PDA

View Full Version : தன்னம்பிக்கை



செல்விபிரகாஷ்
21-03-2007, 05:20 AM
http://bp1.blogger.com/_e_laRiU0vmM/Rf-cDmaycAI/AAAAAAAAADk/3UWefdIyhM8/s400/thannmpikkai-2.jpg

தோல்வியினால் துவண்டு
கிடக்கும் என் மனம்
சிதறிக் கிடக்கும் கண்ணாடித்
துண்டுபோல் என்னைக்
கீறுகின்றது...
பிறப்பின் நோக்கம் முடிவதற்கு
முன்னே...
வாடிப் போகும் மலர்போல்
கவிழ்ந்து கிடக்கும்
என்னை..
மண்ணைத்துளைத்துக்
கொண்டு வெளிவரத்
துடிக்கும் துளிர்போல்
கிழித்துக் கொண்டு
வருவது யாரென தேடிப்
பார்க்கிறேன்..

இருள் சூழ்ந்த மனதினுள்
இருந்து வருவது
வேறு யாருமல்ல..
முடியும் என்ற நம்பிக்கையுடன்
எழுந்து வரும்
தன்னம்பிக்கை தான்!

க.கமலக்கண்ணன்
21-03-2007, 06:20 AM
யானைக்கு தும்பிகை
மனிதனுக்கு நம்பிக்கை
வெற்றி மனிதனுக்கு தன்னம்பிக்கை...

மிக அருமை உங்களின் வெற்றி வரிகள்...

poo
21-03-2007, 06:44 AM
அடையாளம் தெரிந்துவிட்டது.. இனி அடையாமல் இருக்கப்போவதெது?!

- தொடருங்கள் சகோதரி.

செல்விபிரகாஷ்
21-03-2007, 06:46 AM
நன்றி சகோதரர்களே

pradeepkt
21-03-2007, 07:22 AM
அழகான தன்னம்பிக்கைக் கவிதை...
வாழ்த்துகள் செல்வி.

அறிஞர்
21-03-2007, 03:03 PM
இருள் சூழ்ந்த மனதினுள்
இருந்து வருவது
வேறு யாருமல்ல..
முடியும் என்ற நம்பிக்கையுடன்
எழுந்து வரும்
தன்னம்பிக்கை தான்!
வீறு கொண்டு எழும்
தன்னம்பிக்கை தான்...
வாழ்க்கையில் முக்கியம்....

தொடருங்கள்.. செல்வி

மனோஜ்
21-03-2007, 03:10 PM
தன்னம்பிக்கை அது வாழ்வின்
நல்ல முயற்சி அதை உணர்த்தும் வரிகள் அருமை

ஷீ-நிசி
21-03-2007, 04:36 PM
தன்னம்பிக்கை இல்லாவிட்டால், வாழ்வில் வெற்றி ஏது???

நல்ல கவிதை சகோதரி..

இளசு
25-03-2007, 08:55 AM
மண்ணைத்துளைத்துக்
கொண்டு வெளிவரத்
துடிக்கும் துளிர்போல்
கிழித்துக் கொண்டு
வருவது யார்..........

முடியும் என்ற நம்பிக்கையுடன்
எழுந்து வரும்
தன்னம்பிக்கை தான்!


மிகப் பொருத்தமான உவமை..

வாழ்த்துகள் செல்வி!

பரஞ்சோதி
25-03-2007, 09:55 AM
அருமையான கவிதை சகோதரி.

யானைக்கு தும்பிக்கை பலம்
மனிதனுக்கு நம்பிக்கை பலம்.

- நம்பிக்கை பரம்ஸ்

விகடன்
25-03-2007, 06:02 PM
தன்னம்பிக்கை பற்றிய கவிதை அருமை.

செல்விபிரகாஷ்
26-03-2007, 05:26 AM
வாசித்து மட்டும் செல்லாமல் உங்கள் எண்ணங்களை விமர்சனங்களாக விட்டுச் சென்றமைக்கு நன்றி சகோதரர்களே