PDA

View Full Version : தமிழ் மன்ற மணிகளுக்கு முத்தான வணக்கங்கள்



snraman
22-03-2007, 09:26 AM
தமிழ் மன்றத்திற்கு புதிய உறுப்பினன் நான்,
தமிழில் ஓரளவு எழுத பேச கூடிய ஆசிரியர்.
தமிழ்பால் பற்றுகொண்டு தமிழ் தளங்களை
இணையத்தில் தேடிய பொழுது கண்ட
இம்மன்றத்தில் உலாவருவதற்கு எனக்கு
துணை புரிந்த மனோ.ஜி அவர்களுக்கு
நன்றி.

உங்கள் அனைவருடன் தொடர்ந்து அளவளாவ
ஆசைகொண்டுள்ளேன்.

அதற்கு உங்கள் அன்பும் ஆதரவும் நாடுகிரேன்.


எஸ்.என்.ராமன்

pradeepkt
22-03-2007, 09:57 AM
ஓ, மனோ அண்ணாவின் நண்பரா தாங்கள்???
வணக்கம், வரவேற்புகள்.
ஆசிரியரின் பாடங்களைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்

ஆதவா
22-03-2007, 10:04 AM
வரவேற்புகள் ராமன் ஆசிரியர் அவர்களே!...

மன்றத்தில் முதல் ஆளாக உங்களை வரவேற்கிறேன்....
இங்கு தமிழ் சுனைநீராக சுத்தமாக வழிந்துகொண்டிருக்கிறது.. எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துப் பருகலாம்...

இங்குள்ள ஆசிரியர்கள் எவ்வளவு கொட்டியும் படிப்பு ஏறமாட்டேங்குது.. நீங்களும் வந்து கொட்டுங்கள் (என் தலைமீதும்) பதிவுகளையும்...

மனோஜ்
22-03-2007, 10:09 AM
வாருங்கள் வருக வருக
தாருங்கள் பதிவுகள் பதிவுகள் நன்றி வாழ்த்துக்கள்

leomohan
22-03-2007, 10:10 AM
வாருங்கள் ராமன் தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

பென்ஸ்
22-03-2007, 10:19 AM
நல்வரவு ராமன்....
மனோஜி அழைத்துவந்தவர்கள் அனைவரும் முத்தான பதிவுகளை கொடுத்து வருகிறார்கள்...
நம்பிக்கையுடன்,....

poo
22-03-2007, 10:31 AM
வணக்கம் ஐயா...

வரவேற்கிறோம்...

மதி
22-03-2007, 10:37 AM
வரவேற்புகள் ராமன்..
தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பதிவுகளாய் வெளியிடுங்கள்..

அன்புரசிகன்
22-03-2007, 11:00 AM
தமிழ் மன்றத்திற்கு புதிய உறுப்பினன் நான்,

வணக்கம் ஐயா..வாருங்கள்.



தமிழில் ஓரளவு எழுத பேச கூடிய ஆசிரியர்.
தமிழ்பால் பற்றுகொண்டு தமிழ் தளங்களை
இணையத்தில் தேடிய பொழுது

அது தான் வந்து விட்டீர்களே. கலக்குங்க. (மன்றத்தை)


உங்கள் அனைவருடன் தொடர்ந்து அளவளாவ
ஆசைகொண்டுள்ளேன்.
அதற்கு உங்கள் அன்பும் ஆதரவும் நாடுகிரேன்.

இவற்றிற்கு இம்மன்றத்தில் பஞ்சம் இல்லை ஆசிரியரே. நாம் வகுப்பு நேரத்தில் நித்திரை கொள்ளாத மாணவர்கள். தயற்காமல் தொடருங்கள்.

ஓவியன்
22-03-2007, 11:12 AM
வருங்கள் ஆசிரியரே!
இங்கும் உங்களுக்குப் பல நன் மாணாக்கர் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.

ஓவியன்
22-03-2007, 11:22 AM
வணக்கம் ஐயா..வாருங்கள்.


அது தான் வந்து விட்டீர்களே. கலக்குங்க. (மன்றத்தை)

இவற்றிற்கு இம்மன்றத்தில் பஞ்சம் இல்லை ஆசிரியரே. நாம் வகுப்பு நேரத்தில் நித்திரை கொள்ளாத மாணவர்கள். தயற்காமல் தொடருங்கள்.

ஓ!
எங்களுக்குத் தெரியும் தானே, வகுப்பிலே நித்திரை கொள்ளாதபடியால் ஒழுங்காகப் படித்தீர்களென நாம் நம்பி விட மாட்டோம்.
நீர் நித்திரை கொள்ளாமல் கடைசி வாங்கிலே இருந்து கடதாசி அம்பு விட்டு விளையாடி இருப்பீர்!!!!!!!!!

அறிஞர்
22-03-2007, 12:44 PM
மற்றொரு மலேசிய சொந்தத்தை இங்கு காண்பதில் மகிழ்ச்சி... வாருங்கள் ராமன்... எல்லா பகுதிகளும் சென்று படித்து... கருத்துக்களை கொடுங்கள்.

ஓவியா
22-03-2007, 06:33 PM
வணக்கம் இன்சேக்.ஸ்ன்ராமன்

வருக வருக வருகவே
உங்கள் வரவு எங்கள் மகிழ்சியே.

மலேய்சியாவா...........ஆட நம்ப ஊரூ. நானும் ஆக்கரையே

அப்ப கபார் ச்சேகு?

(மொழியாக்கம்:
இன்சேக்: திரு
(நாங்கள் ஆசிரியர்களை இப்படிதான் அழைக்க வேண்டும். இதுதான் முறை.)
அப்ப கபார் ச்சேகு: ஆசிரியர் அவர்களே சுகமா?)

மயூ
22-03-2007, 06:36 PM
வாங்க ராமன் உங்கள் வரவு நல்வரவாகட்டும்
உங்கள் படைப்புகளையும் இங்கு அரங்கேற்றுங்கள்!

விகடன்
22-03-2007, 07:44 PM
ஆசிரியர் சரி, தமிழா அல்லது..

எதுவாக இருந்தாலும் பாடம் நடத்த வந்துவிட்டீர்கள். வழிகாட்ட இன்னொருத்தர் வந்துவிட்டார். சந்தோஷம்.

என்னதான் கல்லூரி வாழ்க்கை முடிந்தாலும் ஆசிரியர் உறவு மட்டும் நீங்கவே மாட்டேங்கிது.


உங்கள் வரவு நல் வரவாகுக.

Mano.G.
23-03-2007, 02:07 AM
உயர்திரு எஸ்.என்.இராமன் அவர்களை
நமது மன்றத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிரேன்.
அன்பும் பாசமும் அனுபவமும் தன்னடக்கமும் கொண்ட
எனது மூத்த அண்ணாவை இந்த மன்றத்தில் அறிமுக படுத்தியதில்
பெருமிதமும் கொள்கிரேன்.

தமிழ் பள்ளியில் படித்து மலாயா பல்கலைகழகத்தில் முதல் நிலையில்
தேர்ச்சி பெற்று தமிழாசிரியராக பணியாற்றி மலாய் இடைநிலை பள்ளிக்கு
தலைமையாசிரியராய் பதவி உயர்வு பெற்று முத்தான
மூன்று முத்துக்களுக்கு தகப்பனாய் இன்று பதவியிலிருந்து ஓய்வு
பெற்று இருப்பவரை தமிழ்மன்றம் வரவேற்கிரது.


மனோ.ஜி

அமரன்
23-03-2007, 08:42 AM
ஆசிரியர் ராமன் அவர்களை வரவேற்கின்றேன். அவருக்கு மன்றத்தையும் எமக்கு அவரையும் அறிமுகப்படுத்திய மனோ.ஜி அண்ணாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

இளசு
04-04-2007, 06:56 PM
எங்கள் மனோஜிக்கு அண்ணன் என்றால் எனக்கும் அண்ணனே..

வாருங்கள்.. திரு. இராமன் அவர்களே...

உங்கள் பங்களிப்பால் நம் மன்றம் இன்னும் மிளிரட்டும்..

என் பணிவான வரவேற்பும், மகிழ்வான வந்தனமும்...

விகடன்
04-04-2007, 07:03 PM
ஆசிரியர் வந்தது சரி. இன்னும் பாடம் நடத்தக் காணவில்லையே!

பிச்சி
05-04-2007, 09:58 AM
வாருங்கள் snraman உங்களுக்கு வரவேற்புக்கள்

பிச்சி