PDA

View Full Version : அதி குறுங்கவிதைகள்....



ஜெயாஸ்தா
19-03-2007, 04:15 AM
என் வீட்டின் கூரையில்
விண்மீண்கள் விளக்குகள்...!
வறுமை.

ஏழ்மையின் சிரிப்பில்
இறைவன்...!
பழனியாண்டவர்.

காதல் தெய்வீகமானது
அழகான அடுத்தவீட்டு
ஜன்னலை காணும்வரை...!


விடம் குடித்ததோ...
கடல்....
நுரைக்கும் அலை..!

கழுதை தேய்ந்து
கட்டெறும்பான கதையாய்...
ஹைக்கூ....!

pradeepkt
19-03-2007, 06:07 AM
நச் கவிதைகள் நண்பரே..
இன்னும் நிறைய எழுதுங்கள்.
பழநியாண்டவனைக் குறித்த உங்கள் பார்வைக்குப் பாராட்டுகள்.

மன்மதன்
19-03-2007, 09:10 AM
நல்ல கவிதைகள். இதை அப்படியே கவிதை போட்டி 5க்கு - பென்ஸின் தனிமடலுக்கு அனுப்பியிருக்கலாமே ஜே.எம்.

ஷீ-நிசி
19-03-2007, 09:32 AM
அருமையான கவிதை நண்பரே!

கடைசியாய் சொன்னது ஹைக்கூவின் ஹைலைட்

கட்டெரு(று)ம்பான கதையாய்...

கட்டெறும்பு என்பதே சரியென்று நினைக்கிறேன்.. மன்மதன் பிழையெதுவோ அதை சரிசெய்திடுங்கள்..

pradeepkt
19-03-2007, 10:43 AM
அருமையான கவிதை நண்பரே!

கடைசியாய் சொன்னது ஹைக்கூவின் ஹைலைட்

கட்டெரு(று)ம்பான கதையாய்...

கட்டெறும்பு என்பதே சரியென்று நினைக்கிறேன்.. மன்மதன் பிழையெதுவோ அதை சரிசெய்திடுங்கள்..
று-தான்...
அதைத்தான் நானே சிகப்பில் சரி செய்திருக்கிறேனே..

ஜெயாஸ்தா
19-03-2007, 01:27 PM
நல்ல கவிதைகள். இதை அப்படியே கவிதை போட்டி 5க்கு - பென்ஸின் தனிமடலுக்கு அனுப்பியிருக்கலாமே ஜே.எம்.

நீங்கள் சொல்லிய பிறகுதான் அந்த அறிவிப்பை பார்த்தேன் மன்மதா..... அதனாலென்ன வேறு கவிதைகளை எழுதி அனுப்பிவிடுகிறேன்.

pradeepkt
19-03-2007, 01:47 PM
நீங்கள் சொல்லிய பிறகுதான் அந்த அறிவிப்பை பார்த்தேன் மன்மதா..... அதனாலென்ன வேறு கவிதைகளை எழுதி அனுப்பிவிடுகிறேன்.சூப்பருங்க..
எங்களுக்கும் இன்னும் சில புது ஹைக்கூக்கள் கிடைக்குதே...
இன்னும் நிறைய எழுதுங்கள்.

அறிஞர்
19-03-2007, 02:39 PM
ஒரு சில வரிகள்...
பலவற்றை சிந்திக்க வைக்கிறது...

தொடருங்கள்.. அன்பரே..

poo
20-03-2007, 10:42 AM
அதிகமான கருத்துக்களைச் சொல்வதாலே இது அதிகுறுங்கவிதையோ -என யோசிக்க வைக்கிறது.,...

பாராட்டுக்கள் நண்பரே!

இளசு
20-03-2007, 11:40 PM
ஜே.எம்..

ரத்தினக்கவிதைகளை தந்தமைக்குப் பாராட்டுகள்!

ஹைக்கூ போட்டியில் ஜமாய்க்க வாழ்த்துகள்!

ஜெயாஸ்தா
15-10-2007, 05:48 AM
அம்பும்
நாணுமில்லாமல்....
வனவில்...!

ஜெயாஸ்தா
15-10-2007, 05:51 AM
தொட்டதும்
தூக்கியடிக்கும்
கற்புடையாள்...
மின்சாரம்.

ஜெயாஸ்தா
15-10-2007, 05:53 AM
உறவுகளை
பலமாய் இணைக்கும்
பெவிகுயிக்....
பணம்...!
(FeviQuick - விரைவாக ஒட்டப்பயன்படும் ஒரு வகை செயற்கைப் பசை.)

ஜெயாஸ்தா
15-10-2007, 05:54 AM
நவீன
காமதேனு....
கணிணி..!

அமரன்
15-10-2007, 08:11 AM
அதி குறுங்கவிகள்..வீரியத்துடன் உள்ளன.
முன்னான்கு கூர்மையும் பாரமும் அதிகம்.
தொடருங்கள். பாராட்டுகள்.

பூமகள்
15-10-2007, 08:14 AM
தொட்டதும்
தூக்கியடிக்கும்
கற்புடையாள்...
மின்சாரம்.
அருமை.. மின்சாரத்தை கற்புக்கரசியாய் ஒப்புமை செய்த விதம் அருமை... புதுமை..!!
வாழ்த்துகள்..!!
எல்லா குறுங்கவிகளுமே காரம் குறையாமல் உள்ளது. பாராட்டுகள் ஜே.எம்.

அக்னி
15-10-2007, 08:16 AM
சட்டெனப் பிரசவிக்கும்
குறுங்கவிதைகள்...
திடமாக, பலமாக...

பாராட்டுக்கள் ஜே.எம்...
தொடருங்கள்...

ஜெயாஸ்தா
15-10-2007, 08:20 AM
மன்றம் வந்த புதிதில் எழுதிய கவிதைகள். பெருந்தலைகள் பின்னூட்டமிட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

நன்றி அக்னி
நன்றி அமர்
நன்றி பூமகள்..!