PDA

View Full Version : எது கொடுமை?



lenram80
17-03-2007, 03:36 PM
பிரசவத்தின் போது
தாயையோ அல்லது சேயையோ
எவனுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ
எமனுக்குப் பிடித்துப் போனால்,
வாழ்நாள் முழுதும் இவர்களில் ஒருவர்
வடிக்கும் கண்ணீர் கொடுமை!

பள்ளி செல்லும் வயதில்
தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும்,
தேநீர் கடைகளிலும்
வேலைக்கு வாக்கப்படும்
வாண்டுகளின் வாழ்வு கொடுமை!

இளம்பிள்ளை வாதத்திற்கு
எதிர்வாதம் செய்ய முடியாமல்
அதன் பிடிவாதம் காரணமாய் அதனிடம்
பிடிபடும் பிஞ்சுகள் கொடுமை!

காற்றை கதாநாயகனாக்கி - புயல்!
மேகத்தை நாயகியாக்கி - வெள்ளம்!
சூரியனை வில்லனாக்கி - வறட்சி!
இடையில் ஒரு குலுக்கு பாட்டாக - பூகம்பம்!
என வெற்றிப் படங்களை எடுக்கும்
இயக்குனர் இயற்கை கொடுமை!

கண்ணில் தெரியாத கணிமங்களைக் கசக்கி
கதிர்வீச்சு என்னும் சாறு எடுத்து
மண்ணில் பாய்ச்சி மானுடம் அழிக்கும்
அணு அறிவியல் கொடுமை!

அதிகாரத்தை அலாவுதீன் பூதமாக்கி
அநியாயங்களை அறுவடை செய்து
அக்கிரமங்களை ஆட்சி செய்ய விடும்
அதர்ம அரசியல் கொடுமை!

ஃகோபி அன்னனுக்குக் கூட இவ்வளவு தெரிந்திருக்குமா?
சந்தேகம் தான்!
இவன் வாழ்க்கையே பிரச்சனை! அதை விடுத்து
ஈ மொய்க்கும் கடைத் தெருவில் அமர்ந்து கொண்டு
இராக்கை பற்றி வீராப்பாய் பேசி
கல்லூரிக் கல்வியை சிகரெட் புகையால்
கறுக்கிக் கொண்டிருக்கும் - சில
இந்திய இளைஞன் கொடுமை!

இப்படி கொடுமைகளை பட்டியல் போட்டு
பக்கத்து நண்பனிடம் 'இதைவிடக் கொடுமை எது?என்றேன்!
அவன் சொன்னான்...!!!

காதலிக்கத் தகுதி இருந்தும்
காதலிக்க மனம் இருந்தும்
காதலிக்க வயது இருந்தும்
காதலிக்கக் 'காதலி' கிடைக்காமல் போவது தான் - கொடுமை!

அடுத்தவனிடம் கேட்டால், அவன் சொன்னான்...

ஜாகத்தைப் பார்க்க வேண்டாம்!
என்று உனக்கு காதலிக்கப் பிடிக்கிறதோ
அன்று உனக்கு சனி பிடிக்கிறது!
ஆளைக் கவர்ந்து கவுக்கும் காதல் - கொடுமை!

ஆக மொத்தம், அவனவனுக்கு அவனவனே கொடுமை!
இதை விடுத்து, அடுத்ததை கொடுமை சொல்லல் மடமை!!!

இளசு
17-03-2007, 06:43 PM
பாராட்டுகள் லெனின்..

மிக அழகாக பல களங்களைப் படம்பிடித்து
மிக மிக யதார்த்தமாக முடித்திருக்கிறீர்கள்..

மனோஜ்
17-03-2007, 06:49 PM
கொடுமைகளை குறுபாடுகளுடன் கூறியது அருமை லெனின்