PDA

View Full Version : ஜனனம்



செல்விபிரகாஷ்
20-03-2007, 03:57 AM
மரணத்திற்கும் ஜனனத்திற்கும்
மத்தியில்...
உன் குரல் கேட்டவளின்
கண்ணீர்த்துளி...
உனக்குணர்த்தும் உன் ஜனனத்தின்
மதிப்பை!

http://bp2.blogger.com/_e_laRiU0vmM/RexPvJHcq0I/AAAAAAAAAA0/75OgLjJvhsY/s400/Jananam_Kavithai.jpg

ஆதவா
20-03-2007, 05:27 AM
அருமை அருமை... நான்கு வரிகளில் நச்.... தொடருங்கள் உங்கள் கவிகளை..

பென்ஸ்
20-03-2007, 05:57 AM
நல்ல கவிதை செல்வி....

ஆனால் கவிதை முடிவடாதது போல் ஒரு உணர்வு...

பிறக்கும் குழந்தையிடம் சொல்லுவது போல் இருக்கு...
சொல்லுவது, அந்த நிகழ்வுக்கான வலிகளையும், கண்ணீரையும்...
கவிதை முழுவதுமாக முடியவில்லையோ என்று ஒரு உணர்வு....
தொடருங்கள்...

செல்விபிரகாஷ்
20-03-2007, 06:24 AM
ஆதவா மற்றும் பெஞ்சமின் அவர்களுக்கு எனது நன்றிகள்.

இளசு
20-03-2007, 07:29 AM
ஒரு தாயால் மட்டுமே உணரக்கூடிய
உன்னதக் கணத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்..

'செத்துப் பிழைப்பது' என்பது அக்காலத்தில்
பிரசவப்பிதற்கு சொல்லப்படுவது..

அதீத வலியின் உச்சியில்
குழந்தையின் அழுகைக்குரல் கேட்டு
அளவில்லா ஆனந்தம் தாக்க
அப்போது துளிர்க்கும் கண்ணீர்..!

எடைபோட முடியாத அளவு உயர்வானதுதான் அந்த ஒரு துளி..

பாராட்டுகள் செல்வி..

செல்விபிரகாஷ்
20-03-2007, 07:34 AM
மிக்க நன்றி இளசு, ஒவ்வொருவரின் விமர்சனமும் என்னை அதிகம் எழுத தூண்டுவதாக உள்ளது. நன்றி நண்பர்களே

மனோஜ்
20-03-2007, 07:52 AM
தாய்மையின் அன்பை உனர்த்தும் அருமை கவிதை நன்று
தொடருங்கள் உங்கள் கவிதைகளை...

அமரன்
20-03-2007, 09:15 AM
மரணத்திற்கும் ஜனனத்திற்கும்
மத்தியில்


இது தாய்மையின் சிறப்பை உயர்த்தினாலும் அடுத்த வரிகளை இன்றைய உலகில் பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் வாழும் வாழ்க்கையின் வேதனைகளையும் எனக்கு நினைவூட்டுகின்றது. நன்றி கலந்த வாழ்த்துகள்.

poo
20-03-2007, 10:14 AM
அருமையான கவிதை..
பல நேரங்களில் அறுபதைத் தொட்டாலும் அந்தத் தாயின் அருமை புரிவதில்லை பல ஜென்மங்களுக்கு!

க.கமலக்கண்ணன்
20-03-2007, 10:50 AM
அன்னை மட்டுமே அறிய கூடிய அந்த ___________ நீங்கள் நான்கு வரிகளில் சொல்லியது மிக அருமை...

அன்புரசிகன்
20-03-2007, 10:59 AM
மரணத்திற்கும் ஜனனத்திற்கும்
மத்தியில்...
உன் குரல் கேட்டவளின்
கண்ணீர்த்துளி...
உனக்குணர்த்தும் உன் ஜனனத்தின்
மதிப்பை!


தொண்டை கட்டுது ஐயா. உருக்கமான வரிகள். நாம் பிறப்பதால் எத்தனை பெரிய வலி அவளுக்கு. ஆனாலும்
உன் குரல் கேட்டவளின் கண்ணீர்த்துளி... ... அங்கே உயர்ந்து நிற்கிறாள் நம் தாய். நன்றி. மீண்டும் தாயை சிறப்பித்தமைக்கு.

ஷீ-நிசி
20-03-2007, 11:28 AM
மிக சிறந்த கவிதை சகோதரி... நான்கு வரிகளில் கவிதை ஒளிர்கிறது...