PDA

View Full Version : அவள் வருவாளா?



ஜெயாஸ்தா
16-03-2007, 04:17 PM
வேனிற் காலத்தில்
ஒரு இலையுதிகாலம்...!

வெறுமையான மனதினுள்
வேதனை நினைவுகள்...
பேசுகின்ற உணர்வுகள்
பேனாவையெடுத்ததும்
வாய் மூடி மௌனியாகும்....!

கண்களின் கனவுகள்
பெருமூச்சின் வாயிலாய்
கரைந்து போகும்...!

நிர்மலமான வானை
நிமிர்ந்து பார்த்தால்
நிலாப்பெண்ணின் நினைவுகள்
நெஞ்சை நெருடும்....!

நெஞ்சு நிறைய
சோகத்தோடு......
காத்திருக்கிறேன்....
வருவாளா என் காதலி.........

காத்திருந்து களைத்துப்போய்
என் காதலியை தேடினேன்....
காற்றடித்து பெய்த மழை கூட
என் மோனதவத்தை கலைக்கவில்லை...!

கண்களை செலுத்தி
மின்னலினூடாக....
என் காதலியை தேடினேன்....!
மின்னலும் வெட்டி என்
கண்களும் கெட்டதுதான் மிச்சம்.....!

பூஜிக்க காத்திருந்தவன்...
இப்போது பூஜ்யமாய்...!

ஆதவா
16-03-2007, 04:34 PM
வணக்கம் ஜெ.எம். மன்றத்தில் முதல் கவிதை. ... சிறப்பு பாராட்டுக்கள்.

காதல் கவிதை என்றாலும், பழைய கரு என்றாலும் புதுமையான வடிவில் அழகாக நேர்த்தியாக இருக்கிறது.

இனி...

வேனிற் காலத்தில்
ஒரு இலையுதிகாலம்...!

வெறுமையான மனதினுள்
வேதனை நினைவுகள்...
பேசுகின்ற உணர்வுகள்
பேனாவையெடுத்ததும்
வாய் மூடி மௌனியாகும்....!

மனப் போராட்டம். காதலிக்காக ஏற்படும் காதல் போராட்டம். அவள் முகம் வரும் வரை எந்த மனதுதான் நிறைந்து இருக்கும்?.. உணர்வுகள் மெளனிப்பது அருமையான கற்பனை...

கண்களின் கனவுகள்
பெருமூச்சின் வாயிலாய்
கரைந்து போகும்...!

அட// வரிகள் அருமை ஜெம். கரைந்துபோன கனவுகளுக்கு பெருமூச்சு துணையாக... பிரமாதம்

நிர்மலமான வானை
நிமிர்ந்து பார்த்தால்
நிலாப்பெண்ணின் நினைவுகள்
நெஞ்சை நெருடும்....!

காத்திருக்கும் போது ஏற்படும் உணர்வுகள். நிலவை முறைத்தலும் அவளை அழைத்தலும் இருப்பதுதான்.

நெஞ்சு நிறைய
சோகத்தோடு......
காத்திருக்கிறேன்....
வருவாளா என் காதலி.........

பார்க்கலாம்.. சோகத்தின் அனல் பட்டு எழுவாளா அல்லது உதாசீனமா என்று..

காத்திருந்து களைத்துப்போய்
என் காதலியை தேடினேன்....
காற்றடித்து பெய்த மழை கூட
என் மோனதவத்தை கலைக்கவில்லை...!

ம்ம்ம்.... காதல் வலிமையானது என்று சொல்வார்களே! அம்மாதிரிதான். காத்திருத்தல் என்பது காதலில் ஒரு சுகம். அதிலும் இயற்கைக்கும் மீறி என்றால் அது மிகைப்பட்ட காதல். .. காதலி வந்தாளா இல்லையா?

கண்களை செலுத்தி
மின்னலினூடாக....
என் காதலியை தேடினேன்....!
மின்னலும் வெட்டி என்
கண்களும் கெட்டதுதான் மிச்சம்.....!

ஓ!!!!:1: அவள் வரவில்லையா?. மின்னலின் ஊடாக ஏன் பார்க்கிறீர்கள்.... கண்கள் கெட்டுப்போகுமே! :innocent0002: . கடை இரண்டு வரிகள் மிகவும் அருமை..

பூஜிக்க காத்திருந்தவன்...
இப்போது பூஜ்யமாய்...


ஜே.எம்.. உங்கள் முதல் கவிதை மிகவும் அருமை.:icon_b: . காதலிக்காக காத்திருத்தலும் நிலவுக்காக காத்திருத்தலுமாக இருவேறு அர்த்தங்களுடன் கவிதை படித்து வந்தேன். ..

மேலும் எழுத வாழ்த்துக்கள். :4_1_8:

அமரன்
16-03-2007, 04:35 PM
அருமை ஜே.எம் ஆரம்பமே அசத்தலாக ஆரம்பித்து விட்டீர்கள். தரமானதாகவும் சுவையானதாகவும் இருக்கின்றது. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

இளசு
16-03-2007, 10:38 PM
மழையும் கரைக்கவில்லை ..
மின்னல் வெட்டிய இருட்டும் மறைக்கவில்லை..

அவளின் மேல் வைத்த அன்பை..


களவாட முடியாதது.. தீயில் எரியாதது என
கல்வியைச் சொல்வதுண்டு..
அதையும் மீறிய பேரிடர் வந்தாலும்
அழியாதது காதல் காத்திருப்பு...


பாராட்டுகள் ஜே,எம்.

தொடர்ந்து உங்கள் படைப்புகளை எதிர்பார்க்க வைக்கிறது
உங்கள் மன்றத்து முதல் கவிதை....