PDA

View Full Version : ஆசைகள்..



rambal
05-05-2003, 04:38 PM
ஆசைகள்..


கண்ணடிக்கும்
நட்சத்திரங்கள் கொண்டு
தட்டாங்கல் விளையாடி...

வெள்ளை நிற
முழுப் பௌர்ணமியை
கடற்கரையில் கைப்பந்தாக்கி..

வானவில்லைக்
கயிறாக்கி
ஸ்கிப்பிங் குதிக்க...

கொட்டும்
மழைக் கம்பிகளை
மல்லிகையாக்கி நனைந்திட..

கொஞ்சம் எதார்த்தமாயும்
சிலவைகள் என்னிடம்
உண்டு...

மல்லிகை மணம் கலந்து
ஒலிக்கும் வெள்ளிக் கொலுசொலியின்
மடியில் தலைவைத்து கண்மூட..

யாசகம் வந்து கேட்பவருக்கு
கோணி நிறைய பணம்
கொடுத்து அனுப்பிட...

அனாதைகள்
அத்தனை பேரையும் தத்தெடுத்து
உலகின் மிகப்பெரிய குடும்பமாய்..

இப்படியான ஆசைகள்
சின்னச் சின்னதாய்
கழுத்து வரை நிரம்பி வழிகிறதே...

முத்து
05-05-2003, 06:00 PM
இத்தகை ஆசைகள்
பெரியோருக்கு
சின்னஞ்சிறு ஆசைகளாய் இருக்கலாம்,
ஆனாலும்
இந்த ஆசைகள் தோன்றுவது
மிகப்பரந்த நெஞ்சங்களில்
மட்டுமே !!

Narathar
06-05-2003, 04:19 AM
நல்ல கற்பனை!
ரசிக்கும் படியுள்ளது..............


ஸ்கிப்பிங் குதிக்க...

ஸ்கிப்பிங்கை கயிறடித்தல் என்பார்கள் நம்மூரில்.........
பொருத்தமாக இருந்தால் மாற்றிவிடுங்கள்.

madhuraikumaran
07-05-2003, 05:00 AM
உங்கள் பரந்த மனதின் இந்தச் சின்னச் சின்ன யாதார்த்த ஆசைகள் நிறைவேற வாழ்த்துகிறேன் ராம் !!!

இளசு
09-05-2003, 04:27 PM
இன்றைய ஆசைகள்
நாளைய நனவுகளாய் மாற
அண்ணனின் ஆசிகள்...

நன்று ராம்...மிக நன்று!

kavitha
30-04-2004, 08:21 AM
யாசகம் வந்து கேட்பவருக்கு
கோணி நிறைய பணம்
கொடுத்து அனுப்பிட...

அனாதைகள்
அத்தனை பேரையும் தத்தெடுத்து
உலகின் மிகப்பெரிய குடும்பமாய்..

எனக்கும் இந்த ஆசை உண்டு!
1.இனி பிச்சை எடுக்கவே மாட்டேன் என்று சொல்லும் அளவிற்கு தர
2.முடிந்தால் ஒன்றாவது தத்தெடுக்க...

தமிழமுதன்
30-04-2004, 12:07 PM
யாசகம் கேட்போருக்கு கோணி நிறையப் பணம் தரும் ஆசை அற்புதமான தாராள மனப்பான்மைதான் தோழரே. எனக்கு இவ்வாசை இருந்தது, எங்கள் தெரு பிச்சைக்காரனிடம் ஒரு முறை பேசும் வாய்ப்பு கிடைக்கும் வரை!!! அப்படி என்னதான் பேசினோம் என்கிறீர்களா? விளக்கமாகவே கொடுத்துள்ளேன்:

நான்: "ஐயா பிச்சைக்காரரே... இப்படி வேகாத வெயிலில் வீடு வீடாகப் போய்... தகரத் திருவோட்டை ஏந்தி பிச்சை எடுத்து சாப்பிடுகிறீர்களே, பாவம். திடீரென்று உங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கிடைத்தால் இந்தப் பிச்சைத் தொழிலை விட்டு விடுவீர்களா?"

பிச்சைக்காரர்: "அடப் போங்க தம்பி... ஐம்பதாயிரம் ரூபாய் கிடைத்தால், தங்கத்திலேயே திருவோடு செய்து பிச்சை எடுப்பேன்!!".

kavitha
04-05-2004, 05:55 AM
இது மெத்தன போக்கையே காட்டுகிறது! ஏன் நம் நாட்டில் மட்டும் இதற்கு கடுமையான சட்டங்கள் இல்லை!
ஆன்மீக ரீதியாக இதற்கு வேறு சப்பை கட்டு கட்டுகிறார்கள்!
ஒரு நல்ல திடகாத்திரமான மனிதரின் உழைப்பு வீணாவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை!
வயதானவர்கள் கூட தங்களால் இயன்றதை செய்து தான் ஆகவேண்டும்!