PDA

View Full Version : வான் தேவதைக்கு ஒரு கடிதம்ஆதவா
19-03-2007, 04:39 PM
வணக்கம் மன்றமே!! இந்த பதிவோடு மன்றத்தின் தூணாகிவிட்டேன். தூணாக முதல் பதிவு.... மறக்கும் வகையில் எல்லாம் இருக்காது. எப்போதும் போல சாதாரணப் பதிவுதான்.

நான் முதன்முதலாக கவிதைக்கென்று பரிசு வாங்கிய கவிதை. சின்ன வயதாக இருந்ததால் உடனே கொடுத்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இதோ:

யாகங்கள் செய்த பின்னும்
அதன் புகை உனைத் தொட்ட பின்னும்
மேகங்கள் கருத்த பின்னும்
எம் நெஞ்சங்கள் வெளுத்த பின்னும்
மோகங்கள் தீண்டிய பின்னும்
சூரியனைக் கழித்த பின்னும்
தாகங்கள் அடங்கவில்லை - மழை
சோகங்கள் தீரவில்லை

பாகங்கள் உனக்கிரைத்தோம்
பழி பாவங்கள் விட்டிரைத்தோம்
கோபங்கள் எடுத் தெறிந்தோம்
கோவில்கள் எடுத் திரைத்தோம் - சிலர்
நாமங்கள் பழித்த காரணமோ?
ஓமங்கள் இழித்த காரணமோ?
தீமைகள் தடுத்திரா காரணமோ?
ஊமைகள் ஆன காரணமோ?
சீமைக்குக் கொடுத்த மழை-இந்த
ஊமைக்கு கொடுத்தல் உமக் கிழிவோ?
ஊமைக்கு உரைத்த லில்லையென
எமைக் கண்டு இளிப்போ?

ஆதி எடுத்துரைத்து பாடலியற்றி
மீதி உயிரெடுத்து மிச்ச மேகத்தில்
மெச்ச உதரிவிட்டு, கண்கள்
உச்ச வான் நோக்கும்....
இரத்தம் சிதறிவிட்டோம்
மொத்தம் உமக்களித்தோம் -ஆதலின்
ஆசு கவி போலிங்கு
பூசு மழை பூமிக்கு - இந்தப்
பாட்டுத் தீ பட்ட பின்னாவது -எங்கள்
காட்டுத் தீ அணைப்பாயோ?
காக்கின்றோம் உமது பதிலுக்கு - எதிர்
பார்க்கின்றோம் உமது துளிகளுக்கு...

அறிஞர்
19-03-2007, 06:34 PM
வான் தேவதையை கவர கொடுத்த கடிதம் அருமை...

நாம் படும்பாட்டை பார்த்தாவது... இரங்கமாட்டாளா இந்த வான் தேவதை...
------
பரிசுக்கவிதை.. மன்றத்தில் 2000மாவது பதிவாக வந்ததில் மகிழ்ச்சி...

ஆதவா
19-03-2007, 06:39 PM
நன்றிங்க அறிஞரே!!

மன்மதன்
19-03-2007, 07:06 PM
தூண் பதிவுக்கு வாழ்த்துகள் ஆதவா..


லகான் படத்தில் வரும் 'காலே மேகா' பாடல் போன்று இனிதாக இருக்கிறது கவிதை..

செல்விபிரகாஷ்
20-03-2007, 04:18 AM
சிறு வயதில் படைத்த கவிதையென்றாலும் வார்த்தைகள் மிகவும் அருமை. நண்பரே! உமது கடிதம் கண்டு வான் தேவதை பதில் போட்டாளா?

ஷீ-நிசி
20-03-2007, 04:49 AM
ஆதி எடுத்துரைத்து பாடலியற்றி
மீதி உயிரெடுத்து மிச்ச மேகத்தில்
மெச்ச உதரிறிவிட்டு, கண்கள்
உச்ச வான் நோக்கும்....
இரத்தம் சிதறிவிட்டோம்

மழை வேண்டி வேண்டிய கவிதை.. எழுத்துக்கள் அழகு.. வார்த்தைகளில் ஜாலம் மின்னுகிறது. அருமை.

இளசு
20-03-2007, 07:34 AM
என்ன வயசிருக்கும் ஆதவா அப்போ உங்களுக்கு?

(இப்பவே சின்ன வயசுதானே...?!!!)

சொற்கள் என்னும் பாற்கடலை கடைந்து
அப்படியே குடிக்க ஆசைப்பட்ட
தமிழ்க் காயசண்டியன் தெரிகிறான் இக்கவிதையில்..

அவன்.. இன்று ஆதவா-வாய் வலம் வருவதன்
ஆரம்ப அறிகுறிகளும் தெரிகின்றன..


பூரிப்பாய் என் வாழ்த்துகள்..- 2000மாவது முத்திரை - நினைவுக்கல்- பதிவுக்கு..

ஆதவா
20-03-2007, 07:45 AM
தூண் பதிவுக்கு வாழ்த்துகள் ஆதவா..


லகான் படத்தில் வரும் 'காலே மேகா' பாடல் போன்று இனிதாக இருக்கிறது கவிதை..

நன்றி அனைவருக்கும்.... நான் முதன்முதலில் தியேட்டரில் மூன்று முறை பார்த்த படம்... புரியாவிட்டாலும் கிரிக்கெட்டுக்காக பார்த்தது...

(மன்மி உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? லகான் படத்தின் எல்லா பாடல்களையும் தவறு இல்லாமல் பாடுவேன்...)


என்ன வயசிருக்கும் ஆதவா அப்போ உங்களுக்கு?

(இப்பவே சின்ன வயசுதானே...?!!!)


பூரிப்பாய் என் வாழ்த்துகள்..- 2000மாவது முத்திரை - நினைவுக்கல்- பதிவுக்கு..

நன்றிங்க இளசு.. இரு வரிகள் என்றாலும் பல வரிகள் என்றாலும் உங்கள் விமர்சனம் நச்.... அதற்கு ஒரு இச்....

நான் படித்து முடித்தபின் (அல்லது படிக்கும்போது) எழுதியது.. நீண்ட நாட்களுக்குப் பின் எங்கள் ஊர் லயன்ஸ் கிளப்பில் நிறைய கவிஞர்கள் பங்கேற்க ஏராளமான நடுக்கத்தோடு படித்தது.... கிட்டத்தட்ட 18 வயது. தற்போது 22...

அங்கே விருந்து சாப்பிட்ட அனுபவமும் உண்டு...:D

அங்கேதான் கவிஞர் மகுடேசுவரன் அவர்களை சந்தித்தேன்.. அருமையான கவிஞர் அவர்...

பாராட்டிய அனைவருக்கும் பார்த்தவர்களுக்கு நன்றி:icon_give_rose:

poo
20-03-2007, 10:09 AM
நாற்பது ஆண்டுகள் பின்போனாலும், முன் போனாலும் சாலப் பொருந்தும் கவிதை.. ஆதவனுக்கும்.. அந்த அடங்காத ஆண்டவனுக்கும்!!

வாழ்த்துக்கள்.. கவிதைக்கு.. வெற்றிக்கு.. மைல்கல் கடந்த ஓட்டத்திற்கு!!

மன்மதன்
20-03-2007, 12:31 PM
நன்றி அனைவருக்கும்.... நான் முதன்முதலில் தியேட்டரில் மூன்று முறை பார்த்த படம்... புரியாவிட்டாலும் கிரிக்கெட்டுக்காக பார்த்தது...


நானும் சத்யமில் பார்த்தேன். நல்ல படம்..

பென்ஸ்
20-03-2007, 12:33 PM
விமர்சனம் தேவையில்லை...
வாழ்த்துகள் மட்டும்...

(விமர்சனம் தரவில்லை என்று கோபம் வந்தால் திட்டி கொள்)

ஆதவா
20-03-2007, 05:37 PM
அனைவருக்கும் என் நன்றி.........

ஆதவா
20-03-2007, 05:38 PM
விமர்சனம் தேவையில்லை...
வாழ்த்துகள் மட்டும்...

(விமர்சனம் தரவில்லை என்று கோபம் வந்தால் திட்டி கொள்)

:waffen093: :violent-smiley-034: :violent-smiley-010: :sport-smiley-002: :sport-smiley-005: :violent-smiley-027: