PDA

View Full Version : இந்திய கிரிக்கெட் அணிக்கு......



ஜெயாஸ்தா
18-03-2007, 02:26 AM
முயற்சி செய் நண்பனே முயற்சி செய்....
வெறியோடு விளையாடி வெற்றிக்கு முயற்சி செய்...


முளைக்கும் விதைக்கு முயற்சியில்லை யெனில்
மண் கூட சமாதிதான்...!

பறக்கும் பறவைக்கு முயற்சியில்லை யெனில்
இறக்கை கூட சுமைதான்...!

உதிக்கும் சூரியனுக்கு முயற்சியில்லை யெனில்
என்றும் பகலொளியில்லை.... இருள்தான்...!

நுரைக்கும் அலைக்கு முயற்சியில்லை யெனில்
சமுத்திரமும் சாக்கடைதான்...!


கங்கு கனன்று கனலாவதும்
பொங்கு நீர் புனலாவதும்
செய்யும் முயற்சியினால்தான்...!



முயற்சி செய் நண்பனே முயற்சி செய்....
வெறியோடு விளையாடி வெற்றிக்கு முயற்சி செய்...:icon_b:

மயூ
18-03-2007, 03:30 AM
நேற்று பங்களாதேஷ் கவுத்துட்டாங்களே!!!

ஓவியன்
18-03-2007, 03:41 AM
நேற்று பங்களாதேஷ் கவுத்துட்டாங்களே!!!

ஆமாம் மயூரேசா!, அதனால் தான் ஜே.எம் இந்த பதிப்பைப் பதித்தாரோ என்னவோ?, அவர்கள் நேற்று முயற்சி செய்யவில்லை என்பது என்னவோ உண்மை. வெற்றி பெற்ற பங்களாதேசிற்கு எனது வாழ்த்துக்கள். அவர்களிடமிருந்து இந்தியா நிறையபடிக்க வேண்டி உள்ளது.

மயூ
18-03-2007, 03:44 AM
பார்த்துக்கொண்டிருந்த போது சப்பென்று ஆகிவிடவே தொலைக்காட்சியை அணைத்து விட்டு சென்றுவிட்டேன்...
ஏன்தான் இந்தியா இப்படிச் சொதப்புகின்றதோ தெரியாது!!
இலங்கை உடன் ஆட்டத்தில் என்ன என்ன செய்வார்களோ தெரியாது!!!

ஆதவா
18-03-2007, 04:38 AM
கவிதை அருமை ஜே.எம். முயற்சி செய்தால் நிச்சயம் பலன் உண்டு என்றாலும் இந்திய அணியின் முயற்சி எல்லாம் விளம்பரங்களின் மூலம் பணம் ஈட்டுவது மட்டும்தான் போலத்தெரிகிறது. வார்த்தை கோர்ப்புகள் அருமையாக இருக்கின்றன. இந்திய அணிக்கு இந்த கவிதை எட்டட்டும்.. குறிப்பாக சேவக்கிற்கு எட்டட்டும்..

நல்ல முயற்சி செய்து வெற்றி பெற்ற வங்காளதேசத்திற்கு அதிகப்படியான பாராட்டுக்கள்..:aktion033:

வாட்மோரின் பயிற்சியில் அந்த அணியின் உருவம் மிகத் தெளிவாக வந்திருக்கிறது. கோப்பை கைப்பற்ற வாய்ப்பில்லை என்றாலும் முயற்சி செய்கிறார்கள்... இந்தியாவுக்கு முயற்சி என்றால் என்ன என்றே தெரியாது.:ohmy: பேசாமல் நடையக் கட்டுவது நல்லது...:sport009:

ஒரு இடத்தில் எழுத்துப் பிழை இருக்கிறது. கவனிக்கவும்./. :innocent0002:

ஜெயாஸ்தா
18-03-2007, 08:51 AM
நேற்று பங்களாதேஷ் கவுத்துட்டாங்களே!!!

அதைப் பார்த்த பின்புதான் இதை எழுத தோன்றியது. பெர்முடாவையாவது வெல்வார்களா என்று பார்ப்போம்.

ஷீ-நிசி
18-03-2007, 09:00 AM
ஒருவேளை இந்தக் கவிதையை பங்களாதேஷ் படிச்சிட்டாங்களோ என்னவோ....

சொதப்புறதுக்கு பெயர் பெற்ற அணினா அது நம்ப அணிதான்.

Mathu
18-03-2007, 09:16 AM
நல்ல கவிதை எட்டட்டும் இந்திய அணிக்கு.

போராடும் குணம் இவர்களிடம் இல்லை,

ஒரு சந்தோசமான செய்தி பாகிஸ்தான் அணியும் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பது.

என்ன செய்வது நமக்கு ஒரு கண் போனால்எதிரிக்கு இரண்டு கண்ணும் போகணும் :traurig001:

மயூ
18-03-2007, 04:23 PM
நல்ல கவிதை எட்டட்டும் இந்திய அணிக்கு.

போராடும் குணம் இவர்களிடம் இல்லை,

ஒரு சந்தோசமான செய்தி பாகிஸ்தான் அணியும் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பது.

என்ன செய்வது நமக்கு ஒரு கண் போனால்எதிரிக்கு இரண்டு கண்ணும் போகணும் :traurig001:
கொள்கை புல்லரிக்க வைக்குதுங்கோ!!! :mini023:

அன்புரசிகன்
18-03-2007, 07:02 PM
கோப்பை கைப்பற்ற வாய்ப்பில்லை என்றாலும் முயற்சி செய்கிறார்கள்...

எதை வைத்துக் கூறுகிறீர்கள். பங்களாதேஷ் அணிக்கு அந்த திறமை இல்லையா? ஒருகாலத்தில் இப்படி இருந்த அணிதான் பின்னால் உலககோப்பையை கைப்பற்றியது. இலங்கையைத்தான் சொல்கிறேன். வாட்மோர் நன்றாக பயிற்சியளித்ததன் பயனை அடைகிறார். அயர்லாந்துகூட பாகிஸ்தானை வென்றுள்ளது. இவையெல்லாம் அதிர்ஷ்டம் அல்ல. அவர்களின் திறமையின் வெளிப்பாடு. நெதர்லாந்து கூட தன் திறமைகளை நன்கு வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. (தற்சமயம் அவுஸ்திரேலியா-நெதர்லாந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது)

வல்லவர்கள் வெல்வார்கள் என்பது உலகளாவிய உண்மை. தனக்காக விளையாடுவதிலிலும் அணிக்காக, நாட்டுக்காக விளையாடுபவர்கள் என்றும் நிலைப்பர்.

மன்மதன்
18-03-2007, 07:31 PM
எதை வைத்துக்கூறுகிறீர்கள். பங்களாதேஷ் அணிக்கு அந்த திறமை இல்லையா? ஒருகாலத்தில் இப்படி இருந்த அணிதான் பின்னால் உலககோப்பையை கைப்பற்றியது. இலங்கையைத்தான் சொல்கிறேன். வாட்மோர் நன்றாக பயிற்கியளித்ததன் பயனை அடைகிறார். அயர்லாந்துகூட பாக்கிஸ்தானை வென்றுள்ளது. இவை யெல்லாம் அதிர்ஷ்டம் அல்ல. அவர்களின் திறமையின் வெளிப்பாடு. நெதர்லாந்து கூட தன்திறமைகளை நன்கு வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

மிகச்சரியாக சொன்னீர்கள் அன்புரசிகன். :icon_b: :aktion033:

ஆதவா
19-03-2007, 03:51 AM
எதை வைத்துக் கூறுகிறீர்கள். பங்களாதேஷ் அணிக்கு அந்த திறமை இல்லையா? ஒருகாலத்தில் இப்படி இருந்த அணிதான் பின்னால் உலககோப்பையை கைப்பற்றியது. இலங்கையைத்தான் சொல்கிறேன். வாட்மோர் நன்றாக பயிற்சியளித்ததன் பயனை அடைகிறார். அயர்லாந்துகூட பாகிஸ்தானை வென்றுள்ளது. இவையெல்லாம் அதிர்ஷ்டம் அல்ல. அவர்களின் திறமையின் வெளிப்பாடு. நெதர்லாந்து கூட தன் திறமைகளை நன்கு வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. (தற்சமயம் அவுஸ்திரேலியா-நெதர்லாந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது)

வல்லவர்கள் வெல்வார்கள் என்பது உலகளாவிய உண்மை. தனக்காக விளையாடுவதிலிலும் அணிக்காக, நாட்டுக்காக விளையாடுபவர்கள் என்றும் நிலைப்பர்.


நண்பரே நீங்கள் சொன்ன கருத்துக்கு உடன்படுகிறேன். இன்று அதிர்ச்சி தரக்கூடிய அளவுக்கு ஆளாகியிருக்கும் இந்த அணிகளின் வளர்ச்சியே கிரிக்கெட்டின் வளர்ச்சி..

அயர்லாந்தின் அபார வளர்ச்சியும் கவனிக்கத்தக்கது.. இன்னும் அடுத்தடுத்து நிறைய போட்டிகள் விளையாடி தன் திறமையை தக்கவைத்துக் கொள்ளவேண்டும்.

நன்றி.... சுட்டிக்காட்டியமைக்கு,:sport-smiley-018:

aren
19-03-2007, 04:41 AM
அத்தனை அணிகளும் சிறப்பாகவே ஆடுகிறார்கள். சிலருக்கு அனுபவம் இல்லை, ஆகையால் எளிதாகவே சுருண்டுவிடுகிறார்கள் அவ்வளவே. இன்னும் நிறைய மாட்சுகள் அவர்களும் ஆடினால் அவர்களுடைய திறமைகளும் வெளிப்படும்.

ஒரு காலத்தில் இந்தியாவும், நியூஜிலாந்தும் அப்படி இருந்தவைதான். அதுபோல் இலங்கையும் அப்படி இருந்ததுதான். எம்.ஜே. கோபாலன் கோப்பைக்காக அவர்கள் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டுடன் ஆடியவர்கள்தான். சில மாட்களில் தமிழ்நாடும், சில மாட்களில் இலங்கையும் வென்றிருக்கின்றன. ஆனால் அதே இலங்கை அணி இன்றைய நிலையில் உலகில் இருக்கும் எந்த டீமையும் வெல்லும் திறமை படைத்து விளங்குகிறது.

ஆகையால் புதிதாக களம் இறங்கியிருக்கும் இந்த டீம்களுக்கு இன்னும் சில வருடங்கள் கொடுக்கலாம் அவர்களும் நிச்சயம் பிரகாசிப்பார்கள் என்பது அயர்லாந்து, பங்களாதேஷ், கென்யா ஆகிய டீம்கள் விளையாடும் விதத்திலிருந்தே தெரிகிறது. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

pradeepkt
19-03-2007, 05:25 AM
இப்போதாவது இந்திய கிரிக்கெட்டுக்கு இவர்கள் கொடுக்கும் அனாவசிய பில்டப்பைக் குறைப்பது நலம். ஒரு பக்கம் அணிக்கு அதீத மரியாதையும் பணத்தையும் தருவது.... இன்னொரு பக்கம் தோல்வி வரும்போது தோனியின் பாதி கட்டிய வீட்டை நொறுக்குவது... இது இரண்டுமே தவறு...

எனக்கு நல்ல வேளையா கிரிக்கெட்டு பிடிக்கறதில்லை. ஆனால் வீட்டில் மற்ற அனைவருக்கும் அப்படி ஒரு வெறி... இந்தியா தோத்ததும் போதும் என் ரெண்டு தம்பிகளும் அடுத்த நாள் என்னமோ உலகமே கவுந்தது மாதிரி உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள் இருந்த சோகத்தில் மதியம் எனக்குக் கிடைக்கவிருந்த கோழிக் குழம்பு கிடைக்காமல் போனது... ஹிஹி.. (பங்களாதேஷ்கிட்டயே தோத்துட்டோமாம்... உனக்குக் கோழிக் குழம்பு கேக்குதா???) :D

pradeepkt
19-03-2007, 05:27 AM
சொல்ல மறந்துட்டேன்...

இத்தனைக்கு அப்புறமும் கவிதை எழுதி ஆதரவு தெரிவிக்கும் ஜே எம்முக்கு ஜே... :icon_good:

மன்மதன்
19-03-2007, 07:52 AM
இவர்கள் இருந்த சோகத்தில் மதியம் எனக்குக் கிடைக்கவிருந்த கோழிக் குழம்பு கிடைக்காமல் போனது... ஹிஹி.. (பங்களாதேஷ்கிட்டயே தோத்துட்டோமாம்... உனக்குக் கோழிக் குழம்பு கேக்குதா???) :D

ரொம்ப முக்கியம்.. எப்ப பாரு :food-smiley-007:

pradeepkt
19-03-2007, 08:29 AM
ரொம்ப முக்கியம்.. எப்ப பாரு :food-smiley-007:ஏம்ப்பா அவங்க ஆடின ஆட்டத்துக்கு சோகத்தைக் குறைக்கவாச்சும் எனக்கு :food-smiley-002: தேவைப்படாதா??? ஹி ஹி
ஆட்டத்துக்கு அப்புறம்தான் :icon_drunk: தேவைப்பட்டிருக்கும்...

அமரன்
19-03-2007, 08:51 AM
இந்திய அணியை அதிகளவில் எதிர்பார்த்தேன். ஆனால் இப்படி ஏமாத்திட்டாங்களே.