PDA

View Full Version : ஏக்கம்



செல்விபிரகாஷ்
20-03-2007, 05:28 PM
http://bp1.blogger.com/_e_laRiU0vmM/Re6UpjNvFHI/AAAAAAAAABc/7t7oog44Yos/s400/sample.jpg

கருவறைக் குழந்தைக்கு
தாயின் அரவணைப்பு
பத்து மாதத்தில்...
என் காதல் குழந்தைக்கு
உந்தன் அரவணைப்பு
எத்தனை மாதத்தில்..?

ஆதவா
20-03-2007, 05:30 PM
கூடியவிரைவில்..............


அழகிய கவிதை..... ஏக்கத்தோடு அமர்ந்திருக்கும் அந்த பெரியவரைப் பார்த்தாலே தெரிகிறது...

வாழ்த்துக்கள்...

பென்ஸ்
20-03-2007, 05:35 PM
பார்வையாலே கருவிட்டு சென்றவளே
என் ரத்ததில் கலந்திருக்கும்
உன் நினைவுகளை ஊட்டி வளர்க்கிறேன்
பேறுகால வலி மனதில் ரணமாய்
நீ விதைத்ததை நீயே அறுப்பாய்..

ஆதவா
20-03-2007, 05:36 PM
பார்வையாலே கருவிட்டு சென்றவளே
என் ரத்ததில் கலந்திருக்கும்
உன் நினைவுகளை ஊட்டி வளர்க்கிறேன்
பேறுகால வலி மனதில் ரணமாய்
நீ விதைத்ததை நீயே அறுப்பாய்..

காதலைப் பெற்றெடுக்கும் வரிகள்.... அருமை பெஞ்சமின்.

பென்ஸ்
20-03-2007, 05:39 PM
காதலைப் பெற்றெடுக்கும் வரிகள்.... அருமை பெஞ்சமின்.
காதல் என்று சொல்லவில்லையே ஆதவா....:nature-smiley-006:

செல்விபிரகாஷ்
20-03-2007, 05:43 PM
நன்றி நண்பர்களே உங்கள் ஆதரவிற்கு

ஆதவா
20-03-2007, 05:47 PM
காதல் என்று சொல்லவில்லையே ஆதவா....:nature-smiley-006:

இல்லாவிடினும் எனக்கு அப்படியே தோணியது.. காரணம் செல்விபிரகாசின் கவிதை........ சரி உங்கள் எண்ணம் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா?

இளசு
20-03-2007, 11:23 PM
செல்வியும் பென்ஸூம்
இரட்டைக் குழல்களாய்
தமிழ்க்கவிதை விருந்திசை தந்த விதத்தில்..

தமிழ்க்காதல் இன்னும் முற்றி...
இன்பவேதனையில் நான்..


வாழ்த்துகள்...

poo
21-03-2007, 06:43 AM
வாழ்த்துக்கள் இருவருக்கும்!!


-பென்ஸ்.. ஆட்டோகிராப்பும், அன்புத்தோழியும்?!