PDA

View Full Version : நான் ஜேஎம்

ஜெயாஸ்தா
16-03-2007, 03:21 PM
வணக்கம் நண்பர்களே.... நான் ஜேஎம். எனது தொழில் மென்பொருள் உருவாக்குதல். மீதி நேரங்களில் கவிதை, கதை ரசிப்பதுண்டு. விவாதங்களில் பங்குபெருதல் மிகப்பிடித்தமான ஒன்று. இந்தியாவின் தென்கோடியில் வள்ளுவனின் பாதங்களின் அருகினில் இருந்து உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இதன் மூலம் புதிய நட்புகள் பல பூக்கும் என நம்புகிறேன். நன்றி...!

அறிஞர்
16-03-2007, 03:23 PM
வாருங்கள் ஜே.எம் தங்களை சில நாட்களாக ஆன்லைனில் பார்த்தேன்...

ரசித்து... இப்பொழுது இங்கு எங்களுடன் இணைந்துள்ளீர்கள்.....

புதிய நட்புகள் பல கிடைக்கும்...

பிடித்தமான பகுதிகளை படித்து, கருத்துக்களை அள்ளிக்கொடுங்கள்.

leomohan
16-03-2007, 03:31 PM
வணக்கம் நண்பர்களே.... நான் ஜேஎம். எனது தொழில் மென்பொருள் உருவாக்குதல். மீதி நேரங்களில் கவிதை, கதை ரசிப்பதுண்டு. விவாதங்களில் பங்குபெருதல் மிகப்பிடித்தமான ஒன்று. இந்தியாவின் தென்கோடியில் வள்ளுவனின் பாதங்களின் அருகினில் இருந்து உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இதன் மூலம் புதிய நட்புகள் பல பூக்கும் என நம்புகிறேன். நன்றி...!
வாருங்கள் ஜேஎம். தங்கள் வரவு நல்வரவாகட்டும். :icon_clap:

ஆதவா
16-03-2007, 03:56 PM
வாருங்கள் ஜே. எம். உங்கள் வரவு நல்வரவு./.. :icon_clap:

அமரன்
16-03-2007, 03:57 PM
வாருங்கல் ஜே எம். உங்கலால் முடிந்ததை மன்றத்தில் எழுதுங்கள்.

மன்மதன்
16-03-2007, 04:32 PM
நல்வரவு ஜேஎம் :icon_give_rose: ...
நாங்க எல்லோரையும் 'ஸ்' சேர்த்து செல்லமா கூப்பிடுவோம்.. உங்களை அப்படி கூப்பிடமுடியாதே..:ohmy: :ohmy:

paarthiban
16-03-2007, 05:25 PM
வாங்க வாங்க ஜே .எம். வணக்கம்.

இளசு
16-03-2007, 10:16 PM
நல்வரவு நண்பர் ஜே.எம். அவர்களே..

அழகிய தமிழில் அன்பான அறிமுகம் கவர்கிறது..

நல்ல நண்பர்கள் நிச்சயம் கிடைப்பார்கள் நம் மன்றத்தில்..

நல்ல பதிவுகள் இட்டு, கலந்து உயர வாழ்த்துகள்!

poo
17-03-2007, 05:16 AM
வரவேற்கிறோம் நண்பரே.

உங்கள் தமிழ் ஆர்வத்தை இங்கே பசியோடிருக்கும் எங்களுக்கு விருந்தாக்குங்கள்!

மனோஜ்
17-03-2007, 07:38 AM
வருக வருக உங்கள் வரவு நல் வரவாக வாழ்த்துக்கள்

ஓவியன்
17-03-2007, 09:43 AM
வள்ளுவனின் பாதங்களில் இருந்து வந்திருக்கும் முத்தே வருக வருக!

ஓவியா
17-03-2007, 03:32 PM
வந்தனம் ஜே.எம்.

வருக வருக வருகவே

உங்கள் வரவு நல்வரவாகட்டும்.:082502hi_prv:

rmsachitha
19-03-2007, 07:35 AM
வாங்க ஜே எம் நாங்க முன்னாடியே வந்துட்டோம்

pradeepkt
19-03-2007, 08:23 AM
வணக்கம் ஜே எம்.
கன்னியாகுமரியில் இருந்து வருகிறீர்களா?
இப்போது எங்கே இருக்கிறீர்கள்?
மன்றத்தில் என்றும் கலந்திருக்க வாழ்த்துகள்

அன்புரசிகன்
19-03-2007, 11:04 AM
வாங்க ஜே.:082502hi_prv:

உதயசூரியன்
19-03-2007, 12:38 PM
வாங்க ஜே எம் நாங்க முன்னாடியே வந்துட்டோம்

வாருங்கள்..

நாங்க அதுக்கும் முன்னாடியே வந்துட்டோம்ல.....
வாழ்க தமிழ்

praveen
20-03-2007, 06:55 AM
வாங்க ஜே எம் நாங்க முன்னாடியே வந்துட்டோம்

வாருங்கள்..

நாங்க அதுக்கும் முன்னாடியே வந்துட்டோம்ல.....
வாழ்க தமிழ்

தமிழ் ஆர்வலர்கள் எல்லாம் இங்கு வந்து தானே ஆகவேண்டும். என்ன நாம் நமக்கு முன்னமே தெரிந்த பெயரிலே இங்கு வந்துள்ளோம்.

நல்வரவு ஜேஎம் :icon_give_rose: ...
நாங்க எல்லோரையும் 'ஸ்' சேர்த்து செல்லமா கூப்பிடுவோம்.. உங்களை அப்படி கூப்பிடமுடியாதே..:ohmy: :ohmy:

ஏன் மன்மதன் ஜே+எம்+ஸ் சேர்த்து ஜேம்ஸ் என்று கூப்பிடலாமே.

உங்களுக்கு பதிலுரைப்பதில் நம் புது இடத்திற்கு வருகை தந்த பழைய நண்பரை வரவேற்க மறந்துவிட்டேன்.

வாருங்கள் JM உங்களை வருக வருக என இரு கரம் கூப்பி நண்பர்களுடன் வரவேற்கிறேன்.

ராகீங் எல்லாம் கிடையாது, அதனால் தளத்தில் எல்லா இடமும் சென்று பார்த்து பின் உங்கள் பங்களிப்பை தொடங்குங்கள்.

மயூ
20-03-2007, 06:30 PM
வாங்க..
உங்கள் வரவு நல்வரவாகட்டும்...

lolluvathiyar
21-03-2007, 03:23 PM
ஏன் ஜெஎம் அவதாரை கானும்
உங்களை எப்படி அடையாளம்
கண்டு கொள்வது

விகடன்
22-03-2007, 08:14 PM
வாருங்கள் ஜேம் வாருங்கள்.

உங்களின் உழைப்பும் எங்களுக்குத் தேவை.

ஜெயாஸ்தா
21-09-2007, 02:51 PM
ரொம்ப நாளாக இந்தத்திரியை பார்க்காமலே இருந்துவிட்டேன். வரவேற்ற அனைத்து நட்புகளுக்கும் நன்றி...! நன்றி...! நன்றி...!

பூமகள்
21-09-2007, 03:24 PM
வாருங்கள் ஜே.எம். உங்களின் கவிச்சமர் கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
அழகான கருத்துக்கள் பொதிந்த உங்களின் படைப்புக்களை மன்றம் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.
வந்து அசத்துங்கள் சகோதரரே..!!
வாழ்த்துக்கள்.

அரசன்
21-09-2007, 03:28 PM
வருக ஜேஎம் நம் மன்ற நட்பு படலம் எங்கும் பரவ செய்யலாம்.

நுரையீரல்
30-09-2007, 05:58 AM
ஜே. எம் அவர்களே இங்கு வந்து எதைக்கற்று கொண்டீர்கள்?.
பண்பான உங்களின் அழகான அறிமுகத்திரியில் பதிப்பது பெருமை தரும் விஷயமே. ஆனால், என்ன எழுதுவதென்று தான் தோனவில்லை. எனக்குப் பிடித்தவர்களுக்கு ஒரு 'ஓ' போடுவது வழக்கம்.

அந்தமுறையில், விண்ணை முட்டும் ஒலி வேகத்துடன், பூமியே அதிரும் சப்தத்துடன் ஒரு 'ஓ........' போடுகிறேன்.

ஜெயாஸ்தா
30-09-2007, 06:23 AM
வரவேற்பிற்கு நன்றி அரசன்..!

ஜே. எம் அவர்களே இங்கு வந்து எதைக்கற்று கொண்டீர்கள்?.
பண்பான உங்களின் அழகான அறிமுகத்திரியில் பதிப்பது பெருமை தரும் விஷயமே. ஆனால், என்ன எழுதுவதென்று தான் தோனவில்லை. எனக்குப் பிடித்தவர்களுக்கு ஒரு 'ஓ' போடுவது வழக்கம்.

அந்தமுறையில், விண்ணை முட்டும் ஒலி வேகத்துடன், பூமியே அதிரும் சப்தத்துடன் ஒரு 'ஓ........' போடுகிறேன்.

அன்பு நண்பர் ராஜாவுக்கும் நன்றி. இங்கு வந்து எத்தனையோ விசயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். எதைச் செல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு எண்ணற்ற விசயங்கள். இந்த கற்றல் தொடர்ந்து.....கொண்டிருக்கிறது. மேலும் என்னை வரவேற்று தாங்கள் போட்ட 'ஓ...'விற்கு மிகவும் நன்றி.

நுரையீரல்
30-09-2007, 07:21 AM
அன்பு நண்பர் ராஜாவுக்கும் நன்றி. இங்கு வந்து எத்தனையோ விசயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். எதைச் செல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு எண்ணற்ற விசயங்கள். இந்த கற்றல் தொடர்ந்து.....கொண்டிருக்கிறது.

இங்கு கற்றவற்றை கூச்சப்படாமல் பட்டியலிடலாம் ஜே.எம் அவர்களே. (கொஞ்சம் சிரித்துக் கொள்கிறேன்.....)

ஜெயாஸ்தா
30-09-2007, 07:34 AM
இங்கு கற்றவற்றை கூச்சப்படாமல் பட்டியலிடலாம் ஜே.எம் அவர்களே. (கொஞ்சம் சிரித்துக் கொள்கிறேன்.....)

இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை ராஜா. கணிணி மற்றும் மென்பொருள் சம்பந்தமான எண்ணற்ற சந்தேகங்ளையும் இங்கு நிவர்த்தி செய்ய முடிகிறது. என்ன சந்தேகம் எழுப்பினாலும் அதை பெரும்பாலும் 90 சதவீதம் நமது அறிவார்ந்த நண்பர்கள் தீர்த்து வைத்து விடுகிறார்கள். ஆன்மீக பகுதியின் மூலம் அனைத்து மதங்களையும் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஏன் நான் சார்ந்த மதத்திலுள்ள ஒரு சில அறியாத விசயங்களை கூட நம் மன்றம் வந்த பின் அறிந்து கொண்டேன். சில நண்பர்களின் அனுபவகட்டுரைகள் மூலம் என் அறிவை விசாலமாக்கிக்கொள்கிறேன். கவிதைகள் மூலமும் கதைகள் மூலமும் சில உணர்வுகள், சில அனுபவங்கள், கற்க முடிகிறது. பொதுவிவாதம் மூலம் நம் சிந்தைக்கு நல்ல தீனி கிடைக்கிறது. கல்வி கரையில... என்பது போல் இன்னும் கற்றுக்கொண்டேயிருப்பேன். அதற்கு நம் மன்றம் நல்லதொரு அட்சயபாத்திரம்.

praveen
30-09-2007, 08:09 AM
நண்பர்களே நகைச்சுவைக்காக ஒரு தனிப்பட்ட தகவல்,

உண்மையிலே JM கொஞ்சம் சீரியஸான ஆள், நானும் ஜே,,எம்-மும் நண்பர்களானதே எங்களுக்குள் ஆன ஒரு சண்டையின் முடிவில் தான். ஆனால் அதற்கு பின் சண்டையே வந்தது இல்லை. அதனால் நீங்களும் அவருடன் காரசாரமா ஒரு விவாதத்தை துவங்கினால் சண்டை வந்து பின் நட்பாகி விடுவீர்கள்.

என்ன JM சரியா?.

சூரியன்
30-09-2007, 08:17 AM
வாருங்கள் ஜே.எம் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்..

ஜெயாஸ்தா
30-09-2007, 08:45 AM
உண்மையிலே JM கொஞ்சம் சீரியஸான ஆள், நானும் ஜே,,எம்-மும் நண்பர்களானதே எங்களுக்குள் ஆன ஒரு சண்டையின் முடிவில் தான். ஆனால் அதற்கு பின் சண்டையே வந்தது இல்லை. அதனால் நீங்களும் அவருடன் காரசாரமா ஒரு விவாதத்தை துவங்கினால் சண்டை வந்து பின் நட்பாகி விடுவீர்கள்.

என்ன JM சரியா?.

சரிதான் அசோ.... என்னுடைய இணைய நண்பர்கள் தலையயானவர் நீங்கள்தான். (ஆஹா அசோ திரியை கொளுத்திப்போட்டுவிட்டீர்களே.... இனிமேல் ரொம்ப பேர் என்னுடை காரசாரமாக விவாதித்து சண்டையிட வருவார்களோ.....!)

இன்பா
30-09-2007, 10:20 AM
சரிதான் அசோ.... என்னுடைய இணைய நண்பர்கள் தலையயானவர் நீங்கள்தான். (ஆஹா அசோ திரியை கொளுத்திப்போட்டுவிட்டீர்களே.... இனிமேல் ரொம்ப பேர் என்னுடை காரசாரமாக விவாதித்து சண்டையிட வருவார்களோ.....!)

அடடா... சண்டைக்கோழிகளாக இருந்தவர்கள், இப்போ சாமாதான புறாக்களா...? உம்...!!!!! நடத்துங்கள்....

ஆனா JM உங்களுக்கு ஒரு விடயம் தெறியுமா...? ஆசோ எனக்கு அண்ணன் , எப்பவும் என்னை கொட்டிக்கொண்டே திட்டிக்கொண்டே இருப்பார்... சரி சரி வரேன் இல்லைன்னா இங்கு கூட கொட்டுவார்...

தமிழ்ச்சூரியன்
01-10-2007, 10:30 PM
நண்பர்களே நகைச்சுவைக்காக ஒரு தனிப்பட்ட தகவல், உண்மையிலே JM கொஞ்சம் சீரியஸான ஆள்....

என்கூட ஏதும் சண்டைக்கு வந்தராதீங்கண்ணா...:icon_wink1:

பிச்சி
11-10-2007, 09:18 AM
வாருங்கள் ஜே.எம் அவர்களே

உங்களை பூப்போட்டு வரவேற்கிறேன்

பிச்சி

ஜெயாஸ்தா
11-10-2007, 09:23 AM
என்கூட ஏதும் சண்டைக்கு வந்தராதீங்கண்ணா...:icon_wink1:

அடிக்கடி தமிழ்மன்றம் வாங்க தமிழ்சூரியன். இல்லைன்னா கண்டிப்பாக உங்கக்கூடேயும் சண்டை போடுவேன்.....!

ஜெயாஸ்தா
11-10-2007, 09:24 AM
வாருங்கள் ஜே.எம் அவர்களே

உங்களை பூப்போட்டு வரவேற்கிறேன்

பிச்சி

தங்கள் வரவேற்புக்கு மனம் கனிந்த நன்றி பிச்சி...! உங்கள் பிச்சியின் மணத்தை நுகர்ந்தேன். நன்றாக இருந்தது. போதிய நேரமின்மையால் முழுவதும் படிக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும் போது தொடர்கிறேன்.

தென்னவன்
11-10-2007, 01:35 PM
வாருங்கள் ஜே.எம் அவர்களே...
உங்களது படைப்புகளை காண ஆவலோடு உள்ளோம்...
தமிழ் மன்றத்தின் வாயிலாக தங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்:lachen001::lachen001:

தமிழ்ச்சூரியன்
12-10-2007, 10:21 PM
அடிக்கடி தமிழ்மன்றம் வாங்க தமிழ்சூரியன். இல்லைன்னா கண்டிப்பாக உங்கக்கூடேயும் சண்டை போடுவேன்.....!

கண்டிப்பாக முயல்கிறேன். என்னதான் இருந்தாலும் ஒரு புதியவனை இப்படியா பயமுறுத்தறது.:)