PDA

View Full Version : நயாக்ரா நீர்வீழ்ச்சி



க.கமலக்கண்ணன்
20-03-2007, 10:32 AM
http://www.geocities.com/kamal_kkk/naya.gif

அற்புதமான நீர்வீழ்ச்சி நயாக்ரா
ஆர்வத்துடன் பலரும் பார்க்க விரும்பும்
இந்த இனிய நீர்வீழ்ச்சி
ஈடு இல்லை இதன் பிரம்மாண்டம்
உலகம் முழுவது வியக்கின்றனர் - நீர்
ஊற்றுகின்ற அழகைப் பார்க்க பலரும்
எத்தனையோ ஊர்களில் இருந்து வருகின்றனர்
ஏன்னென்றால் இந்த அற்புதத்தை பார்க்க
ஐந்து நூறு கண்கள் வேண்டும் நமக்கு
ஒப்பில்லாத நீர்வீழ்ச்சியை - உங்களின்
ஓய்வு நேரத்தில் வந்து இதனை கண்டுகளிக்க
ஒளவைத் தமிழிலே
அஃதே அன்புடன் அழைக்கிறேன்.

poo
20-03-2007, 10:53 AM
உங்கள் அகரவரிசை கவிதைகள் அருமை.. இன்னும் எத்தனை இருக்கிறது... ?...

ஆனபோதும் இங்கே தட்டச்சு செய்யாமல் பதிப்பதால் செல்லமாய் தட்டுகிறேன்..

gragavan
20-03-2007, 11:04 AM
கண்ணா கண்ணா கமலக்கண்ணா...அகரத்தில் தொடங்கிய கவிதை கண்ணா. நீர்விழ்ச்சியைப் போலே தொடர்ச்சி கண்ணா...நல்ல வார்த்தைக் கோர்ப்பு கண்ணா....அந்த படத்த எங்க பிடிச்சீங்க?

இளசு
20-03-2007, 11:54 PM
தொடர் அசத்தல் கமலக்கண்ணன்.. வாழ்த்துகள்!

ராகவனின் விமர்சனம் - ரம்மியம்!

அறிஞர்
21-03-2007, 10:03 PM
இன்னும் இரு மாதங்களில் நேரடியாக சென்று பார்த்து மகிழ எண்ணுகிறேன்.

அப்பொழுது தங்களின் வரிகள் எண்ணத்தில் வரும்....

க.கமலக்கண்ணன்
23-03-2007, 05:40 AM
அறிஞர் அவர்களுக்கு அந்த அற்புதத்தை பார்த்தபின் இங்கு அதை பற்றி விவரிக்கவும்...

அமரன்
23-03-2007, 08:31 AM
கமலக்கண்ணா உங்க கவிதையும் நயாகரா மாதிரித்தான் இருக்கின்றது. வாழ்த்துக்கள்.

க.கமலக்கண்ணன்
23-03-2007, 08:33 AM
மிக்க நன்றி நக்கீரன் அவர்களே...

ஆதவா
23-03-2007, 10:12 AM
அன்பு கமலக்கண்ணன் அவர்களே
ஆக்கம் கண்டு மகிழ்ந்தேன்
இங்குள்ளவர் விமர்சித்த பின்னும் நான்
ஈங்கு பதிலெழுத என்ன உள?
உன்னதமான கவிதை இது - அமெரிக்க
ஊரில் வீழும் வீழ்ச்சி காண
எனக்கு ஆவல் பொங்குகிறது கவிகண்டு.
ஏதாவது கடவுள் துணையிருந்தால்
ஐயமின்றி கண்டு களிக்கலாமே!
ஒருநாளில்லை ஒருநாள் நடக்கலாம்..
ஓலமிடும் நயாகராவைப் பார்க்கலாம்.
அவ்விதமே நடந்தால் இக்கவிதையை
அக்கணமே நினைத்துக்கொள்வேன்

நன்றி
ஆதவன்

க.கமலக்கண்ணன்
23-03-2007, 11:40 AM
உங்களின் கவி கண்டு உள்ளம் பூரித்தேன். மிக்க நன்றி...

நீங்கள் அங்கு செல்லும் போது எனது வரிகள் நினைவில் வந்தால் அது எனது பாக்கியம் அதவா அவர்களே...

ஆதவா
23-03-2007, 04:01 PM
நன்றிங்க க.கண்ணன்

இளசு
24-03-2007, 08:49 PM
ஆதவாவின் பொருத்தமான பதில்கவிதையால்..

இப்பதிவு இரட்டை நயாகராவாய் பிரவாகத்தில்..

பாராட்டுகள் ஆதவா...