PDA

View Full Version : அகர வரிசையில் அம்மாக.கமலக்கண்ணன்
19-03-2007, 02:28 PM
அகர வரிசையில் அம்மா

அம்மா - அன்பை ஒவ்வொரு நொடியிலும்
ஆவலுடன் எனக்கு அளித்து
இனிய பண்பையும் பழக்கத்தையும்
ஈடு இல்லாத வகையில் போதித்து - பசியறிந்து
உணவை பாசத்துடன் எனக்கு
ஊட்டியே வளர்த்து - என்னை
எங்கும் வெற்றி பெற்றிட
ஏதுவாக துணிவை எனக்குள் விதைத்து
ஐயம் என்பது என்னவென்று தெரியாமல்
ஒப்பில்லாத முழுமனிதானாக்க
ஓய்வில்லாமல் உழைத்த அம்மா
ஒளவை தமிழுக்கு - நீ எனக்கு...
அஃதே பத்து மாதம் சுமந்து ஈன்றதற்கு
அடுத்த ஜென்மத்தில் நீ என் மகளாக பிறக்க
ஆசையுடன் உனது தாழ் பணிந்து...

அறிஞர்
19-03-2007, 02:30 PM
அன்பிற்கு உரியவருக்கு...
அகர வரிசையில்
கவிதை அமைந்தது
அழகாக உள்ளது...

தொடருங்கள்.. கமலக்கண்ணா...

க.கமலக்கண்ணன்
19-03-2007, 02:32 PM
நன்றி! அறிஞர் அவர்களே மிக்க நன்றி!

ஆதவா
19-03-2007, 04:53 PM
அழகிய கவிதை...
அகர வரிசையில்
ஆழம் நிறைந்ததாகவும்
இனிமை குழைந்ததாகவும் இருந்தது,

ஈரம் நெஞ்சில் இருப்பதற்கு
உண்மையான அன்பே காரணம்
ஊன் கொடுத்த தாயே அன்பானவள்.
எது எப்படியும் உங்கள் கவிதை
ஏக்கம் தருகிறது மீண்டும் பிறக்க
ஐயம் வேண்டாம் கமலக்கண்ணன் அவர்களே!
ஒன்று சொல்கிறேன் கேளுங்கள், அம்மாவை
ஓதுவது ஒன்றே மீண்டும் கருத்தரிக்க வழி.
அவ்விதமே பார்ப்போம்..புகழ் ஓதுவோம்

வாழ்க தாயன்பு.

க.கமலக்கண்ணன்
20-03-2007, 07:58 AM
மிக்க நன்றி ஆதவன் அவர்களே மிக்க நன்றி !

இளசு
20-03-2007, 08:03 AM
அன்புள்ள கமலக்கண்ணன்

அன்னையைப் பற்றி
அகரவர்சையில்
அன்பை ஊற்றி
அழகுக்கவிதை தந்த

உங்களுக்கு என் பாராட்டுகள்..

சொல் வித்தகன் ஆதவாவின் பதில் கவிதைக்கு ...
வாவ்... ஆச்சரியம் கலந்த வாழ்த்துகள்!

மனோஜ்
20-03-2007, 08:09 AM
அகரவரிசையில்
ஆழ்மையாக அன்னையின் அன்பை
இனிமைபொங்க கவிதைகளை
ஈக்களாய் நாங்கள் வாசிக்க
உறுதியூடன் வெளியிட்ட உமக்கு
ஊக்கமளிக்க
எனக்கு வாய்பளித்த உமக்கு
ஏணிபடிகளாக கவிதைகள் அமைய
ஐயமின்றி கவிதைகள் இனியூம் எழத
ஒருமனமாய் மன்றத்துடன் நானும்
ஓயாமல் வாழ்த்துகிறோன்
ஒளசதமாய் இருந்தது கவிதை

இளசு
20-03-2007, 08:10 AM
ஆஹா மனோஜின் தனித்திறமைக்கு இங்கே மற்றொரு சான்று..

வாழ்த்துகள் மனோஜ்...

மனோஜ்
20-03-2007, 08:12 AM
நன்றி இளசு அண்ணா எல்லா நீங்க தந்த ஆதரவுதான்

க.கமலக்கண்ணன்
20-03-2007, 08:12 AM
கலக்குறிங்க நண்பர்களே....
என்ன நான் மிகவும் தாமதமாக இந்த மன்றத்தில் இணைத்திருக்கிறேனே...

ஆதவா
20-03-2007, 08:19 AM
கலக்குறிங்க நண்பர்களே....
என்ன நான் மிகவும் தாமதமாக இந்த மன்றத்தில் இணைத்திருக்கிறேனே...

அமைச்சர் ஆதவா :

மன்னரே! தாங்கள் தாமசமாக வந்தாலும் கண்கள் கலங்கும் பதிப்பை
அல்லவா கொடுத்திருக்கிறீர்கள்

புலிகேசி கண்ணன் :

என்ன ? கண்கள் கலங்கிவிட்டதா? யாரங்கே ? யாரடா அங்கே? இவனைக் கொண்டு போய் தலைகீழாய் தொங்கவிட்டு சுற்றிலும் தொலைக்காட்ட்சிப் பெட்டியை வைத்து சீரியல்களை போடுங்களடா! ......:D

செல்விபிரகாஷ்
20-03-2007, 08:26 AM
கமலக்கண்ணனின் கவிதை அருமை. அதனை படித்து விட்டு ஆதவா, மற்றும் மனோஜ் அவர்களின் படைப்புகளும் அருமை. கவிதைக்கு பாராட்டாக கவிதையையே பெறுவதன் இன்பத்தை கமலக் கண்ணன் அறிவார்.

கமலக் கண்ணரே!
அம்மா என்றதும் ஆனந்த
கண்ணீர் சொறிந்து...
அன்னை என்றதும் அள்ளி
அரவணைத்து...
தாய் என்றதும் தாலாட்டி
சீராட்டி...
உம்மை உருவாக்கியவள்
இன்று...
உமது அகரவரிசை கவிதை
கண்டு பெருமிதம் கொள்வார்

gragavan
20-03-2007, 08:44 AM
அ...மிக அருமையான எழுத்து. ஏனென்றால் அதுதான் சொற்களின் தொடக்கம். பெரும்பாலான மொழிகளில் முதலெழுத்து. ஆகையால்தான் அம்மா என்பதும் அகரத்திலேயே தொடங்குகிறது. ஒரு மனிதனின் தொடக்கம் என்பது அம்மாவிடம் என்பதால் அப்படி. திராவிட மொழிகள் அனைத்திலும் அப்படித்தான். அந்த அடிப்படையில் படிப்படியாக எழுத்தில் கூட்டிய கவிதையும் அருமை.

poo
20-03-2007, 10:11 AM
ஒரு அடியெடுத்துக் கொடுக்க.. ஏராளமானவர்கள் சேர்ந்திசைக்கும் அழகு மன்றத்தில் தனி...

பாராட்டுக்கள் அனைவருக்கும்!

அமரன்
20-03-2007, 10:15 AM
கிடையாது. எனக்குக் கிடையாது. கிடையவே கிடையாது. சுத்தமாக கவிதை ஞானம் கிடையாது.
தமிழின் ஆதாரமாம் உயிர் எழுத்து வைரிசையில் எமக்கு உயிகொடுத்தவளுக்கு ஒரு கவி வடிவ வாழ்த்து. அம்மாவின் மலரும் நினைவுகளை என்னுள் மீட்டி விட்டது. நன்றி கமலனுக்குக் கருத்துச்சொன்ன அனைவருக்கும்.

க.கமலக்கண்ணன்
20-03-2007, 10:22 AM
கமலக்கண்ணனின் கவிதை அருமை. அதனை படித்து விட்டு ஆதவா, மற்றும் மனோஜ் அவர்களின் படைப்புகளும் அருமை. கவிதைக்கு பாராட்டாக கவிதையையே பெறுவதன் இன்பத்தை கமலக் கண்ணன் அறிவார்.

கமலக் கண்ணரே!
அம்மா என்றதும் ஆனந்த
கண்ணீர் சொறிந்து...
அன்னை என்றதும் அள்ளி
அரவணைத்து...
தாய் என்றதும் தாலாட்டி
சீராட்டி...
உம்மை உருவாக்கியவள்
இன்று...
உமது அகரவரிசை கவிதை
கண்டு பெருமிதம் கொள்வார்

என்னை பெற்றவள் இவ்வுலகில் இப்போது இல்லை. ஆனால் இருந்திருந்தால் உங்களின் மடல்களை கண்டு பூரித்திருப்பாள் என்னை பெற்றவள்...

paarthiban
20-03-2007, 12:34 PM
உங்கள் கவிதை மிக அருமை.
உங்கள் அம்மா ஆன்மா உங்களை வாழ்த்திக்கொண்டிருக்கிறது .

க.கமலக்கண்ணன்
23-04-2007, 05:54 AM
வணக்கம் நண்பர்களே...

இந்த அகர வரிசை கவிதைக்கு JCI கிளப்பின் செய்தி ஏடான சேலன்ஜ் இதழில் 2 வது பரிசு கிடைத்திருக்கிறது. உங்களின் பூரண வாழத்துக்களோடு...

உங்களின் பொன்னான விமர்சனங்களுக்கு மிக்க நன்றி....

அதன் புகைப்படம் விரைவில்...

இளசு
23-04-2007, 06:26 AM
பரவசமான வாழ்த்துகள் கமலக்கண்ணன்!

இது ஒரு தொடக்கமே!

வெற்றிகள் தொடரும்!

poo
23-04-2007, 07:17 AM
வாழ்த்துக்கள் நண்பரே...

வெற்றிநடை தொடரட்டும்!!

க.கமலக்கண்ணன்
23-04-2007, 07:46 AM
இளசு மற்றும் பூ இருவருக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி

ஓவியா
24-04-2007, 04:48 AM
அம்மா பூமியில் கானும் சொர்க்கம். அனைவருக்கும் கானக்கிடைக்காது. கொடுத்து வைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அருமையான கவிதை. நன்றி நண்பரே

mravikumaar
24-04-2007, 04:58 AM
அம்மாவைப் பற்றி ஒரு அழகான கவிதை

வாழ்த்துக்கள்.

அன்புடன்
ரவி

pradeepkt
24-04-2007, 05:45 AM
அருமை அருமை...
வாழ்த்துகள் கமலகண்ணன்.

சுட்டிபையன்
24-04-2007, 06:11 AM
அழகான அம்மா கவிதை கமலக் கண்ணன்

அம்மா பூமியில் கானும் சொர்க்கம். அனைவருக்கும் கானக்கிடைக்காது. கொடுத்து வைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அருமையான கவிதை. நன்றி நண்பரே

ஆம்மாம் ஓவியாக்க நீங்கள் சொல்வது 100% சரியானது

ராசராசன்
24-04-2007, 12:52 PM
இங்கே சம்பந்தமில்லாவிடினும், 'அம்மா'வைப்பற்றிய கவிதை என்றிருப்பதால் என் மனதைத் தொட்ட இக்கவிதையை பதிக்கிறேன்.


அம்மா இனி நீ இறந்து விடு..

பயமும் பட்டினியும்
நோயும் என இன்னமும்

எத்தனை காலத்திற்கு
நீ செத்துக்கொண்டேயிருக்கப்போகிறாய் ?


ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்கும்
ஒரு நகரிலிருந்து இன்னொரு நகரிற்கும்
ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டிற்கும்
ஒரு நோயிலிருந்து இன்னொரு நோயிற்கும்
ஒரு பசியிலிருந்து இன்னொரு பசியிற்குமென
ஒரு பொதியையும் காவிக்கொண்டு
இன்னமும்எத்தனை காலத்திற்கு
அலையப் போகிறாய் ?


உன் பிள்ளைகளையும்
பேரப்பிள்ளைகளையும் கழுகுகள்
காவிக்கொண்டு செல்வதையும்
கண்டுவிட்டுத்தான் மடிவேன் என
ஏன் அடம்பிடிக்கிறாய்?


அம்மா, இனி நீ இறந்து விடு.


அனைத்தும் பயனற்றுப்
போய்விட்டது என்பதை
அறிந்த பின்தான் போகவேண்டும்
என நீ அடம்பிடிப்பது
அறிவீனம் அம்மா.


ஏழு கோடி தமிழர்கள் உலகிலிருக்கிறார்கள்
ஈழத்தில் நாம் எவ்வாறு நாம் அனாதைகளானோம்
எனக் கேட்காதே


உலகில் பன்றிகளும்தானே
பலகோடிகள் இருக்கின்றன.
அவ்வப்போ முணுமுணுத்துக் கொள்வதைத்
தவிர அவையால் என்னதான் செய்யமுடியும்?


நீ இறந்த செய்தி வந்ததும்
தயாராகவிருக்கும் இடுப்புப்
பட்டியை நான் மாட்டிக்கொள்வேன்.


சிங்களமும் மந்திரம் செபிக்கும் பன்றிகளும்
ஒருமித்துக்கூறும் அப்போ
நான் ஒரு பயங்கரவாதியென்று.


- நன்றி: அப்பால்தமிழ்

pradeepkt
24-04-2007, 01:13 PM
மனதைக் கனக்க வைத்த கவிதை.
பகிர்ந்தமைக்கு நன்றி தேனிசை.
என்ன இப்போதெல்லாம் மன்றம் பக்கம் வருவதே அரிதாகி விட்டதே.. .அடிக்கடி வாருங்கள் ஐயா.

ராசராசன்
24-04-2007, 01:36 PM
மனதைக் கனக்க வைத்த கவிதை.
பகிர்ந்தமைக்கு நன்றி தேனிசை.
என்ன இப்போதெல்லாம் மன்றம் பக்கம் வருவதே அரிதாகி விட்டதே.. .அடிக்கடி வாருங்கள் ஐயா.

இன்னமும் என்னை ஞாபகத்தில் வைத்துள்ளீரா பிரதீப்? மிக்க நன்றி மதுரை ஐயா..!
"உணர்வுகளில்" அதிகம் இருப்பதால் வரமுடியவில்லை அன்பரே.

pradeepkt
24-04-2007, 01:41 PM
இன்னமும் என்னை ஞாபகத்தில் வைத்துள்ளீரா பிரதீப்? மிக்க நன்றி மதுரை ஐயா..!
"உணர்வுகளில்" அதிகம் இருப்பதால் வரமுடியவில்லை அன்பரே.
அட என்னாங்க இப்படிச் சொல்லிட்டீங்க...
என்னைக்காவது நீங்க சென்னை வரும்போது நாம் பகிர்ந்து கொள்ள நினைத்த பாடல்கள் வரை இன்னும் நினைவில் உண்டு.
முடிந்த போது கண்டிப்பாக மன்றத்தில் உலவுங்கள் நண்பரே... :icon_drunk:

ராசராசன்
24-04-2007, 02:51 PM
அப்படியே செய்யலாம் பிரதீப், இங்கே அடிக்கடி வர முயற்சிக்கிறேன்.

அன்புரசிகன்
24-04-2007, 02:58 PM
சிங்களமும் மந்திரம் செபிக்கும் பன்றிகளும்
ஒருமித்துக்கூறும் அப்போ
நான் ஒரு பயங்கரவாதியென்று


உண்மை வரிகள். நன்றி தேனிசை உறவே.

ஓவியா
24-04-2007, 04:54 PM
அம்மா இனி நீ இறந்து விடு..

அருமையோ அருமை


நன்றி: அப்பால்தமிழ்
நன்றி: தேனிசை

க.கமலக்கண்ணன்
25-04-2007, 04:10 AM
நன்றி நண்பர்களே.

நன்றி தேனிசை

நன்றி ஓவியா...

க.கமலக்கண்ணன்
09-08-2007, 09:10 AM
வருக தேனிசை அவர்களே

வளமையான உங்களின் கவிதை

வன்மையாக என் மனம் சொக்கி போனது. நன்றிகள் பல...