PDA

View Full Version : 12ம் (இறுதிப்) பகுதி கள்ளியிலும் பால்gragavan
20-03-2007, 07:11 AM
"ஆமா...எப்ப நெதர்லாந்துக்குக் கெளம்புற? விசா எல்லாம் கெடைச்சிருச்சா? அதுக்கு ஏதாவது முயற்சி செஞ்சிருக்கியா?" இந்தக் கேள்வியைக் கேட்ட தேன்மொழியின் ஆர்வம் நமக்கு மட்டும் இல்லாமலா போகும்? சரவணனையும் சந்தியாவையும் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்திருந்தாள் தேன்மொழி. சரவணன் தேன்மொழியின் கணவனோடு பேசிக்கொண்டிருக்கையில் சந்தியாவும் தேன்மொழியும் உள்ளே பேசிக்கொண்டிருந்தனர்.

"நெதர்லாந்துக்கா? நானா? நான் ஏண்டி அங்க போகனும்? எல்லாரும் இதத்தான் கேக்குறாங்கன்னா...நீயுமா? ஒனக்குக்குத்தான் என்னையப் பத்தித் தெரியுமே."

"தெரியும். தெரியும். ஆனாலும் கல்யாணம் செஞ்சாச்சு. நான் அன்னைக்கே சொன்னேன். சரவணன் கேட்டதும் நீ ஒத்துக்குவன்னு. அதான் நடந்தது. அதே மாதிரி அவன் பின்னாடி குடுகுடுன்னு ஓடத்தான் போற." கண்ணைச் சிமிட்டிச் சொன்னாள் தேன்மொழி.

"ஆகா....உலகமகா ஜோசியக்காரி. சினிமாவுக்குப் பாட்டெழுதுறத விட்டுட்டு நீ ஜோசியம் பாக்கப் போகலாம். கல்யாணம் ஏன் செஞ்சோம்? எனக்கா? இல்ல அவனுக்கா? கண்டிப்பா இல்ல. எங்களுக்கு வேணுங்குறதும் எங்கயும் கிடைக்கும். ஆனா சுந்தருக்கு? அவனுக்காகத்தான் கல்யாணம்."

"சுந்தருக்கா? அம்மா முரண்பாடுகளின் மொத்த உருவமே! தனியா அவனை வளர்க்க முடியும்னுதானே குழந்தையே பெத்துக்கிட்ட. அப்புறம் எதுக்கு கல்யாணம். திடீர்னு பயம் வந்திருச்சா?"

"இல்லடீ. இல்ல. No பயம். பிரச்சனை என்னன்னா? யாரோ தெரியாத donorனா பிரச்சனையே இல்லை. ஆனா இங்க...சரவணன். அவன் கிட்ட ரொம்ப நாள் மறைக்கவும் முடியலை. என்னோட கொழந்தைதான...எனக்கும் பங்கு உண்டுன்னு அவன் கேக்கும் போது மறுக்குறது சரியில்லைன்னு தோணுச்சு. அதான். அந்த ஒரு காரணந்தான். மத்தபடி இந்த கல்யாணத்தாலதான் எனக்கும் சரவணனுக்கும் எந்த உறவும் உருவாகனும்னு இல்ல. புரிஞ்சதா? அதுனால......."

"அதுனால?"

"நானும் சுந்தரும் சென்னையில என்னோட அப்பார்ட்மெண்டுல இருப்போம். எனக்கும் வேலை இருக்கு. எனக்கும் அம்மா அப்பா இருக்காங்க. அதுனால சரவணனோட வீட்டுலயும் இருக்க மாட்டேன். அப்பப்போ போய்ப் பாத்துக்கலாம். அவ்வளவுதான். ஆகையால சரவணன் மட்டும் நெதர்லாந்து கெளம்பிப் போறான். அடுத்த வாரம். தன்ன்ன்னியா!"

அந்த அடுத்த வாரம் விரைவிலேயே வந்தது. சென்னை விமான நிலையத்தில் அவனை வழியனுப்பி வைத்து விட்டு வீட்டிற்குப் போனார்கள் அனைவரும். வழக்கமாக தனிமையில் கட்டிக்கொள்ளும் சரவணனும் சந்தியாவும்..அன்று அனைவரின் முன்னிலையிலும் கட்டிக் கொண்டு பிரிந்தார்கள். சந்தியா அன்று அலுவலகத்திற்கு விடுப்பு. ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள். மாலை நான்கு மணி இருக்கும். ஒரு தொலைபேசி அழைப்பு.

"Hi Sandhya, itz Jaideep here. how are you doing?"

ஓ! அந்த சினிமாக்காரனா! "Hey Jaideep! how are you? i am doing very fine. whatz up?"

"Me fine. Today I saw you in the airport. And from that time.....something is bubbling in my stomach. how about evening? can you come to GRT grand? i am there in 2047. It will be nice if you can make it around 6."

ஏண்டா...அன்னைக்கு அந்த நடிகன் பின்னாடி ஓடுனியே...இன்னைக்கு என்ன...நான்? anyway....you are good...i know..சரி. ஒத்துக்கலாம். "Oh sure Jai. Itz treat to me....I will be there at 6. 2047, right?"
அந்த 2047ல் சரியாக ஆறு மணிக்கு இருந்தாள் சந்தியா. உள்ளே வெறும் ஷார்ட்சோடு காத்துக்கொண்டிருந்தான் ஜெய்தீப். வேறொரு இளைஞன் ஒருவனும் அங்கிருந்த சோபாவில் சாய்ந்து கொண்டு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான். சந்தியாவின் கண்கள் அவனையும் நோட்டம் விடத் தவறவில்லை. வந்த சந்தியாவைக் கட்டி அணைத்து முத்தமிட்டு வரவேற்றான் ஜெய். "Hey Sandhya...meet my friend sukh. Please have a small talk. I will take bath and come fast." குளியலறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டான் ஜெய்.

சுக்கின் விரல் சந்தியாவெங்கும் ஓடி....எவைகளையெல்லாம் களைய வேண்டுமோ...அவைகளையெல்லாம் களைந்தன. சந்தியாவிற்கு மட்டும் களையெடுக்கத் தெரியாதா என்ன? உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்தார். வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்தார். விழலுக்கும் நீர் பாய்ச்சி மாய மாட்டார்.

"வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே" சந்தியாவின் அலைபேசி பாடியது. எரிச்சல். "Wait Sukh. let me check whoze that?" அவசரமாக அலைபேசியை எடுத்தாள், "ஹலோ?"

"ஹே சந்தி! சரவணன் பேசுறேன். எப்படி இருக்க. இப்பதான் வந்து சேந்தேன்."

"One sec Sukh." சுக்கிடம் இருந்து தன்னை எடுத்துக் கொண்டு விலகினாள். "நல்லாயிருக்கோம். நீ எப்படி இருக்க? ஃபிளைட் வசதியா இருந்ததா?"

"நல்லாயிருந்தது. இப்பதான் வீட்டுக்குள்ள நொழைஞ்சேன். வழியெல்லாம் உன்னையும் சுந்தரையுந்தான் நெனச்சுக்கிட்டேயிருந்தேன். அதான் வந்ததும் கூப்டாச்சு. வீட்ல இருக்கியா? இன்னைக்கு ஆபீசுக்குப் போகலைன்னு சொன்னியே. ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?"

"ஆமா. வீட்டுலதான்..நல்லா தூங்கீட்டிருந்தேன். நீ கூப்டதும்தான் எந்திரிச்சேன். அதான் குரல்..."

"சரி. சரி. நீ தூங்கு. எனக்கும் தூக்கம் வருது. எட்டு மணிக்கு ஃபோன் பண்ணு. சரியா? Take care. Bye."

அலைபேசியை கையில் வைத்துக்கொண்டு யோசித்தாள்.

"Whoz that Sandhya? What are you contemplating?" எழுந்து வந்து சந்தியாவோடு உரசினான் சுக்.

குளித்து முடித்திருந்த ஜெய்தீப் குளியலறையிருந்து வெளியே வந்தான். "hey! what happened? I was expecting a visual treat 'when i come out. I opened the door expecting you both in action...but!"
"Hey Jai. We started. But Sandhya got a call and she in to thoughts. What happened Sandhya?" வாயால்தான் கேட்டான் சுக். ஆனால் கையும் பேசியது.

"From home. Some problem. Need to go immediately." ஏதோ யோசனையோடு சொன்னாள்.

"What? leaving now? just another 10 minutes Sandhya? please......." சுக் கெஞ்சினான்.

"No Sukh. I have to. something serious....now I really cant. Please understand. Anyway Jai is here. You still have option...I will join tomorrow." சுக்கிடம் இருந்து விடுவித்துக் கொண்டு உடைகளை மாட்டிக் கொண்டு கிளம்பினாள். அணைத்து முத்தமிட்டு வழி அனுப்பினார்கள். ஆனால் வரும் பொழுது சந்தியாவின் அணைப்பிலிருந்த இறுக்கம் இப்பொழுது இல்லாமல் இருந்தது அவர்களால் உணர முடிந்தது.

அன்புடன்,
கோ.இராகவன்

மனோஜ்
20-03-2007, 07:38 AM
கதைக்கு கதைநன்றாக இருந்தது அவ்வளவு தான் என் கருத்து
மத்தபடி தமிழ்நாட்டில் சத்தியா பொன்ற ஆட்கள் இருப்பது குடாது

ஆதவா
20-03-2007, 08:05 AM
நண்பரே இரவு படித்து விடுகிறேன்... எல்லாவற்றையும்.. (சின்ன வேண்டுகோள். எல்லா பாகத்தையும் ஒன்றிணைக்க முடியுமா?) இறுதி பாகத்திற்காகத்தான் காத்திருந்தேன்..
மன்னிக்க.. இடையிடையே படித்தால் எனக்கு மறந்து போய்விடும்... அதனால்தான் பகுதியாக வந்தபோது படிக்கவில்லை.

மதி
20-03-2007, 08:35 AM
படித்து முடித்து விட்டேன்..
புரிந்தது போல் புரியாதவற்றுக்கும்
புரியாதது போல் புரிந்தவற்றுக்கும்
ஏதாவது அணியுண்டா..??

கடைசியில் எத்தகைய உணர்வால் அவள் உந்தப்பட்டாள் என்பது ராகவருக்கே வெளிச்சம்...

சரி..எல்லோரும் கருத்துக்களை கொட்ட ஆரம்பியுங்க...பிறகு வந்து கலந்துக்கறேன்.

guna
20-03-2007, 08:45 AM
சந்தியா மாறிட்டாங்க, சரவணன்?
இந்த மாற்றம் பெண்மையின் இயல்பா? இயலாமையா?
சந்தியா மாறாமலே இருந்து இருந்தா?

இப்படி சில கேள்விகள் மனசுக்குள்ள வந்ததாளும், நீங்க கதை சொன்ன விதம் ரொம்பவும் அழகா இருந்தது ராகவன் சார், இந்த கதையின் கரு மிகவும் complicate ஆனது, உங்க வார்தைகள்'ல சின்ன தவறு வந்து இருந்தாலும், முகம் சுளிக்க வைத்து இருக்கும்.ஆனால், அப்படி முகம் சுளிக்க வைகாமல் கதை சொன்னதுக்கு, வாழ்த்துக்கள் ராகவன் சார்.

gragavan
20-03-2007, 08:51 AM
கதைக்கு கதைநன்றாக இருந்தது அவ்வளவு தான் என் கருத்து
மத்தபடி தமிழ்நாட்டில் சத்தியா பொன்ற ஆட்கள் இருப்பது குடாது
மனோஜ், அப்படி யாரேனும் ஏற்கனவே இருந்தால் என்ன செய்யப் போகின்றீர்கள் மனோஜ் :-) விளையாட்டிற்குக் கேட்டேன். வினையாகக் கொள்ள வேண்டாம்.

gragavan
20-03-2007, 08:51 AM
நண்பரே இரவு படித்து விடுகிறேன்... எல்லாவற்றையும்.. (சின்ன வேண்டுகோள். எல்லா பாகத்தையும் ஒன்றிணைக்க முடியுமா?) இறுதி பாகத்திற்காகத்தான் காத்திருந்தேன்..
மன்னிக்க.. இடையிடையே படித்தால் எனக்கு மறந்து போய்விடும்... அதனால்தான் பகுதியாக வந்தபோது படிக்கவில்லை.
தொகுக்க முயற்சிக்கிறேன் ஆதவா. தொகுத்தால் அதை இங்கே கொடுக்கவும் முயற்சிக்கிறேன்.

gragavan
20-03-2007, 08:54 AM
படித்து முடித்து விட்டேன்..
புரிந்தது போல் புரியாதவற்றுக்கும்
புரியாதது போல் புரிந்தவற்றுக்கும்
ஏதாவது அணியுண்டா..??கள்ளியிலும்பாலணியா இருக்குமோ? :ohmy:

கடைசியில் எத்தகைய உணர்வால் அவள் உந்தப்பட்டாள் என்பது ராகவருக்கே வெளிச்சம்...
எல்லா உணர்வுகளையும் எழுத்தில் கொண்டு வர முடியாது மதி. அதை அவரவர் செயல்களால்தான் சொல்ல முடியும். அதை வைத்து நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும்.

சரி..எல்லோரும் கருத்துக்களை கொட்ட ஆரம்பியுங்க...பிறகு வந்து கலந்துக்கறேன்.
நானும் காத்திருக்கிறேன். வாசகர் கருத்துகளைத் தெரிந்து கொண்டு. நான் சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன்.

gragavan
20-03-2007, 08:56 AM
சந்தியா மாறிட்டாங்க, சரவணன்?
இந்த மாற்றம் பெண்மையின் இயல்பா? இயலாமையா?
சந்தியா மாறாமலே இருந்து இருந்தா?

இப்படி சில கேள்விகள் மனசுக்குள்ள வந்ததாளும், நீங்க கதை சொன்ன விதம் ரொம்பவும் அழகா இருந்தது ராகவன் சார், இந்த கதையின் கரு மிகவும் complicate ஆனது, உங்க வார்தைகள்'ல சின்ன தவறு வந்து இருந்தாலும், முகம் சுளிக்க வைத்து இருக்கும்.ஆனால், அப்படி முகம் சுளிக்க வைகாமல் கதை சொன்னதுக்கு, வாழ்த்துக்கள் ராகவன் சார்.

நன்றி குணா. எந்த ஒரு கதைக்கும் பல முடிவுகளைச் சொல்லலாம். இது ஒரு முடிவு. இதற்கு வேறெதும் முடிவு எதிர்பார்த்தீர்களா?

மதி
20-03-2007, 09:11 AM
எல்லா உணர்வுகளையும் எழுத்தில் கொண்டு வர முடியாது மதி. அதை அவரவர் செயல்களால்தான் சொல்ல முடியும். அதை வைத்து நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும்.
உண்மை தான். சில உறவுகள் பற்றிய நம் காரசாரமான விமர்சனங்களை வெளியில் இருந்து நாம் சொன்னாலும், உறவுக்குட்படும் போது தான் அதன் முழுபரிமாண தாக்கங்கள் உணர முடியும்.

மனோஜ்
20-03-2007, 09:27 AM
மனோஜ், அப்படி யாரேனும் ஏற்கனவே இருந்தால் என்ன செய்யப் போகின்றீர்கள் மனோஜ் :-) விளையாட்டிற்குக் கேட்டேன். வினையாகக் கொள்ள வேண்டாம்.
விளையாட்டிற்கும் இதை அனுமதிக்க மனம் இல்லை ராகவன் அவர்களே
திருமணத்திற்கு முன் தவறு நேர்ந்தாலும் ஆனால் திருமணத்திற்கு பின் சத்தியா செய்தது தவறு என்று கூறுகிறோன்

SathishVijayaraghavan
20-03-2007, 10:06 AM
விளையாட்டிற்கும் இதை அனுமதிக்க மனம் இல்லை ராகவன் அவர்களே
திருமணத்திற்கு முன் தவறு நேர்ந்தாலும் ஆனால் திருமணத்திற்கு பின் சத்தியா செய்தது தவறு என்று கூறுகிறோன்

திருமணத்திற்கு முன்னோ பின்னோ... எப்படிப் பாரித்தாலும் இதில் கசப்புனர்ச்சித்தான் மேலோங்கி இருக்கிரது என்று நான் நினைக்கிரேன்... இது தமிழ் கலாச்சாரத்திற்கு உதவாது இல்லையா???
உங்கள் கருத்து???

pradeepkt
21-03-2007, 05:31 AM
ம்ம்ம்ம் நான் எதிர்பார்த்ததுதான் இது...
உணர்வுகளுக்குப் பெண் ஆண் என்று ஒன்று கிடையாது. உணர்வு உணர்வுதான்... உள்ளமிருக்கும் எவருக்கும் உணரும் தன்மை உண்டு. உடலிருக்கும் எவருக்கும் உணரும் தன்மை உண்டு.

இதில் சந்தியா இவர்களை வேண்டாம் என்றதற்கு அவளது சுதந்திரமோ கலியாண வாழ்க்கையோ காரணமில்லை. எனக்கு நிறைவு தந்த முடிவு இது. எப்போதுமே மகிழ்ச்சி கொள்ளும் முடிவுகள் -- குறிப்பாக வாழ்க்கையின் பால் நம்பிக்கை கொள்ளும் முடிவுகளை வரவேற்பவன் என்ற முறையில் வாழ்த்துகிறேன்.

மனிதன் ஒரு சமுதாய விலங்கு. தனித்துதான் வாழ வேண்டுமெனில் எப்படியும் வாழலாம் எங்கும் வாழலாம். ஒரு துணை தேவையெனும் கோட்பாடு சிம்பான்ஸிகளிடமே இருக்கும் போது அவர்களை விட ஒரு படி மேலான சந்தியாவிடம் இருந்தது எவ்விதத்திலும் ஆச்சரியமில்லை. முக்கியமாக சுதந்திரம் என்பது நமது வாழ்க்கையில் ஒரு முட் கட்டு இருந்தால் நீக்கப் பயன்பட வேண்டுமே தவிர பூக்கட்டு இருந்தால் கசக்க முயலக் கூடாது. அதுவே சந்தியாவின் முடிவுக்குக் காரணம். வெட்டி வீறாப்பு எங்குமே உதவாது.

சந்தியாவுக்கும் சரவணனுக்கும் குட்டி சுந்தருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கதையின் போக்கு என்று பார்த்தால் ராகவன் தொடுதல் கதையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவரது (நான் வாசித்த) முதல் கதை (தயிர்ச்சோறு) யில் இருந்து அவர் கடந்து வந்த பாதையைக் கணிக்கும் போது இக்கதை சாதாரணமே...

mukilan
21-03-2007, 06:59 AM
கதையின் முடிவைப் பற்றிய எதிர்பார்ப்பு எனக்கு சற்று வேறுவிதமாக இருந்தது. ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு கடைசி இரு பகுதிகளில் குறைந்து விட்டது போல் பட்டது. எனக்கு மட்டுமா அல்லது அனைவருக்குமா எனத் தெரியவில்லை. எனக்கு ராகவனிடம் எதிர்பார்ப்பு அதிகம் என்பதாலோ என்னவோ? சரி இதை விடுங்கள். ஏற்கனவே நம் மன்றத்தில் விவாதித்திருந்தாலும் சரவணன், சந்தியா கதாபாத்திரங்கள் இன்றைய சமுதாயத்தில் இருந்தாலும் இத்தகைய வாழ்க்கை முறை எத்துணை பேருக்கு சம்மதம்?

pradeepkt
21-03-2007, 07:28 AM

அடுத்தவரைத் துன்புறுத்தாத தனிமனிதச் சுதந்திரம் எனக்கு எப்போதும் சம்மதம்...

திருமணத்திற்குப் பிறகும் கூட... ஆயின் இருமனம் திருமணத்தில் இணையும்போது இருவருமே ஒருவராகக் கருதப்பட்டு மேற்கண்ட வார்த்தைகளைக் கருத்தில் கொள்ளுங்கள்...

mukilan
21-03-2007, 07:52 AM
பிரதீப் அடுத்தவரைத் துன்புறுத்தாத என்று சொல்லும்பொழுதில் அவ்வாறு செய்பவர் தன் எதிர்கால வாழ்க்கைத் துணையின் நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்கிறார் என்பதுதானே உண்மை அல்லது திருமணத்திற்குப் பின் தான் செய்த தகிடுதத்தங்களை எல்லாம் சொல்லி ஒப்புதல் பெற்றுக்கொள்வாரா?மேலை நாடுகளில் கூட விரும்பியவர் உடன் எல்லாம் உடன்போக்கு என்பது ஒவ்வாத செயல்தான். எப்படியோ இத்த்கைய உறவுகளில் யாரோ ஒருவர் மனம் புண்படுகிறது என்பதே நிதர்சனம்.

pradeepkt
21-03-2007, 08:43 AM

ஓகே, இப்போது நீங்கள் திருமணத்திற்கு முன் செய்தவற்றைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
இந்நிலையில் முதலில் அனைத்தையும் சொல்லி அடுத்தவர் மனம் புண்படாது என்று அறிந்தால் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும். எதிர்கால வாழ்க்கைத் துணையாக மனம் புண்படாத ஒருவர் கிடைக்காவிடில் அதுவரை தனியாகவே தன் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும். அது விதி... நல்லூழ்!

gragavan
21-03-2007, 12:37 PM
பிரதீப் அடுத்தவரைத் துன்புறுத்தாத என்று சொல்லும்பொழுதில் அவ்வாறு செய்பவர் தன் எதிர்கால வாழ்க்கைத் துணையின் நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்கிறார் என்பதுதானே உண்மை அல்லது திருமணத்திற்குப் பின் தான் செய்த தகிடுதத்தங்களை எல்லாம் சொல்லி ஒப்புதல் பெற்றுக்கொள்வாரா?மேலை நாடுகளில் கூட விரும்பியவர் உடன் எல்லாம் உடன்போக்கு என்பது ஒவ்வாத செயல்தான். எப்படியோ இத்த்கைய உறவுகளில் யாரோ ஒருவர் மனம் புண்படுகிறது என்பதே நிதர்சனம்.
முகிலன்...இந்தக் கதையை வைத்துக் கொண்டு பேசுகிறேன். இங்கு சந்தியாவின் செயல்கள் சரவணனுக்குத் தெரியாமல் இல்லை. சரவணனும் சும்மாயிருக்கவில்லை. சந்தியா செய்த அத்தனையையும் சரவணனும் செய்தான். ஆனால் அவன் மீதான விமர்சனங்கள் குறைவு. என்ன ஒரு முரண்பாடு பார்த்தீர்களா?

இந்த விஷயத்தில் திருமணத்திற்குப் பிறகு சுதந்திரம் உண்டு என்று சரவணன் ஒப்புக்கொண்ட பிறகுதானே சந்தியா திருமணத்திற்கே ஒப்புக்கொண்டாள். அப்படியிருக்க அவளது செயல் அவனுக்கு ஒப்புதல் என்றுதானே கொள்ள வேண்டும். ஆனால்....அதை அப்படியே நினைத்து சந்தியா சரவணனிடம் நான் ஜெய்யோடு படுத்தேன் சுக்கோடு விளையாண்டேன் என்று போனில் சொல்லியிருந்தால் சரவணன் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பான். ஏனோ ஒன்று அவனை இடித்திருக்கும். அது சந்தியாவையும் இடித்ததால்தான் அவளும் கிளம்பி விட்டாள்.

மற்றபடி கதையின் தொடக்கத்திலிருந்து சந்தியா யாரையும் ஏமாற்றவில்லை என்பது என் கருத்து. குழந்தை பிறந்ததைக் கூடச் சொல்ல முடியாது. பாதுகாப்பு இருக்கிறதா இல்லையா என்று கூட சோதித்துப் பார்க்கும் மனநிலல சரவணனுக்கு இல்லை. சந்தியா பலருடன் உறவு வைத்தாள் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் யாரையும் ஏமாற்றவில்லை என்றே நம்புகிறேன்.

ஆதவா
21-03-2007, 02:48 PM
ராகவன் அவர்களுக்கு...........

கதை முழுவதுமாய் படித்தேன். தனித்தனியே படித்தால் மறந்து போகும் குணம் எனக்கு... ஆகையால் எல்லாவற்றையும் தனியே தொடுத்து பின்னர் படித்தேன்.

கதையை கொண்டு போகும் போக்கு, மொழிகள், புரிதல், யதார்த்தம் ஆகிய எல்லாம் சரியான அளவில் கலந்து இருந்தது.. அதற்கு ஒரு சபாஷ்.

கதை: நாயகி நாயகனை சற்றே ஏமாற்றி குழந்தை பெற்று வளர்த்து பின் அவனையே திருமணம் செய்து முன்னர் இருந்த வாழ்க்கையை மீண்டும் தொடங்க எத்தனிக்கையில் மனம் புரளுகிறது............. இதுதானே கதை........

தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல எந்த ஒரு நாட்டிற்கும் ஒத்துவராத யதார்த்தம்.. இன்று இதுபோல் நடப்பதால் நாமும் நடக்கலாமா? உங்கள் கதையின் இடையிலே சில வரிகள் ...

லஞ்சம் நாம் வாங்குவதால் அது தவறென்று தெரியாமல் போகிறது என்கிறீர். விபச்சாரம் ஒரு பெண் செய்தால் அது தவறு அதுவே எல்லா பெண்களும் செய்தால் தவறல்ல என்று எடுத்துக்கொள்ள முடியுமா?...

தவறு என்பது மனதைக் காயப்படுத்துவது.. அல்லது மனசாட்சிபடி நடக்காதிருப்பது./.. மனது இவனோடு படு என்று சொன்னால் அது தவறல்ல என்று கொள்ள முடியாது.......................

கதையில் புதுமைப் பெண் என்ற நிலை சற்று இழையோடுகிறது என்றாலும் விபச்சாரத்தைத் தவிர்த்திருந்தால் என் மனம் சிறந்த கதை என்று ஒத்திருக்கும்........ அதேசமயம் இதுபோல பெண்களும் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் பற்றிய கதை என்று எடுத்துக்கொண்டால் கதை நன்று என்று மனம் சொல்லும்..

உங்களின் இரு கதைகள் நான் படித்தேன். ஒன்று தருமனும் தருமமும். இரண்டாவதாக இது.......... முன்னது பற்றி விமர்சனம் செய்ய இருந்தேன். பின்பு அதைப்பற்றி பதிவு போடுகிறேன். ஆனாலும் கருத்து சொல்ல எனக்கு உரிமை உண்டு. மனக்கீறல் செய்ய எனக்கு உரிமை இல்லை.. செய்யவும் கூடாது.

இரண்டு கதைகளிலும் விபச்சாரத்தைக் காட்டி இருக்கிறீர்கள்.. நான் இதுவரை எந்த ஒரு நல்ல கதையும் விபச்சாரம் ஒட்டி படித்ததில்லை என்பதால் புரிதல் எனக்கு அனுபவமில்லாமல் இருக்கிறது. தவறா அல்லது தவறில்லையா என்று தர்க்கம் பண்ண நானென்ன புலமை கொண்ட கவியா? தீர்க்கத் தரசியா? இரண்டுமில்லை.

இது தவறல்ல என்று உங்களால் சொல்ல முடியுமா? இன்றைக்கு இருப்பவர்கள் இம்மாதிரி இருந்தால் நாமும் இம் மாதிரியா? இருக்கலாமா? கூடாதா? இங்கே எல்லாரும் பாராட்டி இருப்பார்கள்... உங்கள் நடை மொழி எல்லாம் அழகுதான்.

மீண்டும் சொல்கிறேன் கதைப்படி கருத்து பாருங்கள்........

gragavan
21-03-2007, 05:34 PM
ஆதவா, முதலில் இது ஒரு கதை. இதில் வருகின்ற கருத்து கதை மாந்தர் கருத்து. ஒவ்வொரு பாத்திரம் தன்னுடைய பங்கை நியாயப்படுத்துகிறது. அவர்கள் குரலுக்கு நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அவ்வளவே. விபச்சாரம் என்று இங்கு எங்கு வருகிறது? அவள் பலருடன் உறவு வைத்திருக்கிறாள். அவள் மட்டுமா? அவளுடைய நண்பனும் பிறகு கணவனும் ஆனவனுந்தான். ஆக சந்தியா செய்த அனைத்தையும் அவனும் செய்திருக்கிறான். ஆனால் அது ஒரு பெரிய விடயமாகவே தோன்றவில்லை. ஆனால் சந்தியாதான் தவறு செய்தவளாக எல்லாராலும் பார்க்கப்படுகிறாள்.

சுதந்திரம் கொடுத்தது சரவணன். அதற்குப் பிறகு திருமணம். திருமணத்திற்குப் பிறகும் கணவன் கொடுத்த சுதந்திரத்தைப் பயன்படுத்துகிறாள். ஆனால் அவன் குரலைக் கேட்ட பொழுது ஏதோ ஒன்று உறுத்த அவள் வெளியே கிளம்பிப் போகிறாள். இதுதான் கதையின் முடிவு. சரவணனும் நன்றாக ஆடியவந்தான். ஆனால் அவனுக்கும் மனைவி குழந்தை என்று ஆனபிறகு அவர்களைப் பிரிவது கடினமாக இருக்கிறது. ஆகையால்தான் ஊருக்குச் சேர்ந்ததும் தொலைபேசியில் அழைக்கிறான். அந்த அழைப்புதான் சந்தியாவின் மனதில் புதிய எண்ணத்தை உண்டாக்குகிறது. எதற்கு வந்தாளோ..அதை முடிக்காமல் வெளியேறுகிறாள். இப்படித்தான் முடித்திருக்கிறேன்.

தருமனும் தருமமும் வேறு வகை. ஒரு ஆண் என்பவன் பல திருமணம் செய்வதற்கு பண்பாடு, மதம், ஜாதி என்று பல உதவிகள் உள்ளன. ஆனால் ஒரு பெண் இன்னொருவனோடு புணர்வது பெரும்பாவமாக இருக்கிறது. அதைப் பெண்ணீயப் பார்வையில் எழுதியது தருமனின் தருமமும். நான் சொல்ல வருவதெல்லாம்...ஒரு பெண்ணோ..ஆணோ..எப்படி வாழ விரும்புகிறார்களோ...அப்படி விடுங்கள். அதன் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு. உங்களளப் போலத்தான் அடுத்தவர் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். அதற்கு உங்களுக்கு உரிமையில்லை. இதுதான் என் கருத்து.

ஆதவா
21-03-2007, 05:50 PM
ராகவன் என்னுடைய விமர்சனமும் உங்களுடைய கருத்துக்களும் ஒன்றுதான்... அதை பிறகு விளக்கி சொல்கிறேன்..

ஆதவா
21-03-2007, 08:30 PM
ராகவன் அவர்களே!! பதிலுக்கு நன்றி........

நன்றாக படித்துப்பார்த்தீர்களென்றால் நான் சொன்னதும் நீங்கள் சொன்னதும் ஒன்றேதான்.. நான் சுற்றி வளைத்து மறைமுகமாக சொல்லியிருக்கிறேன். நீங்கள் நேரிடையாக சொல்லியிருக்கிறீர்கள்.. (சிறந்த பதிவாளருக்கு இதெல்லாம் சாதரணம்)

ஒன்று மட்டும் வித்தியாசம்... விபச்சாரம் என்பது இங்கே எங்கு வருகிறது என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இங்கே ஒரு பெண் பலரை புணருவது என்பது என் (குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் நான்) மொழியில் விபச்சாரம் எனப் படுகிறது. நீங்கள் உயர நின்று பார்க்கிறீர்கள் நானோ தரையிலேயே நிற்கிறேன்.
சரி நான் எழுதியதிற்கு வருவோம்..மீண்டும் சொல்கிறேன் கதைப்படி கருத்து பாருங்கள்........

இது நான் முன்பு இட்ட பதிவில் இருந்த வரிகள்.. நான் எழுதியவைகள் கதைப் படி எழுதப்பட்ட கருத்துக்கள்.. அதாவது என்னுடைய இன்னொரு மனநிலையில் எழுதப்பட்ட கருத்துக்கள்... இன்னொரு மனநிலையா என்று கேட்பது எனக்குத் தெரிகிறது..

கதையில் புதுமைப் பெண் என்ற நிலை சற்று இழையோடுகிறது என்றாலும் விபச்சாரத்தைத் தவிர்த்திருந்தால் என் மனம் சிறந்த கதை என்று ஒத்திருக்கும்........ அதேசமயம் இதுபோல பெண்களும் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் பற்றிய கதை என்று எடுத்துக்கொண்டால் கதை நன்று என்று மனம் சொல்லும்..

இதுதான் அந்த இன்னொரு மனநிலை.. (இப்பொழுதெல்லாம் ) பொதுவாக நான் கதை அல்லது கவிதை என்று எடுத்துக்கொண்டால் இருவேறு நிலைகளில் பல்வேறு அர்த்தங்களை யோசிப்பேன். இரண்டாவதாக நான் எழுதிய அர்த்தங்களை கவனியுங்கள். அதுதான் யதார்த்தம்... முதல் நிலை என் பக்குவமின்மை.

தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல எந்த ஒரு நாட்டிற்கும் ஒத்துவராத யதார்த்தம்.. இன்று இதுபோல் நடப்பதால் நாமும் நடக்கலாமா? உங்கள் கதையின் இடையிலே சில வரிகள் ...

லஞ்சம் நாம் வாங்குவதால் அது தவறென்று தெரியாமல் போகிறது என்கிறீர். விபச்சாரம் ஒரு பெண் செய்தால் அது தவறு அதுவே எல்லா பெண்களும் செய்தால் தவறல்ல என்று எடுத்துக்கொள்ள முடியுமா?...

நான் உங்களிடம் கேட்ட கேள்விகளே !!! கதையை தவறாக படித்துவிட்டதாக எண்ணவேண்டாம்.

உங்களின் இரு கதைகள் நான் படித்தேன். ஒன்று தருமனும் தருமமும். இரண்டாவதாக இது.......... முன்னது பற்றி விமர்சனம் செய்ய இருந்தேன். பின்பு அதைப்பற்றி பதிவு போடுகிறேன். ஆனாலும் கருத்து சொல்ல எனக்கு உரிமை உண்டு. மனக்கீறல் செய்ய எனக்கு உரிமை இல்லை.. செய்யவும் கூடாது.

தருமனின் தருமம் கதை பற்றி பிற்பாடு எழுதுகிறேன்... அல்லது எழுதாமல் போவதும் நல்லது என்று நினைக்கிறேன்...இரண்டு கதைகளிலும் விபச்சாரத்தைக் காட்டி இருக்கிறீர்கள்.. நான் இதுவரை எந்த ஒரு நல்ல கதையும் விபச்சாரம் ஒட்டி படித்ததில்லை என்பதால் புரிதல் எனக்கு அனுபவமில்லாமல் இருக்கிறது. தவறா அல்லது தவறில்லையா என்று தர்க்கம் பண்ண நானென்ன புலமை கொண்ட கவியா? தீர்க்கத் தரசியா? இரண்டுமில்லை.

இதை கவனித்தீர்களா? அனுபவமின்மை காரணமாக ஏற்பட்ட கோளாறுகள் இவை.. உங்கள் கதை முழுக்க புரிந்து எழுதியதுதான் இது.. ஆனால் நான் எழுதியது சற்றே நெகட்டிவாகப் போனதுதான் என் தவறு..

கருத்தை திணிக்க இது கவிதை அல்ல... வாழ்வியலில் நிகழ்வுகள்... இன்றைய சமுதாயத்தில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள்.. அவ்வளவு ஏன் இதுவே உண்மை சம்பவமாக இருக்கலாம்.. அதை நீங்கள் எழுதாவிடில் இன்னொருவர் எழுதுவார் அல்லவா? ஆகமொத்தம் அதுவும் கதையாகத் தான் வரும்.. கதையில் தவறொன்றுமில்லை..

கற்பனையாக எடுத்துக்கொண்ட அதே என் மனம் தான் அதை நிஜமாக நினைத்துக்கொண்டு கேள்விகள் எழுப்பிற்று.. உங்கள் கதை வாயிலாக கேள்விகள் கேட்டேன் அவ்வளவுதான்...இது தவறல்ல என்று உங்களால் சொல்ல முடியுமா? இன்றைக்கு இருப்பவர்கள் இம்மாதிரி இருந்தால் நாமும் இம் மாதிரியா? இருக்கலாமா? கூடாதா?

இவைகள் எல்லாம் கேள்விகள்... கதையை புரியா தன்மையல்ல. நீங்கள் சொன்ன கதையில் தவறு இருக்கிறது என்பதுமாதிரியான கேள்விகள் அல்ல.. நான் தெரிந்துகொள்ளவேண்டியவைகள்..

ஒரு விபச்சாரியின் (சாரி! இதற்கு என்னால் இப்படித்தான் பதில் தரமுடியும்) கதையை துணிவோடு அதேசமயம் சில இடங்களில் முகம் சுளிக்கா தன்மையோடு எழுதியமைக்கு பாராட்டுக்கள்...

நன்றி

ஆதவன்..

ஓவியா
21-03-2007, 11:50 PM
வணக்கம் ராகவன்,

தங்களின் கள்ளியிலும் பால் மிகவும் அருமையான கரு.

உலகத்தில் அனுதினமும், அனைத்து நாடுகளிலும் நடக்கும் ஒரு விசயம் இந்த கரு, இது போன்ற கதைகள் அங்கும் இங்கும் நம்மைச் சுற்றியே நம் கண்களுக்கு தெரியாமல் நடந்துக்கொண்டுதான் இருகின்றன.

நம் சமுதாயம் இதனை எற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணம் இப்படியே சென்றால் கலாச்சாரம் கெட்டுப் போகும், வாழ்வு சீரழியும், நோய் பரவும் என்று வாதாடுவார்கள். இது 100க்கு 100% உண்மையே. நானும் வாதாடுவேன். காரணம் இன்றய சமுதாயக் கேடு நாளை என் வீட்டில்......இன்னும் 50 ஆண்டுகள் கழித்து என் மக்களும் அந்த சமுதாயத்தில் ஒரு துளிதானே.

உ.த.
இங்கு 500 மாணவர்கள் தங்கும் அறையில் ஆணும் பெண்ணும் திருட்டுதனமாக கலந்து (ஒறே அறையில்) 700< தங்குவது அனுதினமும் நான் காணும் அன்றாட காட்சி. இதில் என்ன சுவாரஸ்யமான விசயம் என்றால், 70% ஆசியா நாட்டு மாணவர்கள். அதில் முக்கியமாக இந்தியாவும் அடங்கும். (நம் மக்கள் எங்கு புரிந்தாலும் அது தவருதானே???) அசந்து போகிறேன் இந்த பத்தாம் பசாலிகதைக்கு வருவோம்

இந்த கதையை பொருத்தவரை,
இது ஒரு உண்மை சம்பம் என்றால் அதனை அப்படியே உள் வாங்கிக் கொள்கிறேன்........
அந்த தம்பதியினர் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வாழ்த்துக்கள்

கற்பனை என்றால் சமுதாய சிந்தனையோடு இப்படி நடக்கக்கூடாது என்று எண்ணிக் கொள்கிறேன்.
இருப்பினும் இப்படி நடக்கும் சம்பவங்களை இன்றும் நான் பார்த்துக் கொண்டுதான் கம்முனு இருக்கின்றேன்.

பெண் என்பவள் அடங்கி, ஒடுங்கி, பயந்து வாழ வேண்டும் என்று இல்லை, ஆனால் ஒரு தமிழ் பெண் (எ)இப்படி வாழவேண்டும் என்று சில கூற்றுகள் உள்ளனவே அதை சரியாக பின் பற்றி வீட்டுக்கு பெருமை சேர்ப்பதே ஒரு சராசரி தமிழ் பெண்டின் முதற்க்கடமை. :medium-smiley-029: சந்தியா அதில்..........

(நான் நினைக்கிறேன்) சந்தியா தூரநோக்கு சிந்தனையாலராக செய்த தவறே அவளை மாசு படிந்தவளாக காட்டியுள்ளது. முக்கியமாக பெண்களுக்கும் காமம் இருக்கு ஆசை வரும்பொழுது நாங்களும் யாருடனும் செல்லலாம் என்ற அவ்வளின் எண்ணம். தான் யாருடன் புணர்வது என்பது ஒரு சரசரி மனிதனின் சுய விருப்பம். ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தில் மற்றவர்கள் முக்கை நுழைக்க அனுமைதி இல்லை என்று நினைத்தாளோ என்னவோ!!! :icon_wacko:

திருமணமான சில ஆண்/பெண்களின் வாழ்விலும் (சந்தியா/சரவணன்) இது போல் விசயங்கள் திரைமறைவில் இன்னமும் நாடந்துக் கொண்டுதான் இருகின்றன........
இன்று.. இப்பொழுது.. இந்த....யுகத்திலும்.......எங்கோ ஆதாவும் ...ஏவாளும் போல'னு பாட்டு ஓடுதே

கடைசி பாகம் மிகவும் சிறப்பு,
(சந்தியா) எந்த பெண்ணும் மாறுவாள், கனவனின் அன்பில் அரவணைப்பில் காமம் கால் தூசிக்கு சமம்,
(சரவணன்) கல்யாணம் ஒரு அன்பு விளங்கு, என்பதனை மிகவும் சிறப்பாக காட்டியுள்ளீர்கள்.....சபாஷ்

மிகவும் தைரியசாலீங்க நீங்க,
இப்படியெல்லாம் கருவ கண்டுப்புடிச்சு அதையும் நம்ப :waffen093: மக்க்க்க்க்க்க்க்களிடம் கதை கதையா கிலுகிலுப்போட எழூதி போடுறீங்களே.....
திரைக்கு பின் செய்தியை கண்களுக்கு முன் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள்....பாராட்டுகிறேன்

கொசுரு: இந்த கதையை படித்த அப்பாக்களும் அண்ணன்களும் தம்பிகளும்...இனி வீட்டு பெண்களின் மேல் அதிகம் அக்கரை கொள்வார்களோ.!!!!...:icon_wink1: :icon_08:

அறிஞர்
21-03-2007, 11:54 PM
வாவ்.. ஓவியாவின் நீண்ட கருத்து.... அருமை...

ராகவனுக்கு அபிமான ரசிகை இங்கு இருக்கிறார்....

தொடருங்கள்.. ராகவா....

ஓவியா
22-03-2007, 12:10 AM
வாவ்.. ஓவியாவின் நீண்ட கருத்து.... அருமை...

ராகவனுக்கு அபிமான ரசிகை இங்கு இருக்கிறார்....

தொடருங்கள்.. ராகவா....

அதெல்லாம் இல்லை சார்,

ராகவன்
ஒரு சிறந்த எழுத்தாளர். இது மாற்ற முடியாத கருத்து. பாராட்டினேன்.

ஆஆ ஆ ஆ ஆ ஆமாம் ஆமாம் ஆமாம்
கோரஸ் பாடுவது : மம்மு, பெஞ்சு, பிரதீப் :ernaehrung004:
நான்
காய்க்கும் மரம் கல்லடிபடுமாம் அந்த கேஸ்....
இன்று என் மேயில் போக்ஸ் நிரையுமோ!!!!

pradeepkt
22-03-2007, 06:00 AM

எதுக்கு இந்த பில்டப்பு???? :icon_wink1:

pradeepkt
22-03-2007, 06:16 AM
ஒரு விபச்சாரியின் (சாரி! இதற்கு என்னால் இப்படித்தான் பதில் தரமுடியும்) கதையை துணிவோடு அதேசமயம் சில இடங்களில் முகம் சுளிக்கா தன்மையோடு எழுதியமைக்கு பாராட்டுக்கள்...

நன்றி

ஆதவன்..

விபசாரம் என்பதற்கு தமிழகராதியில் இருக்கும் அர்த்தம்
1. விலைமாதுவுடன் கொள்ளும் உறவு
2. திருமணமான ஒருவர் தனது கணவன்/மனைவி அல்லாத ஒருவருடன் உறவு கொள்ளுதல் (prostitution, adultery)

ஆங்கிலப் பொருள்களையும் பார்த்து விடலாம்
prostitution:
Offering sexual intercourse for pay

adultery:
Extramarital sex that willfully and maliciously interferes with marriage relations

இங்கே கவனிக்க வேண்டியது maliciously என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை!

malice:
Feeling a need to see others suffer

மேலும் விளக்கங்கள் அவசியமெனில் கேட்கவும், அல்லது சொல்லவும்!

இதில் எந்த வகையில் சந்தியா விபசாரி என்று நீ சொல்வது உத்தமம். இரண்டாவது வகை என்றால் சந்தியா அதைச் செய்வதற்கு முன்னமே திருந்தி விட்டாள். முதல் வகை எனில் எவ்வித பணப் பரிமாற்றமும் இதில் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.

மற்றும் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், விபசாரம் என்பது எப்படி இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறதோ, அதற்கு நேர்மாறாக விபசாரி என்று பெண்ணுக்கு மட்டுமே ஒரு சொல் இருக்கிறது. விபசாரன் இல்லை! இதில் நீ ராகவன் சொல்லியது போல் சரவணனைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாததும் கதையின் கரு குறித்த ஒரு நேர்மையான பார்வையில் இல்லையே???

மதி
22-03-2007, 06:29 AM
பிரதீப் சொல்வதுடன் நான் முற்றிலும் ஒத்துப்போகிறேன்..
விமர்சனங்கள் அனைத்தும் சந்தியாவை பற்றித்தான் உள்ளதே தவிர சரவணனை பற்றி இல்லையே..
இரண்டு காரணங்கள் தோன்றுகிறது...
1. கதைக்களம் முழுதும் சந்தியா என்னும் பெண்ணைச் சுற்றி பின்னப்பட்டிருப்பதால். சரவணின் அறிமுகமுமே நாலைந்து பாகங்கள் தள்ளி தான் வருகிறது. மேலும் சரவணனின் குணாதிசயங்கள் தனியே விவரிக்கப்படவில்லை, சந்தியாவை பற்றி விளக்கும்போதும் விவரிக்கும் போதும் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் படிப்போர் மனதினில் சந்தியாவின் செயல்பாடுகளும் நிலைபாடுகளும் மட்டுமே நிலைத்திருக்கக்கூடும்.
2. நம்மையும் அறியாமல் இந்த சமூகத்திலிருந்து திணிக்கப்பட்ட விசயம் - "ஒழுக்கம் பெண்மையைச் சார்ந்தது". இதைப் பற்றி மேலும் விளக்க விரும்பவில்லை.

ராகவருக்கு ஒரு வேண்டுகோள்...
இக்கதையினைப் பற்றி விவாதங்கள் காரசாரமாகப் போவதினால்..இதை ஏன் "பண்பட்டோர் பகுதிக்கு" மாற்றக்கூடாது..??

ஆதவா
22-03-2007, 07:22 AM

இது முற்றிலும் நான் நினைத்தது.... நன்றி மதி அவர்களே!.. நான் இன்னும் ஆழமாக விமர்சனம் செய்திருந்தால் சரவணன் வெளிப்பட்டிருக்க முடியும்.. அதுசரி நான் எழுதீய கருத்தே இரு மனம் கொண்டது என்பதே எனக்கு மட்டும் தெரியும்படி சுற்றி வளைத்தல்லவா எழுதியிருந்தேன்..

ஒழுக்கம் பெண்மையைச் சார்ந்தது என்று யார் சொன்னார்கள் ? அப்போ ஆணுக்கு ஒழுக்கம்?

மதி
22-03-2007, 07:29 AM

ஒழுக்கம் இருபாலருக்கும் பொருந்தும். நான் சொன்னது..விமர்சனம் சந்தியாவின் நடத்தையை மட்டுமே குறித்தற்கான காரணங்கள்..!

ஆதவா
22-03-2007, 07:36 AM
இதில் எந்த வகையில் சந்தியா விபசாரி என்று நீ சொல்வது உத்தமம். இரண்டாவது வகை என்றால் சந்தியா அதைச் செய்வதற்கு முன்னமே திருந்தி விட்டாள். முதல் வகை எனில் எவ்வித பணப் பரிமாற்றமும் இதில் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.

மற்றும் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், விபசாரம் என்பது எப்படி இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறதோ, அதற்கு நேர்மாறாக விபசாரி என்று பெண்ணுக்கு மட்டுமே ஒரு சொல் இருக்கிறது. விபசாரன் இல்லை! இதில் நீ ராகவன் சொல்லியது போல் சரவணனைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாததும் கதையின் கரு குறித்த ஒரு நேர்மையான பார்வையில் இல்லையே???

நன்றி பிரதிப் அண்ணா விளக்கத்திற்கு........ ஒன்று மட்டும் நான் மறுபடியும் சொல்கிறேன்... எனக்கு இம்மாதிரி கதைகள் படித்த அனுபவம் கிடையாது... அதேபோல் உங்கள் அளவுக்கு அறிவும் ஆற்றலும் இல்லாதவன் (இதை இதே திரியில் முன்னமே சொல்லியிருக்கிறேன்.)
நான் பார்த்தவறை வானமும் மேகமும் அங்கங்கே தெரியும் நட்சத்திரங்களும் மட்டும்தான்.. அதுதான் லோகம் என்று உணராமல் அடுத்து என்ன என்று பார்க்கத் துடிக்கும் சாதாரண மனிதன்...
நீங்கள் வான எல்லைகளைக் கடந்துவிட்டவர்கள்.. ஆகத்தான் சற்றே புரியாத சூழ்நிலை எனக்கு உண்டானது என்றாலும்...

கதைப்படி இது சரியே என்று கிட்டத்தட்ட இரண்டு பதிவுகள் போட்டிருக்கிறேன்.

எனக்குத் தெரிந்தவரை என் தமிழ் கற்றுக்கொடுத்தது

விபச்சாரி = மனதை நிர்மூலமாக்கி ஒருவனுக்கல்லாமல் மற்றவர்களிடமும் படுப்பவள்... அது காசுக்காகவோ அல்லது சுகத்துக்காகவோ அல்ல............. எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
இதைத்தான் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் கீழே

விபசாரம் என்பதற்கு தமிழகராதியில் இருக்கும் அர்த்தம்
1. விலைமாதுவுடன் கொள்ளும் உறவு
2. திருமணமான ஒருவர் தனது கணவன்/மனைவி அல்லாத ஒருவருடன் உறவு கொள்ளுதல் (prostitution, adultery)

Feeling a need to see others suffer

காசு இல்லாமல் போனால் விபச்சாரி அல்ல அதற்கு அர்த்தம் வேறு என்று நீங்கள் படித்திருந்தாலும் அது தவறுதான் என்று நான் முன்னம் சுட்டிக் காட்டியிருக்கிறேன்..

பொதுப்படையாக ஒருவள் ஒருத்தனோடு கற்பு என்பதை கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்கள் தமிழ் கிணறில் தவளையாகச் சுற்றி படித்திருந்தாலும் திடீரென, இல்லை ஆதவா விபச்சாரம் வேறு இச்சை தீர்பது வேறு என்று சொல்வது சற்று புரிவதற்கும் கால அவகாசம் வேண்டும்.........

இதுவரை நான் கண்ட Sex காசுக்காகவோ அல்லது Promotion க்காவோ தானே தவிர இச்சைக்காக என்று காணவில்லை...... அது புதிதாக இருக்கும் பட்சத்தில் என் ஒரு மனம் அதை புரிந்துகொள்ள கஷ்டப்படுகிறது...... இன்னொரு மனம் ஏற்றுக்கொள்கிறது..............

முக்கியமான விஷயம்... இது முழுக்க முழுக்க சரவணனுக்கும் பொருந்தும்.........

gragavan
24-03-2007, 05:52 PM
கருத்துகளைத் தெரிவித்துக் கதையின் பரிமாணங்களை வெளியே கொண்டு வந்துகொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

ஒரு படைப்பு எப்பொழுது வெற்றி அடைகிறது? கோடிக்கணக்கில் கொண்டு வந்து கொட்டும்பொழுது அல்ல. அது....ஒரு விவாதம்..அல்லது....எதையாவது தூண்டும் பொழுதுதான். அது நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் இருக்கலாம். அது படைப்பின் தன்மையைப் பொருத்து. அந்த வகையில் கள்ளியிலும் பாலும் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். நான் விமர்சனத்தைத் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்ற நம்பிக்கையில் கருத்துகளை மட்டும் முன்னிறுத்தி விவாதித்துக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு நன்றி பல. விவாதங்களைப் பற்றிய எனது கருத்துகளை அடுத்த பின்னூட்டத்தில் இடுகிறேன்.

மதி
24-03-2007, 05:55 PM
விரைவில் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.

gragavan
24-03-2007, 06:03 PM
கதையில் அனைவரும் குறிப்பிட்டிருப்பது...சரவணனின் பாத்திரத்தின் மனப்பாங்குகளை வெளிப்படையாகச் சொல்லவில்லை என்பது. அதற்குத் தேவையிருக்கவில்லை என்பது என் கருத்து.

ஏனென்றால்....சந்தியாவின் பாத்திரத்தை நாம் நிறைய விளக்கியிருப்பதற்குக் காரணம்...அவள் ஒரு குழந்தையைப் பெற்றது. அத்தோடு அவளைப் பற்றிச் சொல்லும் பொழுதெல்லாம் சரவணனைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்திருக்கிறோம். அதுவுமில்லாமல் சரவணனுக்கும் சந்தியாவுக்கும் ஒரே வித்தியாம்...பால் வித்தியாசம் மட்டுமே என்றும் சொல்லியாகி விட்டது. ஆக சரவணனின் கருத்துகளும் சந்தியாவின் கருத்துகளும்..செயல்பாடுகளும்..ஒரே விதந்தான். ஆனால் குழந்தை பெற்றுக்கொள்வதில் மட்டும் சந்தியாவின் பங்கும் சரவணனின் பங்கும் வேறுபடுகிறது. அது இயற்கை.

சரவணனும் பல பெண்களைச் சுவைத்தவந்தான். நெதர்லாண்டிலும் சரி...சென்னையிலும் சரி. ஆனால் ஒரு குழந்தை இருக்கிறது என்று தெரிந்ததும்.....அவனுடைய மனநிலையிலும் ஒரு மாற்றம். அதன் விளைவு திருமணம். ஆனால்...அந்தத் திருமணத்தின் விளைவு.....ஒருவருக்கொருவர் என்ற மணவாழ்க்கை.

திருமணத்திற்குப் பிறகு சந்தியாவும் சரவணனும் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். முடிவு செய்தார்கள். சுதந்திரமாக இருக்க. ஆனாலும் அவர்களும் சுதந்திரத்தைத் தூக்கிப் போட்டு விட்டார்கள். ஆகையால் திருமணத்திற்கு முன்னால் செய்ததைப் பார்க்கலாம்.

திருமணம் வேண்டாம் என்றிருக்கும் பெண்.....அவளுக்கு உடலியல் பசி (சுருக்கமாக கிசி எனலாமா?) வருகையில்...என்ன செய்ய வேண்டும்? அதுதான் கேள்வி? கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டுமா? அல்லது அவளுக்குப் பிடித்த வகையில் இன்பத்தைத் துய்த்துக்கொள்ளலாமா? அதை முடிவு செய்யும் அருகதையும் உரிமையும் அவளுக்கு மட்டுமே உண்டு. அதே நேரத்தில் அதன் விளைவுகளுக்கு அவளே பொறுப்பு.

ஒருவேளை சந்தியா வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்ளப் போகிறாள் என்று வைத்துக் கொள்வோம்...அப்படிப்பட்ட நிலையில் அவனால்..அவளது பழைய நிலை அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. திருமணத்திற்குப் பிறகு எப்படி என்று முடிவு செய்து விட்டுத்தான் இருவரும் திருமணம் செய்ய வேண்டும். அப்படி ஒருமித்த கருத்து இல்லையென்றால் செய்யாமல் இருப்பதே நன்று.

மன்மதன்
28-03-2007, 05:04 PM
அதை முடிவு செய்யும் அருகதையும் உரிமையும் அவளுக்கு மட்டுமே உண்டு. அதே நேரத்தில் அதன் விளைவுகளுக்கு அவளே பொறுப்பு.

அவள் கண்டபடிக்கு மற்ற ஆண்களுடன் உறவு கொள்ளும்போது (காசுக்காகவோ/சுகத்துக்காகவோ) , அந்த மற்ற ஆண்களின் மனைவிகளின் கதி.. அவர்கள் தங்கள் மனைவிக்கு துரோகம் செய்ய இவள் உடந்தையாகிறாளே.. :grin:

(எல்லோரும் கண்டபடி விவாதிக்க ஏதாவது கேட்கணுமேன்னு கேட்டேன்..)

ஆதவா
28-03-2007, 06:43 PM

அடப்பாவமே!!! இப்படித்தான் சண்டை மூட்டறதா? :icon_shok: :icon_shok:

மன்மி !!!! எனக்கு இந்த வழி தெரியாம போச்சே!!!:icon_clap: :icon_clap:

----------------------------------------------------------------
சும்மா லுலுவாயி....:liebe028: :sport-smiley-014:

mukilan
28-03-2007, 06:53 PM
அவள் கண்டபடிக்கு மற்ற ஆண்களுடன் உறவு கொள்ளும்போது (காசுக்காகவோ/சுகத்துக்காகவோ) , அந்த மற்ற ஆண்களின் மனைவிகளின் கதி.. அவர்கள் தங்கள் மனைவிக்கு துரோகம் செய்ய இவள் உடந்தையாகிறாளே.. :grin:

(எல்லோரும் கண்டபடி விவாதிக்க ஏதாவது கேட்கணுமேன்னு கேட்டேன்..)

இல்லை! இது சிந்திக்க வேண்டிய விசயம், எல்லோருமே!

gragavan
29-03-2007, 08:56 AM
அவள் கண்டபடிக்கு மற்ற ஆண்களுடன் உறவு கொள்ளும்போது (காசுக்காகவோ/சுகத்துக்காகவோ) , அந்த மற்ற ஆண்களின் மனைவிகளின் கதி.. அவர்கள் தங்கள் மனைவிக்கு துரோகம் செய்ய இவள் உடந்தையாகிறாளே.. :grin:

(எல்லோரும் கண்டபடி விவாதிக்க ஏதாவது கேட்கணுமேன்னு கேட்டேன்..)
அது அந்த மனைவியரின் கணவர்களின் பொறுப்பு. அதற்கு இவள் எப்படிப் பொறுப்பாளி ஆக முடியும்? கதையில் மணமானவர்களோடு அவள் உறவு கொண்டாள் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் இது போன்று இருப்பவர்களுக்கு மணமானவர்களாக இருந்தால் என்ன..இல்லாவிட்டால் என்ன என்றுதான் இருக்கும் என்று நினைக்கிறேன். திருமணம் செய்த பிறகு ஆண்களே ஒதுங்கியிருக்கலாமே. அவர்களும் ஆசையோடு வருவதை என்ன சொல்வது. திருமணமான பின்னும் ஆசையோடு வருகின்ற ஆணைப் பற்றி ஒன்றும் நினைக்காமல்..சொல்லாமல்...பெண் அதற்கு உடந்தையாகலாமா என்று கேட்பதுதான் உலகம் முழுக்க பண்பாடு கத்துக் கொடுத்திருப்பது. (எல்லாரும் எதாவது சொல்றாங்களேன்னு....நானும் சொன்னேன் :redface: )

மன்மதன்
29-03-2007, 10:00 AM
எல்லாரும் எதாவது சொல்றாங்களேன்னு....நானும் சொன்னேன் :redface: )

கத்துக்குட்டியும் மாஸ்டரும் ஒண்ணா?? :icon_hmm:

pradeepkt
29-03-2007, 11:10 AM
கத்துக்குட்டியும் மாஸ்டரும் ஒண்ணா?? :icon_hmm:
இங்க யாரு க.கு. யாரு மா. ன்னு தெரிஞ்சா நல்லாருக்கும்... :natur008:
(சும்மா பிரச்சினையைக் கொஞ்சம் திசை திருப்பலாமேன்னு போட்டேன்):spudnikbackflip:

மன்மதன்
29-03-2007, 06:39 PM
இங்க யாரு க.கு. யாரு மா. ன்னு தெரிஞ்சா நல்லாருக்கும்... :natur008:
(சும்மா பிரச்சினையைக் கொஞ்சம் திசை திருப்பலாமேன்னு போட்டேன்):spudnikbackflip:
யாருக்கு என்ன பிரச்சனை..:icon_shout:

ஓவியா
29-03-2007, 07:00 PM
யாருக்கு என்ன பிரச்சனை..:icon_shout:

நீங்க அடிச்ச டைமிங் ஜொக் சூப்பர். :icon_dance:

gragavan
30-03-2007, 11:12 AM
இங்க யாரு க.கு. யாரு மா. ன்னு தெரிஞ்சா நல்லாருக்கும்... :natur008:
(சும்மா பிரச்சினையைக் கொஞ்சம் திசை திருப்பலாமேன்னு போட்டேன்):spudnikbackflip:
இதென்ன கேள்வி? க.கு நானு. மாஸ்டர் மன்மதன். இதெல்லாம் கேக்கனுமா?

மன்மதன்
30-03-2007, 11:37 AM
இதென்ன கேள்வி? க.கு நானு. மாஸ்டர் மன்மதன். இதெல்லாம் கேக்கனுமா?

குழந்தை நட்சத்திரங்களுக்கு 'மாஸ்டர்' என்றுதானே டைட்டில் போடுவார்கள்.. :icon_rollout: :rolleyes:

ஓவியா
30-03-2007, 11:44 AM
குழந்தை நட்சத்திரங்களுக்கு 'மாஸ்டர்' என்றுதானே டைட்டில் போடுவார்கள்.. :icon_rollout: :rolleyes:

நல்ல சொன்னேல் போங்கோ :icon_wink1: