PDA

View Full Version : பிள்ளைப்பேறு

ஷீ-நிசி
16-03-2007, 06:06 AM
ஓர் உயிர்தரிக்க
உதவாதவளா நான்??...

மணமுடித்த மூன்று மாதங்கள்
கேட்டார்கள் சிரித்தபடி!

அடுத்தமாதம் கேட்டார்கள்
கொஞ்சம் அலட்சியபடி!

தேதிக்குப்பின் பிறந்திடும்
ஒவ்வொரு நாளுமே!
தேர்வெழுதிட்ட நிலைதான்!

அடுக்கிவைத்த சீட்டுகட்டுகள்
ஓவ்வொருமுறையும்
சரிந்திட்டால்.....

வேலைக்காரியைவிடவும்
கேவலமாய் ஆனேன்
ஒரு வருடத்தில்!

பலிக்கவில்லை
மாமியாரின் ஆசையும்!
சாமியாரின் பூசையும்!

ஒப்புக்கு அழைத்தார்கள்
என்னையும் சுபகாரியங்களுக்கு!

என்னோடு மணமானவர்களுக்கு
கையில் ஒன்று! இடுப்பில் ஒன்று!

உறவுகள் ஓப்பீடு செய்தன...

கருத்தரிக்க இருக்காமலா
கருத்தரித்தேன் பூமியில்?!

கருப்பை இருக்கவேண்டிய
இடத்தில் இறைவன்
வெறு(ம்)ப்பை வைத்தானா?

மனம் அசைபோட்டது...

பிள்ளையில்லா தாய்
இங்கிருக்கிறேன்!

தாயில்லா பிள்ளை
எங்குமிருக்கின்றன!

பெத்தெடுத்து தாயாகலாம்!
தத்தெடுத்தும் தாயாகலாம்!

இதோ நானும் தாயாகிவிட்டேன்!

poo
16-03-2007, 06:10 AM
தயாராக வேண்டும் அவளைச் சுற்றியவர்களும்..

--- மிகவும் கவர்ந்திட்ட கவிதை நண்பரே...

தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.. காதலைவிடவும்!

ஷீ-நிசி
16-03-2007, 06:14 AM
மிக்க நன்றி பூ....

ஆதவா
16-03-2007, 05:42 PM
:4_1_8: அருமையான பதிவு.. ஒரு பிள்ளை பெற இயலாத தாயின் வலியை நேரில் கண்ட கவிதை.. பிரமாதம்:nature-smiley-007:

ஓர் உயிர்தரிக்க
உதவாதவளா நான்??...
மணமுடித்த மூன்று மாதங்கள்
கேட்டார்கள் சிரித்தபடி!
அடுத்தமாதம் கேட்டார்கள்
கொஞ்சம் அலட்சியபடி!
தேதிக்குப்பின் பிறந்திடும்
ஒவ்வொரு நாளுமே!
தேர்வெழுதிட்ட நிலைதான்!

ஒரு பெண்ணின் குமுறல். அதிலும் அவள் தாயாகவேண்டிய ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் பிள்ளைபேறு இல்லாமல் இருக்கிறாள். சுற்றத்தாரின் நோண்டலை தெளிவாக சொல்லியிருக்கீர்கள். கடையிரண்டு வரிகளும் ஒப்புமை அழகு..:angel-smiley-026:

அடுக்கிவைத்த சீட்டுகட்டுகள்
ஓவ்வொருமுறையும்
சரிந்திட்டால்.....

இது மறைமுகப் பொருளா? :icon_hmm: என் பார்வை அப்படித்தான் தோணுகிறது. என்றாலும் கவிதையோடு ஒட்டும் வரிகள். முயற்சி தளர்ந்தால்.???? பெண்களுக்கு என்றுதான் தீர்வோ?

வேலைக்காரியைவிடவும்
கேவலமாய் ஆனேன்
ஒரு வருடத்தில்!

நடத்தையில் தெய்வமாவதும் இழிவுபடுவதும் குழந்தைபேறு என்ற நிலையில்தான் இருக்கிறது. சுற்றமென்ன சுற்றம். கட்டின கணவனே நினைக்கும் காலமிது. அது குறை அவனிடம் என்றாலும்...:icon_shok:

பலிக்கவில்லை
மாமியாரின் ஆசையும்!
சாமியாரின் பூசையும்!

கடையிரண்டு எதுகைகள் மிக அருமை..:food-smiley-015: சில வீடுகளில் மாமியார்கள் ஏதாவது அரைத்து கொடுப்பார்கள். அல்லது மிக கவனமாக கையாள்வார்கள். இறைவனின் கோர மனதில் ஓட்டைகள் ஏராளம். இம்மாதிரி பெண்களை மிகவும் எதிர்பார்க்கும் மாமியார்களுக்கு ஏமாற்றம் என்றாலே போதுமே! அடுத்த கல்யாணம்தான்.

ஒப்புக்கு அழைத்தார்கள்
என்னையும் சுபகாரியங்களுக்கு!
என்னோடு மணமானவர்களுக்கு
கையில் ஒன்று! இடுப்பில் ஒன்று!
உறவுகள் ஓப்பீடு செய்தன...

உறவுகள் இனிமையானவர்களும் கொடுமையானவர்களும் கூட.. காரியங்களுக்கு அழைப்பதே ஒப்பீடத் தானே! உளைச்சல்கள் நமக்குள் ஏற்படுமே என்ற அஞ்ஞானம் இல்லாத ஜடங்கள்தான் உலகில் ஏராளம். கருப்பப்பை காரணமோ கட்டியவன் காரணமோ, பிள்ளை இல்லை என்றால் கதி இப்படித்தான்.:icon_wacko:

கருத்தரிக்க இருக்காமலா
கருத்தரித்தேன் பூமியில்?!
கருப்பை இருக்கவேண்டிய
இடத்தில் இறைவன்
வெறு(ம்)ப்பை வைத்தானா?
மனம் அசைபோட்டது...

இருக்கலாம். இல்லாமலும் போகலாம். எதுகைகள் மிக அருமை. இரு அர்த்தம் வேறு இருக்கிறது. வார்த்தை விளையாட்டை கவனமாக கையாளும் விதம் கொஞ்சம் அதிகமே உங்களிடம் உண்டு.. இறைவன் எங்கே வைக்கிறான்? அவனுக்குத்தான் மனமே இல்லையே :wub:

பிள்ளையில்லா தாய்
இங்கிருக்கிறேன்!
தாயில்லா பிள்ளை
எங்குமிருக்கின்றன!

அநாதை என்ற பெயர் தமிழில் உண்டு.. நாதி என்றால் ஆள் (கேட்க நாதி இல்லை என்று சொல்வார்களே!) அ நாதி என்றால் ஆள் இல்லை என்று அர்த்தம். அநாதை என்பதற்கும் அர்த்தம் அதுவே (அர்த்தம் உரிமை என்னுடையது.:music-smiley-010: ) உலகெங்கும் உள்ள நாதி இவர்கள்தாம் (நாதி என்பது ஒரு வகை ஜாதி என்று சொல்வார்கள். என்ன ஜாதி என்று அறிந்திலேன். பிறர் சொல்லக் கேட்டது.:music-smiley-016: ) ஆனால் நாதியற்ற தாயுண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.. ஏனெனில் இன்றைக்கு தத்தெடுத்து வளர்க்கும் அளவிற்கு யாரும் அவ்வளவு முன்னுக்கே வருவதில்லை.

பெத்தெடுத்து தாயாகலாம்!
தத்தெடுத்தும் தாயாகலாம்!
இதோ நானும் தாயாகிவிட்டேன்

முடிவு சுபம். நல்ல சமூக சிந்தனையுடன் கொண்ட கவிதை.:icon_dance: பேறு இல்லாத பெண்ணின் எண்ணம் சமூகத்தோடு ஒத்துப்போகும் வண்ணம். உங்கள் கவிதைகளில் ஆழமிருக்கிறது. இது படு ஆழம். நானெல்லாம் இப்போதுதான் தோண்டிக்கொண்டு இருக்கிறேன். நானும் யோசித்து யோசித்து பார்த்தாலும் கரு கிடைக்க மாட்டேங்குது. உங்களுக்கு மட்டும்??:icon_cool1: ..

மீண்டுமொரு அருமையான பதிவு :4_1_8:

பென்ஸ்
16-03-2007, 06:38 PM
நான் கிராமங்களில் மட்டும்தான் இந்த பாடு இருக்கிறது என்று நினைத்து கொண்டிருந்தேன்...
இல்லை நகரங்களிலும்...
ஆனால் வர்னனை மட்டும் மாறுகிறது....
நகரீகம் வர வர இவர்கள் நாகரீகமாக காயபடுத்துகிறார்கள்....
"ஒரு நல்ல டாக்ட்டரை பார், யாருக்கு தெரியும்.."???? என்று ஆலோசனை சொல்லுவது போல்....
காயபடுத்த மட்டுமே தெரிந்த இந்த சமுதாயத்தில் இவர்களுக்கு உறவுகளின் வலி ஏனோ தெரிவதில்லை...

அடுத்த வீட்டில் நடந்தால் கூத்து, தன் வீட்டு நடந்தால் இழவு ....
இந்த மனநிலை மாறுவது எப்போது....???

இந்த நாயகி... தைரியமான முடிவுதான்...
ஆனால் இந்த முடிவு தன்னை தாயாக்க மட்டும் என்றால், தன் வாழ்வுக்கு பிறகு யவராவது வேண்டும் என்பதால் இருந்தால்... அந்த முடிவும் பரிசீலிக்கபடவேண்டியதே....

தொடருங்கள் ஷீ உங்கள் சமுதாய சாதனை கவிகளை....

இளசு
16-03-2007, 10:28 PM
இப்படி ஒரு பிரசினையை சமாளிக்க முடியாமல்

அயல்நாட்டிலேயே தங்கிவிட்ட தம்பதியர்..
வெளியில் சொல்லாமல் வாடகைத்தாய் அமர்த்தி தலைமறைவாகி தம் சொந்தக்குழந்தை என வெளிப்பட்டவர்..
ஷீ-நிசி வர்ணித்த நாயகியைப் போல் தத்து எடுத்தவர்

எனச் சிலர்...

நெருப்பு வளையத்தை விட்டு வெளியே வந்தவர் மிகச்சிலர்..
வாய் நெருப்பில் நிதமும் வெந்து நோவோரே அதிகம்..

இல்லை என்னும்போதுதான் எத்தனை அருமை என உணரச்செய்வதில்
மக்கட்செல்வம் தலையானது...

ஒவ்வொரு விலக்கும் ஒரு தண்டனை அந்நிலையில்..
ஒவ்வொரு நிகழ்ச்சி, சந்திப்பும் அக்கினிப்பிரவேசம் நம்மூரில்..

சமூக நோயைச் சொல்லி, சுமுக சிகிச்சையும் சொன்ன ஷீ-நீசிக்கும்
(அதை ஏற்கும் பக்குவம் பெற்ற கணவன், குடும்பம், சமூகத்துக்கும்)
வந்தனங்கள்..நன்றிகள்..

ஷீ-நிசி
18-03-2007, 08:47 AM
ஆதவா.. விமர்சனம் மிக அழகு.. மறைமுக அர்த்தம் உள்ள வரிகள் உள்ளனவே... தத்தெடுப்பவர்கள் நிச்சயம் சமூகத்தில் குறைவுதான். ஆனால் தத்தெடுத்த ஒரு தம்பதியை நான் இன்றும் காண்கிறேன். முன்பிருந்ததை விட இன்றைக்கு அவர்கள் மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறார்கள்.. குறிப்பாக அந்த தாய். தான் பெற்றெடுத்த குழந்தையை போலவே அந்தக் குழந்தையை அவ்வளவு கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார்கள்... மிக்க நன்றி ஆதவா.

ஷீ-நிசி
18-03-2007, 08:49 AM
அடுத்த வீட்டில் நடந்தால் கூத்து, தன் வீட்டு நடந்தால் இழவு ....
இந்த மனநிலை மாறுவது எப்போது....???

நன்றி பெஞ்சமின்... இதை உணர ஆரம்பித்துவிட்டால் ஒவ்வொரு மனிதனும் வாழும் கடவுள்தான்..

ஷீ-நிசி
18-03-2007, 08:53 AM
மிக்க நன்றி இளசு அவர்களே! நம்மைச் சுற்றி பார்த்தல் யாராகிலும் ஒரு பெண் இந்நிலையில் இருப்பாள்... பல்வேறு காரணங்களும் இருக்கலாம்.. ஆனால் சமூகத்தின், இரக்கப் பார்வை, கிண்டல் பார்வை எல்லாம் அப்பெண்ணுக்கு மட்டுமே கிட்டிடும்... இது சமூகம் அறிந்தே நடத்தும் அவலம். மிக்க நன்றி இளசு..

ஆதவா
18-03-2007, 09:08 AM
ஆதவா.. விமர்சனம் மிக அழகு.. மறைமுக அர்த்தம் உள்ள வரிகள் உள்ளனவே... தத்தெடுப்பவர்கள் நிச்சயம் சமூகத்தில் குறைவுதான். ஆனால் தத்தெடுத்த ஒரு தம்பதியை நான் இன்றும் காண்கிறேன். முன்பிருந்ததை விட இன்றைக்கு அவர்கள் மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறார்கள்.. குறிப்பாக அந்த தாய். தான் பெற்றெடுத்த குழந்தையை போலவே அந்தக் குழந்தையை அவ்வளவு கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார்கள்... மிக்க நன்றி ஆதவா.

சந்தோசத்திற்குத்தானே தத்தெடுப்பார்களே தவிர பின்னெதற்கும் தத்துஎடுக்க மாட்டார்கள். அந்த குடும்பம் 'ஒரு வாரிசு' என்ற நிலையில் எடுத்து வளர்க்கப்படும் பிள்ளையை சுற்றத்தார் மதிப்பார்களா?
நிச்சயமாக இல்லை.

தத்தெடுத்து எடுத்தவர்களையும் நான் பார்த்து இருக்கிறேன். அவர்களின் சந்தோசத்தையும் பார்த்திருக்கிறேன். மறுபக்கம் உறவினர்கள் ஏற்கவில்லையே என்ற துக்கத்தையும் கூடவே எதுவும் அறியாமல் நிற்கும் அந்த குழந்தைகளையும் பார்த்திருக்கிறேன். இன்றைய சமூகத்தில் சொந்த குழந்தை என்றால் மதிக்கிறார்கள். அல்லது தத்துகுழந்தை என்றால் மிதிக்கிறார்கள்.

சரி இது போகட்டும். அறியாத வயதில் தத்து எடுக்கப்படும் பிள்ளைகளுக்கு புரியும் வயதில் தாங்கள் உண்மையான பெற்றோர் இல்லை என்று உண்மையை சொல்லவேண்டுமா கூடாதா? உங்கள் கருத்து என்னங்க ஷீ?

குழந்தை இல்லாதவர்கள்தாம் தத்து எடுக்கவேண்டுமா? இருக்கிறவர்களும் எடுக்கலாம்தானே!/// நிற்க. இந்திய சட்டம் அவ்வளவு எளிதில் குழந்தைகளை தத்துக்கொடுக்கிறதா? அதாவது கெடுபிடிகள் எளிமையாக இருக்கின்றனவா? நிச்சயமாக இல்லை.

நான் அறிய தத்து எடுக்கப் போவதாக சொன்ன உறவினரின் நண்பர் ஒருவர் மிக நீண்ட நாட்கள் முயன்றும் கிடைக்கவே இல்லை. இன்றைக்கு வங்கியில் கூட எளிதில் மூன்றூ நாட்களில் பணம் கடனாக வாங்கிவிடலாம் ஆனால் தத்து எடுப்பது....????? :smilie_abcfra:

நன்றி

ஷீ-நிசி
18-03-2007, 09:18 AM
உண்மைதான். தத்தெடுப்பது ஒன்றும் சாதாரண விஷயமில்லை.. நான் சொன்ன நண்பரே பல நாட்களுக்கு பின்னர்தான் அவரால் அக்குழந்தையை தத்தெடுக்க முடிந்தது.. என்னைப் பொருத்தவரை கணவனும் மனைவியும் முடிவெடுத்துவிட்டால் உறவுகளைப் பற்றி கவலைப்படதேவையில்லை.. வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா.... சும்மாவா சொன்னாங்க... குழந்தைக்கு 14 வயது ஆன பின் உணமையினை அந்தக் குழந்தைக்கு பக்குவமாய் எடுத்துச் சொல்லிட வேண்டும். இந்த விஷயம் கண்டிப்பாக குழந்தைக்கு வேறு யார் மூலமாகிலும் தெரியாமல் போகாது.. சொல்லிடல் வேண்டும்.. ஆனால் சூழ்நிலையைப் பொருத்தும் முடிவெடுத்திடல் வேண்டும்..

ஆதவா
18-03-2007, 09:45 AM

நிச்சயமாக..... உங்கள் கருத்து முற்றிலும் சரியே!>. அதிலும் யார் மூலமாகவும் தெரியக்கூடாது. பெற்றவர்களே பக்குவமாக எடுத்துச் சொல்லவேண்டும் (நன்றி கன்னத்தில் முத்தமிட்டால்....)ஒருவேளை தன் பெற்றவர் யார் என்று வருந்தும்படியான வளர்ப்பு இருந்தால் அது இன்னும் கஷ்டம்தான். பிள்ளைகளும் அதை உணரும்படியான வயது இருக்கவேண்டும். வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஏசும் இந்த உலகம்தான் நாம் இறந்துபிறகு பூக்களை சொறியும்... சொந்தமில்லாமல் நாம் நிம்மதியாக வாழமுடியாது (என்னைப் பொறுத்தவரை) என்பது கருத்து. அவர்களை கூடுமானவரை ஒப்புதல் பெறும்படி செய்யவேண்டும். என் தாத்தாவின் (அம்மாவழி) தம்பி (எனக்கும் தாத்தாதான்) அவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் தத்து எடுத்தார்கள். அக்குழந்தையை வளர்க்கத் தெரியாமல் வளர்த்து தற்போது அனைவரும் முகம் சுளிக்கும்படி ஆகிவிட்டது... எங்கள் உறவினர்கள் எல்லாரும் முதலில் ஒழுக்கம் மற்றும் சுத்தம் எதிர்பார்ப்பார்கள்.. அந்த குழந்தையிடம் இவையிரண்டுமில்லாத காரணத்தினாலேயே பலர் வெறுக்க ஆரம்பித்துவிட்டனர்.
பதிலாக. குழந்தையை நேர்த்தியாக வளர்த்து ஆளாக்கி இருந்தார்கள் என்றால் பலரும் மதிப்பார்கள்...

பொதுவாக தத்துபிள்ளை என்றாலும் தன் பிள்ளை இல்லை என்ற உணர்வு நிச்சயம் ஒரு தம்பதிக்கு ஏற்படுமா?
இன்றைக்கு தன் சொந்த பிள்ளையைவிட அதிக பாசத்துடன் வளர்த்தாலும் இந்த வருத்தம் எல்லாருக்கும் இருக்கும் என்றே நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீர்கள்?

நன்றி
ஆதவன்:nature-smiley-008:

ஷீ-நிசி
18-03-2007, 09:54 AM

நிச்சயமாக, தன் தத்துப்பிள்ளையை என்னதான் கன்னும்கருத்துமாக வளர்த்தாலும் உள்மனத்தில் உண்மை ஒரமாய் அமர்ந்துக்கொண்டு அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கும். என்ன இருந்தாலும் நம் சொந்தப்பிள்ளை இல்லையே என்று...

உங்கள் உறவினரின் தத்துபிள்ளை சரியாக வளர்க்கபடாமல் போனதால் உறவினர்கள் வெறுக்கிறார்கள். இதுவே அது சொந்தபிள்ளையாக இருந்திருந்தால் வெறுப்பின் உச்சம் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்திருக்கும். காரணம் ரத்தத்தின் ரத்தங்கள் தானே..

ஆதவா
18-03-2007, 10:15 AM

ஆமாமம்.. அதையும் சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள். வெறுப்பே இல்லாமல் போயிருக்கும் என்று கூட சொல்லலாம்.. காரணம் என்னவென்றே தெரியவில்லை..
அந்த பிள்ளையைவிட மோசமான பிள்ளைகள் இருக்கின்றன. அதற்கு காட்டும் பாசத்தைப் பார்த்தீர்களேயானால் இவர்களின் இரட்டை வேடம் தெரிந்து போய்விடும்..

அடுத்ததாக இன்னொன்று தத்துப்பிள்ளை என்றாலே அது என்ன சாதி, குலம், கோத்திரம், மதம் என்று கூட பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள்.

கவிதையின் மூலத்தை விட்டு சற்று வெளியே போகிறோமென நினைக்கிறேன்.

தத்துப்பிள்ளையாவது பரவாயில்லை. இந்த குழந்தை பேறு இல்லாமல் தவிக்கிறார்களே அவர்களின் கதி??:smilie_abcfra:

எதிர்காலத்தில் ஒரு கொள்ளி வைக்கவும் (தமிழில் சரிதானே!:confused: ) ஆள்வேண்டும் என்று நினைக்கும் தம்பதிகளையும் அவர்களின் புலம்பலையும் நேரடியாக கண்டிருக்கிறேன். இதை சாக்காக வைத்து பணம் பிடுங்கும் சாமிகளும் ஆசாமிகளும் நிறையவே உலவுகிறார்கள். அந்த பெண்ணின் மனதில் ஒவ்வொரு நொடியும் தனக்கு அந்த வலி (குழந்தை பெறும்போது ஏற்படும் வலி) வாழ்வில் ஒருமுறையாவது வராதா என்று ஏங்குவார்கள்.. ஆறுதலான விஷயமே இந்தவகை கோளாறுகள் மிகக்குறைவு என்பதில்தான்.

ஆண்கள் பலர் தன் ஆண்மையை இழந்து இருந்தாலும் அந்த பழியும் பெண்களுக்கே சென்றுவிடும்.. இது அநியாயம். இன்றைக்கு மருத்துவப் புரட்சியில் (டெஸ்ட் டுயூப்) குழாய் குழந்தைகள் முறை இருப்பதால் இன்னும் ஆறுதல் தரக்கூடிய விஷயம்.. அதிலும் பல சிக்கல்கள்.. பெண்களுக்கே அதிகம்........

எந்தெந்த வகையிலும் பெண்களே மாட்டப்படுகிறார்கள்.. :icon_shok:

நன்றி ஷீ!
:nature-smiley-008:

ஓவியா
05-04-2007, 12:35 AM
ஆதவாவின் கருத்துக்களுக்கு ஒரு சபாஷ்.

தம்பி என்னாமா ஆராச்சி செய்து இருக்கார். வியக்கிறேன் ஆதவா. உங்கள் சிந்தனை சிறக்கட்டும் ஆதவா. வாழ்த்துக்கள்.

ஓவியா
05-04-2007, 12:38 AM
ஷி-நிஷி,

கவிதை மிகவும் உயர்வான சிந்தானை, பெண் மனதில் புகுந்து அவள் வேதனைகளை கண்டது போல் அருமையாய் வார்த்தைகளை கோர்த்துள்ளீர்கள். சபாஷ்.

பாரதியின் பின்னோடி போல் பெண்மைக்கு குரல் கொடுக்கும் உங்கள் சமுக சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.

கவிதை அழகோ அழகு.

ஆதவா
05-04-2007, 01:38 AM
பாரதியின் பின்னோடி
கவிதை அழகோ அழகு.

முன்னே செல்பவன் - முன்னே ஓடுபவன் - முன்னோடி
பின்னே வருபவன் - பின்னே ஓடி வருபவன் - பின்னாடி? :schnelluebersicht_k :D

ஷீ-நிசி
05-04-2007, 03:18 AM
மிக்க நன்றி ஓவியா....

லேட்டா வந்து வாழ்த்தியதற்கு ஒரு சின்ன குட்டு...:weihnachten031: