PDA

View Full Version : இன்சாமாம் ஓய்வு



அறிஞர்
21-03-2007, 11:34 PM
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர்.. இன்சாமாம் உல் ஹக் இன்றுடன் ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

1992ம் ஆண்டு இங்கிலாந்து எதிராக ஆட்டத்தை தொடங்கிய இன்சாமாம் சிறந்த ஆட்டக்காரர்... கடைசி வெற்றியை அணிக்கு கொடுத்து செல்கிறார்.

அவரை பற்றிய விவரங்கள் இங்கு (http://content-usa.cricinfo.com/pakistan/content/player/40570.html) இருக்கிறது.

2002-2007 வரை தலைவராக இருந்துள்ளார்

அவர் தலைமையில் பாகிஸ்தான் 86 போட்டிகளில் 51 வெற்றியும், 32 தோல்வியும் சந்தித்துள்ளது.

pradeepkt
22-03-2007, 06:22 AM
அப்படியே நேத்து கண்ணில் வலியும் கண்ணீருமாக வெளியேறிய அவரைப் பார்த்து எனக்கே தொண்டை அடைத்து விட்டது.
நல்ல ஆட்டக்காரர்... கொஞ்சம் தவறான அணியில்/நாட்டில் இருந்துவிட்டார் என்று நினைக்கத் தோன்றுகிறது.

அமரன்
22-03-2007, 08:14 AM
அவர் ஓய்வுபெற்றது நல்லது. ஆனால் இப்படியான சூழ்நிலையில் அவரது விலகல் வருத்தமளிக்கின்றது.

மனோஜ்
22-03-2007, 08:42 AM
நல்ல ஆட்டக்காரர் மற்றும் குழுதலைவர் வருத்தமளிக்கின்றது அவரது விலகல்

poo
22-03-2007, 09:02 AM
சிறந்த ஆட்டக்காரர்.. மேலும் சிறந்த மனிதர்.
அதிகமாக சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாதவர்...அதுவும் பாகிஸ்தான் அணியில் இருந்துகொண்டு!!.

அமைதியே உருவாய் நிற்பார்.. எதிரணி பின்னியெடுத்தாலும்.

ஆனால்..உல்மர் சர்ச்சைகள் முடிந்தபின் அவர் விலகி இருக்கலாம் என்பது என் எண்ணம்!

aren
22-03-2007, 02:31 PM
இன்சமாம் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்பதில் எந்த அளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர் திறமையான தலைவரா என்றால் கொஞ்சம் சிந்திக்கவேண்டியிருக்கும். அவருடைய தலையின் கீழ் எவ்வளவு விஷயங்கள் அதுவும் சமீக காலங்களில் நடந்துள்ளது.

ஓவல் டெஸ்டில் பந்து சிதைத்தாக குற்றச்சாட்டு
ஆடமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து அதனால் டெஸ்ட் மாட்சை அநியாயமாக இழந்தது. அதன் காரணமாக தொலைகாட்சிக்கும், மைதானம் சொந்தக்காரர்களுக்கு பல லட்ச டாலர்கள் நஷ்டம். அதுபோல் ரசிகர்களுக்கு ஒரு நல்ல டெஸ்ட் மாட்சை பார்க்கமுடியாமல் போன தூரதிர்ஷ்டம்.

ஷோயிப் அக்தரும், முகமது ஆஸிப்பும் போதை மருந்து உட்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு சாம்பியன்ஷிப் போடடியிருந்து தூக்கியெறியப்பட்டது. அவர்களுக்கு ஒரு வருடம் தண்டனை கொடுத்தவுடன் அதை எதிர்த்து மறுபடியும் மேல் முறையீட்டு செய்து அவர்களின் தண்டனை நின்று அவர்கள் இருவரும் மறுபடியும் எதுவும் நடக்காததுபோல் டெஸ்ட் தொடரில் ஆடியது. அதை கண்டும் காணாததுபோல் இன்சுமாம் ஆதரித்தது.

டீம் கிளம்ப கடைசி நாள் வரையில் எப்படியும் இவர்கள் இருவரையும் குழுவுடன் கொண்டுசெல்ல முயற்சி செய்து நிச்சயம் இவர்கள் இருவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிந்துபின்னரே அவர்கள் இருவருக்கும் இன்னும் காலில் அடிபட்டது சரியாகவில்லை என்று சொல்லி அவர்கள் இருவரையும் காப்பாற்றியது.

இரண்டு போட்டிகளிலும் அநியாயமாக தோற்று உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது.

இப்படி வெளியேறியதால் எந்த பாவமும் செய்யாத பாப் ஊல்மர் இறந்தது.

இப்படி பல விஷயங்கள் இன்சுமாமால் அல்லது இன்சுமாம் தலைமை தாங்கியதால் நடந்த விஷயங்கள்.

ஆகையா அவர் ஒரு சிறந்த தலைவர் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எவ்வளவு ரன் அவுட்டுகள். அவராகவும், அவர் மற்றவர்களை ரன் அவுட் செய்தும். இதை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
22-03-2007, 03:34 PM
இன்சி... (சுருக்கமாக) மிகத் திறமையான பேட்ஸ்மேன். இப்படிப்பட்ட ஒரு சிறந்த பேட்ஸ்மேனின் கடைசி போட்டி எத்தனை அருமையாய் இருந்திருக்கவேண்டும்.. அப்படி அமையவில்லை.. அவர் ஒரு சிறந்த கேப்டன் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.. சிறந்த வீரர் என்பதில் எவ்வளவும் சந்தேகமில்லை... எல்லாம் காலத்தின்படி நடக்கிறது.. யூனிஸ் அடுத்த கேப்டன் என்று நினைக்கிறேன். அவர் தலைமையில் அணி சிறந்து விளங்கினால் அதுவே கோபத்திலும்/ஏமாற்றத்திலும் இருக்கும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஆறுதல்.

ஓவியன்
22-03-2007, 09:22 PM
விக்கெட்டுகள் ஒரு புறம் சரிந்து கொண்டிருக்க நிலையாக மறு புறத்திலே நின்று புயலாக ஆடி பாகிஸ்தானை வெற்றிக் கனி கொய்யச் செய்யும் இன்சமாம் எந்த கிறிக்கட் ரசிகனாலும் மறக்கப் பட முடியாதவர்.

அமரன்
23-03-2007, 08:53 AM
வரது இறுதி ஆட்டத்தில் ஆட்டமிழந்து செல்லும்போது கண்ணீர் மல்க விடைபெற்றது எல்லோரையும் கண்கலங்க வைத்துவிட்டது.