PDA

View Full Version : பிம்பத்தில் விரிசல்கள்

ஆதவா
20-03-2007, 03:36 PM
சாலையோரங்களில்
நிதானியாக பயணிக்கையில்
உலாவும் கண்களை
கனவுகளாய் படரவிடுகிறோம்

பல்துலக்காமல் அவன் சிரிக்கும்
சிரிப்புக்கு வெறுப்பைக் காட்டி
இழந்து போன கால்களை
ஏளனமாய் பார்க்கிறோம்
அவன் கேட்கும் நாலணா
நம் சட்டைப் பையில் இல்லை..

தள்ளாட்டங்களுக்குக்
குறைவில்லாமல்
கண்கள் உருள நடந்து வரும்
மிதவாதியை
வேதனையாகப் பார்க்கிறோம்
இரவு கொண்டாட்டங்களுக்கு
எடுத்துவைக்கப்பட்டிருக்கும்
காசையும் கணக்கு
பார்த்துக் கொள்கிறோம்
மிதவாதியின் முகத்தைப் பார்த்து.

மெல்ல இறங்கி
கண்களின் பயணத்தில்
வீடின்றி தவிக்கும்
கூட்டத்தைப் பார்க்கிறோம்
வீணாக இரைக்கும்
பணம், கண்ணுக்குத் தெரிவதில்லை..

(இன்னும் இன்னும் இன்னும்
ஒராயிரம் பூக்களை
ஒரு மலர்கொத்தில் அடுக்க முடியுமா?)

எல்லாம் கவனித்துவிட்டு
வீட்டுக் கண்ணாடியில்
முகம் பார்க்கிறோம்
பிம்பத்தின் விரிசல்களில்
பல முகங்கள் தெரிகின்றன...

கரு முழுக்க என்னுடையது என்றாலும் ஒரு சின்ன வரி எனக்கு கவிஞர் கோகுலக் கண்ணன் மூலம் கிடைத்தது... அது கண்ணாடிக்கோளத்தின் உட்புற விரிசல்கள்.... என்ற தலைப்பு தான்..

இளசு
20-03-2007, 11:35 PM
எப்படி இருக்க நினைக்கிறோம் என்பது வேறு..
எப்படி இருக்கிறோம் என்பது வேறு..

இடைவெளி இரண்டுக்கும் இருக்கையில்
விரிசல்கள் விழுவது இயல்புதானே..

சுயவிமர்சன நெருப்பில் வாடுவது முதல் படி..
விரிசல்கள் மெல்ல நெருங்கலாம் அடுத்தபடி..

வாழ்த்துகள் ஆதவா..

poo
21-03-2007, 06:48 AM
ஆகா... அருமை ஆதவன்...
மீண்டும் சொல்ல மாட்டேன் நான்.. எழுதியதை பதிக்கிறேன் பிறகு!!

ஆதவா
21-03-2007, 09:12 AM
நன்றி இளசு மற்றும் பூ!!!

பூ! பிறகு பதிப்பதை சீக்கிரமே பதியுங்கள்.. ஆவல் கூடுகிறது

மனோஜ்
21-03-2007, 09:18 AM
கவிதை அருமை ஆதவா நன்று

ஆதவா
21-03-2007, 09:44 AM
நன்றி மனோஜ்

leomohan
21-03-2007, 09:52 AM
அற்புதம் ஆதவா. எளிமையான வார்த்தைகள் கொண்டு பல பரிமாணங்களை தூக்கி நிறுத்திய கவிதை. வாழ்த்துக்கள்.

ஆதவா, உங்கள் கவிதை தொகுப்பை வெளியீடு செய்ய முயற்சிக்க வேண்டும்.

ஆதவா
21-03-2007, 10:03 AM
அற்புதம் ஆதவா. எளிமையான வார்த்தைகள் கொண்டு பல பரிமாணங்களை தூக்கி நிறுத்திய கவிதை. வாழ்த்துக்கள்.

ஆதவா, உங்கள் கவிதை தொகுப்பை வெளியீடு செய்ய முயற்சிக்க வேண்டும்.

நன்றிங்க மோகன்... உங்கள் கருத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. தொகுப்பு வெளியிடும் அளவிற்கு நான் பெரிய மனிதனில்லையே! அந்த எண்ணம் தற்போது இல்லை என்றாலும் உங்களைப் போன்றவர்களின் ஊக்கத்தில் வெளியிட்டாலும் இடுவேன்.. சொல்வதற்கில்லை........:love-smiley-073:

ஷீ-நிசி
21-03-2007, 10:20 AM
சாலையோரங்களில்
நிதானியாக பயணிக்கையில்
உலாவும் கண்களை
கனவுகளாய் படரவிடுகிறோம்

பேருந்துக்காக காத்திருக்கும் ஒருவன், அவன் காத்திருக்கும் தருணத்தில் அவன் விழிகள் கண்ட காட்சிகள்!

பல்துலக்காமல் அவன் சிரிக்கும்
சிரிப்புக்கு வெறுப்பைக் காட்டி
இழந்து போன கால்களை
ஏளனமாய் பார்க்கிறோம்
அவன் கேட்கும் நாலணா
நம் சட்டைப் பையில் இல்லை..

மிக அழுக்கான நிலையில், கால்களை தரையில் தேய்த்தபடி யாசகம் கேட்டு நம்மை நோக்கி வரும் ஒருவன், அவனுக்கு யாசகம் தராவிட்டாலும் வெறுப்பை தராமலிருக்கலாமே!

தள்ளாட்டங்களுக்குக்
குறைவில்லாமல்
கண்கள் உருள நடந்து வரும்
மிதவாதியை
வேதனையாகப் பார்க்கிறோம்

அடுத்து, ஒரு குடிகாரன் வருகிறான்.. மிதவாதி என்ற பெயர் மிகப் பொருத்தம் ஆதவா.. போதையில் மிதந்து கொண்டே வருபவனை குடிகாரன் என்று சொல்லாமல் வேறு வார்த்தையை கையாண்டிருப்பது கவிஞர்களுக்கு தேவையான அம்சம்.

இரவு கொண்டாட்டங்களுக்கு
எடுத்துவைக்கப்பட்டிருக்கும்
காசையும் கணக்கு
பார்த்துக் கொள்கிறோம்
மிதவாதியின் முகத்தைப் பார்த்து.

அவனை வேதனையாக பார்க்கும்போதே, நீ மட்டும் என்ன! நீயும் மிதவாதிதானடா என்று மனம் ஆரம்பிக்கிறது.. இரவு அதற்கான ஏற்பாடுகளை நிறைவேற்றிட மூளை கணக்குப்போடுகிறது.

மெல்ல இறங்கி
கண்களின் பயணத்தில்
வீடின்றி தவிக்கும்
கூட்டத்தைப் பார்க்கிறோம்
வீணாக இரைக்கும்
பணம், கண்ணுக்குத் தெரிவதில்லை..

அடுத்து மூன்றாவதாய் ஒரு காட்சி..
வீடின்றி தவிக்கும் கூட்டம் என்றால், அநேகமாக அவ்வழி பயணிக்கும் குறவர் குறத்தி என அழைக்கப்படும் மனிதர்களாயிருக்கவேண்டும்.

(இன்னும் இன்னும் இன்னும்
ஒராயிரம் பூக்களை
ஒரு மலர்கொத்தில் அடுக்க முடியுமா?)

எனக்கு மிக பிடித்த வரிகளிவை..

இப்படி கண்கள் காணும் எல்லாக் காட்சியையும் கவிதையாய் வடித்துக்கொண்டே போவேன். ஆனால் ஒவ்வொரு காட்சியும் ஒரு மலர்போல்.. இப்படி காணும் ஓராயிரம் மலர்களை ஒரே மலர்க்கொத்தில் என்னால் எப்படி அடுக்கிட முடியும்? இந்த ஒரே கவிதையில் என்னால் எப்படி கூறிட முடியும் என்று உருவகபடுத்தியிருப்பது மிக அழகு.

எல்லாம் கவனித்துவிட்டு
வீட்டுக் கண்ணாடியில்
முகம் பார்க்கிறோம்
பிம்பத்தின் விரிசல்களில்
பல முகங்கள் தெரிகின்றன...

வீட்டுக் கண்ணாடி என்பது, நம்மை நாம் ஒளிக்காமல் காண்பது.. எல்லா நிகழ்வுகளையும் அசைபோட்டபடி கண்ணாடி முன் நிற்கிறேன். ஒவ்வொரு முகமாய் கண்ணாடியில் என் முன் வந்து வந்து மறைந்து போனது.

பாராட்டுக்கள் ஆதவா.. கவிதை எழுதி தள்ளிக்கொண்டே இருக்கிறீர்கள்.. தொடரட்டும் உனது கவிப்பயணம்..

ஓவியா
21-03-2007, 10:26 AM
ஆதவா கவிதை அருமை.

முடிவில் மனம் கனக்கிறது.

வர-வர நீ (நீங்க) அனியாயத்திற்க்கு நிஜங்களை பிச்சி பிச்சி எழுதுகிறாயே. பலே ஆதவா

எழுதும் உன் திறமை மேன்மேலும் வளரட்டும். :icon_give_rose:

......................................................................................................

ஒரு நாள் நான் மழையில் குடைபிடித்து சென்றுக் கொண்டிருந்தேன். ஒரு சிரிய சந்தடியில் ஒரு தாத்தா சக்கர வண்டியுடன் மழையில் நனைந்துக் கொண்டிருந்தார். நானோ அச்சோ என்று குடையை அவரிடம் கொடுத்துவிட்டு நனைந்துக் கொண்டே வீடு சென்று விட்டேன். காய்ச்சலும் இருமலும் கண்டது. சில வாரங்கள் கழித்து அவரைக் கண்டேன். வெட்ட வெயிலில் என் குடையின் கீழ் அவர். இப்பொழுதும் இருமிக்கொண்டே வீடு சென்றேன். மனதில் ஒரு சந்தோஷம். ஆனாலும் பெஞ்சமீன் சொன்ன (பஸ் பயண்ம்) கதை போல் நடந்தால்??? அப்படியும் சில மனிதர்கள் இப்படியும் சில மனிதர்கள்.

ஆதவா
21-03-2007, 10:38 AM

நன்றிங்க ஓவியா!! உங்கள் பதிலில் என் அடுத்த கவிதைக்கான கரு உள்ளது... நன்றிகள் கோடி...........

ஆதவா
21-03-2007, 10:39 AM
மிகவும் நன்றி ஷீ!! ரசித்து ரசித்து அதேசமயம் நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே பிறழாமல் எழுதியதும் அதிசயம்... என் பயணத்தில் தடங்கலில்லாமல் காப்பாற்ற மன்றத்தவர்கள் இருக்குமொபோது எனக்கென்ன கவலை? ...

அன்புரசிகன்
21-03-2007, 10:48 AM
பல்துலக்காமல் அவன் சிரிக்கும்
சிரிப்புக்கு வெறுப்பைக் காட்டி
இழந்து போன கால்களை
ஏளனமாய் பார்க்கிறோம்
அவன் கேட்கும் நாலணா
நம் சட்டைப் பையில் இல்லை..

உண்மைதான். சொந்தமாக ஒரு காசு உழைத்தெடுக்கும் வரை அவனிலும் கேவலமான நிலை தான். இரு வேறு பெயர்களுடன். பிச்சைக்காரன். தண்டச்சோறு:violent-smiley-004: :violent-smiley-010: .

வீணாக இரைக்கும்
பணம், கண்ணுக்குத் தெரிவதில்லை..

இரை(றை)க்கும் போது தெரிவதில்லையே. அத்தியவசியமானதாக தோன்றிவிடும். பின்னர் தேவையற்றதுபோலிருக்கும். இது மனித இயல்போ?
தேவை - அத்தியவசிய தேவை - தேவையற்ற தேவை இவை மூன்றையும் பகுத்தறிய முடிந்தால் ......

எல்லாம் கவனித்துவிட்டு
வீட்டுக் கண்ணாடியில்
முகம் பார்க்கிறோம்
பிம்பத்தின் விரிசல்களில்
பல முகங்கள் தெரிகின்றன...

இது எமது இயலாமையா???(!!!)

கலக்கிவிட்டீர்கள் ஆதவா...

leomohan
21-03-2007, 11:27 AM
நன்றிங்க மோகன்... உங்கள் கருத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. தொகுப்பு வெளியிடும் அளவிற்கு நான் பெரிய மனிதனில்லையே! அந்த எண்ணம் தற்போது இல்லை என்றாலும் உங்களைப் போன்றவர்களின் ஊக்கத்தில் வெளியிட்டாலும் இடுவேன்.. சொல்வதற்கில்லை........:love-smiley-073:

வெளியீடு செய்ய பெரிய கவிஞனாக இருக்க வேண்டிய அவசியமில்லை ஆதவா. தங்கள் எழுத்துக்களை படிப்பவர்கள், உங்களை பெரிய ஆளாக்கிவிடுவார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சென்னை நண்பர்கள் பதிப்பகத்தாரிடம் பேசினால் நன்றாக இருக்கும்.

பிறகு என்ன செலவு ஆகிறது என்று பார்த்து மன்றத்தில் மற்ற எழுத்தாளர்களும் சேர்ந்து பிரசுரிக்க முயற்சி செய்யலாம்.

தமிழ் மன்ற மாத இதழாகவோ, காலாண்டு இதழாகவோ கூட முயற்சி எடுக்கலாம்.

ஆதவா
21-03-2007, 11:55 AM

ஆம்.. உங்களின் யோசனை மிக அருமையாக இருக்கிறது.. மன்றத்துக் கவிஞர்கள் இணைந்து இதைச் செய்யலாம்.. (செலவு மிச்சம்தான் :D )
நான் மற்றவர்களிடம் பேசிப்பார்க்கிறேன்... அவரவர் விருப்பம் இருந்தால் செய்யலாம்..

நன்றிங்க மோகன்... மன்றம் வந்ததிலிருந்து உங்களின் ஊக்கம் எனக்கு மிகவும் உதவியிருக்கிறது......

ஆதவா
21-03-2007, 11:56 AM
நன்றிங்க அன்புரசிகன்... உங்கள் விமர்சனம் என் எழுத்துக்கு வெற்றி...