PDA

View Full Version : Resume -தமிழ் சொல் யாது..



மீனாகுமார்
17-03-2007, 10:41 PM
Resume/Biodata -இதற்கு நிகரான தமிழ் சொல் யாது ... - நிறைய இடத்தில் தேடி விட்டேன் பிடிபடவில்லை..

இளசு
17-03-2007, 10:56 PM
நல்ல கேள்வி நண்பரே..

நிச்சயம் நல்ல பதில் நம் நண்பர்கள் தருவார்கள்..

காத்திருப்போம்...

மயூ
18-03-2007, 03:45 AM
நான் அறிய சுயவிபரக் கோவை என்று இலங்கையில் பயன்படுகின்றது!!!
நல்ல சொல் என்று நினைக்கின்றேன்!

ஆதவா
18-03-2007, 04:43 AM
மயூரேசன் சொன்னதுபோல சுயவிபரக்கோவை அல்லது சுயவிபரம்..

நானாக வைத்த பெயர்கள் : தற்பேழை, தற்குறிப்பு. சுயதம்பட்டம்

மீனாகுமார்
18-03-2007, 12:42 PM
அத்தனை பெயர்களும் அருமை... சுயவிபரம் தற்குறிப்பு என்பது சின்னதாகவும் அற்புதமாகவும் இருக்கிறது... என் பழைய கணித கோப்புக்களையெல்லாம் முழுவதுமாக - ஓர் ஆங்கில எழுத்து இல்லாது - பெயர் மாற்றம் செய்து வருகிற வேளையில் இந்த வார்த்தைக்கு திக்குமுக்காடிவிட்டேன்.. மிக்க நன்றி... மேலும் mp3 பாடல்களின் பெயர்களும் அதன் உள்ளே உள்ள tags ஐயும் தமிழில் மொழி மாற்றம் செய்து கொண்டிருக்கிறேன்...

ஓவியா
18-03-2007, 10:17 PM
மயூரேசன் சொன்னதுபோல சுயவிபரக்கோவை அல்லது சுயவிபரம்..

நானாக வைத்த பெயர்கள் : தற்பேழை, தற்குறிப்பு. சுயதம்பட்டம்

ஆதவா தூள்பா (முக்கியமா சுயதம்பட்டம்:music-smiley-009: )

மிக்க நன்றி

pradeepkt
19-03-2007, 06:03 AM
ஆதவா தூள்பா (முக்கியமா சுயதம்பட்டம்:music-smiley-009: )

மிக்க நன்றி
ஒரு ஸ்மைலி வந்துறக் கூடாதே... உடனே தம்பட்டம் அடிக்க ஆரம்பிச்சிருவீங்களே...

தற்குறிப்பு என்பது பயோடேட்டாவின் முன் வரும் Personal Synopsis என்பதற்குச் சரியாக இருக்கலாம். ஆனால் முழு விவரங்களும் தரும் ஆவணத்திற்குச் சுய விவரக் கோவை (விபரம் என்பது சரியா?) என்பதுதான் சரி என்று படுகிறது!

pradeepkt
19-03-2007, 06:04 AM
மயூரேசன் சொன்னதுபோல சுயவிபரக்கோவை அல்லது சுயவிபரம்..

நானாக வைத்த பெயர்கள் : தற்பேழை, தற்குறிப்பு. சுயதம்பட்டம்
ஏன் இப்படி பேழைன்னு பேர் வச்சேன்னு தெரிஞ்சுக்கலாமா???

lolluvathiyar
19-03-2007, 02:26 PM
தற்குறிப்பு என்பது பொருத்தமான வார்த்தையாக
இருந்தாலும் புரிய நேரமாகும்,

தப்பட்டம் என்பது நகைசுவையாக மட்டுமே ஏற்று கொள்ளகூடிய சொல்
சுயவிபரம் என்பது சால சிற்ந்த சொல்
Resume என்ற ஆங்கில வார்த்தையையே தவறானது
Resume எனறால் நிறுத்திய வேலையை தொடர்வது என்றல்லவா பொருள்

அறிஞர்
19-03-2007, 02:31 PM
லொள்ளு வாத்தியர் சொல்வது போல்.
சுயவிபரம்... என்பது எளிதாக உள்ளது.

ஓவியன்
05-04-2007, 09:15 PM
மயூர் சொன்னமாதிரி நம் நாட்டிலே சுய விபரக் கோவை என்று தான் சொல்லுவோம்.

விகடன்
09-04-2007, 05:22 PM
சுயவிபரக்கொத்து என்று கேள்விப்பட்டதாக ஒரு ஞாபகம்.

mukilan
13-04-2007, 11:59 PM
தற்குறிப்பு என்பது பொருத்தமான வார்த்தையாக
இருந்தாலும் புரிய நேரமாகும்,

தப்பட்டம் என்பது நகைசுவையாக மட்டுமே ஏற்று கொள்ளகூடிய சொல்
சுயவிபரம் என்பது சால சிற்ந்த சொல்
Resume என்ற ஆங்கில வார்த்தையையே தவறானது
Resume எனறால் நிறுத்திய வேலையை தொடர்வது என்றல்லவா பொருள்

Resume' ஆங்கில வார்த்தை அல்ல. அது ஃப்ரெஞ்சில் இருந்து இரவல் வாங்கப்பட்ட வார்த்தை(பெயர்ச்சொல்). அதை அழைக்கும் போது "ரெஷ்யூமே" என்றும் ஆங்கில வார்த்தை (ரெஸ்யூம்- மீண்டும் துவங்கு (வினைச்சொல்) என்றும் அழைக்க வேண்டும். சுயவிபரக்கோவை என்று எனக்கு ஏற்கனவே மயூரேசன் சிங்களப் பெட்டையோடு வேலை தேடின படலத்தில் கூறி விட்டானே!!:grin:

Mano.G.
14-04-2007, 12:59 AM
ஒரு ஆங்கில வர்த்தைக்கு இத்தனை
அர்த்தங்களா? இப்படி சிந்திக்க யோசிக்க
நம் மன்ற மணிகளால் தான் முடியும்
அபாரம் அருமை,

எனக்கு சுயவிபரகோப்பு அல்லது சுயவிபரகோவை இரண்டும்
உபயோகிக்கலாம் என தோன்றுகிறது

மனோஜ்
15-04-2007, 08:53 AM
சுயதகவல் என்பது சரியா நண்பர்களே

அன்புரசிகன்
15-04-2007, 01:26 PM
சுயவிபரக்கோவை , ஆண்டு 7 / 8 இல் தயாரித்த ஞாபகம். ஆங்கிலத்தில் தயாரிக்கச்சொல்லி பரீட்சையில் வந்தபொழுது my self கட்டுரை எழுதி தப்பிய ஞாபகம்....

சுயவிபரக்கோவை கொத்து பேழை எல்லாமே ஏறத்தாழ ஒரே சொல்லைத்தான் குறிக்கிறது. சுய தம்பட்டம் நகைச்சுவையாகத்தோன்றினாலும் அது கூட தூய தமிழாக இருக்கலாம்.

தங்கவேல்
02-05-2007, 02:06 AM
எனது நண்பர் வீட்டில் உள்ள பிரிட்சினை சரி செய்ய மெக்கானிக் வந்திருந்தார். சரி செய்து விடுகிறேன் என்றார். என்னஎன்னவோ செய்தார். ஆனால் முடியவில்லை.
அதை எனது நண்பர் டிசப்பாஇன்மென்ட் என்று சொன்னார். அதற்கு சரியான தமிழ் வார்த்தை என்ன.

mukilan
02-05-2007, 05:41 AM
Disappointment- பெருத்த ஏமாற்றம் (ஏமாற்றம்)