PDA

View Full Version : இந்திய அணி தடை??அறிஞர்
23-03-2007, 10:17 PM
உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்க பட்ட இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் சூப்பர் 8ல் தேர்வு பெறாமல் வெளியேறியுள்ளது.

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் யார்?
1. தேர்வாளர்கள்.
2. பயிற்சியாளர்.
3. அணித்தலைவர்
4. ஒவ்வொரு உறுப்பினரும்.
5. கிரிக்கெட் வாரியம்.

இந்தியாவில் அதிக பணம் புழங்கும் வாரியம் கிரிக்கெட் வாரியம். வீரர்கள் கோடி கோடியாக சம்பாதித்து உள்ளனர். அவர்கள் சம்பாதித்த பணத்தை... வசூலிக்க இயலுமா??.

கிரிக்கெட் அணியை ஒரு வருடத்திற்கு தடை செய்யலாமா??...

கிரிக்கெட் வீரர்கள் வரும் விளம்பர பொருட்களை மக்கள் வாங்காமல் இருந்து கோபத்தை வெளிப்படுத்தலாமா??

ஒவ்வொரு அணி வீரருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.

பழைய (சாதனைகளை) ஆட்களை வைத்தே சவாரி செய்யும் பழக்கம் மாறுமா?

அணியில் 5-6 மூத்த வீரர்களை வீட்டுக்கு அனுப்பலாமா??

மனதளவில் இந்திய வீரர்களுக்கு தெம்பு இல்லை.... அதை பலப்படுத்த பயிற்சி அளிக்கலாமா?

இது விளையாட்டில் ரொம்ப சகஜம் என சொல்லலாம்.... ஆனால் இது மாதிரியான தோல்வியை என்ன பண்ணுவது??

இந்தியாவில் கிரிக்கெட்டை பலர் தெய்வம் போல் போற்றுகிறார்கள்.... இவர்களின் நிலை இனி என்ன?

இப்படி பல கேள்விகள் உண்டு... பதில் உங்கள் விவாதத்தில் வெளிப்படட்டும்.

தமிழ்பித்தன்
23-03-2007, 10:51 PM
(("இந்தியா மண்ணைக் கவ்வியது".)) பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அதனால் அதை சரியான முறையில் பயன்னடுத்த முடியாமல் போனது கிடைத்த அரிய சந்தர்ப்பங்கள்
1)இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரம் ஜெயசூரியா வந்தவுடனே ஆட்டம் இழந்து
2)இலங்கை எடுத்த குறைந்த அளவான ஓட்டம்
3)செவாக்கின் பிடியை சங்ககாரா நழுவ விட்டது
4)ராகுல்ராவிட்டின் பிடியை ஆனோல்ட் நழுவ விட்டது
இத்தனை சந்தர்ப்பம் இருந்தும் இந்தியாவால் இலங்கையை வெல்லமுடியவில்லை
வெல்ல முடியாமல் போனதற்க்கான காரணங்கள்
1) இலங்கையின் அனுபவ ஆட்டக்காரர்கள் புது ஆட்டக்காரர்களை நன்கு வழிநடத்தியதும் பயன் படுத்தியதும்
2) இந்திய முக்கிய வீரர்கள் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தமை

உண்மையில் இந்தியாவில் அனுபவமும் திறமையும் உள்ள பல வீரர்கள் இருந்தார்கள் இலங்கை ஜெயசூரியா போனவுடனேயே இனிதேறுமா என்கின்ற நிலமை ஆனால் இந்தியா அப்படி இல்லை டோனி வரை முதல் தர ஆட்டக்காரர்களே
நான் கடைசியாக கேட்ட ஆட்ட வர்ணனை
" ALL IINDIA GO HOME "

இலங்கை ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலும் தமிழ்பித்தன் சார்பாக தெரிவிக்கப் படுகிறது

இந்திய ரசிகர்கள் அதிக கோபம் யார் மீது என்று உங்கள் கோபத்தை தீர்த்து விட்டுப் போங்கள்
வாக்குப்போட இங்கே செல்லுங்கள (http://cuq2.pollhost.com)

அறிஞர்
23-03-2007, 10:54 PM
இந்தியர்கள்.. உலகிலேயே தங்களிடம் பெரிய பேட்டிங் வரிசை உள்ளது என வாய் சவுடால் பேசி இறங்கினர்... அதற்கு சரியான ஆப்பு வைத்தார்கள்..

கடைசி ஆட்டத்தில் இந்திய நிலை...

1. இரண்டு ஆட்டங்களில் சொதப்பிய உத்தப்பாவை எதற்கு எடுத்தார்கள்.

2. கங்குலிக்கு வாஸ் பந்து என்றாலே அலர்ஜி.. அப்படி பட்டவரை பேட்டிங்க் வரிசை மாற்றி இறக்கியிருக்கலாம்.

3. டெண்டுல்கர்... நல்ல பந்துவீச்சை இன்னும் திறமையாக எதிர்கொண்டு இருக்கலாம்.

4. சேவாக்-டிராவிட் ஒரளவு விளையாடினார்கள்.. அதை அப்படி காப்பாற்றி விக்கெட்டை காத்து இருக்கலாம். சேவாக் ரன்னை மட்டுமே பார்த்து ஆடினார்...

5. யுவராஜ்.. அவுட் பெரிய தற்கொலை.

6. தோனி.... கில்கிறிஸ்டோடு ஒப்பிடப்பட்டவர்.... முதல் பந்தில் இப்படியா.....

7. டிராவிட் ஒரு ஓவரில் 17 ரன் எடுத்தது பத்தாதா.... இன்னும் வேண்டும் என்ற ஆசை...

8. ஹர்பஜன்.. பந்து வீச்சு சுத்த மோசம்.. விக்கெட் எடுக்காமல் சும்மா ரன் கொடுக்க எதற்கு சிறப்பு பவுலர்.. ஒரே ஆறுதல்.. சுமாரான பேட்டிங்க்..

9. ஜாகீர் கான்... முதல் ஓவரில் ரன்னை வாரியிறைத்து.... எதிர் அணியினருக்கு தெம்பு தருபவர்.

10. அகர்கர், முனாப் படேல்... ஏதோ.. வந்தார்கள் போனார்கள்....

பரிதாபத்து உரியவர்கள்...

மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆல்ரவுண்டர் பதான்.

மேற்கு இந்திய தீவுகளில் ஜொலித்த ஸ்ரீசாந்த்.

தமிழர்களுக்கு ஆறுதலாக அணியில் இடம் பெற்ற தினேஷ் கார்த்திக்.

அறிஞர்
23-03-2007, 10:56 PM
இந்திய ரசிகர்கள் அதிக கோபம் யார் மீது என்று உங்கள் கோபத்தை தீர்த்து விட்டுப் போங்கள்
வாக்குப்போட இங்கே செல்லுங்கள (http://cuq2.pollhost.com)
இது என்ன நீங்கள் உருவாக்கிய ஓட்டு பகுதியா...

pradeepkt
23-03-2007, 11:43 PM
நான் கூட அறிஞர் இந்திய அணியே இந்தியாவுக்குள் நுழையத் தடை கோருவாரோ என்று ஆவலுடன் "ஆம்" என்று ஓட்டுப் போடலாம் என்று ஓடி வந்தேன்....:shutup:

இந்திய அணியை என்ன செய்யலாம் என்று வேறு கேட்கிறீர்களே.. :food-smiley-002:

நல்லவேளையாக கீழ்க்காணும் நிகழ்ச்சிகளுக்கு இன்றைய ஆட்டம் உறுதுணையாயிருக்கும்
1. வெட்டிக் கிரிக்கெட் வெறியர்களுக்கு இது ஒரு பாடம்
2. என்னைப் போல் ஆடிக்கொரு முறை பார்ப்பவருக்கும் ஒரு பாடம்
3. இனி இந்தியாவில் இருந்து உலகக்கோப்பைப் போட்டிக்கான வருமானம் குறையும்.
4. இந்திய அணியில் (இனிமேலாவது) ஒரு நல்ல மாற்றம் வரும். நாமும் மீண்டும் மீண்டும் பெர்முடாஸ் போட்ட பசங்களோடு விளையாடி மனத்தெம்பு பெறலாம்.

இப்ப யோசிச்சுப் பாத்தா இந்தப் பதிவே எனக்கு வெட்டியாத் தோணுது... கிரிக்கெட்டு எக்கேடு கெட்டால் நமக்கென்னங்க... :mad:

தமிழ்பித்தன்
24-03-2007, 01:29 AM
ஆமாம் அறிஞர் நான் உருவாக்கியது தான் ஏதும் தப்பு நடந்தால் கூறுங்கள் இங்கே எப்படி உருவாக்கவது என்று எனக்கு தெரியவில்லை நானும் உங்கள் போல் இங்கேயே வாக்குபதிவு உருவாக்கலாமா?

ஆதவா
24-03-2007, 04:33 AM
இந்த பாழாய்ப்போன பதினோரு பேரால் எதற்கு அணியை தடைசெய்யவேண்டும்?,,, வேண்டுமென்றால் அவர்கள் அறிமுகப்படுத்தும் விளம்பரப் பொருள்களை நாம் உபயோகிக்காமல் இருக்கவேண்டும்... அது சாத்தியமல்ல...

இனி என்ன செய்யலாம்?

முதலில் சாதனை வீரர்களைத் தூக்கி எறியவேண்டும். பழைய சாதனைகளையே சொல்லி சொல்லி அணியைக் கெடுக்கும் வீரர்களை அணியை விட்டுத் தூக்குவதுதான் சிறந்தது.
மனதளவில் இந்தியாவுக்கு பயிற்சி கொடுக்கவேண்டும்
நல்ல நல்ல வீரர்களை நல்ல பயிற்சி கொடுத்து சேர்க்க வேண்டும்
விளம்பரப் படங்களில் நடிப்பதை தடுக்கவேண்டும்
அணியில் உள்ளே வருவது சிரமம் என்ற நிலைக்கு வரவேண்டும். சரியாக ஆடாவிட்டால் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் தூக்கிவிடுவார்கள் என்ற பயம் கொண்டு வரவேண்டும்.மேலும் அதிகப்படி கருத்துக்கள் இரவு சொல்லுகிறேன்..

jasmin
24-03-2007, 08:29 AM
நான் கூட அறிஞர் இந்திய அணியே இந்தியாவுக்குள் நுழையத் தடை கோருவாரோ என்று ஆவலுடன் "ஆம்" என்று ஓட்டுப் போடலாம் என்று ஓடி வந்தேன்....:shutup:

இந்திய அணியை என்ன செய்யலாம் என்று வேறு கேட்கிறீர்களே.. :food-smiley-002:

நல்லவேளையாக கீழ்க்காணும் நிகழ்ச்சிகளுக்கு இன்றைய ஆட்டம் உறுதுணையாயிருக்கும்
1. வெட்டிக் கிரிக்கெட் வெறியர்களுக்கு இது ஒரு பாடம்
2. என்னைப் போல் ஆடிக்கொரு முறை பார்ப்பவருக்கும் ஒரு பாடம்
3. இனி இந்தியாவில் இருந்து உலகக்கோப்பைப் போட்டிக்கான வருமானம் குறையும்.
4. இந்திய அணியில் (இனிமேலாவது) ஒரு நல்ல மாற்றம் வரும். நாமும் மீண்டும் மீண்டும் பெர்முடாஸ் போட்ட பசங்களோடு விளையாடி மனத்தெம்பு பெறலாம்.

இப்ப யோசிச்சுப் பாத்தா இந்தப் பதிவே எனக்கு வெட்டியாத் தோணுது... கிரிக்கெட்டு எக்கேடு கெட்டால் நமக்கென்னங்க... :mad:
நண்பர் கூறுவதுதான் எனக்கு சரியாகபடுகிறது. தற்போது கிரிகெட் என்பது ஒரு சூதாட்டம் என்பதை இந்தியா அணியும், பாக்கிஸ்தான் அணியும் நிருபித்து இருக்கிறது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் தோற்றதுக்கு எனக்கு மிகவும் மகிழ்சி. இனியாவது நமது இந்திய மற்றும் பாக்கிஸ்தான் நண்பர்கள் அலுவலகத்தில் ஒழுங்காக பணி செய்வார்கள், மாணவர்களும் ஒழுங்காக படிப்பார்கள்

Mathu
24-03-2007, 09:26 AM
இப்படி ஒரு அணி இப்போதே வீட்டுக்கு போவது தான் எல்லோருக்கும் நல்லது.

:sport-smiley-005: :sport-smiley-005: :sport-smiley-002: :sport-smiley-008:

இதை விட அனியாயம் இந்த ஆட்டங்களை பார்க்க 200டாலர் கொடுத்து காட்வாங்கியது.
:icon_tongue:

மனோஜ்
24-03-2007, 09:34 AM
இந்திய கிரிகெட் இரசிகர்களுக்கு ஒரு பாடம் இனி பைத்தியமாய் இருக்க மாட்டார்களே
இந்திய அணியூம் மாற்றம் பெறும் ஆரேக்கியமான எதிர்காலம் பிறக்கும்

அமரன்
24-03-2007, 10:53 AM
இந்திய ரசிகர்கள் அதிக கோபம் யார் மீது என்று உங்கள் கோபத்தை தீர்த்து விட்டுப் போங்கள்
வாக்குப்போட இங்கே செல்லுங்கள (http://cuq2.pollhost.com/)

அதிக வாக்கு சச்சினுக்கு. இரண்டாம் இடத்தில் திராவிட்.
இந்திய ஒட்டுமொத்த அணியை தடைசெய்ய வேண்டாம்.
சச்சின் யுவராஜ் திராவிட்டின் தலைமை ஹர்பஜன் சப்பல் பல கிரிக்கட் போர்ட் உருப்பினர் என்போரை லைவ்டைம் தடை பண்ணனும். விளம்பரங்களில் இவர்கள் பங்கை தடை பண்ணனும்.

மன்மதன்
24-03-2007, 12:11 PM
விளம்பரம் நடிப்பதை தடுக்க முடியாது. ஓடுகிற குதிரை மேல் பணம் கட்டுவதுதானே வாடிக்கை. அந்த குதிரை இரண்டு மேட்சில் ஓடலேன்னா 10 மேட்ச் உட்கார வைக்கணும்.. யாரும் அந்த குதிரை மேல் பணம் (விளம்பரம்) கட்ட தயங்குவார்கள்.

அமரன்
24-03-2007, 12:15 PM
விளம்பரங்களில் நடிக்கத்தடை கொண்டுவரலாம்தானே.

மன்மதன்
24-03-2007, 12:26 PM
விளம்பரங்களில் நடிக்கத்தடை கொண்டுவரலாம்தானே.

பெப்சி போன்றவர்கள் தடையை உடைத்துவிடுவார்கள்..:food-smiley-009:

pradeepkt
24-03-2007, 01:57 PM
இப்படி ஒரு அணி இப்போதே வீட்டுக்கு போவது தான் எல்லோருக்கும் நல்லது.

:sport-smiley-005: :sport-smiley-005: :sport-smiley-002: :sport-smiley-008:

இதை விட அனியாயம் இந்த ஆட்டங்களை பார்க்க 200டாலர் கொடுத்து காட்வாங்கியது.
:icon_tongue:
குத்துங்க மது.. குத்துங்க...
இந்த கிரிக்கெட்டு விளையாட்டுக்காரங்களே இப்படித்தான்
குத்துங்க மது ... குத்துங்க

நீங்க பரவாயில்லை கார்டு வாங்கினதோட நிறுத்தினீங்க. கொள்ளப் பேரு கொள்ளச் செலவு பண்ணி அங்கேயே போயிருக்காங்க... நேத்து அவங்க எல்லாம் அழுத அழுகை... கல் மனமும் கரைந்தது

rmsachitha
24-03-2007, 02:53 PM
இரவு சாப்பிடும்போது ஒரு பத்து நிமிடம் வரை பார்த்தேன், பிறகு காலையில்தான் தெறிந்துகொண்டேன் இந்தியா தோற்றுவிட்டது என்று.

மன்மதன்
24-03-2007, 02:57 PM
இந்திய அணியை தடை செய்தால், பங்களாதேஷ் போன்ற அணிகள் யார் கூட ஜெயிப்பார்களாம்..:D :D

(அதுக்குத்தான் பாகிஸ்தான் இருக்கே !!!)

அமரன்
24-03-2007, 06:33 PM
இந்திய அணியை தடை செய்தால், பங்களாதேஷ் போன்ற அணிகள் யார் கூட ஜெயிப்பார்களாம்..:D :D

(அதுக்குத்தான் பாகிஸ்தான் இருக்கே !!!)

கேள்வியும் நீயே பதிலும் நீயே (நீ க்கு மன்னித்தருள்க)

அமரன்
24-03-2007, 06:34 PM
இரவு சாப்பிடும்போது ஒரு பத்து நிமிடம் வரை பார்த்தேன், பிறகு காலையில்தான் தெறிந்துகொண்டேன் இந்தியா தோற்றுவிட்டது என்று

நேற்று உங்களுக்கு நல்ல காலம். ம்.... நமக்கு போறாத காலம். இல்லைன்னா உட்கார்ந்து பார்த்திருப்போமா

மதி
24-03-2007, 07:01 PM
தடை செய்யும் விவாதங்கள் ஒரு புறம் இருக்கட்டும்.
இன்று வந்த குறுஞ்செய்தி:

உலகக்கோப்பையில் இந்தியா தோற்க யார் காரணம்..?
--------
இந்திராகாந்தி............

ஏன்னா 1971-ல் அவர் தானே பங்களாதேஷ் உருவாக காரணமாவார்.

ஹ்ம்..எப்படியெல்லாம் காரணத்த யோசிக்கறானுங்க..???

v.pitchumani
24-03-2007, 07:07 PM
ஒரு நாள் போட்டி என்றால் அப்படிதான், முந்திய நாள் உலக சாதனை படைத்த அதிக ஒட்ட குவிப்பு.அடுத்த நாள் மோசமான தோல்வி. இது ஒன்றும் இந்திய ரசிகர்களுக்கு புதிதில்லை.தங்களது அணி கரை ஏறாது என தெரியும். இருந்தும் ஒரு யோகத்தில் வெற்றி பெற்றாலும் பெற்றுவிடுமோ என்ற அற்ப ஆசை. அதற்கு கிடைத்த பெரியஅடி.

அமரன்
24-03-2007, 07:11 PM
உலகக்கோப்பையில் இந்தியா தோற்க யார் காரணம்..?
இந்திராகாந்தி............
ஏன்னா 1971-ல் அவர் தானே பங்களாதேஷ் உருவாக காரணமாவார்.
இதைத்தான் வளர்த்த கடா மார்பில் பாயுது என்பார்களோ?

அறிஞர்
26-03-2007, 08:41 PM
ஒரு நாள் போட்டி என்றால் அப்படிதான், முந்திய நாள் உலக சாதனை படைத்த அதிக ஒட்ட குவிப்பு.அடுத்த நாள் மோசமான தோல்வி. இது ஒன்றும் இந்திய ரசிகர்களுக்கு புதிதில்லை.தங்களது அணி கரை ஏறாது என தெரியும். இருந்தும் ஒரு யோகத்தில் வெற்றி பெற்றாலும் பெற்றுவிடுமோ என்ற அற்ப ஆசை. அதற்கு கிடைத்த பெரியஅடி.
அணி பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.. :engel016:

அமரன்
26-03-2007, 08:44 PM
அணி பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள்

அணியை மட்டுமல்ல மக்களையும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்.

அறிஞர்
26-03-2007, 08:48 PM
என்ன பண்ணுறது.. இவர்களை முன் நிறுத்தி நடுவில் சிலர் சம்பாதிக்கிறார்கள்..

ராஜா
27-03-2007, 06:33 AM
என்ன வேணும்ன்னாலும் சொல்லிட்டுப் போங்க..

இந்திய கிரிக்கெட் ரசிகர் திருந்தவே மாட்டார்..

இப்போ ஒரு சொத்தை அணி இந்தியாவுக்கு வந்தாப் போதும்..

நம் வீரர்கள் அந்த அணியை உண்டு இல்லேன்னு பார்த்து தன் சராசரியை உயர்த்திப்பாங்க..

நம் ரசிகர்கள் "ஆஹா.. இந்திய அணி சூப்பர்..!"ன்னு பழயபடி கனவு காண ஆரம்பிச்சுடுவாங்க..

ஓவியன்
27-03-2007, 09:17 AM
இப்போது இந்திய அணிக்குத் தேவையானதெல்லாம் இளம் இரத்தம் மற்றும் புதிய அணுகு முறைகள், வேகப் பந்துவீச்சிலே பயிற்சி செய்வதற்கான மைதானங்கள்.

pradeepkt
28-03-2007, 10:49 AM
தடை செய்யும் விவாதங்கள் ஒரு புறம் இருக்கட்டும்.
இன்று வந்த குறுஞ்செய்தி:

உலகக்கோப்பையில் இந்தியா தோற்க யார் காரணம்..?
--------
இந்திராகாந்தி............

ஏன்னா 1971-ல் அவர் தானே பங்களாதேஷ் உருவாக காரணமாவார்.

ஹ்ம்..எப்படியெல்லாம் காரணத்த யோசிக்கறானுங்க..???
இன்றைக்கு என் அலுவலகத்தில் விவாதம்...
இந்திய அணி தோற்றதற்கு முழுமுதல் காரணம் இங்கிலாந்துதான்... எப்படி??? கேளுங்க மக்கா :music-smiley-012:

1. உலக வரைபடத்தில் ஆஸ்திரேலியா என்ற தேசம் உருவாகி இன்று வரைக்கும் அனைவருக்கும் பிரச்சினையாக இருப்பதற்குக் காரணம் இங்கிலாந்துதான்.

2. சூப்பர் 8ல் இருக்கும் நியூசிலாந்தும் இவர்களால் உருவானதே

3. ஒன்றாக இருந்திருக்க வேண்டிய இந்திய அணியை இரண்டாகப் பிரித்ததும் இங்கிலாந்துதான் (இப்ப ரெண்டுமே அடியைப் பிடிடா பாரதப் பட்டான்னு திரும்ப வந்திட்டது வேற விஷயம் :sport-smiley-018: )

4. மேற்கு இந்தியத் தீவுகள் பல கரீபியன் தீவுகளாகப் பிரிந்து கிடந்தன. அவற்றைக் கையைக் காலை வைத்துக் கொண்டு சும்மா இராமல் சேர்த்து வைத்ததும் இந்தப் பாவிகளே...

5. தென்னாப்பிரிக்கா இன்று ஆப்பிரிக்க நாடுகளில் கிரிக்கெட்டில் மட்டுமல்லாது எல்லாவற்றிலும் சிறந்து விளங்கக் காரணம் என்னவென்று விளக்கவும் வேண்டுமா?

6. அயர்லாந்து பற்றிப் பாகிஸ்தானியர்கள் இன்று கவலைப்படக் காரணமும் இங்கிலாந்தே!!!

ஹி ஹி நமக்குத்தேன் ஏதாச்சும் காரணம் வேணும்ல??? :music-smiley-010:

அமரன்
28-03-2007, 12:03 PM
அடடே பிரதீப் அண்ணாவின் கருத்து சூப்பர்.

s_mohanraju
28-03-2007, 01:02 PM
விளம்பரம் நடிப்பதை தடுக்க முடியாது. ஓடுகிற குதிரை மேல் பணம் கட்டுவதுதானே வாடிக்கை. அந்த குதிரை இரண்டு மேட்சில் ஓடலேன்னா 10 மேட்ச் உட்கார வைக்கணும்.. யாரும் அந்த குதிரை மேல் பணம் (விளம்பரம்) கட்ட தயங்குவார்கள்.

மன்மதன் சொன்னதை நல்லா கவனிங்க
ஓடுர குதிரைல தான் பணம் கட்டுவாங்க , அதுதான் உண்மை

ஓடுர குதிரை கால ஒடிச்சிட்டா, அதாவது டீம்லருந்த்து தூக்குங்க,
கொஞ்ச நாள் ரஞ்சி டிராபி விலையாடி ட்ரைனிங் எடுத்து ப்ருவ் பண்ணட்டும்.

புதியவரோ பழையவரோ, டீமிக்குள்ள வந்த்துகப்புரம்
முதல்தடவை சொதப்பினால் ஒகே,
இரண்டாம் தடவை சொதப்பினால் வார்னிங்,
மூண்றாவது தடவை சொதப்பினால் பேக் அப்

march
28-03-2007, 01:09 PM
மூண்றாவது தடவை சொதப்பினால் பேக் அப்

இதை யார் செய்வது

மார்ஷ்

crisho
28-03-2007, 02:16 PM
(("இந்தியா மண்ணைக் கவ்வியது".))
இந்திய ரசிகர்கள் அதிக கோபம் யார் மீது என்று உங்கள் கோபத்தை தீர்த்து விட்டுப் போங்கள்
வாக்குப்போட இங்கே செல்லுங்கள (http://cuq2.pollhost.com)

இந்தியா மண்ணைக் கவ்வியது குறித்து இந்திய ரசிகர்கள் அதிக கோபம் யார் மீது?

என் அன்பர் முரளிதரனுடன் கோபப்படுவது எந்த விததில் நியாயம்?? இது சின்னப்புள்ள தனமா இல்ல இருக்கு!! :D

இச் சுட்டியில் முரளியின் (எதிரணியின்) பெயரிட்டவரை வன்மையாக கண்டிக்கிறேன்!! :cool-smiley-016:

devendira
22-05-2007, 11:47 AM
இதுக்கு ஒரு கருத்து கணிப்பு வேறையா!

வடக்கு தெற்கு என வித்தியாசம் பார்க்கும் இந்த வாரியத்தை முதலில் தடை செய்யவேண்டும்.

அதுவும் தமிழகத்தை சார்ந்த வீரர்கள் இடம்பெறுவது என்பது குதிரைக்கொம்பு.அதிலும் குறிப்பிட்ட இனத்தவரல்லாதவர் நினைத்தே பார்க்கமுடியாது.

உடல்திறனற்ற சமூகத்தின் ஆக்கிரமிப்பில் சிக்கி சீரழியும் இந்த விளையாட்டையே தடை செய்யலாம்.