PDA

View Full Version : காதலை நீ மறுத்தால் வேண்டுவன...



செல்விபிரகாஷ்
19-03-2007, 06:48 PM
அன்புள்ள நண்பர்களே,
இது நான் எழுதிய கவிதைகளுள் ஒன்று. அதனை படக்கவிதையாக அனுப்பியுள்ளேன்.கவிதையை படித்துப் பார்த்து விட்டு அதில் உள்ள நிறை குறைகளை எனக்கு சுட்டிக்காட்டவும்.

http://bp3.blogger.com/_e_laRiU0vmM/Rf4g8RryoiI/AAAAAAAAADM/cVhsuvDFLZQ/s400/vendum-2.jpg

என்றும் அன்புடன்
செல்விபிரகாஷ்

பின்குறிப்பு:
தற்சமயம் நான் கவிதையை அனுப்ப என்னுடைய blog பாதையைத்தான் இணைத்துள்ளேன். தமிழ் மன்றத்தில் நேரடியாக படக்கவிதையை எப்படி இணைப்பது என நீங்கள் எனக்கு விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ஆதவா
19-03-2007, 06:55 PM
நிறை:

கவிதை அருமையாக இருக்கிறது. பின்பக்க காட்சி அமைப்புகள்
பிரமாதம்.. சுருக்கமாக வேண்டுவன இது , மறுக்கும் நீ எனச் சொல்லுவது இன்னும் அருமை.

குறை:

படக்கவிதை தொடுக்கும்போது தயவு செய்து எழுத்துக்களாய் பதிக்கவும், படம் சிறியதாக இருப்பதால் என்னைபோல கண்ணாடி போடும் சோடாபுட்டிகளுக்கு (மன்னிக்க ஹி ஹ் இ) கண்கள் தெரியாது...

நிறை+குறை = கவிதை அருமை. கனவற்ற கல்லறை, காதலற்ற பூமி,,, அருமையான சிந்தனை... மேலும் எழுத வாழ்த்துக்கள்

பிகு: உதவிக்கு அறிஞரை அணுகவும்,,

செல்விபிரகாஷ்
19-03-2007, 07:27 PM
நன்றி ஆதவா அவர்களே! நிறைகளை சொன்னதில் மிக்க மகிழ்ச்சி. குறைகளை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி, இனி வரும் கவிதைகளில் திருத்திக் கொள்கிறேன்.

அறிஞர்
19-03-2007, 07:36 PM
காதலியின் காதல் மாத்திரம் இருந்தால் மற்றெதும் வேண்டாமே...

செல்வியின் கவிதை எளிமையான வரிகளில் அழகாக இருக்கிறது..

இப்பொழுது ஏற்றிய படம் வழி சரியே... அப்படியே பதியுங்கள்.

நான் பொதுவாக போட்டோபக்கெட் தள்த்தில் ஏற்றி இங்கு கொடுப்பேன்.

இளசு
19-03-2007, 10:10 PM
அன்புள்ள செல்விபிரகாஷ்,

உங்கள் முதல் கவிதைக்கு வாழ்த்துகள்.. ஊக்கங்கள்..

காதல் இல்லையெனில்...


பிறப்புக்கும் முந்தைய நிலை
இயக்கம் இல்லா எந்திரநிலை
இறப்புக்கும் பிந்தைய நிலை..


கருத்துத் தெரிவில் உள்ள கட்டமைப்பும்..
சொல்லடுக்கில் ஒழுங்கும்...
பாராட்டைப் பெறும் அம்சங்கள்..


குறை - ஆதவா சொன்னதே...

படமும் பதித்து கீழே வரிகளைத் தட்டச்சி பதியுங்கள்..


மேலும் படையுங்கள்..பரிமாறுங்கள்..

மற்றவர் படைப்பையும் விமர்சித்து உயர்த்துங்கள்..

செல்விபிரகாஷ்
20-03-2007, 04:04 AM
என் சந்தேகம் தீர்த்து வைத்த அறிஞர் அவர்களுக்கு எனது நன்றிகள்.

இளசு அவர்களின் வார்த்தைகளின் ஊக்கங்களுக்கு எனது நன்றிகள்

என்றும் அன்புடன்
செல்விபிரகாஷ்

பென்ஸ்
20-03-2007, 05:44 AM
வாங்க செல்வி...
மன்றத்தில் முதல் கவிதைக்கு பாராட்டுகள்....

மன்றத்தில் ப்ரியன் படைக்கும் பட கவிதை கொடுக்கிறார்...
இப்போ நீங்களும்...

கவிதை அருமை...
காதலில் இழப்பு வரும்போது நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு இடம்- கருவறை
எதுவும் நம்மை சிதறடிக்காமல் இருக்க - இயந்திர வாழ்க்கை
"காதலில்லாது யாருளர்??" (நன்றி" ஆதவா).. உயிரில்லாத கல்லறைகள்
செல்வி.... கருவறையில் இருக்கும் குழந்தைக்கும் கனவுகள் உண்டு தெரியுமா???
இவர்கள் இறந்தாலும் , இவர்கள் காதல் இன்னும் உயிருடன் தானே இருக்கு....

காதல் மறுக்கபடும் போது இவை எதுவும் வேண்டாம்..!!!
காதலை விட..
அம்மாவின் தாய்மடி..
நண்பனின் தோள்...
குழந்தையின் அரவனைப்பு எல்லாம் மேல் இல்லையா???

விடுங்க அந்த அன்பில்லாத, அதிஷ்டம் இல்லாத அந்த ஜீவனை...

இளசு
20-03-2007, 07:19 AM
பாஸீட்டீவ் சிந்தனைகள் என என் பின்னூட்டங்களை
அடிக்கடி நண்பன் புகழ்வார்...

அந்தப் பாராட்டுகள் இனி இனிய பென்ஸூக்கே சொந்தம்...

விமர்சனம் இட்டு, அதற்கு விமர்சனம் பெறும் வித்தையை
எனக்குக் சொல்லிக்கொடுக்கணும் பென்ஸ்..

இனிப்பான பொறமையுடன்

- இளசு