PDA

View Full Version : பாகிஸ்தான் கோச் பாப் ஊல்மர் மரணம்



aren
19-03-2007, 02:21 AM
பாகிஸ்தான் அயர்லாந்திடம் தோற்றுவிட்டு உலகப்கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்ட பேரிடியை தாங்கமுடியாமல் தள்ளாடும்பொழுது, இன்னொரு துயரமான செய்தி. கோச் பாப் ஊல்மர் மரணடைந்த செய்து இன்னும் உலுக்கிவிட்டது.

பாப் ஊல்மரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம். அவருடைய குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வோம்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
19-03-2007, 03:36 AM
இது மிகப்பெரும் துயரச்செய்தி... அவரது ஆத்மா சாந்தியடைந்திட வேண்டும்...

pradeepkt
19-03-2007, 05:27 AM
அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவர்தம் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் வெகு விரைவில் வெளிப்படட்டும்...

ஓவியன்
19-03-2007, 06:02 AM
திறமைசாலி!

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

poo
19-03-2007, 07:23 AM
காலையிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்துவிட்டது இந்த செய்தி.. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்!

இவரது இறப்புக்கு பின்னால் மர்மம் ஏதும் இல்லாமல் இருத்தலே கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நல்லது!

உதயசூரியன்
19-03-2007, 07:42 AM
சோதனை..
வேதனை..
வருத்தங்களை பகிர்ந்து கொள்கிறேன்..
வாழ்க தமிழ்

மன்மதன்
19-03-2007, 07:42 AM
இவர் இறப்புக்கும் பாக் தோல்விக்கும் சம்பந்தம் இருக்குதா?

மனோஜ்
19-03-2007, 07:45 AM
பாகிஸ்தானுக்கு இது மிகப்பெறிய இழப்புதான்
ஆழ்ந்த வருத்தங்களுடன் இறைவனை வேண்டுகிறேன்

pradeepkt
19-03-2007, 08:24 AM
இவர் இறப்புக்கும் பாக் தோல்விக்கும் சம்பந்தம் இருக்குதா?
இருக்கலாம்.
மனம் நொந்து அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மாரடைப்போ அல்லது மூளை வெடிப்போ ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மற்றபடி வேறெதுவும் கூடக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அமரன்
19-03-2007, 08:50 AM
இது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த கிரிக்கட் உலகத்துக்கே பேரிழப்பு.

ஆதவா
19-03-2007, 04:47 PM
மிகுந்த துயரமான செய்தி.. தென் ஆப்பிரிக்காவை வலிமையாக மாற்றிய மனிதர். பாகிஸ்தானின் எழுச்சிக்கும் காரணமாக இருந்தவர் துல்லிய கணக்கு விபரங்கள் தொடுப்பவர்.... அவருக்கு கடைசியாக தோல்வியை பரிசாகக் கொடுத்திருக்கிறார்களே!!////

அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

அறிஞர்
19-03-2007, 04:56 PM
மரணத்துக்கு காரணம்.. மிகுந்த வேலை அழுத்தம் தான் காரணம்...

இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு பயிற்சியாளராக வேலை பார்ப்பது என்பது... கடினமான பணி தான்.

ஓவியா
19-03-2007, 05:12 PM
என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

எற்க்கனவே அதிகம் குழம்பிப்போய் இருக்கும் நாட்டில் இதனால் புதிய குழப்பம் வராமல் இருக்கட்டும்.

அறிஞர்
23-03-2007, 12:13 AM
கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டாரா...

புதிய தகவல்கள் வருகின்றன...

அமரன்
23-03-2007, 08:46 AM
ஆமாம். அறிஞரே. அமரர் வுல்மர் அவர்கள் சூதாட்டம் சம்பந்தமான சில தகவல்களை வெளியிட இருந்ததாகவும் அதனால் அவரை சூதாட்டத்துடன் தொடர்புடைய முகவர்கள் கொலைசெய்ததாகவும் முன்னால் கிரிக்கட் வீரரும் இந்நாள் அரசியல்வாதியுமான ஒரு பாகிஸ்தான் பிரஜை சொன்னதாக இங்கிலாந்தின் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஓவியன்
23-03-2007, 09:56 AM
ஆமாம். அறிஞரே. அமரர் வுல்மர் அவர்கள் சூதாட்டம் சம்பந்தமான சில தகவல்களை வெளியிட இருந்ததாகவும் அதனால் அவரை சூதாட்டத்துடன் தொடர்புடைய முகவர்கள் கொலைசெய்ததாகவும் முன்னால் கிரிக்கட் வீரரும் இந்நாள் அரசியல்வாதியுமான ஒரு பாகிஸ்தான் பிரஜை சொன்னதாக இங்கிலாந்தின் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

யாரது அந்த வீரர்?
இம்ரானா??????

leomohan
23-03-2007, 10:04 AM
சினிமாவில் - Underworld
கிரிகெட்டில் - சூதாட்டம்

அமரன்
23-03-2007, 10:10 AM
யாரது அந்த வீரர்?
இம்ரானா??????


பத்திரிகைச் செய்தியில் யாரென்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் வேறு ஒரு செய்தியில் நஸீர் என்பவர் என்று குறிப்பிட்டதாக நண்பர் ஒருவர் சொன்னார்.

அறிஞர்
23-03-2007, 12:19 PM
இப்படி கொலை செய்வது என்பது.... மடத்தனமான செயல்... போலிஸாரின் கண்டுபிடிப்பை பார்க்கலாம்.

அமரன்
23-03-2007, 12:30 PM
இப்படி கொலை செய்வது என்பது.... மடத்தனமான செயல்... போலிஸாரின் கண்டுபிடிப்பை பார்க்கலாம்

ஆம். இப்படியானவர்களைப் பிடித்து நடுரோட்டில் வைத்துச் சுட வேண்டும்..

pradeepkt
23-03-2007, 12:53 PM
ஆம். இப்படியானவர்களைப் பிடித்து நடுரோட்டில் வைத்துச் சுட வேண்டும்..
கொலைக்குக் கொலை...
எனக்கென்னவோ கொலையை விட அதைத் தூண்டியிருக்கும் விஷயத்தை வேரோடு அறுப்பது நலம் என்று தோன்றுகிறது.
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிப்பது தானே அடங்கிவிடும்.