PDA

View Full Version : காதல் பிரசவம்



செல்விபிரகாஷ்
20-03-2007, 05:41 PM
பெண்ணவள் சுமக்கும் கருவின்
வளர்ச்சி...
எவரது கண்ணிலும் படாமல்
இருப்பதில்லை....

நான் சுமக்கும் கருவின்
வளர்ச்சி...
உன் கண்களுக்கு கூட
தெரியவில்லையா?

இல்லை! நிச்சயமாக இல்லை!

நீ என்னுள் காதல் கருவாக
வளர்வதை
முழுவதும் உணர்ந்தவள்....

கருவினுள் வளர்ந்து வரும்
குழந்தைக்கு....
பிடித்தது! பிடிக்காதது!
எதுவென அறிந்து உண்ணும்
அன்னையாய்...
நான் நடந்து கொண்டதை
ரசித்தவள் நீ....

கருவினுள் சுகமாய் இருப்பதை
என்றாவது ஒருநாள்....
காலால் உதைத்து உண்ர்த்தும்
குழந்தையைப் போல்...

நீ உதிர்க்கும் ஒரிரு
வார்த்தைக்ள்...
நீ காணும் இன்பத்தை
எனக்குணர்த்தும்....

பத்து திங்கள் கழிந்த பிறகும்....
வெளியுலகை சந்திக்க பயந்து....
கருவினிலேயே இருக்க விரும்பியதாம்
குழந்தை!

குழந்தையும் உன்னைப் போல்
அறியவில்லை!...

தக்க தருணத்தில் வெளி
வந்தால்தான்...
தனக்கும் தன்னைச் சுமப்பவளுக்கும்
நன்மையென....

தனக்குள் பாதுகாப்பாக சுமக்கும்
போதே!
அரவணைத்து, கருவின் உணர்வறிந்து
நடந்தவளுக்கு....
கைகளில் வந்ததும் அரவணைக்கும்
பக்குவம் தெரியுமடி....

என் காதல் கருவாய்
இருப்பவளே!

இதனை உணர்ந்து....

எப்பொழுது நீயும் எனக்குத் தருவாய்
பிரசவ வலி?

என்றும் அன்புடன்
செல்விபிரகாஷ்

இளசு
20-03-2007, 11:31 PM
வாழ்த்துகள் செல்வி..

கவிதை வடிப்பதை பிரசவம் என சொல்வது
கவிஞர் வைரமுத்துவின் வாடிக்கை..

இங்கே காதலைக் கருவாக்கி
அது வெளிப்படுவதை பிரசவமாக்கி
உங்கள் உவமைக்கவிதை!

கத்தரிக்காய் முத்தினால்
சந்தைக்கு வந்துவிடும் -
இது சொலவடை!

காதல் முத்தினாலும்
அப்படித்தானாம்..

தும்மலைக்கூட அடக்கலாம்..
ஆனால் காதலை?

தவறான கரு, குறைப்பிரசவம் என 'தவறிய' காதல்களும் உண்டு..


நல்ல காதல்கள் சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்று
வாழ்த்துகிறேன்..

poo
21-03-2007, 10:42 AM
அழகான கரு... நன்றாக வளர்ந்துள்ளது...

பாராட்டுக்கள் சகோதரி.

அறிஞர்
21-03-2007, 03:06 PM
இன்பமான பிரசவ வலி
விரைவில் வரட்டும்..
காதல் குழந்தை....
அன்போடு தவழட்டும்....

காதல் வரிகள் அருமை செல்வி..

ஷீ-நிசி
21-03-2007, 04:19 PM
அருமை... ரசித்தேன்.. காதலை குழந்தையோடு உருவகப்படுத்தி ரசிக்க வைத்தீர்கள்..

நான் ரசித்த வரிகள்...


பத்து திங்கள் கழிந்த பிறகும்....
வெளியுலகை சந்திக்க பயந்து....
கருவினிலேயே இருக்க விரும்பியதாம்
குழந்தை!

குழந்தையும் உன்னைப் போல்
அறியவில்லை!...

தக்க தருணத்தில் வெளி
வந்தால்தான்...
தனக்கும் தன்னைச் சுமப்பவளுக்கும்
நன்மையென....

இளசுவின் விமர்சனம் அவருக்கே உரித்தான 'நச்'


தவறான கரு, குறைப்பிரசவம் என 'தவறிய' காதல்களும் உண்டு..

sham
22-03-2007, 06:52 AM
கருவினுள் சுகமாய் இருப்பதை
என்றாவது ஒருநாள்....
காலால் உதைத்து உண்ர்த்தும்
குழந்தையைப் போல்...

நீ உதிர்க்கும் ஒரிரு
வார்த்தைக்ள்...
நீ காணும் இன்பத்தை
எனக்குணர்த்தும்....


மிக நன்றாகவுள்ளது நண்பரே. உருவாகிய தீயை மறைத்தாலும் வெளிவரும் புகை தீயைக் காட்டிக்கொடுத்துவிடும்.அதே போல் மனசில் உள்ள காதலை மறைக்க முயன்றாலும் வாயிலிருந்து வெளிவருகின்ற வார்த்தைகள் அதனைக் காட்டிக்கொடுத்துவிடும்

ஆதவா
22-03-2007, 07:50 AM
அக்கா இரவு அல்லது நாளை படித்து விடுகிறேன்.. விமர்சனம் அப்போதே!!

விகடன்
25-03-2007, 06:04 PM
காதலிப்பது செத்துப் பிழைப்பது எங்கிறீர்கள்.

அதுசரி... அநுபவப்பட்டால்த்தானே உணருவதற்கு..

ஓவியா
25-03-2007, 06:24 PM
செல்விபிரகாஷ்
தக்க தருணத்தில் வெளி
வந்தால்தான்...
தனக்கும் தன்னைச் சுமப்பவளுக்கும்
நன்மையென....

இந்த வரி சுடுகின்றது.....அருமையான வரி ....................
கோழையாய் :icon_08: இப்படியே கனவு மட்டும் கண்டால் போதுமா??? ஹி ஹி ஹி

அருமையான கவிதை.
காதலை தாய்மையுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளீர்கள், பாரட்டுக்கள் செல்வி

.......................................................................................................

இளசு
தும்மலைக்கூட அடக்கலாம்..
ஆனால் காதலை?
தவறான கரு,
குறைப்பிரசவம் என
'தவறிய' காதல்களும் உண்டு......

முற்றிலும் உண்மை இளசு.


காதல் காதல்
அச்சோ ஒரே காதல் புலம்பல்........:spudnikbackflip: