PDA

View Full Version : முதல் கவிதை

மனோஜ்
21-03-2007, 10:32 AM
கவிதை எழுதநினைத்தேன்
மனம் இல்லை.
தமிழில் வார்த்தை
அது தடுமாற்றம்.
கவிதை வார்த்தை
அது மனஓட்டம் .
துணிந்தெழுத வார்த்தை
அது தானாய் வரும் என்று எழுத
வார்த்தை அது பிழை வருமே
என்று மனதில்
வார்த்தை அதை எழுதிவிட்டேன்
தவறுகள் அதை திருத்த
எனது மன்றத்து உறவுகள்
மகிழ்கிறேன் எனக்கும் கவிதை எழுதவருகிறது என்று
துணிந்திட்ட மனதிற்கு துணையாய் என் உற்றவள்
மனதில் வருத்தங்கள் பல தனிமையின் கொடுமையால்
வாழ்ந்திட்ட நினைவுகள் மனதினில் வந்திட
ஆறுதல் சொல்லிட அருகினில் இல்லையே அன்னை
ஆன்மீக உணர்வுகள் ஆழ்ந்திடும் மனதினில்
ஆறுதல் சில பாடல்கள்
நாட்கள் என்று நகருமே என்று எண்ணிடும் வேலைகள்
வந்து செல்லும் மனதினில் ஆறுதல் தமிழ் மன்றத்தில்
எழுதிவிட்டேன் முதல் கவிதை

poo
21-03-2007, 10:37 AM
இறுதிவரி தவிர்த்து அனைத்தும் இரசிக்க வைக்கிறது..

பாராட்டுக்கள் நண்பரே... எங்களை ஊக்கப்படுத்தும் உங்களில் கவிதை ஊறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை..

மனம் தயங்காமல் மலருங்கள்.. மணம்வீசட்டும் மன்றமெங்கும்!!

poo
21-03-2007, 10:38 AM
நிறைய இடங்களில் பதில் பதிவுகளில் கவிதையாய் வடித்துவிட்டு இதென்னங்க முதல் கவிதை?!...

மனோஜ்
21-03-2007, 10:40 AM
இரண்டு வரி 5 வரி அவ்வளவுதான் எழதியிருக்கேன்
உன்மையில் இது தான் முதல் கவிதை நன்றி பூ அவர்களே
இது கவிதைதான என்று எனக்கு தெரியவில்லை:D

ஆதவா
21-03-2007, 10:45 AM
அட!!! மனோ!! எப்படிப்பா!!! பிரமாதம் போங்க...

நிறை : முதல் கவிதை... இன்னும் எழுத வாழ்த்துக்கள்

குறை : கவிதையில் ழு' க்கு பதில் ழ' போட்டு இருப்பதே மிகப்பெரும் குறை.. கூடுமானவரையில் கவிதையில் பிழைத் திருத்தம் செய்துவிடுங்கள்... இல்லையென்றால் அர்த்தமே மாறிப்போகும் வாய்ப்புண்டு....

இன்னும் தொடருங்கள்.. நாங்கள் வருகிறோம் படித்துக்கொண்டே

ஆதவா
21-03-2007, 10:47 AM
மனோ!! முதல் கவிதையே பலமாய் இருக்கிறது.... உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது... நீங்கள் நிறைய கவிதைகளை இங்கே படியுங்கள்... இன்னும் ஆழமாய்..............

தானாக வந்துவிடும் கவிதைகள்..

உங்கள் கவிதை, கவிதை' என்ற பிரிவில் சேர்க்கபடுமய்யா!! அத்தனை அழகுதான்.........
சந்தேகம் வேண்டாம்.. முதல் கவிதை எழுதும்போது நான் நினைத்த அதே நினைப்பு நீங்களும்... என்னை கவிஞர் என்று இங்கே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் (என் நண்பர்கள் நிறையபேர் மறுத்து இருக்கிறார்கள்)

வளருங்கள்... முதல் படியே ஆழமான வெற்றிப்படி

மனோஜ்
21-03-2007, 10:50 AM
வாழ்த்துக்கு மிக்க மிக்க நன்றி ஆதவா ழ ழு வாக மாற்றி விட்டேன் வேறு தவறுகள் இருப்பின் சுட்டிகாட்டவும் நன்றி நண்பா

ஆதவா
21-03-2007, 11:04 AM
ஆம் இருக்கிறது நண்பரே!! கால் வாங்கும் இடத்தில் காவு வாங்கிவிட்டீர்கள்.. சுழித்திடும் இடத்தில் சுழித்திட்டீர்கள்...

சரி... தனிமடல் பார்க்கவும்..

மனோஜ்
21-03-2007, 11:16 AM
ஆம் இருக்கிறது நண்பரே!! கால் வாங்கும் இடத்தில் காவு வாங்கிவிட்டீர்கள்.. சுழித்திடும் இடத்தில் சுழித்திட்டீர்கள்...

சரி... தனிமடல் பார்க்கவும்..
முதல் முயற்சி ஆதவா அதான் மன்னிக்கவும் தனிமடலில் இருந்து அப்படியே எடுத்து பதிந்து விட்டேன் நன்றி

leomohan
21-03-2007, 11:29 AM
கவிதை எழுதநினைத்தேன்
மனம் இல்லை.
தமிழில் வார்த்தை
அது தடுமாற்றம்.
கவிதை வார்த்தை
அது மனஓட்டம் .
துணிந்தெழுத வார்த்தை
அது தானாய் வரும் என்று எழுத
வார்த்தை அது பிழை வருமே
என்று மனதில்
வார்த்தை அதை எழுதிவிட்டேன்
தவறுகள் அதை திருத்த
எனது மன்றத்து உறவுகள்
மகிழ்கிறேன் எனக்கும் கவிதை எழுதவருகிறது என்று
துணிந்திட்ட மனதிற்கு துணையாய் என் உற்றவள்
மனதில் வருத்தங்கள் பல தனிமையின் கொடுமையால்
வாழ்ந்திட்ட நினைவுகள் மனதினில் வந்திட
ஆறுதல் சொல்லிட அருகினில் இல்லையே அன்னை
ஆன்மீக உணர்வுகள் ஆழ்ந்திடும் மனதினில்
ஆறுதல் சில பாடல்கள்
நாட்கள் என்று நகருமே என்று எண்ணிடும் வேலைகள்
வந்து செல்லும் மனதினில் ஆறுதல் தமிழ் மன்றத்தில்
எழுதிவிட்டேன் முதல் கவிதை

மெட்டுப்போடு மெட்டுப்போடு நம் தாய் கொடுத்த தமிழுக்கு ஏது தட்டுப்பாடு:angel-smiley-010:

ஷீ-நிசி
21-03-2007, 11:40 AM
மனோ! கைகொடுங்க.. உண்மையிலேயே சொல்கிறேன். மிக நன்றாக இருக்கிறது... யாருக்கும் தான் கவிஞன் என்று தெரியாது.. முதல் கவிதை எழுதிடும் வரையில்... நீங்கள் எழுதியது கவிதைதான். சந்தேகம் வேண்டாம்.. வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள். எதிர்பார்க்கிறேன்..

மனோஜ்
21-03-2007, 02:05 PM
மேகன் நன்றிங்கே
உற்சாகம் அடைந்தேன் ஷீ மிக்க நன்றி

அறிஞர்
21-03-2007, 02:59 PM
மனதில் வருத்தங்கள் பல தனிமையின் கொடுமையால்
வாழ்ந்திட்ட நினைவுகள் மனதினில் வந்திட
ஆறுதல் சொல்லிட அருகினில் இல்லையே அன்னை
ஆன்மீக உணர்வுகள் ஆழ்ந்திடும் மனதினில்
ஆறுதல் சில பாடல்கள்
நாட்கள் என்று நகருமே என்று எண்ணிடும் வேலைகள்
வந்து செல்லும் மனதினில் ஆறுதல் தமிழ் மன்றத்தில்
எழுதிவிட்டேன் முதல் கவிதை
எழுத எழுத.. தானாக வரும் கவிதை....

தொடருங்கள்.. மனோஜ்..

தனிமையை வெல்ல... எழுதுங்கள்...

மன்றத்தில் தாருங்கள்... படிக்க நாங்கள் ரெடி..

மனோஜ்
21-03-2007, 03:02 PM
நன்றி அறிஞரே
தொடரும் என்று நினைக்கிறோன்

இளசு
25-03-2007, 10:49 AM
என் அன்பான வாழ்த்துகள் நம் மனோஜுக்கு..

உண்மை ஒளிரும் அழகிய கவிதை..

பாராட்டுகள் மனோஜ்..

இன்னும் எழுதுங்கள்..

எழுத்துப்பிழைகளைக் களைய நாங்கள் உண்டு..

ஆனால் இது முதல் கவிதை என என்னால் ஒப்ப முடியாது..

வாழ்த்துகளும் விமர்சனங்களும்
வரிசையான எழுத்துகளால் வாரிவழங்கிய
மனோஜுக்கு - இது முதல் கவிதையா?

கவிதைத் திரியில் தலைப்பு வைக்கப்பட்டதில் இது முதல்..
அவ்வளவுதான்..

அனைவரையும் வாஞ்சையாய் வாழ்த்தும் மனோஜுக்கு
நம் ஊக்கம் என்றும் உண்டு..

தயங்கித்தயங்கி உங்களைப்போல பதித்தவன் நான் - அன்று!
எழுதுவதில் தயக்கம் என்றால் என்ன என கேட்கவைக்கிறது நம் மன்றம் - இன்று!

தொடருங்கள் மனோஜ்...

மனோஜ்
25-03-2007, 03:32 PM
உண்மையில் அதிக உற்சாகம் அடைந்தேன் இளசு அண்ணா மிக்க மிக்க நன்றி

ஓவியா
25-03-2007, 03:37 PM
மனதில் வருத்தங்கள் பல தனிமையின் கொடுமையால்
வாழ்ந்திட்ட நினைவுகள் மனதினில் வந்திட
ஆறுதல் சொல்லிட அருகினில் இல்லையே அன்னை
ஆன்மீக உணர்வுகள் ஆழ்ந்திடும் மனதினில்
ஆறுதல் சில பாடல்கள்
நாட்கள் என்று நகருமே என்று எண்ணிடும் வேலைகள்
வந்து செல்லும் மனதினில் ஆறுதல் தமிழ் மன்றத்தில்
எழுதிவிட்டேன் முதல் கவிதை

இந்த வரிகள் ரொம்ப அருமை.

மனோஜ் நீங்கள் எங்களுக்கு வாழ்த்து பதிவு போடுவதே ஒரு அழகிய கவிதை தான். பாராட்டுகிறேன்.

இன்னும் அதிகம் எழுத எங்களது வாழ்த்துக்கள். :musik010:

மேன்மேலும் கவிதைகள் எழுதி-எழுதி ஆனந்தமடையவும். :icon_good:

மன்மதன்
25-03-2007, 03:42 PM
முதல் முயற்சி.. நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துகள் மனோஜ்.

ஆதவா
25-03-2007, 03:43 PM
இந்த வரிகள் ரொம்ப அருமை.

மனோஜ் நீங்கள் எங்களுக்கு வாத்து பதிவு போடுவதே ஒரு அழகிய கவிதை தான். பாராட்டுகிறேன்.

:icon_good:

இப்படியொரு பதிவு இருக்கிறதா? எனக்குத் தெரியாதே!!:icon_hmm:

:natur008:

மனோஜ்
25-03-2007, 04:52 PM
இந்த வரிகள் ரொம்ப அருமை.
மனோஜ் நீங்கள் எங்களுக்கு வாத்து பதிவு போடுவதே ஒரு அழகிய கவிதை தான். பாராட்டுகிறேன்.
இன்னும் அதிகம் எழுத எங்களது வாழ்த்துக்கள். :musik010:
மேன்மேலும் கவிதைகள் எழுதி-எழுதி ஆனந்தமடையவும். :icon_good:

வாத்து எப்பொழதும் நீரில் நீந்தும் :spudnikbackflip:
அது போல நானும் மன்றம் வருவதாக ஓவி கூறியூள்ளார் ஆதவா
நன்றி ஓவி
நன்றி மன்மதன்

ஓவியா
25-03-2007, 05:11 PM
இப்படியொரு பதிவு இருக்கிறதா? எனக்குத் தெரியாதே!!:icon_hmm:

:natur008:

தம்பி இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம்.
நான் மாற்றி விட்டேன். நீங்களும் மாற்றி விடுங்கள். பிலிஸ் :medium-smiley-045:

இனி அவசியம் தமிழ் வகுப்புக்கு போறேன்.

இந்தநேரம் பார்த்து என் தமிழ் ஆசான் உள்ளே இருகிறார்....அச்சோ :violent-smiley-010: இதான் என்னிலமை

ஓவியா
25-03-2007, 05:14 PM
வாத்து எப்பொழதும் நீரில் நீந்தும் :spudnikbackflip:
அது போல நானும் மன்றம் வருவதாக ஓவி கூறியூள்ளார் ஆதவா
நன்றி ஓவி
நன்றி மன்மதன்

ஆமா ஆமா ஆமா :medium-smiley-025:

அடடே மனோஜ்,

நல்ல சாமர்த்தியமான பதில்.

குட் ஃபோய்

ஆதவா
25-03-2007, 05:18 PM
தம்பி இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம்.
நான் மாற்றி விட்டேன். நீங்களும் மாற்றி விடுங்கள். பிலிஸ் :medium-smiley-045:

இனி அவசியம் தமிழ் வகுப்புக்கு போறேன்.

இந்தநேரம் பார்த்து என் தமிழ் ஆசான் உள்ளே இருகிறார்....அச்சோ :violent-smiley-010: இதான் என்னிலமை

அட டா!!!!
உன் கண்ணில் நீர் வடிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி....

அழுவாதே சகோ. எல்லாம் சும்மா லுலுவாயிக்குத்தான்....

விகடன்
25-03-2007, 05:52 PM
முதல் கவிதையே இப்படி அசத்திவிட்டீர்களே.

வளரட்டும் உங்கள் கவிதை அருவி.

மனோஜ்
25-03-2007, 06:04 PM
நன்றி ஜாவா அவர்களே

ஓவியா
25-03-2007, 06:05 PM
அட டா!!!!
உன் கண்ணில் நீர் வடிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி....

அழுவாதே சகோ. எல்லாம் சும்மா லுலுவாயிக்குத்தான்....

இது முதலை கண்ணீர்......ஹி ஹி ஹி ஹி ஹி

பாவம் முதலை :spudnikbackflip: