PDA

View Full Version : என்று சொல்வாயோ காதலியே?



செல்விபிரகாஷ்
20-03-2007, 08:52 AM
http://bp2.blogger.com/_e_laRiU0vmM/Re74uzNvFII/AAAAAAAAABk/46EmMNJbBPY/s400/entru-solvay.jpg

காதலைச் சொல்வதில் நீ
மழலைச் சொல் மட்டுமே
அறிந்த குழந்தையா..?
என்னிடம் நீ கொண்ட
காதலை கண்ணீரால் சொல்கிறாய்
இல்லையேல்...
புன்னகைத்துச் சொல்கிறாய்
என்றைக்கு மழலைச்சொல்
மறவாயோ?
என்னை காதலிப்பதைச்
சொல்வாயோ!!

அமரன்
20-03-2007, 09:04 AM
நல்லா இருக்குங்க. ஓவியாவுக்குப் போட்டியாக ஒருவர் வந்துவிட்டார் போலும். நம்ம பக்கம் ஒரே கொண்டாட்டம்தான் போங்கள்.

ஆதவா
20-03-2007, 09:06 AM
கவிதை சற்ற்ற்று விளங்கவில்லை... விளக்குங்கள்..

செல்விபிரகாஷ்
20-03-2007, 02:55 PM
குழந்தைக்கு தான் விரும்பியதை கேட்க தெரிந்த ஒரே மொழி புன்னகை, அழுகை. அதே போல்தான் காதலியும் தான் காதலிப்பதை காதலனை கடந்து செல்லும் போது புன்னகைத்தும், அவனை காணத் தவறிய நேரங்களில் அழுதும் உணர்த்துகிறாள். அதனை உணர்ந்து கொண்ட காதலன் அவளிடம் மழலைச் சொல் மறந்து காதலை என்று சொல்வாய் என்று வினவுகிறான்.

ஆதவா
20-03-2007, 03:12 PM
குழந்தைக்கு தான் விரும்பியதை கேட்க தெரிந்த ஒரே மொழி புன்னகை, அழுகை. அதே போல்தான் காதலியும் தான் காதலிப்பதை காதலனை கடந்து செல்லும் போது புன்னகைத்தும், அவனை காணத் தவறிய நேரங்களில் அழுதும் உணர்த்துகிறாள். அதனை உணர்ந்து கொண்ட காதலன் அவளிடம் மழலைச் சொல் மறந்து காதலை என்று சொல்வாய் என்று வினவுகிறான்.

விளக்கத்திற்கு நன்றிங்க...

பென்ஸ்
20-03-2007, 03:49 PM
ஆதவா அதுமட்டும் இல்லைபா,
அழும் போது, எதுக்கு அழறாங்கன்னு தெரியாது..
சிரிக்கனும்னு தோன்றினால், எதை சொன்னாலும் சிரிப்பாங்க...
சின்ன மிட்டாய் கொடுத்தாலும் கவனத்தை திசை திருப்பிடலாம்.

சரி செல்வி கவிதைக்கு வருவோம்...
சட்ரியாக சொன்னீர்கள் செல்வி... இந்த பொண்ணுங்களே இப்படிதான்... "விளங்க முடியா கவிதை"

மயூ
20-03-2007, 05:35 PM
ஆமாங்க நிசமான கவிதை...
பொண்ணுங்களே இதைக் கேட்டாவது திருந்துங்க!

இளசு
20-03-2007, 11:48 PM
சரியான கவிதை..

மிகச்சரியான விமர்சனங்கள்!


பாராட்டுகள் செல்விக்கும்..நண்பர்களுக்கும்!


வெங்கடேஷ் - திரிஷா நடிக்க
செல்வராகவன் இயக்க
தெலுங்கில் ஒரு படம் தயாராகிறது -
அதன் பெயரே ஒரு கவிதை..

ஆடவாரி மாட்டலாக்கு அர்த்தம் வேறுலே

(சரியா சொல்லியிருக்கேனா ஆதவா?)

பொண்ணுங்க பேச்சுக்கு அர்த்தமே வேறு..

-- பேசினாலே புரியறது கஷ்டம்!
மழலையாய்க் கொஞ்சினால்????

ரொம்பக் கஷ்டம்டா சாமீ..!!!!

ஜூனில் ஹெல்மெட் அணியுமுன்னேயே
தலைமுடி கொட்டி விடும் !!!!!

ஆதவா
21-03-2007, 08:27 AM
நன்றி பெண்ஸ்!
நன்றி நண்பர்களே

pradeepkt
21-03-2007, 08:53 AM
ஆமாங்க நிசமான கவிதை...
பொண்ணுங்களே இதைக் கேட்டாவது திருந்துங்க!
மயூரேசா, உன் கவலை உனக்கு... :sport009: எவ்வளவு நாளைக்குத்தான் :icon_give_rose: இதையே செய்வாய்?? :D

செல்வி,
மழலைகள் இரவில் எதற்கு அழுகிறார்கள் எதற்குச் சிரிக்கிறார்கள் என்று கண்டு கொள்வதற்கே இப்போதெல்லாம் பெரிய ஆஸ்பத்திரிகளில் கோர்ஸ் நடத்துகிறார்கள் என்று சமீபத்தில் தந்தையான என் நண்பன் சொன்னான்...
ஏன்னு இப்பத்தானே புரியுது???

மனோஜ்
21-03-2007, 09:05 AM
கவிதையூம் விளக்கமும் அருமை

ஆதவா
21-03-2007, 09:34 AM
காதலைச் சொல்வதில் நீ
மழலைச் சொல் மட்டுமே
அறிந்த குழந்தையா..?
என்னிடம் நீ கொண்ட
காதலை கண்ணீரால் சொல்கிறாய்
இல்லையேல்...
புன்னகைத்துச் சொல்கிறாய்
என்றைக்கு மழலைச்சொல்
மறவாயோ?
என்னை காதலிப்பதைச்
சொல்வாயோ

குழந்தைக்கு தான் விரும்பியதை கேட்க தெரிந்த ஒரே மொழி புன்னகை, அழுகை. அதே போல்தான் காதலியும் தான் காதலிப்பதை காதலனை கடந்து செல்லும் போது புன்னகைத்தும், அவனை காணத் தவறிய நேரங்களில் அழுதும் உணர்த்துகிறாள். அதனை உணர்ந்து கொண்ட காதலன் அவளிடம் மழலைச் சொல் மறந்து காதலை என்று சொல்வாய் என்று வினவுகிறான்


மேற்கண்ட இரண்டும் உங்கள் கவிதை மற்றும் உங்கள் விமர்சனம்... காதலை பிள்ளை மொழியாக்கி உருவாக்க முடியும் என்ற கரு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது செல்வி அக்கா! (அக்கா னு கூப்பிடலாமா?) எனக்கு கவிதை விளங்காமல் இல்லை.. இருந்தாலும் சின்ன சந்தேகம்... அது நிவர்த்தி ஆகிவிட்டது... என்னவென்றே தெரியவில்லை. தற்சமயங்களில் எளிமையான கவிதைகூட விளங்குவதேயில்லை எனக்கு.... புத்தி மழுங்கிவிட்டது என்று நினைக்கிறேன்..:spezial:

ஷீ-நிசி
21-03-2007, 09:43 AM
சகோதரியின் விளக்கத்திற்குப் பின் கவிதையின் சுவை கூடியது.. அழகான கவிதை.

மனோஜ்
21-03-2007, 09:44 AM
ஆதவா அப்ப நீங்க எழதுற கவிதை எப்படி ???

poo
21-03-2007, 10:40 AM
பாராட்டுக்கள் சகோதரி..


---- காதலித்து மணமுடிப்பவனின் நிலையை நினைத்துப் பாருங்கள் நண்பர்களே...

leomohan
21-03-2007, 11:31 AM
http://bp2.blogger.com/_e_laRiU0vmM/Re74uzNvFII/AAAAAAAAABk/46EmMNJbBPY/s400/entru-solvay.jpg

காதலைச் சொல்வதில் நீ
மழலைச் சொல் மட்டுமே
அறிந்த குழந்தையா..?
என்னிடம் நீ கொண்ட
காதலை கண்ணீரால் சொல்கிறாய்
இல்லையேல்...
புன்னகைத்துச் சொல்கிறாய்
என்றைக்கு மழலைச்சொல்
மறவாயோ?
என்னை காதலிப்பதைச்
சொல்வாயோ!!

நல்ல கவிதை செல்விபிரகாஷ். காதல் சொல்ல மொழி தேவையில்லை. சலங்கை ஒலியில் ஒரு பாட்டு - இது மௌனமான நேரம், மனதில் என்ன பாரம், மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள், ஏன் என்று கேளுங்கள்.

அறிஞர்
21-03-2007, 03:20 PM
குழந்தை உள்ளம் கொண்டதால்..
குழந்தை பொல் வெளிப்படுத்துகிறாரோ...
என்னவோ...

அருமையான வரிகள் செல்வி

செல்விபிரகாஷ்
22-03-2007, 05:01 AM
ஆதவா நீங்க என்னை அக்கா என்றே கூப்பிடலாம். ஷீ-நிசி, மனோஜ், பூ, அறிஞர், லியோமோகன் அனைவரது விமர்சனங்களுக்கும் நன்றி. கவிதை சிறிது விளங்கவில்லை என்றதும் எங்கு தவறு செய்திருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. அதனால் தான் விளக்கம் மட்டும் எழுதி அனுப்பினேன். ஆனால் நீங்கள் அனைவரும் என் விளக்கம் பார்த்து விட்டு அனுப்பிய பதில்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. நன்றி சகோதரர்களே.....

ஆதவா
22-03-2007, 07:49 AM
இதுக்குப் பேருதான் போட்டு வாங்கறதுன்னு சொல்வாங்க அக்கா!.. :D :D

பாசத் தம்பி
ஆதவன்.