PDA

View Full Version : இவன்..!?..



poo
16-03-2007, 11:00 AM
இவன்
தப்பிப் பிறந்தவனல்ல..
தாயின் உயிரை
தப்பிக்க வைத்தவன்...

இவன்
களங்கப்பட்டவனல்ல..
களங்கமாகிப் போனவனை
காண மறுத்தவன்..

இவனுக்கு
விட்டுச் செல்ல
இவன் தாயிடமி ருந்தது
உதிரம் துவைந்த வொரு
உள்ளாடை மட்டுமே..

பிறந்த வேளை
பிழைத்துக் கொண்டான்...
பசியின் வேகத்தில்
இவன்மட்டும் பங்குவைக்கப்படவில்லை..
அன்றொரு பெரியவீட்டில்
விருந்திருந்தமையால்...

எச்சில்
எஜமானர்களால்
ஏராளமான பங்காளிகளோடு
பந்தாடி வளர்க்கப்பட்டவன்...

இவனுக்கு
பெயர்சூட்டு வைபவம் மட்டும்
அடிக்கடி நடந்தேறிவிடும்
கடைக்கொரு பட்டம்...
வீதிக்கொரு பெயர்..

பசுமை மாறிய
உலகில் பஃபே முறை..
அரிசிக் கோலங்கள்போலவே
இவனது பசிகளும் மறக்கடிக்கப்பட்டன..

அலட்சியங்கள்
இவனுக்கு அவசியம்..
பிளாஸ்டிக் பைகள்தாம்
இவனது இரைப்பைகளை
அடைத்துக் கொண்டிருக்கிறது..

வயிறு நிறைய வழியில்லை..
மனம்நிறைய மார்க்கமுண்டா..
மருந்து தேடலில் மனமிழந்தான்
வெள்ளை திரவத்தில்
அழுக்காகிக் கொள்கிறான்!...

ஆதவா
16-03-2007, 11:11 AM
இந்த உலகைப் பற்றி சொல்லுகிறீர்களா? (நாடு அல்லது நிலத்தை பற்றிய கவிதையாக எனக்குத் தோணுகிறது.)

poo
16-03-2007, 11:15 AM
ஏண்டா அதை சாப்பிடற?..
பசி எடுக்காது.. ஜாலியா இருக்கும்!! - இந்த பதிலைச் சொன்னவன் 6 வயதே நிரம்பிய சிறுவன்..இவன்.. இரு நாட்களாக எங்கள் ஊர் செய்திகளில் அடிபடும் ஐந்தாறு சிறுவர்களில் ஒருவன். (சன் செய்திகளில் பார்க்கவில்லையா?!) மனதைப்பிசையும் அந்த நிகழ்வின் ஞாபகம்.. தட்டிவிட்டேன்..

பென்ஸ்
16-03-2007, 12:31 PM
ஒரு ஆடையில் மட்டுமே இவனுக்கும் நாய்கும் வித்தியாசமா???

அருமையன கவிதை...

தொடருங்கள்...

இளசு
16-03-2007, 11:08 PM
ஏண்டா அதை சாப்பிடற?..
பசி எடுக்காது.. ஜாலியா இருக்கும்!! - ..


பாதித்த ரணங்களைக் கவிதையாக்கி
படித்தவர் மனங்களை உணரவைக்கும்
பூவின் சமூகப்பார்வைகள் தொடரட்டும்..!