PDA

View Full Version : e-த்திச் சூடி



sinnavan
21-03-2007, 01:12 PM
இணைய தளத்தில் படித்தது - நன்றி படைப்பாளிக்கு

e-த்திச் சூடி

அமேசானில் ஆர்டர் செய்
ஆர்க்கூட்டில் பழகு
இணைப்பை கைவிடேல்
ஈபேயில் விற்றுவிடு
உரல்களை சேமி
ஊரெல்லாம் நண்பர்கொள்
எண்ணியதை கூகிள் தரும்
'ஏ' த்ளங்கள் பாப் அப் தரும்
ஐயம் தீர்க்கும் விக்கிப்பீடியா
ஒரே மெயில் ஐடி கொள்ளேல்
ஓசியிலேயே ப்ரவுசிங் செய்
ஔவ் ஆர் யூவில் துவங்கு(How are you?)
இஃதே e-நயம்.

சும்மா டைம் பாஸ் மச்சி (மச்சினி?)

ஓவியா
21-03-2007, 01:14 PM
ஹி ஹி ஹி

மிக்க நன்றி சின்னவன்

வந்ததும் கல்க்கறீங்க. வாழ்த்துக்கள்

sinnavan
21-03-2007, 01:16 PM
ஹி ஹி ஹி

மிக்க நன்றி சின்னவன்

வந்ததும் கல்க்கறீங்க. வாழ்த்துக்கள்

ஏதோ சொந்த சரக்கு இல்லிங்க....

pradeepkt
22-03-2007, 04:52 AM
அட அட அட...
என்னா ஒரு இ-த்திச் சூடி..
இந்த மாதிரி நிறைய குடுங்க சார்... நீங்களும் சொந்தமா எழுதுங்க

மதி
22-03-2007, 05:25 AM
சூப்பரப்பு...!

மனோஜ்
22-03-2007, 07:45 AM
அன்டத்தை ஒன்றாக்கும்
ஆனைவறையும் ஒன்றினைக்கும்
இல்லை என்று செல்லாது
ஈக்களாய் மெய்திடும் பலகோடி மக்களின்
உல்லங்களை ஒன்றினைக்கும்
ஊக்கு விற்கவும் தற்பொழுது
எவருக்கும் எளியமுறையில்
ஏமாற்றவும் வாய்பளித்து
ஐயா சாமி ஆளவுடு என்று சிலர்ஒதுங்கினாலும்
ஒருவறையூம் விடாது இங்கு வா என்று அழைத்துடும்
ஓயாத இனையத்தை
ஒளட்டாக்க(out)(ஒளவுக்கு தமிழ் கிடைக்கல அதா) நினைத்தாலும் முடியாதுங்கே :icon_nono:

ஆதவா
22-03-2007, 07:58 AM
அருமை அருமை........ கலக்குங்க சின்னவன் மற்றும் மனோ!! ......

தனது சொந்த சரக்கு இல்லை என்று வெளிப்படையாக சொன்ன சின்னவனுக்கு கைத்தட்டல் கூடிய பாராட்டுக்கள்.......

மேலும் தொடரவும்.

அமரன்
22-03-2007, 08:16 AM
மிகவும் நல்ல ஒரு முயற்சி. வாழ்த்துக்கள்.

அறிஞர்
22-03-2007, 01:51 PM
அகர வரிசையில் பலர் கலக்குறாங்க.. தொடரட்டும்..

ஓவியன்
22-03-2007, 10:40 PM
அழகான உல்டாக்கள்!
அசத்துங்கள் நண்பர்களே!!!!!!!