PDA

View Full Version : முற்றுப்புள்ளி வேண்டாம்



செல்விபிரகாஷ்
20-03-2007, 07:50 AM
http://bp0.blogger.com/_e_laRiU0vmM/Re15_jNvFDI/AAAAAAAAAA8/VTj-4IPW5Kw/s400/Mutrupulli-vendam.jpg

உன் காதல் கடிதம்
படித்த பின்பு...
முற்றுப் புள்ளியை
கண்டுபிடித்தவனை
தேட ஆரம்பித்து விட்டேன்

பாராட்டுவதற்கு அல்ல
ஏன் கண்டுபிடித்தாய் என்று
கேட்பதற்கு...?

அது மட்டுமில்லையெனில்
உன் கடிதம் நீண்டு
கொண்டே போயிருக்குமே...!

மனோஜ்
20-03-2007, 07:54 AM
காதலின் ஆழ்மையை உனர்த்தும் கவிதை வரிகள் நன்று

ஆதவா
20-03-2007, 07:57 AM
படங்கள் உங்களுக்கு சிறப்பாக அமைகின்றன..

நீண்டு போகும் எழுத்துக்களுக்காக காதல் வெறுக்கும் முற்றுப்புள்ளி..
சிறப்பான சிந்தனை.

ஒரு சின்ன விசயம்: உங்கள் கவிதையில் முற்றுப் புள்ளியை எதற்கு வருகிறது.. அர்த்தம் உண்டென்றால் விளக்கவும்.. அர்த்தம் இல்லையென்றால் விலக்கவும்..

ஷீ-நிசி
20-03-2007, 07:59 AM
சூப்பர்ப்! மிக ரசிக்கவைத்த கவிதை... வாழ்த்துக்கள்!

இளசு
20-03-2007, 08:08 AM
மூன்று மணிநேரம் நேரில் பேசிவிட்டு
ஆண்கள் விடுதிக்கு வந்த நண்பன்
மெஸ்ஸூக்கு போகாமல் மறுபடியும்
அலை பேசுவான் -
'அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்' என்று..

அழகன் படத்தில் இரவுச்செய்திகள் முடிந்து காலை வணக்கம் தொலைக்காட்சியில் தொடங்கிய பின்னும்
நாயகன் - நாயகி பேச்சு வளரும்..


காதலுக்கென்று சில பிரத்தியேக அத்துமீறல்கள் உண்டு..
முற்றுப்புள்ளியை ஒழிக்கக் கிளம்புவது அவற்றில் ஒன்று..

பாராட்டுகள் செல்வி..

ஆதவா சொல்வதுபோல் படங்கள் மெத்தப் பொருத்தம்..

அமரன்
20-03-2007, 09:11 AM
கவிதை அருமை. நான் சொல்ல நினைத்த முற்றுப்புள்ளி அகற்றும் போராட்ட விடய ஆதரவை இளசுஅண்ணா ஏற்கனவே சொல்லிவிட்டார்.

poo
20-03-2007, 10:06 AM
காதல்..காதல்..

பாராட்டுக்களுடன் தொடருங்கள் தோழி!

பென்ஸ்
20-03-2007, 11:03 AM
செல்வி..
ஆதவன் சொன்னது போல் உங்கள் பட பின்னனி அருமையாக இருக்கிறது... அதிலும் கவிதை அதில் பதித்துள்ள விதம்...
எப்படி எழுத்துகளை புத்தகத்தின் வரி போலவே செய்தீர்கள்....!!!!

கடித்ததில் முற்று புள்ளி கடிதத்தின் முடிவை சொல்லும், காதலின் முடிவை அல்லவே, அதனால் தான் தேடுகிறான்/ள்

ஆனால் கவிதையில் முற்று புள்ளி தனியாக இருந்து நான் பார்த்தது இல்லையே...!!!!

எல்லாம் மூன்று புள்ளியாக மட்டும்...
இன்னும் தொடரும்..
தொடரும்...