துள்ளனர்..
வாழ்க தமிழ்

அமரன்
24-03-2007, 11:35 AM
உதயசூர்யனே அருமை. இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம். அணித்தலைவர் பயிற்றுவிப்பாளர் ஒட்டுமொத்த வீரர்கள் அனைவரினதும் தெனாவட்டுதான் காறணம்.

அன்புரசிகன்
24-03-2007, 12:52 PM
நேற்றைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் தான் மோசன் என்று எப்படி சொல்கிறீர்கள்? 255 ரன்கள் எல்லாம் ஒரு ரன்னா? மூன்று பேர் பத்தாயிரம் ரன்கள் கடந்து இருக்கிறார்கள், அதிரடிக்கு தோனி, சேவக், உத்தப்பா இருக்கிறார்கள் இதுபோக எப்போதாவது பேட்டிங்கில் கலக்கும் அகர்கர், ஜாஹீர்,, இதெல்லாம் ஒழுங்காக ஆடாமல் பவுலிங்கை குறைசொல்வது நியாயமா?.

அத்தனையும் மறுக்கப்பட முடியாத உண்மை. இந்த வெற்றி இலக்கு இந்தியாவிற்கு பெரிய சவாலாக இருக்கும் என்று நான் ஆரம்பத்தில் நினைக்கவில்லை.

aren
26-03-2007, 06:09 AM
நான் எழுதியதில் ஒரு சில உடனே நடக்கும் என்று தெரிகிறது சரத்பவார் அவர்களின் நேற்றைய பேச்சிலிருந்து.

மூத்த வீரர்களின் பழைய ஆட்டத்தை வைத்து இனிமேல் ஆட்களை எடுக்கப்போவதில்லை, அவர்களுடைய இன்றைய திறமையின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வுக்குழு மறு பரிசீலனைக்கு செல்கிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா மாதிரியான தேர்வுக்குழுவை ஏற்படுத்தப்போகிறார்கள்.

இளைஞ்ர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இது சரத்பவார் அவர்களின் நேற்றைய பேச்சிலிருந்து.

அப்படி நடந்தால் இந்தியா அடுத்த உலக கோப்பையை வெல்லும் என்பது நிச்சயம்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
26-03-2007, 06:10 AM
கங்குலி, டெண்டுல்கர், திராவிட், கும்ளே ஆகியோர் தாமாகவே ஓய்வு பெற்றதாக அறிவித்துவிடலாம். இல்லையேல் கல்தாதான்.

மன்மதன்
26-03-2007, 06:14 AM
டெண்டுல்கரை கேப்டனாக அறிவிக்கபோவதாக NDTVல் காட்டினார்களே.. வீரர்கள அனைவரும் டெண்டுல்கர் கேப்டனாக வருவதில் ஆர்வம் காட்டுகிறார்களாம். கங்குலி உட்பட..!

ஷீ-நிசி
26-03-2007, 06:55 AM
மனம் வெறுத்துவிட்டது. கிரிக்கெட்டைப் பற்றி இனி பேசக்கூடாது என்றே இருந்தேன்.

இந்திய அணியை மீட்க 10 கட்டளைகள்..

1. சச்சின், ஷேவாக், டிராவிட், கும்ப்ளே, உத்தப்பா..
இவர்களை உடனடியாக அணியிலிருந்து நீக்கவேண்டும்..

2. யுவ்ராஜ் சிங் கேப்டனாக ஆக்க வேண்டும்.. தென் ஆப்ரிக்காவிற்கு எப்படி ஸ்மித் கேப்டனாக்கினார்களோ அப்படி.

3. தோனி ஓபனிங் பேட்ஸ்மேனாக இறங்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் முதல் 10 ஓவர்களில் ரன்ரேட் பயமின்றி உயர்த்துவதைப் போல்,
ஷேவாக் சரியான தொடைநடுங்கி.. (இந்திய அணியில் பாதி பேருக்கு பயம் முகத்தில் தெரிகிறது.)
இவரின் முதல் கோணலால்தான் பங்களாதேஷிடம் நாம் உதை வாங்க நேர்ந்தது..

4. பதானை அதிகம் உபயோகிக்க வேண்டும். அவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர், அவரை நம் இந்திய அணிதான் ஆர்டரை மாற்றி மாற்றி அவரையும் குழப்பி அணியையும் குழப்பிக்கொள்கிறது. எப்படி ஷான் போலாக் சவுத் ஆப்ரிக்க அணிக்கு கடைசி வரிசையில் இறங்கி உதவுகிறாரோ அப்படி அவரை உபயோகித்துக்கொள்ளவேண்டும்..

5. ரஞ்சியில் விளையாடும் இளம் வீரர்களை இனம் கண்டு இங்கிலாந்து கவுண்டியில் ஓராண்டு கண்டிப்பாக விளையாட வைக்கவேண்டும், கவுண்டியில் விளையாடுவதை முக்கிய தகுதியாக்க வேண்டும்.

6. நம் ஊர் பிச்சுக்களை உலகத்தரத்திற்கு உயர்த்தவேண்டும்.. இங்கே பட்டையைக் கிளப்புகிறவர்கள், அங்கே சுருண்டுக்கொள்கிறார்கள். முதலில் பிச்சுக்களை வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ப சரி செய்திடல் வேண்டும்..

7. இந்தியர் ஒருவரை கோச்சாக வைக்க வேண்டும், வெளிநாட்டுக்காரரை கோச்சாக வைப்பதால் நம் வீரர்களூக்கு மொழிப்பிரச்சினை அதிகம் நேரிடுகிறது.

8. கடந்தகால சாதனைகளைப் பார்க்காமல் அன்றைய திறமையின் அடிப்படையில் அணியில் இடம் கொடுத்திட வேண்டும், சச்சினாக இருந்தாலும் சரி.

9. விளம்பரத்தில் நடிப்பதற்கு வரைமுறைகள் இருந்திட வேண்டும். வீரர்களை போர்டு அனுமதியில்லாமல் வீரர்கள் விளம்பரத்தில் நடிக்கக் கூடாது.. பேட்ஸ்மேனாக இருந்தால் 3000 ரன் களை கடந்திருக்க வேண்டும்..
பவுலராக இருந்தால் 50 விக்கெட் வீழ்த்தியிருக்க வேண்டும்...
பின்னர்தான் விளம்பரதாரர்கள் வீரர்களை அனுக வேண்டும்.

10. வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் கிரிக்கெட் தலைவர் தேர்தலை 5 வருடத்திற்கு ஒருமுறை என்று மாற்ற வேண்டும்.. அரசியலில் போட்டியிடும் தலைவர்களே கிரிக்கெட்டிலும் போட்டியிடக்கூடாது.. கிரிக்கெட் சாதனையாளர்கள் மட்டுமே கிரிக்கெட் தலைவர் பதவியில் அமர வேண்டும்.

மதுரகன்
26-03-2007, 06:16 PM
என்னைப்பொறுத்தவரை நீங்கள் இதையெல்லாம் தோல்வி வரும் போது மாத்திரம் கூறாமல் எப்போதும் கடைப்பிடிக்கவேண்டும்.
அப்போததான் இந்திய அணி சரிப்படும்.

rajeshkrv
26-03-2007, 07:12 PM
எப்பொழுது தான் திருந்துவார்களோ நம்மவர்கள்
எத்தனை போட்டிகளை பார்க்கிறார்கள் மற்ற நாட்டின் விளையாட்டை பார்த்தும் கூட நம்மவர்களுக்கு ஏன் அந்த ஜெயிக்க வேண்டும் என்ற வெறி வரவில்லை ...
அது போகட்டும், ஆஸ்திரேலியாவின் அணியில் இடம்பெறுவதற்கு எவ்வளவு உழைக்கவேண்டும் தெரியுமா
ஒரு வீரர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும்போது அவரது வயது 27 - 31 வயது ஆகிவிடும் ஏனென்றால் அதற்கு முன் பல கவுண்டி ஆட்டங்கள் என பல அணியில் விளையாடி திறமையை நிரூபித்த பின்னர் தான் இந்த அணியில் சேர்த்துகொள்வது பற்றி பரிசீலணை செய்யப்படும்

அதே போல் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் உடனே அதன் தலமையை மாற்றவோ அல்லது அணியிலிருந்து நீக்கவோ செய்வதில்லை .. ஏனென்றால் அன்றைய தோல்விக்கு பல காரணங்கள் உண்டு என்பதே

இதை எல்லாம் நம்மவர்கள் யோசிக்கவும் மாட்டார்கள், உடனே மாற்றம் , மீண்டும் இதே நிலமை வரும் மீண்டும் மாற்றம்
முந்தைய உலக கோப்பையில் நாம் பார்க்காததா ..
அட போங்கப்பா இந்திய அணி இந்தியாவை தவிர வேறு எங்கும்ஜ் கிரிக்கெட் விளையாட அனுமதிக்ககூடாது என்பதே என் கருத்து

அறிஞர்
26-03-2007, 07:39 PM
என்னவோ நடக்குது....

நாம் பேசுவது எல்லாம் நடந்துவிட்டால்.. இந்தியாவுக்கு 2011ல் கோப்பை உறுதி (எந்த கோப்பை எனக் கேட்காதீர்கள்)

அமரன்
26-03-2007, 07:41 PM
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே. இந்தியா கோப்பையை தூக்கினால்...........சந்தோசம்.

aren
26-03-2007, 07:47 PM
பெரிய தலைகள் நிச்சயம் உருளும் என்றே தெரிகிறது சச்சின் உட்பட. ஆகையால் அவர்களே மரியாதையாக ஓய்வு என்று அறிவித்துவிடுவார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

கவாஸ்கர் போன்றவர்கள் இன்னும் சச்சின் மீது அதீத நம்பிக்கை வைத்துளார்கள். இந்த மாதிரி ஆட்கள் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மாட்சை பார்த்திருந்தால் அப்படி பேச மாட்டார்கள். நம் இந்தியாவும் என்று அப்படி ஆடும் என்ற கவலையே இவர்களுக்கு மேலோங்கி நிற்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

அறிஞர்
26-03-2007, 07:51 PM
பழைய சாதனைகள் போதும்...
புது அணி வேண்டும்...

ராஜா
27-03-2007, 03:49 AM
ஒருநாள் கூட மைதானத்தில் நின்று வெயிலில் கிரிக்கெட் ஆடியிராதவர்கள் வாரியத் தலைவர் ஆனால் எப்படி இந்தியா கிரிக்கெட்டில் முன்னேறும்..

மேலும் தேர்வு முறையில், வடக்கு தெற்கு பாகுபாடு நிலவுகிறது. தேர்வாளர்களின் சொந்த விருப்பு வெறுப்பின்படி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்..

10 போட்டிகளில் சொதப்பினால்கூட ஒரு சொத்தை அணிக்கு எதிராக ஐம்பதோ, நூறோ அடித்துவிட்டால் உடனே அவர் இடம் அணியில் உறுதிப்பட்டு விடுகிறது. அதுவே இன்னும் 10 இன்னிங்ஸ்கள் வரையில் பொறுப்பற்ற ஆட்டத்துக்கு வித்திடுகிறது..

அமரன்
27-03-2007, 08:14 AM
பழைய சாதனைகள் போதும்...
புது அணி வேண்டும்...

சரத் பவாரின் அறிக்கை அப்படி நடக்கும் என்பதி சொல்லிகின்றதே.

அறிஞர்
27-03-2007, 02:10 PM
ராஜா சொல்வது சரிதான்... பவார் என்ன நடவடிக்கை எடுப்பார் எனப் பார்ப்போம்..

pradeepkt
28-03-2007, 10:50 AM
நேற்றைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் தான் மோசன் என்று எப்படி சொல்கிறீர்கள்? 255 ரன்கள் எல்லாம் ஒரு ரன்னா? மூன்று பேர் பத்தாயிரம் ரன்கள் கடந்து இருக்கிறார்கள், அதிரடிக்கு தோனி, சேவக், உத்தப்பா இருக்கிறார்கள் இதுபோக எப்போதாவது பேட்டிங்கில் கலக்கும் அகர்கர், ஜாஹீர்,, இதெல்லாம் ஒழுங்காக ஆடாமல் பவுலிங்கை குறைசொல்வது நியாயமா?. முதலில் நம் அணிக்கு தலைமை சரியில்லை... கங்குலி தலைமை இருந்திருந்தால் அணி நிச்சயம் வென்றிருக்கும்...
ஆதவன்
அந்த மைதானத்தில் 267 ரன்கள்தான் அதிகபட்ச முதல் அணி ஆட்டம் என்று போட்டார்கள். இலங்கை 255 எடுத்த அப்போதே தெரியும் இது ஊத்திக் கொள்ளும் என்று. :sauer028:

ஆனாலும் நீ சொன்ன மற்ற அனைத்திலும் ஒத்துப் போகிறேன். உணவுக்குத் துரத்தும் சிங்கத்தை விட உயிருக்கு ஓடும் மானுக்குத்தான் வேகம் அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இரையாக வேண்டியதுதான்.

அன்று இலங்கைச் சிங்கத்திற்கு இந்திய மான் பிரியாணி!:icon_wacko:

இளசு
28-03-2007, 07:53 PM
இதுபற்றி இன்றைய ஜூவியில்
(நம் மன்றத்தில் கௌரவ உறுப்பினாராய் வந்தவரும், இசாக்கின் நண்பருமான) அப்துல்ஜப்பார் அவர்களின் அலசல் கட்டுரை வந்திருக்கிறதே... படித்தீர்களா?

இங்கே பதியவா?

ஆதவா
28-03-2007, 07:57 PM
எனக்கு படித்த மாதிரி ஞாபகம்... பதியுங்கள் இளசு அண்ணா! நாங்கள் படிக்கிறோம்

அறிஞர்
28-03-2007, 11:23 PM
இதோ ஜூவியின் பதிவு..

இந்திய அணிக்கு ஒரு இரங்கல்
உடம்பு கூசத்தான் செய்கிறது. தோல்வி என்பது ஜீரணிக்க கடினமானதுதான். ஆனால், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்தத் தோல்வியை ஓர் அவமானம் என்றே இதயம் கணக்குப் போடுகிறது. உணர்வுபூர்வமாக அல்லாமல் அறிவுபூர்வமாகவே நிலைமைகளை அணுகுபவர்களுக்கே இந்த நிலை என்றால், இந்திய அணி ஏதோ மலையைப் புரட்டி கடலில் தள்ளப் போகிறது என்கிற நினைப்பில் தங்களது பரிபூர்ண ஆதரவையும் அபிமானத்தையும் அதன் மீது அள்ளித் தெளித்த அப்பாவி ஸ்ரீமான் பொதுஜனத்தின் ஆத்திரத்தையும்- ஆற்றாமையையும் ஆதங்கத்தையும் நம்மால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

பிற நாட்டு நண்பர்கள்கூட இந்தியா மீது அளப்பறிய காதல் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் உள்ளங் களிலும் இந்திய அணி இந்த முறை உலகக் கோப்பைப் போட்டியில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்கு வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை துளிர்த்துத்தான் இருந்தது. ஆனால், எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் பொய்யாக்கி விட்டு, இந்திய அணி தோல்வியைத் தழுவி பரிதாபமாக அடுத்த கட்ட போட்டிகளுக்குச் செல்ல முடியாமல் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய மோசமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை ஜீரணிக்க முடியாமல்தான், எனது பிற நாட்டு நண்பர்களெல்லாம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இந்திய அணியின் தோல்வி பற்றிப் பேசுவதில்லை என்று. நாகரிகமாக இருக்காது என்றெண்ணிக்கூட அவர்கள் இத்தகைய ஒரு முடிவெடுத்திருக்கலாம். என்னதான் நாகரிகம் கருதி பேசவில்லை என்றாலும், ஒவ்வொருவருக்குள்ளும் பீறிக் கொண்டிருக்கும் ஆற்றாமையை யார் போக்குவது... எப்படிப் போக்குவது என்றுதான் புரியவில்லை. அதனா லேயே நம் கண்களையே ஒருவருக்கு ஒருவர் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை என்றாலும் வேறு திக்குகளில் பார்த்து தங்களுக்குள் சிரிக்கிறார்கள் என்கிற உண்மை ஊசிபோல் உடலை குத்தத்தானே செய்கிறது.

நாமெல்லாம் இப்படியரு நிலைக்கு தள்ளப் படுவோம் என்று எதிர்பார்க்கவில்லைதான். சரி, அதற்கு இந்திய அணி என்ன செய்யும் என்றால், அந்தக் கேள்விக்கு விடை சொல்ல முடியாதுதான். மொத்தத்தில், நடந்துவிட்ட அனைத்துக்கும் தவறு அவர்களுடையதுதான் என்று வீரர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது சரியாக இருக்காதுதான். ஆனால், ஒன்று மட்டும் உண்மை. நாம் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே இந்திய அணியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி ஆர்ப்பாட்டம் செய்து விட்டோம் என்பதுதான். அதாவது அவர்கள்மீது அளவுக்கும் கூடுதலாகவே பிரயாசைப்பட்டு விட்டோம்.
அச்சு - மின்னணு என்கிற சகல ஊடகங்களிலும் நாமடித்தக் கூத்து அந்த ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை போலும்.

போட்டித் துவங்குவதற்கு முன்பு வெளியிடப்பட்ட &- ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்கள் பிற நாட்டவர்க்கு எவ்வளவு முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியதோ அதைவிட மோசமான எரிச்சலும் கோபமும் இதே விளம்பரங்கள் தோற்ற பின்பும் அதே பாணியில் ஒளிபரப்பப்பட்ட போதும் நமக்கு ஏற்படுத்தியது உண்மை தானே!

Aspire for what you deserve என்பதைப் போல அருகதைப் பட்டதற்கு மட்டுமே ஆசைப்படு! என்பதை நாம் முற்றாகவே மறந்து போனோமா என்கிற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.
உற்சாகப்படுத்துகிறோம்,- ஊக்கமூட்டுகிறோம் என்கிற பெயரில் நாம் ஏற்படுத்திய இமாலய எதிர்பார்ப்பு உளவியல் ரீதியாக அவர்களுக்கு பெருத்த மன அழுத்தத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி அவர்களை இயல்பாக செயல்பட முடியாத அளவுக்கு முடக்கிப் போட்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதன் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு வகை சிந்தை முடக்கம் (Mental Block) கூட நம் வீரர்களையெல்லாம் பெரிய அளவில் பாதித்திருக்கலாம். இதைத் தவிர, தோல்விக்கு வேறு நியாயமான காரணங்கள் இருக்க முடியும் என்று நம்பவில்லை. அப்படி எதுவும் நம் கண்களுக்கும் புலப்படவில்லை.

பங்களாதேஷடனான போட்டியின்போது நம் வீரர்களின் விளையாட்டு அணுகுமுறை அதைத்தான் தெளிவாகச் சொல்லிற்று. நாற்பது ஓவர்கள் நிறைவு பெற்றபோது 166 பந்துகளை தொடாமலேயே விட்டிருந்தார்கள் (Dot-balls) இதுபோக ஆறு ஓவர்கள் மெயிடன்களாக அமைந்தன. அப்படியானால் மொத்தம் ஐம்பது ஓவர்களில் மூன்றில் இருபகுதி ஓவர்களை ஆடாமலேயே விட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, குறைந்தது ஐந்து கேட்ச்சுகளை தவற விட்டிருக்கிறார்கள். அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து ஆடாமல், எதையோ நினைத்து தவிர்த்தார்கள். தவிர்க்க வேண்டிய பந்துகளை அடித்தார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், உலகக் கோப்பை போட்டியில் இந்திய கதாநாயகனாக பவனி வருவார் என்று பலரும் கணித்து வைத்திருந்த டோனி அவுட்டான விதம் இதற்கு சரியான உதாரணம்.

எடுத்த எடுப்பிலேயே, தோற்று விடக்கூடாது என்று நினைப்பது ஒருவித பய உணர்வா அல்லது ஜாக்கிரதை உணர்வா என்பதை தீர்மானிப்பது அவ்வளவு எளிதல்ல. இதன் இன்னொரு பிரதிபலிப்புதான் இலங்கைக்கு எதிராக டாஸ் வென்றும் அவர்களை மட்டை பிடிக்க கேட்டுக் கொண்ட தொடை-நடுங்கித்தனம் (knee-jerk re-action)!போட்டி நடைபெற்ற ட்ரினிடாடில் ஆடுகளம் சமீபத்தில்தான் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நடைபெற்ற பத்து போட்டிகளில் இலக்கை நிர்ணயித்த அணி ஏழு முறையும், இலக்கை விரட்டிச்சென்ற அணி மூன்று முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன என்கிற உண்மை சுவர்மேல் எழுத்தாக இருந்தும் அதனை நீர்மேல் எழுத்தாக ட்ராவிட் நினைத்துச் செயல்பட்டது பரிதாபத்துக்குரிய விஷயம்தான். இலக்கை நிர்ணயிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தும் அதைத் தவற விட்டதைத்தான் இங்கே தவறாக எடுத்துக் கொண்டு அலச வேண்டியதாகி விட்டது. கடந்த காலம் இப்படி இருக்கிறது என்பதற்காக, டிராவிட் சுதந்திரமாக ஒரு முடிவெடுத்து செயல்பட்டிருக்கலாமா கூடாதா என்றால், அந்த உரிமைக்குள் யாரும் தலைநுழைக்க முடியாதுதான். நாம் சொல்வது போலவே டிராவிட் செயல்பட்டிருந்து அப்போதும் தோல்வி கிடைத்திருந்தால், அதற்கும் விடை சொல்ல முடியாது.

ஆனால், ஒன்றை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட முடியும்... கடந்த முறை நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதே அணுகுமுறையில் தோல்வி கண்டிருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டித்தானே ஆக வேண்டும். அதாவது, முட்டிய பின்னும் நாம் குனியவில்லை என்பதுதான் சோகம். அதனால்தானோ என்னவோ, இந்தியாவுக்குத் தலைகுனிவு தொடர்கிறது. தவறுகளை தலையில் வைத்துக்கட்ட சில பலி கிடாக்கள் (scape-goats) தேடப்படும். கடும் நடவடிக்கைகள் என்கிற பெயரில் சில தலைகள் இங்கே உருட்டப்படும். அதில் ட்ராவிடின் தலையும் ஒன்றாக இருக்குமானால், ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், பாகிஸ்தானைப்போல் இங்கே நம் இந்தியத் தேர்வுக்குழு பதவி விலகாது. ஏனெனில் தார்மீகப் பொறுப்பேற்பது என்பது இன்று வரையில் இங்கே கெட்ட வார்த்தையாக இருப்பதுதான்.

சச்சின் டென்டுல்கர் நிறைய எதிர் பார்க்கப்பட்டவர், இப்படியரு சொதப்பல் விளையாட்டை விளையாடுவதை விட்டுவிட்டு அவர் உடனடியாக ஓய்வு பெற்றுவிடுவது நல்லது. அதுதான் அவர் நம் நாட்டின் மீதும் கிரிக்கெட் விளையாட்டின் மீதும் பற்று வைத்திருக்கும் கோடிக்கணக்கான உள்ளங்களுக்கு அளிக்கும் மரியாதையாக இருக்கும். இலங்கைக்கு எதிராக அவர் ஆட்டம் இழந்ததைப் போல் திருவல்லிக்கேணி தெருவில் ஆடும் பையன் கூடச் செய்திருக்க மாட்டான்.

இந்திய அணி வீரர்களே, நீங்கள் (உங்களுக்காகவே) செய்து கொண்ட சாதனைகளுக்கும், இந்திய அணிக்கு செய்த மாபெரும் தொண்டுக்கும் போடுகிறோம், சல்யூட். இனியாவது மானத்தைக் காப்பற்ற வேண்டும். அதனால், நீங்களாகவே ஒதுங்கிக் கொள்ளுங்கள். 1983 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்தியாவில் கிரிக்கெட் பெற்ற இமாலய செல்வாக்கு, இந்தப் படுதோல்விக்குப் பிறகு அதல பாதாளத்துக்குப் போயிருக்கிறது. அது மீண்டும் சமதளத்துக்கு வர எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது யாருக்குத் தெரியும்.
---& சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

நன்றி - ஜுனியர் விகடன்

அரசன்
03-04-2007, 01:46 PM
"கிரிகெட் என்பது ஒரு விளையாட்டு. தொழில் அல்ல" என்று ரசிகர்களும் வீரர்களும் உணர்ந்துகொண்டால் கிரிகெட்டிலும் சரி, நாட்டின் பொருளாதாரத்திலும் சரி இந்தியாவுக்கு வெற்றிதான்.

aren
04-04-2007, 12:58 PM
"கிரிகெட் என்பது ஒரு விளையாட்டு. தொழில் அல்ல" என்று ரசிகர்களும் வீரர்களும் உணர்ந்துகொண்டால் கிரிகெட்டிலும் சரி, நாட்டின் பொருளாதாரத்திலும் சரி இந்தியாவுக்கு வெற்றிதான்.

ரசிகர்கள் விளையாட்டாகவே நினைக்கிறார்கள், ஆனால் கிரிக்கெட் வீரர்கள் இதை ஒரு தொழிலாகத்தானே நினைக்கிறார்கள். அதிகமாக பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
04-04-2007, 12:59 PM
உலகக்கோப்பைக்குபின் முதல் பலி: கிரெக் சாப்பல். தன்னுடைய காண்டிராக்டை முடித்துக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.

போர்டு இவரை தள்ளுவதற்கு முன் தாமாகவே விலகிவிட்டார்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஆதவா
05-04-2007, 12:49 AM
சாப்பல் விலகியதே நன்று... அப்படியே சீனியர் வீரர்களும் செய்தால் பரவாயில்லை..

ஓவியன்
09-04-2011, 12:55 PM
இந்த திரியினை மேலே தூக்குகிறேன், இந்த திரியினை மீள மேலே கொண்டுவரும் தருணம் இதுதான் என்பதால்..!! :)

நாஞ்சில் த.க.ஜெய்
09-04-2011, 01:58 PM
சரியான சமயத்தில் திரியை தூண்டி விட்டிருக்கீர்கள் நண்பரே!..அன்றைய தினம் செருப்பு(சேப்பல் ) பயிற்சியாளரின் அணுகுமுறையில் ஏற்பட்ட தவறு இன்றைய தினம் (கிறிஸ்டன் ) பயிற்சியாளரால் களையப்பட்டுள்ளது ....

ஆதவா
09-04-2011, 02:30 PM
எனக்குத் தெரிந்து உடனடியாக நடக்கும் செயல்கள்:

தேர்வுக்குழு செய்யவேண்டியது.

பெரிய தலைகளில் பலரை வீட்டிற்கு அனுப்பலாம்.
சச்சினை மரியாதையாக ரிடையர் ஆகச் சொல்லலாம், அப்படி செய்யவிடில் அவரை குழுவிலிருந்து நீக்கலாம். அவர் குழுவில் இருக்கிறார் என்ற தைரியத்தில் மற்ற வீரர்கள் சரியாக ஆடுவதில்லை, அதேபோல் சச்சினும் முன் மாதிரி ஆடுவதில்லை. அவர் இருப்பதால் எந்த பிரயோஜனமும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரை 3rd Man-ல் நிறுத்தி வைத்ததிலிருந்தே இது தெரிகிறது.
திராவிடை குழுத்தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு யுவராஜ்சிங்கை தலைவராக அறிவிக்கலாம்.
கங்குலி இத்தோடு ரிடையர் ஆகிவிடுவார் என்று எதிரிபார்க்கிறேன்.
தோனி, ஹர்பஜன், அகர்கர், திராவிட், கங்குலி, சச்சின், கும்ளே ஆகியோர் இல்லாத ஒரு குழுவை யுவராஜ் தலைமையில் இந்தியா தேர்வு செய்யவேண்டும்.
அந்த புதிய குழுவில் யுவராஜ், ஷேவாக், கார்திக் (விக்கெட் கீப்பராக), முனாஃப் படேல், இர்பாஃன் பத்தான், ஸ்ரீசந்த், ஜாஹீர்கான், உத்தப்பா ஆகிய உலகக்கோப்பை குழுவில் இடம் பெற்ற வீரர்களும் மற்றும், பெங்காலின் திவாரி, டெல்லியின் சேகர் திவான், தமிழகத்தின் யோ மகேஷ் மற்றும் பதிரிநாத், மும்பையின் ரோமேஷ் பவார், உத்தரபிரதேசத்தின் பியூஷ் சாவ்லா மற்றும் சுரேஷ் ரைனா ஆகியோரைக் கொண்டு ஒரு புதிய டீம் உருவாக்கலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஆரென் அண்ணா
நீங்கள் சொன்னது போல
பெரிய தலைகளான கங்குலியும் ட்ராவிடும் தூக்கப்பட்டுவிட்டனர். ஆனால் சச்சினை ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏனெனில் அந்த தோல்விக்குப் பிறகு சச்சினைப் போல வேற எவரும் ஆடியிருக்கவில்லை!!
ட்ராவிட்டை கேப்டனாகப் போட்டதே எனக்குப் பிடிக்கவில்லை. சோ, தோனி வந்தபிறகு இந்திய அணியே மாறிவிட்டது
கங்குலி ரிட்டயர்ட்!!
என்னைப் பொறுத்தவரையில் ஷேவாக் கூட தேவையில்லாதவர்தான்... அவர் எப்பொழுதும்போல ஏதாவது ஒரு போட்டியில் பெயர் வாங்கிக் கொண்டு மற்ற போட்டிகளில் தூங்கிவிடுவார்.
மற்றபடி புதியவர்களாக சேர்க்கப்பட்ட சோதனைகளில் பெரிய வெற்றி இல்லை என்றாலும் அணியில் ஒரு ஃப்ரஷ்னெஸ் இருக்கிறது..
தேறியவர்கள் காம்பீர், ரெய்னா, கோலி, மற்றும் அஸ்வின் மட்டுமே!! நான்கு வருடங்களில் நான்கு பேரைத்தான் தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்க முடிந்திருக்கிறது!!! இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடியாம்!

தோனி தலைமையில் வீரர்கள் சுதந்திரமாக ஆடினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். சச்சினுக்கு மிகவும் பிடித்த ஓபனர் இடம் மீண்டும் அவருக்கே கொடுக்கப்பட்டது!! பல திறமையான வீரர்கள் சோதிக்கப்பட்டார்கள். தோனி அணியில் பவுலிங் துறையில் மட்டும் இன்னும் வீக்னெஸ் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அடுத்த உ.லகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் ஜாஹீர் போல அட்லீஸ்ட் இன்னும் இருவரை உருவாக்கியே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஆரென் உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. ஒரு விடயத்தில் உடன் பாடில்லை. யுவராஜை தலைவராகப் போடுவதில் பிரச்சினை. அவர் கங்குலியைப் போன்றவர். திறமை இருந்தாலும் ஒரு விதமான தலைக்கனம் மிக்கவர். கேப்டனுக்குரிய பலபண்புகள் அவரிடம் இருந்தாலும் மற்றவர்களை மதிதல் என்ற முக்கியமான பண்பு அவரிடம் இல்லை என்றே நினைக்கின்றேன். இந்திய ரசிகர்கள் ஒரு வீரர் ஒரு ஆட்டத்தில் பிரகாஷித்தார் என்றால் அவரை ஏதோ தேவ தூதன் போல நினைக்கின்றார்கள். அதனால் ஒரு சதத்தினை வைத்து இரண்டு வருடங்கள் அணியில் நிலைத்து விடுகின்ரார்கள். இந்த நிலை மாற வேண்டும். முதலில் சப்பலை மாற்றவேண்டும். இலங்கை உலகக்கிண்ணதை ஜெயிக்காதுவிட்டாலும் அணியில் முன்னேற்றம் தெரிகின்றதல்லவா. நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளிலும் திறமையாக விளையாடி மூன்று அரைச்சதங்களை பெற்ற சில்வாவைத் தேடிப்பிடித்தது பயிற்சியாளர் ரொம் மூடி. இவர் இந்தியாவினால் நிராகரிக்கப்பட்டவர்.
எல்லாவற்றும் காரணமான அரசியல் .................

அமர், உங்கள் கருத்துப்படி யுவ்ராஜுக்கு கேப்டன் பதவி தரப்படவில்லை!! அது எத்தனை சரியானது என்பது இப்பொழுது புரிகிறது. கேப்டன் பதவிக்காக யுவ்ராஜ் ஆசைப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது!! (அப்பாவுக்கு போன் போட்டு அழுதாராம்ல!)

குறிப்பாக சேவக்கினால் வாய்ப்பிழந்தவர்கள் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?.

நேற்றைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் தான் மோசன் என்று எப்படி சொல்கிறீர்கள்? 255 ரன்கள் எல்லாம் ஒரு ரன்னா? மூன்று பேர் பத்தாயிரம் ரன்கள் கடந்து இருக்கிறார்கள், அதிரடிக்கு தோனி, சேவக், உத்தப்பா இருக்கிறார்கள்

டிராவிட் சப்போர்ட்...
சேவக் இன்றுவரை நீடிப்பதற்கும் அவரே காரணம்..................

டிராவிட் முற்றிலும் கேப்டனுக்குத் தகுதியில்லாதவர்..............

மீண்டும் மற்ற கருத்துக்கள் நம் நண்பர்கள் கொடுப்பார்கள்...

ஆதவன்

இந்த கருத்துக்களிலிருந்து இப்போதும் வாபஸ் வாங்கவில்லை... ஷேவாக் அணிக்குத் தேவையில்லாதவர்தான்.. வரப்போகும் எத்தனை போட்டிகளிலும் உக்காந்து உக்காந்து அடித்தாலும் படுத்துக்கொண்டே சதம்போட்டாலும் சரி... ஷேவாக் தேவயற்றவர்!!

அதேசமயம் இப்பொழுது 260, 275 ரன்களை மிக அழகாகக் கடக்கிறார்கள். (ஆக்சுவலி, கடந்தார்கள்) ஆக, பவுலிங் குறைபாடு என்று முழுமையாகச் சொல்லிவிடமுடியாது!!

நான் எழுதியதில் ஒரு சில உடனே நடக்கும் என்று தெரிகிறது சரத்பவார் அவர்களின் நேற்றைய பேச்சிலிருந்து.

மூத்த வீரர்களின் பழைய ஆட்டத்தை வைத்து இனிமேல் ஆட்களை எடுக்கப்போவதில்லை, அவர்களுடைய இன்றைய திறமையின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வுக்குழு மறு பரிசீலனைக்கு செல்கிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா மாதிரியான தேர்வுக்குழுவை ஏற்படுத்தப்போகிறார்கள்.

இளைஞ்ர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இது சரத்பவார் அவர்களின் நேற்றைய பேச்சிலிருந்து.

அப்படி நடந்தால் இந்தியா அடுத்த உலக கோப்பையை வெல்லும் என்பது நிச்சயம்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஹேஹே..... ஜெயிச்சாச்சுல்ல!!!! :icon_b:

பெரிய தலைகள் நிச்சயம் உருளும் என்றே தெரிகிறது சச்சின் உட்பட. ஆகையால் அவர்களே மரியாதையாக ஓய்வு என்று அறிவித்துவிடுவார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

கவாஸ்கர் போன்றவர்கள் இன்னும் சச்சின் மீது அதீத நம்பிக்கை வைத்துளார்கள். இந்த மாதிரி ஆட்கள் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மாட்சை பார்த்திருந்தால் அப்படி பேச மாட்டார்கள். நம் இந்தியாவும் என்று அப்படி ஆடும் என்ற கவலையே இவர்களுக்கு மேலோங்கி நிற்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

சச்சின் மீது வைத்திருந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றிவிட்டார்.. அநேகமாக 20000 ரன்களைக் கடந்தபிறகுதான் அண்ணாத்தே ரிட்டயர்ட் என்று நினைக்கிறேன்... ஏனெனில் தற்போதைக்கு ஓய்வு இல்லை என்று அறிவித்துவிட்டார்!!!

தாமரை
04-01-2012, 05:29 AM
மீண்டும் வீட்ல புலி வெளியில எலியா மாறி இருக்காங்களே.. ஹி ஹி ...

எதையும் கொஞ்ச நாள் கழித்துப் படிச்சா காமெடிதான்... :)

ஓவியன்
04-01-2012, 06:46 AM
ஹா, ஹா..!!

நானும் இந்த திரியை இன்று படித்து சிரித்துக் கொண்டிருந்தேன்....

என்ன நம்ம இந்திய அணி இன்று இரு பெருமைகளைப் பெற்றிருக்கின்றது...

மிக நீண்ட........... காலத்தின் பின் பாண்டிங்கை சதம் அடிக்க செய்தது.
முதல் முதலில் கிளார்கை இரட்டைச் சதம் அடிக்க வைத்தது.

:medium-smiley-002: :medium-smiley-002: :medium-smiley-002: :medium-smiley-002:

ஆதவா
04-01-2012, 11:29 AM

அநேகமா இந்த மேட்ச் நாளைக்கே முடிஞ்சிடும்னு நினைக்கிறேன். முதல் இன்னிங்ஸ்தான் இந்தியாவின் இன்னிங்ஸ் எப்போதுமே, அதிலயே அடிக்கலயாம், இரண்டாவது இன்னிங்க்ஸில என்னத்த எடுத்திட போறாங்க...

ஹலோ ICC,

தயவு செஞ்சு வெளிநாட்டில இந்தியாவுக்கு நாலு டெஸ்டுகளை வைக்காதீங்க!! போற போக்க பார்த்தா முதல் இரண்டு நாள்லயே மேட்சு முடிஞ்சிடும் போலருக்கு... டெஸ்டை கேவலப்படுத்தராங்க மை லார்ட்.

அப்போ ஆஸி??

ஆஸி ஆஸிதாங்க..... அதுக்கு எப்பவுமே ஒரு ஆசி உண்டு!

ஓவியன்
05-01-2012, 05:31 AM
ஒரு டெஸ்ட் போட்டியில் தனி நபர் ஓட்ட எண்ணிக்கையாக பல சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பு இருந்தும் 329 ஓட்டங்களுடன் இன்னிங்ஸை முடித்துக்கொண்ட அவுஸ்திரேலிய கேப்டன் மைக்கல் கிளார்க்குக்கு வாழ்த்துகள்....

தனி நபர் சாதனைகளிலும் அணியின் வெற்றிதான் முக்கியம் என வலியுறுத்தியிருக்கிறார். :)

ஆதவா
05-01-2012, 07:48 AM

இதைத்தான் நானும் எண்ணினேன். இருப்பினும் அவர் 400 ரன்களை எடுத்திருக்கலாம், வெற்றியை அது பாதித்திருக்காது. தவிர இந்தியாவை நம்பி இவ்வளவு பெரிய ஸ்கோர் எல்லாம் அடிக்கக்கூடாது, :lachen001::lachen001:

தாமரை
05-01-2012, 08:55 AM
இந்தியா மேல் நம்மை விட அவர் வைத்திருக்கும் அபார நம்பிக்கை வியக்க வைக்கிறது. :D:D:D:D

ஆதவா
06-01-2012, 01:22 AM
அநேகமாக இன்று சதம் அடிக்கும் வாய்ப்பு டெண்டுல்கருக்கு இருக்கிறது. சொல்ல முடியாது, இரட்டை சதமே அடிக்கலாம்....
அதற்கு நான் முன் வைக்கும் காரணங்கள்
காலிஸின் சமீபத்திய இரட்டை சதம்.

ஆனால் சதமடித்த பின்னர் சச்சின் மேல் விழும் வழக்கமான பழியை மாற்றிவிடமுடியாது,

257/3, சச்சின் 72, லக்*ஷ்மன் 56,
எனினும் தோல்வியை தவிர்க்க முடியாது என்பது சின்னப்புள்ள கூட சொல்லிவிடும்!

ஓவியன்
06-01-2012, 01:37 AM
நானும் அதனையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன் ஆதவா, ஆனால் இப்போது டெண்டுல்கர் கொஞ்சம் பதற்றத்துடன் விளையாடுவதாகத் தெரிகிறது, பார்ப்போம்.

சச்சின் - 77
லக்ஸ்மன் - 60

ஓவியன்
06-01-2012, 01:43 AM
டெண்டுல்கர் விக்கெட்டு மீளவும் போச்சே..!! :eek:

ஆதவா
06-01-2012, 02:23 AM
இன்னும் 14 ரன்களே தேவை,

300 ஐக் கடப்பதற்கு...

ரன்களைக் கடப்பார்களா? இல்லை
விக்கெட்டைக் கொடுப்பார்களா?

286/7 :lachen001:

சச்சின் நடையைக் கட்டினதும் பின்னாலேயே அணிவகுக்கும் நடைமுறை இன்னும் மாறவேயில்லை.... கொஞ்சமாச்சும் திருந்துங்கப்பா... :cool:

arun
07-01-2012, 11:44 AM

அவசரப்பட்டு விட்டீர்களோ 400 ரன்கள் வரை தாக்கு பிடித்து விட்டார்களே ! :)

அன்புரசிகன்
09-01-2012, 03:46 AM
:D:D:D

http://www.tamilmantram.com/vb/photogal/images/2528/large/1_AusIndi.jpg

ஆதவா
09-01-2012, 04:01 PM
இவங்கள்லாம் விபத்தையே “லாரி டமாலு ட்ரைவர் பணாலுனு” எழுதினவங்க..... இதெல்லாம் சப்ப சப்ப சப்பமேட்டரு!!

அன்புரசிகன்
09-01-2012, 09:30 PM
அடுத்தது பேர்த் இல். இதில் இந்தியா கொஞ்சம் நிதானமாக ஆடும் என எதிர்பார்க்கலாம். தவிர பற்றிங்சன் போய் ஹரீஸ் வருகிறார். அவருக்கு உடல் நலம் குறைந்தது என்பதெல்லாம் பொய்... தேவையில்லாது சேவாக்குடன் பேசியது பற்றி நடுவர் கூறாது விட்டாலும் இங்கு சில பத்திரிக்கைகளில் இனத்துவேசி என்று பேச்சு வந்துவிட்டது. அதற்காக இருக்கலாம்.... அவர் Dandenong (விக்டோரியாவில் அதிக பிறநாட்டவர்கள் வாழும் இடம்.) ஐ சேர்ந்தவர். நம்மவர்களால் ரொம்ப நொந்துபோய்ட்டார் போல.... அதை மைதானத்தில் காட்ட நினைச்சாரோ??? :lachen001:

ஆதவா
15-01-2012, 04:31 AM
அடுத்த டெஸ்டை ரெண்டே நாள்ல முடிக்கணும்னு தோனி&கோ முடிவு பண்ணியிருக்காங்களாம்...

அமரன்
15-01-2012, 09:34 AM
அடுத்த போட்டியில தோனி இல்லை என்று நடுவர் அன் கோ முடிவு பண்ணிருக்காமே ஆதவ்.

ஆதவா
15-01-2012, 12:32 PM
அடுத்த போட்டியில தோனி இல்லை என்று நடுவர் அன் கோ முடிவு பண்ணிருக்காமே ஆதவ்.

மெதுவா பந்து வீசினாங்களாம்.... அப்படியாவது ஒருநாளை அதிகமா இழுத்து கவுரவமா தோத்திடலாம்னு (!) நெனச்சிருப்பாங்க...

அன்புரசிகன்
15-01-2012, 10:58 PM
நடுவர்களின் தீர்ப்பு சரியாக இல்லை என்றும் சில இடங்களில் சொல்லலாம். நடுவர்களின் தீர்ப்பை மீள்பரிசீலனை செய்யும் DRS இந்த போட்டிகளி்ல் இல்லை. ஆனால் சச்சினின் LBW இல் wicket hitting என்று காட்டுவது போன்றதை வோணரினுடயதில் umpire's call என்று காட்டுகிறது. ஒரே மாதிரியான பந்துகளுக்கு... இது நான் சொல்லவில்லை. Mark Waugh சொன்னது. தவிர கோவன் 10 ஓட்டங்களுக்கு உள்ளே என்று நினைக்கிறேன். அந்த சமயத்தில் அவரது கை கவசத்தில் பட்டு சென்றதை Hotspot காட்டியது. ஆனால் குமார் தர்மசேன ஆட்டமிளப்பு இல்லை என்று தவிர்த்துவிட்டார். இந்த இருவரும் தான் அதிகமாக ஓட்டங்களை குவித்தவர்கள். ...... டோனிக்கு கெட்டகாலம் என்று தான் சொல்ல வேண்டும். விலத்திச்செல்லும் பந்துகளை அடிப்பதை எப்போது கைவிடுவார்களோ தெரியவில்லை. அதுவும் 4 பேர் பின்னாலே நிற்கும் போது... இங்கிலாந்தை அழைத்து பழிதீர்த்தது போல் செய்ய வேண்டும். :D

ஓவியன்
16-01-2012, 02:21 AM
முதலிரு போட்டிகளிலும் உருப்படியாக துடுப்பாட்டிய அஸ்வினை விட்டு விட்டு மூன்றாவது போட்டிக்கு போனதும் நல்லதொரு முடிவல்ல..!! :D

arun
27-01-2012, 07:36 PM
மூன்று போய் இப்போது நான்காவது டெஸ்டும் கிட்ட தட்ட அம்பேல் தான்!

விடு மச்சான் ஐ பி எல் வருது அதில விளையாடிக்கலாம்னு விட்டுட்டாங்க போல