PDA

View Full Version : தாத்தாவின் பார்வைஆதவா
21-03-2007, 11:48 AM
கோளத்தின் அலையாய்
முகம் தெரியும் மழைக் காலத்தில்
நடைபாதை கழிவுகளை
ஒதுக்கிவிட்டு
நனைக்காமல் இருக்க
குடையோடு தவழ்ந்துகொண்டிருந்தேன்

கண்கள் கண்டவரை
யாவரும் குடையுடன்
தலை காக்கின்றனர்
மழையின் அழுகையை
கண்களிலிருந்து வீசிவிடுகின்றனர்

ஒரு சிறு இடைவெளியில்
தள்ளுவண்டியுடன்
நிற்கும் அந்த தாத்தாவைக் கண்டதும்
மழைக்குக் கூட
இரக்கமின்றி போனது.
என் கைகள்
குடை பொத்தானைத் தழுவுகிறது.

எடுத்துச் சென்று கொடுக்க
யாவருக்கும் மனமில்லை
ஒரு முதியவரைக் காக்க
மழைக்கும் துணிவில்லை
விதிவிலக்காக நான்.

மழையின் ஆக்ரோசத்தை
மனம் தழுவிய அதேவேளையில்
உடல் நனைந்தது.
பிந்தைய நாளில்
என் மொழிகள்
வேறானது.

பகல் பொழுதுகளில்
இரக்கமற்ற அதே இடத்தில்
நடக்கையில்
தாத்தாவின் அருகே என் குடை
நிழற்குடையாய்.

நிறம் மாறும் மனிதர்கள்
குணம் கரையும் மழை
தாத்தாவின் பார்வை மட்டும்
நிதர்சனமாய் நிற்கிறது.

நன்றி ஓவி.. கவிதைக்கருவிற்க்கு.. :nature-smiley-003:

அறிஞர்
21-03-2007, 03:33 PM
உதவி செய்யக்கூடிய உள்ளங்கள்
இன்னும் பெருகவேண்டும்...

தாத்தாவின் பார்வையில் வரிகள்.. அருமை......ஆதவா..

எங்கிருந்து ஓவியாவின் கருவை பிடித்தீர்கள்..

ஆதவா
21-03-2007, 03:44 PM
இந்த (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=183120&postcount=10)இடத்திலிருந்துதான் அறிஞரே!!

நன்றிகள் கோடி...

ஷீ-நிசி
21-03-2007, 04:30 PM
சம்பவம் சொன்னவுடன் கவிதையாக்கிவிட்டீர்.. சும்மா சொல்லவில்லை.. கவிதை அழகாகவே வந்துள்ளது.. வாழ்த்துக்கள்...

ஒரு திரி ஆரம்பிக்கலாம் போல..

ஒற்றை வரியில் ஒரு சம்பவம் சொல்லவேண்டும். அதற்கு கவிதை எழுதிட வேண்டும்... எப்படி இருக்கும் ஆதவா!

poo
22-03-2007, 04:57 AM
பாராட்டுக்கள் ஆதவன்.

இறுதி பத்தியில் - நிறம் மாறும் மனிதர்கள் என குறிப்பிட்டது கொஞ்சம் வேறுமாதிரியும் யோசிக்க வைக்கிறது...ஆனால் அங்கே தாத்தாவின் பார்வையை சுட்டவே அது குறிப்பிடப் பட்டிருப்பதால் நம் நாயகனை அப்படியே விட்டுவிடலாம்..

இன்னும் நிறைய எழுதுங்கள்!

இளசு
25-03-2007, 10:16 AM
குடை - கொடையின் உருவகம்..

இரண்டையும் இணைத்த ஆதவனுக்கு வந்தனம்...

ஆதவா
25-03-2007, 10:50 AM
நன்றி அண்ணா!... முதலில் ஓவி அக்காவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.. கவிதைக் கரு அவர்களுடையது...

உங்கள் நிழல் பட்டதாலேயே இன்னும் வாழும் சில நாட்கள் இந்த கவிதைகள்...

இளசு
25-03-2007, 10:55 AM
உங்கள் நிழல் பட்டதாலேயே இன்னும் வாழும் சில நாட்கள் இந்த கவிதைகள்...


ஆதவா

ஏற்புரையின் சொல்லழகு சொக்கவைக்கிறது..
உள்ள அர்த்தம் கொஞ்சம் வெட்கவைக்கிறது..

வாழ்க நீ!

ஆதவா
25-03-2007, 11:05 AM
ஆதவா

ஏற்புரையின் சொல்லழகு சொக்கவைக்கிறது..
உள்ள அர்த்தம் கொஞ்சம் வெட்கவைக்கிறது..

வாழ்க நீ!

ஆஹா!!! அண்ணா இப்படி சொல்லிவிட்டீர்களே!! நான் கவிதை எழுதி முடித்ததும் படிப்பவர்கள் யார் யார் என்று பார்ப்பேன். இளசு என்ற பெயர் பார்த்ததும் மனதுக்குள் ஆனந்தம். அவர் படித்துவிட்டார் என்று... நீங்கள் வந்துபோனாலே போதும்...

அதிலும் இரண்டர்த்த வார்த்தையான நிழலை நான் இட்டது தவறென நினைக்கிறேன்...

இளசு
25-03-2007, 11:10 AM
அதிலும் இரண்டர்த்த வார்த்தையான நிழலை நான் இட்டது தவறென நினைக்கிறேன்...


தவறா???? ஆஹ்ஹாஹ்ஹா!

குடை பற்றிய கவிதையை ஒட்டி வந்த
சொல்லழகு உச்சம் அது.... பாராட்டுகள் மீண்டும் மீண்டும்...

aren
25-03-2007, 11:14 AM
கவிதை அருமை. தமிழர்களுக்கு இரக்க குணம் உள்ள அளவு தமிழ்நாடு செழித்துக்கொண்டேயிருக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

விகடன்
25-03-2007, 05:49 PM
அருமையான கவிதை.

புள்ளி வைத்துவிட கோலம் போட்டதாக கூறினீர்கள். உங்கள் திறமையும் அபாரமே.

வாழ்த்துக்கள்.

ஓவியா
25-03-2007, 06:00 PM
கோளத்தின் அலையாய்
முகம் தெரியும் மழைக் காலத்தில்
நடைபாதை கழிவுகளை
ஒதுக்கிவிட்டு
நனைக்காமல் இருக்க
குடையோடு தவழ்ந்துகொண்டிருந்தேன்

ஒரு சாதாரன பாதசாரியாக அவள்


கண்கள் கண்டவரை
யாவரும் குடையுடன்
தலை காக்கின்றனர்
மழையின் அழுகையை
கண்களிலிருந்து வீசிவிடுகின்றனர்
மிகவும் அருமை


ஒரு சிறு இடைவெளியில்
தள்ளுவண்டியுடன்
நிற்கும் அந்த தாத்தாவைக் கண்டதும்
மழைக்குக் கூட
இரக்கமின்றி போனது.
இயர்க்கை தன் கடமையை தவர விடுவதில்லை தானே. அருமையான வரிகள்

என் கைகள்
குடை பொத்தானைத் தழுவுகிறது.

எடுத்துச் சென்று கொடுக்க
யாவருக்கும் மனமில்லை
ஒரு முதியவரைக் காக்க
மழைக்கும் துணிவில்லைவிதிவிலக்காக நான்.

ஹி ஹி ஹி


மழையின் ஆக்ரோசத்தை
மனம் தழுவிய அதேவேளையில்
உடல் நனைந்தது.
பிந்தைய நாளில்
என் மொழிகள்
வேறானது.

பகல் பொழுதுகளில்
இரக்கமற்ற அதே இடத்தில்
நடக்கையில்
தாத்தாவின் அருகே என் குடை
நிழற்குடையாய்.

நிறம் மாறும் மனிதர்கள்
குணம் கரையும் மழை
தாத்தாவின் பார்வை மட்டும்
நிதர்சனமாய் நிற்கிறது.

அருமையான கவிதை கோர்வை....அசத்தல் ஆதவா

நன்றி ஓவி.. கவிதைக்கருவிற்க்கு.. :nature-smiley-003:என்னருமை நவரச கவிக்கு என் வந்தனங்கள்.

கருவை அப்படியே காத்து ஒரு அழகிய கவிதை குழந்தையை தந்தமைக்கு மிக்க நன்றி.....அசந்துதான் போனேன்.

கவிதை உலகத்திற்க்கு ஆதவா ஒரு சொத்து.

வாழ்க உம்பணி :icon_08:

ஓவியா
25-03-2007, 06:02 PM
கவிதை அருமை. தமிழர்களுக்கு இரக்க குணம் உள்ள அளவு தமிழ்நாடு செழித்துக்கொண்டேயிருக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்


ஆமாம் அண்ணா,

நானும் என் வாழ்வில் ஒரு முறையாவது தமிழ்நாடு சென்று வர வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

எத்தனையோ நாடுகள் சென்றாலும் இன்னும் இந்தியா செல்லாதது ஒரு குறையே. :party009:

ஆதவா
25-03-2007, 06:02 PM
நன்றி ஜாவா,
நன்றி தோழியக்கா!