PDA

View Full Version : தாஜ்மஹால்



க.கமலக்கண்ணன்
20-03-2007, 10:21 AM
http://www.geocities.com/kamal_kkk/taj.gif

அழகிய சலவை கற்களால் - பல ஆயிரம்
ஆண்டுகள் நிலைத்து நின்று - ஆக்ராவில்
இந்தியாவின் புகழ்பாட - யமுனை நதியின் கரையில்
ஈடு இல்லாத அழகோடு இணை இல்லாத
உலக அதிசயங்களில் ஒன்றாக - எல்லா
ஊர்களில் உள்ளவர்களுக்கு தெரியவைத்திருக்கும் - இந்த
எழில் மிகு தாஜ்மகால் - உலக அதிசயங்களில்
ஏற்றமிகு இடத்தில் இருக்கிறது என்பதில்
ஐயம் இல்லை
ஒப்பில்லாத இந்த தாஜ்மகாலை
ஓராயிரம் கோடி ஆண்டுகள் புகழ்பெற உருவாக்கிய
ஒளரங்கசீப்பின் தந்தை ஷாஜகானுக்கும் மும்தாஜுக்கும்
அஃதே நன்றி ! நன்றி !!

அன்புரசிகன்
20-03-2007, 10:52 AM
நன்றாக உள்ளது. உங்கள் வரிகள் மட்டுமல்ல.

பென்ஸ்
20-03-2007, 11:09 AM
கமலகண்ணன்...
நீங்க வெறும் கமலகண்ணனா இல்ல அகரவரிசை கமலகண்ணனா????
கலக்குறிங்கபா... எல்லாம் அருமையா இருக்கு...
அப்படியே படங்களுடன் எழுத்தையும் கொடுங்களேன்... சிலருக்கு படங்கள் பதிவிறங்குவதில்லை....

ஆமா உங்க பெயருக்கு இடையில் "க்"-வராமல் இருப்பதற்கு எதாவது விளக்கம் இருக்கா என்ன....
நிறைய பேர் இங்க இந்தமாதிரி விஷயத்துக்கு எல்லாம் விளக்கம் கொடுத்தாங்க...

இளசு
20-03-2007, 11:52 PM
வெள்ளை அதிசயத்துக்கு
செம்மொழியில் ஆராதனை..

அகரவரிசை கமலக்கண்ணனுக்குப் பாராட்டுகள்!

(அவருக்கு ஒரு 'க்' வைத்த பென்ஸூக்கு ஷொட்டு!)

க.கமலக்கண்ணன்
21-03-2007, 05:36 AM
க் என்றால் நடைமுறையில் மீண்டும் வேண்டும் என்பற்கு ஒரு க் வைத்து விட்டு செல் என்பார்கள்.

சில விஷயங்கள் ஒருமுறை நடந்தால்தான் நன்றாக இருக்கும். அதனால்தான் நடுவில் க் வைப்பதில்லை...

இளசு அவர்களுக்கு என் நன்றி...

அறிஞர்
21-03-2007, 10:02 PM
அகர வரிசையில் தாஜ்மகாலின் அழகு இன்னும் கூடுகிறது...
வாழ்த்துக்கள் கமலக்கண்ணன்.