PDA

View Full Version : மறதி ஏனடி!



செல்விபிரகாஷ்
20-03-2007, 06:35 AM
http://bp2.blogger.com/_e_laRiU0vmM/RfVv_8GU4yI/AAAAAAAAACE/WPXsRS18oGU/s400/marathi-eanadi_candle.jpg

கார்த்திகை தீபம் ஏற்ற
காதலி நீ தீக்குச்சி
தேடுகிறாய்...

எனைத் தாக்கும் தீப்பொறிகளான
உன் விழிகள் இருப்பதையே
மறந்தவளாய்..

இளசு
20-03-2007, 07:22 AM
முதலில் நன்றி..

எங்கள் அன்பான கோரிக்கையை ஏற்று
படக்கவிதை வரிகளை, தட்டச்சி கூடுதலாய் பதித்தமைக்கு..

பின்னர் பாராட்டுகள்..

அகல்விளக்கு போல் அளவில் சிறிது
கவிதையில் ஒளிரும் கருத்தோ அழகு..


படைப்புகள் தொடரட்டும் செல்வி.. வாழ்த்துகள்..

செல்விபிரகாஷ்
20-03-2007, 07:28 AM
உங்கள் கருத்துக்கு எனது நன்றிகள் இளசு அவர்களே.

ஆதவா
20-03-2007, 07:52 AM
எந்த பெண்ணிடமும் இல்லாத ஒன்று......... ஏதோ உன்னிடம் இருக்கிறது......... பாடல் வரிகள்

காதலியின் வெட்கப் படலம். உன்னிடம் இருக்கிறது ஆனால் உபயோகப் படுத்தாமல் வெட்கப் படுகிறாய்... அருமையாக (சே இந்த வார்த்த சொல்லி சொல்லி புளிச்சு போச்சு.. வேற சொல்லுவோம்) பிரமாதமான கவிதை...........

இன்னும் பொறிகளைத் தட்டி விடுங்கள்..............

கொசுறு : படங்கள் யாவும் அதிஅருமை... அதனோடு கோர்த்து இருக்கும் கவிதைகள் அதையும் தாண்டி,,,

மனோஜ்
20-03-2007, 07:57 AM
காதலியின் அழகில் மயங்கிய காதலனின் கவிவரிகளாய் அருமை

செல்விபிரகாஷ்
20-03-2007, 08:45 AM
நன்றி நண்பர்களே, படங்கள் தேர்வு செய்வதில் என் கணவரின் பங்களிப்பு அதிகம். அவரின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

அமரன்
20-03-2007, 09:06 AM
படங்கள் அருமை. உங்க கணவ்ருக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
கவிதையில் இதுதான் நல்லா இருக்கு என்று சொல்லமுடியாதளவுக்கு எல்லாமே அசத்தல். திருக்குறள் போல சிறிதாக இருந்தாலும் சுவை அதிகம்.

poo
20-03-2007, 10:12 AM
இருவரும் ஒருவராய் அனுபவித்து அனுபவிப்பதை எழுதுவதில் இருக்கும் சுகமே அலாதிதானே!!

வாழ்த்துக்கள் அன்பான தம்பதியருக்கு!!

பென்ஸ்
20-03-2007, 11:49 AM
கார்த்திகை தீபம் ஏற்ற
காதலி நீ தீக்குச்சி
தேடுகிறாய்...

எனைத் தாக்கும் தீப்பொறிகளான
உன் விழிகள் இருப்பதையே
மறந்தவளாய்..

அவள் பார்வை பட்டது
கொழுந்துவிட்டது காதல்
கடைசியில் கருகியது எதோ
என் இதயம்தான்...!!!

paarthiban
20-03-2007, 12:00 PM
படம் சூப்பர்
கவிதை சூப்பர்
பெஞ்சமின் சார் பதில் கவிதை சூப்பர்.